129112
கருத்துக் கணிப்புகள் எப்பொழுதும் நூறு சதவிகிதம் சரியாக இருப்பதில்லை. பாகிஸ்தான் இலங்கை மற்றும் இந்தியா இங்கிலாந்து போட்டிகளில் எல்லாருடைய கருத்து கணிப்பும் மாறிப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். டாஸ், காலநிலை, பிட்சின் தன்மை, ஆட்டத்தின் திறன் என பல காரணிகள்.. நன்றாக ஆடும் அணி ஒருசமயத்தில் திணறக்கூடும். திணறி ஆடும் அணி பெரும் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சரி… முதலாவதாக இலங்கை பாகிஸ்தான் மேட்ச் பார்ப்போம்..

Result

இலங்கை – பாகிஸ்தான்

பாகிஸ்தான் - 277/7 (50 ov)
இலங்கை 266/9 (50 ov)

11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை இரண்டாவதாக பேட் செய்யப்போகிறது என்று அறிந்த பொழுதே இலங்கைக்கு கொஞ்சம் சறுக்கல்தான் என்று கணித்தேன். இருப்பினும் இலங்கை பேட்ஸ்மென்கள்மேல் நம்பிக்கை இருந்தது.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் இலங்கையைக் காட்டிலும் பாகிஸ்தான் மிக அற்புதமாக ஆடியது. ஒருசில ஃபீல்டிங் தவறுகளைத் தவிர மற்ற எல்லாவிதத்திலும் நன்றாக ஆடினார்கள். குறிப்பாக அப்ரிடி. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் வீரர்கள் எல்லாருமே கை கொடுத்தார்கள். யூனிஸ்கானும், மிஸ்பா உல் ஹக்கும் அருமையான பார்ட்னர்ஷிப்பைத் தந்தனர். இடையில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக ரன்களை அதிகம் சேர்க்க முடியாவிட்டாலும் 277 ஒரு நல்ல ஸ்கோர்தான். பவுலிங் தரப்பில் யாரும் இலங்கை ரசிகர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. முரளி நன்றாக வீசியிருந்தாலும் அதிக விக்கெட் எடுக்காமல் விட்டது என்னைப் பொறுத்தவரையில் திருப்தியில்லாத பவுலிங் தான்.

சேஸிங்கில் இலங்கை சிறப்பான தொடக்கம் தந்தது. அந்த முதல் விக்கெட் மட்டும்தான். 76 க்கு 1 என்ற நிலையிலிருந்து மளமளவென சீட்டுக் கட்டு போல சரிந்த வண்ணம் இருந்தது. 96 க்கு 4 என்று தத்தளித்த இலங்கைக்கு சங்ககராவும் சமர சில்வாவும் கைகொடுத்தனர். பாகிஸ்தானின் பந்துகளை இருவராலும் அவ்வளவு சீக்கிரம் விரட்டவே முடியவில்லை. பந்தும் போவதற்கு அடம் பிடித்தது. சங்ககரா மேல் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஏனெனில் இக்கட்டான சூழ்நிலைகளில் நிலைத்து ஆடக்கூடியவர். இலங்கையின் மேட்ச் வின்னர்.  பெரரா வரைக்கும் நம்பிக்கை இருந்தது. தவிர, கடைசி ஓவர்கள் வரவர சூழ்நிலை இலங்கை ஜெயித்துவிடுமோ என்று மாறியது. ஆனால் பேட்ஸ்மென்களே ஆடாத நிலையில் பவுலர்களிடம் ஆடச்சொன்னால் எப்படி இருக்கும்?? கடைசி இரண்டு ஓவரில் அப்ரிடிக்கு மனசே இல்லை. ஜெயித்துவிடுவார்களோ என்று சொல்லும்படி பவுலர்களின் பேட்டிங் போராட்டம் நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து சிக்ஸர் அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் எனும் சூழ்நிலை வந்தபிறகே இறுக்கமாக இருந்த அப்ரிடி கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பவுலிங் பலம், ஓரளவு சிறப்பாக இருக்கிறது என நினைக்கிறேன். இனி வரும் போட்டிகளில் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கணிப்பு மாறலாம்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இலங்கை ஜெயித்ததேயில்லை. அந்த ஜோஸியம் தொடர்கிறது. இலங்கை மண்ணிலேயே இலங்கையைச் சரித்த அப்ரிடிக்கு வாழ்த்துக்கள். நன்கு போராடிய இலங்கை ஆஸ்திரேலியாவை வெல்லும் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது... பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான போட்டி இந்தியா - இங்கிலாந்து போட்டி.

