|

உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
கண்மூடாமல் காத்திருக்கிறது.


என் கணகளிலிருந்து விழும்
ஒவ்வொரு பூவும்
கனியாகவே முற்படுகின்றன
காய்பருவம்
கண்ணுக்குத் தெரிவதில்லை

தங்கிய பறவையை துரத்தி விட்டு
தொங்கிய கப்பியில் கயிற்றை விட்டு
நங்கை இவள் கண் கிணற்றில் விட்டு
டங்"கென சத்தம் கிணற்றை விட்டு

இமை மூடினாலும் மறுக்க
இயலும் போது மனம்
இறுக்க முடிகிறது.
இருந்தும் பிரியோசனமில்லை
எதிரில் இருக்கும் உருவங்கள்
கண்களால் பார்த்தால் புரிகிறது
மங்கலான பார்வையில்...
தோழா! மூடிவிடு என்பது போல்
தினம் ஒரு சப்தம்
காது வழியே அல்லாமல்
கேட்கமுடிகிறது

தேவி அட்கொள்ளுகிறாள்
அவளின் கட்டுப்பாட்டில் கடைசியில்
வந்துதானே ஆக வேண்டும்
இரவு நேரத் தாலாட்டாய்
சோகமாய், காதலாய்,
தேவி அளித்த காட்சி ரணங்கள்
அவளை மீறிய அடக்கம்
இமைகளின் சக்தியறிந்த
இவளூக்கு எங்கிருந்து வந்ததோ
படங்களூம் பாடல்களும்??
இறுதியும் இமை மூடல்தான்
என்றறிந்து இனியும் மூடாமல்
இருப்பதை முடித்துக் கொண்டேன்,,,

தூக்கி முன்னிருத்தும் மாரொத்து எழுத்து
ஆக்கித் தருங் கையொத்து சீராம்
நோக்கிப் பாரின் அணியிருப்பின் அழகிருக்கும்
பாவொத்த பாவை இவள்


தூக்கி முன்னிருத்தும் மார் - பெண்களுக்கே உரிய அழகு.... அதுவே எழுத்து....

ஆக்கித் தரும் கை - பெண்களின் கை (பாவை என்று தலைப்பிட்டதால்) சீர்....

நோக்கிப் பாரின் அணியிருப்பின் அழகிருக்கும் - பெண்ணுக்கு கழுத்தில் ஒரு அணிகலன் இருந்தால் எப்படி அழகாய் இருக்குமோ அதே மாதிரி பா'வுக்கு அணி (அணியிலக்கணம்)

பாவும் பாவையும் ஒத்துப் போகிற இவள்.... வேறுயாரு என் தமிழன்னை தான்.........

25.1.07

நட்பு

|

உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

சிருங்கார பவுடர் பூசிக்கொண்டு
அகோரப் பற்களின் நகைப்பில்
தெருப்பெண்களை நசிக்கிறார்கள்
அடங்கலில்லா காழ்புணர்வு கையில்
கொட்டமடிக்க, காமம் மிகுதியிலே
தாயும் நசுங்குகிறாள் இவர்களின்
புளுத்துப் போன மூளையினால்


நானிருக்கிறேன் கவர்ச்சிக்கென
ஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து
சூனியம் செய்கிறார்கள்
வெந்தும் வேகாத நடிகைகள்
என்றாவது ஒருநாள் குடிக்காமல்
இருந்துவிட்டு, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய
கூளைத் தன்மையுள்ள கூனிகள்


பாட்டிலிலே குடி குடியைக் கெடுக்கும்
குடித்தபின் குடி கொடையைக் கொடுக்கும்
நாசமும் நாய்பிறப்பும் குடியிலே மூழ்கி போகிறது
தாலியும் தன் பெண் டாட்டியும் அடகிலே போகிறது
போலியும் புளுகும் தண்ணீரிலே
வேசிப் பொழப்பு கண்களிலே
வெறும் பேச்சுக்கு வாழும் பண்டாரங்கள்