Result

இந்தியா - இங்கிலாந்து
இந்தியா – 338 (49.5 ov)
இங்கிலாந்து – 338/8 (50 ov)

போட்டி சமம் ஆனது.

129134கடந்த நாட்களில் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்த இரு போட்டிகளில் ஒன்று கணிப்பு மாறி பாகிஸ்தான் வென்றிருந்தது. ஆனால் இந்த போட்டியில் எல்லோருடைய கணிப்பும் தவறாகப் போய்விட்டது. வெற்றியா தோல்வியா என்றில்லாமல் டை ஆனதில் பெருத்த ஏமாற்றம் இந்திய ரசிகர்களுக்குத்தான்.

இந்தியா இங்கிலாந்து போட்டியில் எதிர்பார்த்த இரு விஷயங்கள் நடந்தன. முதலாவது டெண்டுல்கர் சதம் அடிப்பார் என்று நினைத்திருந்தேன். ஆரம்பத்தில் பாலைத் தின்று கொண்டிருந்தவர் அரைசதம் கடந்தபிறகு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து பந்து கணக்கை சமப்படுத்தினார். இரண்டாவது இந்தியா 300 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆட்டம் செல்லச் செல்ல 360 க்கும் மேல், 350க்கு மேமேல் செல்லும்  என்று ஆளாளுக்கு கணிப்பு கூறிக்கொண்டிருந்தோம். டெய்லெண்டர்களின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட்டுகள் விழுந்தபடியே இருந்தது. கடைசி 26 பந்துகளில் 7 விக்கெட்டுகள் விழுந்தன. 339 ரன்கள் இங்கிலாந்துக்குப் பெரிய சேஸிங் ஸ்கோர்தான்.

ஆண்டர்சனின் முதல் ஓவரில் சேவாக்கின் அதிர்ஷ்டம் அவரைக் காப்பாற்றியது. 5 பந்துகளில் 3 எட்ஜ் ஷாட்கள். ஆனால் பிறகு அதனை தக்கவைத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. சீக்கிரமே நடையைக் கட்டினாலும் டெண்டுல்கரின் சதமும் காம்பிர் மற்றும் யுவராஜின் அரைசதமும் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டன. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் காம்பிரும், ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் யுவராஜ் மற்றும் தோனியும் வரும் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தருகிறார்கள். அவசர கட்டத்தில் கோலியாலும் பதானாலும் ரன்களை அதிகம் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சனின் பந்துவீச்சு ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பிறகு படுமோசமாகிவிட்டது. 91 ரன்கள் கொடுத்து இங்கிலாந்தின் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற பெயரை வாங்கிக் கொண்டுவிட்டார்.. 129155

சச்சின்!!!! ஒவ்வொருமுறையும் சதமடிக்கும் பொழுதெல்லாம் பலரால் பெருமிதப்பட்டும் மிகச்சிலரால் சர்ச்சைக்கும் உள்ளாகும் பெயர். 5 சிக்ஸர்களை விரட்டிய அதிரடி ஆட்டத்தினைப் பார்க்கும் பொழுது சச்சின் அடுத்த உலகக்கோப்பைக்கும் இருப்பாரோ என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் 24 மேட்ச் ஆடியிருக்கும் சச்சின் 5 சதம் மூன்று அரைசதம் உட்பட 1337 ரன்கள், 66.85 ஆவ்ரேஜில் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் எவ்வளவு தெரியுமா? 99.18!!!! வயது கூடக் கூட ஆட்டமும் கூடுகிறது..

நான் முன்பே சொன்னது போல இந்தியாவின் பேட்டிங் எவ்வளவு பலமாக இருக்கிறதோ அத்தனை பலவீனமாக இருக்கிறது பவுலிங்… சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் இந்தியா வெல்வதில்லை என்று சொல்லும் பலர், அந்தப் போட்டிகளில் பவுலர்களின் பங்கைப் பற்றி பேசுவதேயில்லை. இன்றும் நான் அடித்துச் சொல்லுவேன். சச்சின் மட்டுமே இந்திய அணி… மற்றவர்களெல்லாம் பேருக்குத்தான் பங்கு.. நல்லவேளை ஸ்ரீசாந்த், ஆட்டத்திற்கு இல்லை. இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று சில பந்துகளை மிச்சமும் செய்திருக்கும். ஜாஹீர்கான், முனாப் பட்டேல், சாவ்லா ஆகியோரின் ஓவர்களில் ஆங்கிலேயர்கள் ரன்மழை பொழிந்தனர். குறிப்பாக சாவ்லாவின் 49வது ஓவர்தான் இப்போட்டி ”டை” ஆனதற்கு மிக முக்கிய காரணம்.

நெதர்லாந்திடம் போராடி வென்ற இங்கிலாந்து, நம்மை நொறுக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கேப்டன் ஸ்ட்ராஸ் மட்டும் இல்லையென்றால் இங்கிலாந்து 250 க்குள் சுருண்டிருக்கும். இவரை அவுட்டாக்க தோனி பல வியூகம் வகுத்தார். ஆனால் வியூகங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்தனர் ஸ்ட்ராஸும் பெல்லும். ஆனால் 25வது ஓவரில் யுவ்ராஜின் பாலுக்கு இயன் பெல்லுக்கு LBW ஏன் தரப்படவில்லை என்று தெரியவில்லை. அம்பயர் பில்லி பவுடன் திறமையானவர்தான். 2.5 மீட்டர் ரூல்ஸ் என்ன என்று புரியவில்லை.. பெல் பிழைத்துக் கொண்டதில் இந்தியா மூழ்கிக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தனர். (நேற்று பனி பெய்யாததும் இங்கிலாந்து பேட்டிங்கு சாதகமாக இருந்தது..). ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்து ரன்ரேட் 6 க்கும் கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டது இங்கிலாந்து..

மேட்ச் டை ஆனாலும் தோல்வி என்னவோ இந்தியாவுக்குத்தான். 339 ரன்களை எடுத்துவிட்டு அதற்கேற்ப ஃபார்ம் இல்லாத, இந்திய சூழ்நிலை ஒத்துக்கொள்ளாத ஒரு அணியை அடிக்கவிட்டு டை செய்தது பெருத்த தோல்வி… இந்தியாவுக்குக் கோப்பை கிடைக்கவேண்டுமானால், ஒரே ஒரு மாற்றம் வேண்டும்… அது, எதிரணியைச் சுருட்டும் திறமை!!

பெட்டர் லக் நெக்ஸ்டைம் இந்தியா!!


புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Pakistan 2 2 0 0 4
Australia     2 2 0 0 4
Sri Lanka 2 1 1 0 2
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     1 0 1 0 0
Canada     1 0 1 0 0
Kenya 2 0 2 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         2 1 0 1 3
England     2 1 0 1 3
South Africa 1 1 0 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 1 0 0 0 0
Ireland 1 0 1 0 0
West Indies    1 0 0 0 0

புள்ளிவிபரம்

அதிகரன்கள்

Name Runs High Score
AJ Strauss (Eng) 246    158   
V Sehwag (India) 210    175   
Misbah-ul-Haq (Pak) 148    83*
SR Tendulkar (India) 148    120   
KC Sangakkara (SL) 141    92   

அதிக விக்கெட்டுகள்

Name Wickets Best
Shahid Afridi (Pak) 9 5/16   
MG Johnson (Aus) 8 4/19   
HK Bennett (NZ) 6 4/16   
TT Bresnan (Eng) 6 5/48   
MM Patel (India) 6 4/48   

நேற்று அடித்த இரண்டு சதங்களோடு மொத்தம் 7 சதங்கள் இந்த தொடரில் அடிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே ஸ்கோரிங் ரேட் 100 க்கும் மேல்.

முதல் மேட்ச் ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும்.

128968நியூஸிலாந்துகாரனுங்க சின்னப்பசங்கடா

சின்னப் பிள்ளையக் கேட்டால் கூட சொல்லிவிடும், ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் என்று. காரணம், வலுவில்லாத பங்களாதேஷிடமே தோற்ற நியூஸிலாந்து, நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை ஜெயிக்கும் என்று யாராவது தப்பித் தவறி சொல்லிவிடமுடியுமா? நேற்று அப்படித்தான் நடந்தது.

பாண்டிங், வெட்டோரியைப் பார்த்து “மவனே, கென்யாவைப் போட்டு என்னா தாளி தாளிச்சீங்க,. இன்னிக்கு இருக்குடா உங்களுக்கு ஆப்பு!!” என்று சொல்லிவிட்டாரா என்ன… 73 ரன் எடுப்பதற்குள்ளாகவே 6 விக்கெட் பொள பொளவென போய்க்கொண்டே இருந்தது. சர்தான், கென்யாவுக்காக ரிவஞ்ச் என்றுதான் நினைத்தேன். 100 க்குள்ளாகவே ஆல் அவுட் ஆகவேண்டியது, மெக்கல்லம் வந்து காப்பாற்றினார். 76 பந்துகளைப் பிடித்தாலும் 52 ரன்கள் எடுத்து ஓரளவு கவுரவத்தைக் காப்பாற்றினார். அவரோடு வெட்டோரியும் அடித்து ஆட 200 ஐ கடந்தது. அப்பறமென்ன… சேனலை மாற்றிவிட்டு திரும்பி வருவதற்குள் 206 க்கு ஆல் அவுட்…  கலக்குங்கடா நியூஸிலாந்து காரனுங்களா!

128991நாதன் மெக்கல்லம்: நான் இருக்கேண்டா

bollyபொலிங்கர் இல்லாமல் ஆஸ்திரேலியா பவுலிங் ஆரம்பித்தது. என்னடா என்று பார்த்தால், ஆளை பேக்கப் செய்து ஊருக்கே அனுப்பிவிட்டார்களாம். அதுசரி, ஹஸிக்கு காயமானது போல பொலிங்கருக்கும்… இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பெரிதாக எந்த நட்டமும் ஆகிவிடப்போவதில்லை. ப்ரட் லீ, மிச்சல் ஜான்ஸன், வாட்சன், டைட், என வேகப் பட்டாளமே இருக்கிறது. (நம்ம டீமுக்கு ஜாஹிரை விட்டால் ஆளில்லை) ஒரே ஒரு முக்கியமான விக்கெட் எடுத்திருந்தாலும் நன்றாக பவுலிங் போட்டது ப்ரட் லீ தான். எவனாலயும் தொடவே முடியவில்லை. முதல் ஓவரைப் பிடித்த குப்தில்லுக்கு வேர்த்தேவிட்டது. ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை. ப்ரட்லீயை விடவும் துள்ளித் துள்ளி ஓடி வந்து பவுலிங் போடும் ஜான்ஸன் அருமையான பவுலிங்கை வெளிப்படுத்தினார். 9 ஓவருக்கு 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்…