பொறுத்துப் போய் தனியார் ஆசுபத்திரிக்கு
போனால், டாக்டரோ
வெறுத்துப் போய் நோயாளியைப் பார்த்து
லட்சம் கொண்டுவா என்பான்
கறுத்துப் போன இவன் வாயில்
நாம் கொடுத்தும் சாவான் நோயாளி
அறுத்துப் போகாது போகிறோம்
அவன் பிறப்பு உரிமையை
ஊனமுற்ற பிணமாய் உட்காருவான் ஈஸி சேரில்
கொழுத்துப்போன கிழட்டுக் கழுதைகள்


மொட்டையடித்து மூளியாக்கி
பொட்டைப் பயல்கள் காரில் போவார்கள்
துட்டை எடுத்து ஏழைக்குத் தரா நீசர்கள்
விட்டைத் தின்னும் பன்றிகள்
எங்காவது ஷாப்பிங் சென்றால்
துட்டு இறைப்பார்கள் தண்ணீராய்
கொட்டமடிக்கும் புலையர்கள்*


என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!

எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!

* புலையர்கள் என்றால் கீழ்சாதி..... ஜாதியைக் குறிப்பிடவில்லை..........

22.1.07

எச்சில்

|

சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
மூடாமல் காத்திருக்கிறது..


கண்களின் குருட்டுத்தன்மை
காதலில் தெரிகிறது
பார்வையின் குருட்டுத்தன்மை
காமத்தில் தெரிகிறது..

இருவரிகளாய்
இவ் விருள் நீளுமென
இங்கே நினைத்தேனே!
இனியவளாய்க் கெடுத்தாய்
இருள் போச்சுதுடி!!!

19.1.07

மழை

|

எப்பொழுதாவது
கதவுகள் திறக்குமென
காத்திருக்கும் விழிகள்

பொக்கை வாய் கிழவன்
பிறந்த நாட்டிலே
பொக்ரான் குண்டு

கையில் பிடித்தேன்
இறைவனின் சிறுநீர்
அழும் குழந்தை

மங்கையர் யாவரும்
ஓவியர்தாம்
வாசற்படி கோலம்

தயவு செய்து
வானத்தைப் பார்
உனக்காக நான்
தேய்ந்து கொண்டிருக்கிறேன்

விழிகள் பேசுமாம் காதலர்களுக்கு
எனக்குமில்லை; உனக்குமில்லை
விழிகள்

நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?

நான் ஒவ்வொரு முறையும்
தோல்வியுரும் போதெல்லாம்
உன்னையே நினைத்துக் கொள்வேன்
என் வெற்றிக்கு
மிக அருகாமையில் நீ

உனது சிரிப்பலைகள்
எனது இதய வாசலைத் தட்டுகிறது,
திறப்பதா? அல்லது
தீர்ப்பதா?

உன் கோபங்கள்
பல நரம்புகளைத் தூண்டிவிடும்
என் ஆசையைக் கூடவா?

தென்றல் தீண்டிவிடுமாம் காதலர்களூக்கு
நானுமில்லை; நீயுமில்லை;
வெற்றிடம்

இனியாவது உன்
இனிய கொலுசுகளோடு
ஓடு!
உன் காலடியிலாவது கிடக்கிறேன்

உலக உருண்டையை சுக்கலாக்கினோம்
வாழும் உயிர்களைத் தீர்த்தோம்
நிலவை சுட்டுத் தள்ளினோம்
நஷத்திரங்களும் அஃதே

சூரியனைக் கரைத்துக் குடித்தோம்
அவனொளி இருட்டாக்கினோம்
காரிருள் படைத்த வானை
இப்போது மென்று பசியடக்கினோம்

அண்ட பேரண்டங்கள் குடித்தோம்
பால்வளிகள் அனைத்தோடும்
உண்ட இவையனைத்தும்
எமக்கு அடங்க வில்லை

ஏதுமற்ற வானை
ஏன் பார்க்கவேண்டும்?
சூதுஅற்ற எம்மைப் போல்
பசியடங்கா தவர் பலர்

வாதமிட்ட ஏது பயன்-இங்கே
கேட்பார் எவருமில்லை.
மீதமின்றி தின்றுவிட்டோம்
எம் உடலையும் சேர்த்து...

சில நேரங்களில்
இயற்கையும் தவறிழைக்கும்
பாவம்
இங்குள்ளவர்களின் நிலை
அதற்கெப்படித் தெரியும்?