பிறகென்ன…

ஆஸ்திரேலியா வழக்கம்போல பின்னியெடுத்துவிட்டது. பாவம் நியூஸிலாந்து. கென்யாவுக்கு எதிராக ஏதோ வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக இப்படியா பழிவாங்கப்படுவது? வாட்சனும் ஹடினும் ஏதோ இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வது போல எல்லாருடைய ஓவரையும் பதம் பார்த்தார்கள். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 135  ரன்கள்… நான்கூட விக்கெட்டே போகாமல் ஜெயித்துவிடுவார்களோ என்று நினைத்தேன். ஹடின் நடையைக் கட்டியதும் வாட்சன் பின்னாலேயே தொடர்ந்தார். அடுத்து வந்த பாண்டிங் தடவிக் கொண்டே இருந்தார். ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. சரி இறங்கி அடிப்போம் என்று இறங்கினார்….. ஸ்டம்ப்ட்.. வைடில் ஒரு ரன் கிடைத்ததுதான் மிச்சம். மிச்ச சொச்சத்தை கேமரூன் ஒயிட்டும் மைக்கேல் க்ளார்க்கும் பொறுக்கினார்கள். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…

பெட்டர்லக் நெக்ஸ்டைம் நியூஸி!

ஆல்ரவுண்டர் வாட்சன் (இந்தாளைக் கண்டா பொறாமையாத்தான் இருக்கு) கடந்த ஐந்து இன்னிங்ஸில் 4 அரைசதம் அடித்திருக்கிறார்.. படுபாவி, இவர்தான் இப்பொழுது ஹை ஸ்கோரில் இரண்டாமிடம். மொத்தம் 141 ரன்கள். இரண்டு போட்டியிலும் அரைசதம்..!! மிட்சல் ஜான்ஸன் விக்கெட் வீழ்த்தியதில் முதலிடம். மொத்தம் 8 விக்கெட்டுகள்!!! மெக்ராத்தின் சாதனையை முறியடிப்பாரா ஜான்ஸன்!??

அடுத்து பங்களாதேஷ் - அயர்லாந்து

129007அடுத்த வேல்ட்கப் நமக்குத்தான்

சின்னப் புள்ளைங்க மேட்ச் என்று எண்ணிவிடமுடியாத அயர்லாந்து பங்களாதேஷ் மேட்சும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத்தான் சென்றது. 86 க்கு 4 என்று பங்களாதேஷ் தத்தளித்ததுமே, இந்தியாவின் பவுலிங் திறமைதான் ஞாபகத்திற்கு வந்தது. அதெப்படி அயர்லாந்திடம் இப்படி மோசமாக ஆடுகிறார்கள் நம்மிடம் மட்டும் 283??? முஸ்ஃபிகர்  ரஹீமும், ரஹிபுல் ஹஸனும் ஓரளவு ரன் சேர்தார்கள். அயர்லாந்தில் ஒரு நாலு பேர்தான் பவுலிங் போடவில்லை, மீதி எல்லாருமே ஆளுக்கு நாலு ஓவரைப் போட்டு விடுகிறார்கள். போத்தாவும் (Botha) டாக்ரெலும் (Dockrell) சிறப்பாக வீசினர். டாக்ரெல் 10 ஓவரில் 23 ரன்களை மட்டும்தான் தந்திருந்தார். (நோட் திஸ் பாயிண்ட் இண்டியன்ஸ்) பங்களாதேஷ் மக்களின் ஆராவாரம் அடங்கிக் கொண்டே வந்தது. இருக்கிற விக்கெட்டுகளும் மடமடவென கழன்றுவிட, சொல்லிவைத்தாற் போல 205. (நியூஸி 206)