மூன்றாம் பிறையை மறைத்த
இன்னொரு நிலவே!
அணைந்த நெருப்புக்கு
அணைந்த வாயு ஊட்டுகிறாய்

ஆழங்களற்ற மலைகளும்
உயரங்களற்ற கடல்களும்
இதோ
இங்கூறும் எறும்புக்கு
ஆகாரமாக சபி!
அல்லது
அதுவே எங்கள்
மரணத்திற்கு காரணமாக
சாபத்தை விதி!!

முலைப் பாலாய்
மழை அனுப்பி
இழைக்கிறாய் தீமை!
எங்களின் உறிஞ்சல்கள்
இங்கே பத்தாது!!
அதற்கென தருகுவாய்
வத்தாது!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

இயற்கையின் இன்னொரு
நிலவிடம் கேட்பது
கவலைப் பனிகளை உருக்கிவிடாதே
இல்லையென்றாலும் உருக்கிவிடாதே!!

13.1.07

முத்தம்

|

பழைய கவிதைகளில் ஒன்று.... முத்தம்.
முத்தம் ஒன்றும் அபாயகரமானதோ அல்லது அசிங்கமானதோ அல்ல. உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மன அலைகளின் மோதல். அன்பு ஆரோக்கியத்தின் தளபதி.

இது காதலன் காதலியின் முத்தம்

சத்த மொன்றில்லாமல்
நின்றன் நாவிலே
நித்தம் நானெழுதும்
கவிதை இந்த
முத்தம்.

புத்தம் புதிதாய் பூத்திருக்கும்
ரோஜா போல் உன்னிதழ்
புத்துணர்ச்சியாய் பொங்கும்
காரண மென்
முத்தம்

கத்தும் காக முதல்
பிளிரும் யானை வரை
மொத்த முள்ள உயிரும்
செய்யும் காதலில்
முத்தம்

ரத்தம் கலந்துண்ணும் பல
தீவிர வாதிகள் திருந்த,
யுத்த மொன்று மில்லாமல்
செய்யும் காதல் தரும்
முத்தம்

சத்தாய் அமையுமென் மேனிக்கு
இனி நீ நின்னிதழால்
பித்தம் தலைக்கேறு முன்
தந்துவிடு எனக்கொரு
முத்தம்

பாடல்: Because of You
பாடியவர் : Kelly Clarkson.

கெல்லி ஒரு சிறு அறிமுகம்..


அமெரிக்க பாடகியான கெல்லி கிலார்க்ஸன், பாடல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி அவார்டு வாங்கிய கண்மணி. அமெரிக்க தொல்லைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் American Idol நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். பாப் மற்றும் ராக் இசையில் கைதேர்ந்த கலைஞி.. இவருடைய முதல் இசை வெளியீடு Thankful, 2003 ம் வருடம் வெளிவந்தது. அதற்கடுத்த வருடமே (2004) Breakaway என்ற இசைத் தொகுப்பினை வெளியிட்டு இதயங்களை பிரேக் செய்தவர்..
இவரின் Breakaway ஆல்பத்திலிருந்து இந்த பாடலை விமர்சனம் செய்கிறேன்.இந்த பாடல் ஒரு தம்பதியின் ஊடல் பற்றியது.


ரு அழகான இல்லத்தை மரங்களின் ஊடாகக் காண்பித்து காமிரா செல்லுகிறது.. அங்கே தம்பதிகளிருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். கெல்லியும் அவரது கணவரும் என்று வைத்துக் கொள்வோமே... சண்டை முற்றிப்போய் கணவனைத் தள்ளி விட்டு செல்கிறாள் கெல்லி. காட்சி அப்படியே பாடகி கெல்லியாக மாறி, அவள் பாடுகிறாள் பின்னோக்கி நகர்ந்தவாறே!! அவள் கேசம் கலைந்திருக்கிறது.. உதடுகளுக்கு சாயமில்லை. ஆடை சற்று பழையதாக தோற்றமளிக்கிறது... கவிதையாக நகர்கிறது கேமிரா.முதல் வரிகளிலேயே தெரிந்துவிடுகிறது ஊடலின் விதை..
I will not make the same mistakes that you did....................
கணவன் திருமணப் படத்தை எடுத்துவந்து வாக்குவாதம் செய்யும் போது கையிலிருக்கும் திருமணப் படத்தை வீச எத்தனிக்கும்போது பாடல் காட்சி அப்படியே நின்றுவிடுகிறது..கணவனுக்கு மாத்திரம். கெல்லி மட்டும் திரும்புகிறாள் கணவன் அப்படியே நிற்கிறான். கெல்லி மெதுவாக நகர்ந்து கதவருகே பார்க்கும்போது அவளே குழந்தையாக இதை கவனிக்க வருகிறாள்.பாடல் காட்சிகளில் மாற்றம் செய்திருக்கின்றனர்.. கெல்லியின் பிம்பங்கள் பாடுகின்றது சோகமாக.அவளும் அவளின் குழந்தைப் பருவமும் மெல்ல காலத்தை பின்னோக்கி கடக்கிறார்கள்..அங்கே குழந்தை கெல்லி அவள் அப்பாவிடம் தான் வரைந்த ஓவியத்தைத் தருகிறாள். கெல்லியின் அப்பாவோ போன் பேசிக்கொண்டு அதை கவனிக்காமல் போய்விடுகிறார். குழந்தை கெல்லிக்கு ஏமாற்றமாக இருக்கிறது.. இதை மறைவாக கண்மணி கெல்லியும் அவளின் குழந்தைப் பருவ உருவமும் (அதுவும் அதே குழந்தைதான்) பார்க்கிறது.அந்த நேரத்திலே ஆங்கிலத்தில் I am afraid என்று பாடுகிறாள்.அடுத்து, மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவில் கெல்லியின் அம்மா எழுந்து அழுதவாறே இரவு உணவுகளை குப்பையில் எறிகிறார். இதை மெல்ல கிச்சனில் உட்கார்ந்து கொண்டு கவனிக்கிறார்கள் இறந்த காலத்திற்கு வந்த கெல்லியும் அவள் குழந்தைப் பருவமும்.கெல்லி பாடுகிறாள்.. அவள் பாடலில் ராக் சற்று எட்டிப் பார்க்கிறது. தொனியில் அழுதவாறு பாடுகிறாள். அவள் அம்மா ஏதோ மாத்திரை உட்கொள்வதை குழந்தை கெல்லி பார்வையிடுகிறாள். உடனே அவர் கதவை இழுத்து மூடி அழுகிறார். அச்சமயம் காமிரா அருமையான பயணமிக்கிறது.. கதவிலே கண்ணாடியிருந்தும் காமிரா தெரிவதில்லை. பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தை கெல்லி நிற்கிறாள்.. மெல்ல மெல்ல படியிறங்கி போகிறாள். அடுத்த காட்சியிலே கெல்லியின் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகின்றனர்.. அது முற்றிப் போய் டீப்பாயை எடுத்து எறிகிறார் கெல்லியின் அப்பா!! அவள் அம்மாவும் கண்ணாடி தம்ளரை வீசுகிறாள்,.. அப்பா படியேற, அதைப் பார்க்கிறார்கள் இறந்த காலத்திற்கு வந்த கெல்லியும் அவள் குழந்தைப் பருவமும்கெல்லியின் அப்பா வீட்டை விட்டு செல்லுகிறார். பெட்டி படுக்கைகள் எடுத்து வைக்கயிலே எதுவுமறியாத குழந்தை கெல்லி அவள் அப்பாவுக்கு உதவுகிறாள். அப்பா அவளை உதறிவிட்டு காரிலே செல்கிறார்.. அதை ஏமாற்றமாய் அக்குழந்தை வந்து பார்க்கிறது.. கூடவே கண்மணி கெல்லியும் குழந்தைப் பருவமும்./. அப்படியே பாடல் ராக் கிற்கு மாறிவிடுகிறது. அழுதவாறே சத்தமாக பாடுகிறாள் (தமிழில் ஒரு பாடல்கூட இப்படி நான் பார்த்ததில்லை..) இப்படி கணவன் மனைவியால் பிரிந்து தான் அன்று துன்பப் பட்டதை தன் குழந்தையும் படவேண்டுமா என்றெண்ணி ஓடுகிறாள் வீட்டிற்குள்... இது கண்மணி கெல்லி.அங்கே திருமணப் படத்தை வீச நின்றிருக்கும் கணவனை மெல்ல தழுவுகிறாள்... அதை கெல்லியின் குழந்தை பார்க்கிறது... கணவனும் மனைவியும் குழந்தையை ஆரத் தழுவுகிறார்கள்..