129008பவுலிங்ல வெச்சுக்கறேண்டா

சென்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்பேற்றிய அயர்லாந்து இம்முறை பழைய பாகிஸ்தானான பங்களாதேஷையும் வீழ்த்திவிடுமென்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். சீரான இடைவெளியில் விழுந்த விக்கெட்டுகள் பங்களாதேஷ் ரசிகர் நெஞ்சில் பாலை வார்த்துக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸில் ப்ராவோ சகோதர்கள் நன்றாக ஆடியது போலவே இதிலும் O'Brien சகோதர்கள் ஓரளவு ஆடினார்கள். இருவருமே கிட்டத்தட்ட ஒரே ரன்கள்தான் (37,38). ஓபனர்கள் சரியாக ஆடியிருந்தால் ஜெயித்திருக்கலாம். எனினும் பங்களாதேஷ் சிரமப்பட்டுத்தான் ஜெயிக்க வேண்டியிருந்தது!!


Result

நியூஸி 206 - ஆஸி 207/3 (34 ov)

ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


பங்களாதேஷ் 205 – அயர்லாந்து 178 (45 ov)

27 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி


சரி, கடைசியா ஏதாவது சொல்லணும்ல….

ஆஸ்திரேலியாவின் பவர் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது என் கணிப்பு. இலங்கைக்கெதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் உண்மையான வலிமையை எடை போடலாம்.

சின்னச் சின்ன அணிகளும் நன்றாக தாக்குப் பிடிக்கிறார்கள். நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்றவைகள் எதிர்பார்த்ததைவிட நன்றாக ஆடுகிறார்கள். கென்யாவின் நிலைமைதான் படுமோசமாக இருக்கிறது.

நேற்றைய பங்களாதேஷின் பேட்டிங்கைப் பார்க்கையில் (அதே மைதானம்) இந்தியாவின் பவுலிங், கோப்பை வாங்கப் போதாது என்று தெரிகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போட்டிகளில் “திறமை” தெரிந்துவிடும்.


புள்ளி பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Australia     2 2 0 0 4
Sri Lanka 1 1 0 0 2
Pakistan 1 1 0 0 2
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     1 0 1 0 0
Canada     1 0 1 0 0
Kenya 2 0 2 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         1 1 0 0 2
South Africa 1 1 0 0 2
England     1 1 0 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 1 0 0 0 0
Ireland 1 0 1 0 0
West Indies    1 0 0 0 0

பிகு: மக்களே, அடுத்து இந்தியா இங்கிலாந்து போட்டி மற்றும் ஆஸ்கர் ஸ்பெஷல் + பதிவு!! மறக்காமல் வருகை தரவும்!!

கென்யாவைப் பற்றி எழுதவே வேண்டாம். ஆளாளுக்கு அதை பந்தாடுகிறார்கள். ஏற்கனவே நியூலிலாந்து போட்டு புரட்டி எடுத்ததில் ஏகப்பட்ட காயம் அந்த அணிக்கு. பற்றாக்குறைக்கு பாகிஸ்தானும் கடித்து விட்டது. 205 ரன்கள் வித்தியாச வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. கென்யாவில் யாராவது கிரிக்கெட் பார்ப்பார்களா?? சந்தேகம்தான்.

நேற்றைய இன்னொரு மேட்ச் விண்டீஸ் க்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்…

வெஸ்ட் இண்டீஸ்  222 
தென்னாப்பிரிக்கா 223/3 (42.5 ov)

ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா..

 

128923

அதிர்ச்சியான துவக்கத்தை இரு அணிகளுமே தந்தன. தென்னாப்பிரிக்கா தரப்பில் முதல் ஓவரே ஸ்பின் போடப்பட்டது. ஸ்பின்னர் போத்தா, கேப்டனின் நம்பிக்கையை தகர்க்காமல் அலேக்காக கெயிலின் விக்கெட்டை எடுத்தார். விண்டீஸின் கெயில், இந்தியாவின் ஷேவாக்கைக் காட்டிலும் மோசமானவர். நிலைத்து நின்றாடினால் தென்னாப்பிர்க்காவாவது ஆஸ்திரேலியாவாவது, சும்மா பிய்த்து காயப்போட்டுவிடுவார். இருநூறு ரன்கள் அடிப்பேன் என்று சவடால் விட்டவர் இரண்டே ரன்களுக்கு அவுட்டானது பெருத்த ஏமாற்றம். எனினும் ப்ராவோ சகோதர்கள் நன்றாக ஆடினார்கள்.  குறிப்பாக டேரன் ப்ராவோ. அடுத்த லாரா என்று சொல்கிறார்களாம். ஆவ்ரேஜும் 40 க்கு மேல் இருக்கிறது. என்றாலும் எதிர்த்தாடுவது பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவாயிற்றே.