ஒரு சின்ன கருத்துதான் என்றாலும் அதி முக்கியமான கருத்து...கணவன் மனைவி சண்டைகள் குழந்தைகளை எவ்வளவு தூரம் பாதிக்கிறது!!! கெல்லியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை
I watched you die, I heard you cry, every night in your sleep. I was so young, you should have known better than to lean on me.
இந்த வரிகள் சாதாரணமானவைதான். ஆனால் இந்த கருத்தை வலியுருத்தும்போது கடினமாகத் தோன்றுகிறது.And now I cry in the middle of the night, doin the same damn thing இந்த வரிகளில் நான் மிகவும் என்னை இழந்தேன்... பாடல் கிடைத்தால் பாருங்கள்.. என்னிடம் உள்ளது.. கேட்பவர்கள் அதிகம் என்றால் அப்லோடு செய்கிறேன்..மொத்தத்தில் அழகாக உடை அணிந்து நூறுபேர் நடனத்துடன் முன்னே ஆடும் தமிழ் பாடல்களை விட்டுத்தள்ளி ஒரு அழகிய காவியமாய் தோன்றுகிறது.. இந்த பாடலுக்கும் Since you been gone என்ற பாடலுக்கும்தான் எம்மி விருது வாங்கினாள் என்னவள் கெல்லி.அவசியம் பார்க்கவேண்டிய பாடல்..

இது கேள்வி பதில் நடையில்.... இறைவனிடம் நான் வேண்டுவதாக,,

மேனியெல்லாம் தூண்டுமய்யா-காதற்
கொள்ள கொங்கை மாந்தர் கண்டாள்
நாணி நானும் உம்மிடம் சொன்னேன்
நல்ல பதில் தாரு மய்யா!

காணி நிலமில்லாமல், பையிலே காசில்லாமல்
கையிலே வேலையு மில்லாமல் உனக்கு
வேணுமோடா இந்த காதல்! எனைநினைத்து
விட்டு ஒழிடா பட்டென அதை.

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்; வழியொன்று
சொல்லு மய்யா அதை விட்டொழிக்க.

கடவுளென எனைவிட நாளும் நின்றன்
தாய் தந்தையைப் போற்றடா
நடவும் இந்த காதல் கருமங்கள்
இனி வருமோ நாளும்?

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு?

கதறும் நின்மொழி கண்டே
பக்தா உமக்கருள்வேன்
இதழிலே விழும் வார்த்தைகளை
கவியாக் கினி காதல் விட்டு..

பிஞ்சே!
பிரித்தியலா சொத்தே!
பிரிய விளக்கே!
ஒளியே
ஒளியின் கதிரே!
ஒளிய விரும்பா சூரியனே!
பஞ்சே!
படுத்துருளும் கனவே!
காரியின் சினமே!
மாரியின் மனமே!
நஞ்சே!
நானுண்ணும் இன்பமே!
பஞ்சமே!
பாதியில் வந்த சொந்தமே!
நெஞ்சமே!
நெஞ்சில் சுமந்த தழும்பே!
மஞ்சமே!
இரவின் இரவியே!
கொஞ்சவும் முடியாத
பேடியடா நான்
என்ன செய்ய?
ஆணாய் பிறந்துவிட்டேன்!!

விடிய விடிய
காத்திருக்கிறாள் இவள்.
முகட்டு வாயில்
முட்டியை வைத்து
விடிந்த பின்னாவது
எச்சில் விழுங்குவாளா?
கோர்த்த நீரை சற்று
பார்த்தவாறு துடைத்தெழ
முயற்சிப்பாள்.
சூரியனாவது இனி
தோன்றுவதாவது?
அவள் கைகளில் ஈரம்
இன்னுமிருக்கிறது அப்படியே!!

Subscribe