புதிதாக களம் இறங்கிய இம்ரான் டாஹீர் முதல் மேட்சிலேயே 4 விக்கெட் எடுத்ததுதான் ரொம்பவும் ஆச்சரியம். தென்னாப்பிரிக்காவின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இம்ரான் டாஹிரின் முதல் ஒருநாள் போட்டி இதுதான். உள்ளூர் மற்றும் ட்வெண்டி 20 மேட்சுகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். கொடுமை… புதுமுகமே 4 விக்கெட் ரொம்ப எதிர்பார்த்த ஸ்டெய்ன் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. மோர்கலுக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா, மிகவும் எதிர்பார்த்த ஆம்லாவை இழந்தது ஆச்சரியம். ஏனெனில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்ல ஆம்லாவும் காலிஸும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடலாம்.. விண்டீஸ் அணி பவுலர்கள் அணி என்றே முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழ். ஸ்மித்தை அவுட்டாக்கவே சிரமப்பட்டார்கள். டி வில்லியர்ஸை அவுட் ஆக்கவே முடியவில்லை. மொத்தம் மூன்றே விக்கெட்டுகள்தான் கிடைத்தது. பாவம்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்டன்ஷி கொடுத்த விண்டீஸின் மிடில் ஆர்டர் பப்படம் ஆனதுதான் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அடுத்த 100 ரன்களுக்கு 9 விக்கெட்டும் போய்விட்டது. தென்னாப்பிரிக்காவின் ஓபனிங் வலுவாகவே இன்னும் இருக்கிறது. பார்ப்போம்… நம்மோடு ஆடுவார்கள் அல்லவா?

நேற்றைய டிவிலியர்ஸ் சதத்துடன் இதுவரை மொத்தம் ஐந்து சதங்கள் இந்த உலகக் கோப்பையில்…. இன்று ஆஸ்திரேலியாவில் யாரும் சதம் அடிக்க முடியாது போலத் தெரிகிறது.!! மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் நாளை மறுநாள் சந்திப்போம்!!

பிகு : இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்டேட்ஸ் தொடரும்…

Call-of-Duty-Black-Ops

Developer Treyarch,
Publisher Activision
Designers Brandon Marino (creative director), YoungMo Byun (multiplayer design director), Geoff McCulloch (lead designer)
Series    Call of Duty
Platform Microsoft Windows
Year 2010
Genre First-person shooter
Mode Single Player & Multiplayer
Media Blu-ray Disc, DVD-DL

Black Operation என்று சொல்லப்படும் சட்டவிரோதமான ரகசிய போர் நடவடிக்கைகளை ரஷ்யா, அமெரிக்கா பனிப்போரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் கணிணி விளையாட்டுதான் Call of Duty : Black Ops. கால் ஆஃப் ட்யூட்டி சீரியஸில் இது ஏழாவது விளையாட்டு. முந்தைய ஆறு விளையாட்டுக்களையும் ஆடி முடித்திருக்கிறேன். ப்லாக் ஆப்ஸ், World at War எனப்படும் நான்காவது விளையாட்டின் தொடர்ச்சி.

First Person Shooter வகை விளையாட்டுக்களை நீங்கள் நிறைய பார்த்திருக்கக் கூடும். சுடுபவர்களின் கன் (Gun) பார்வையிலேயே ஆட்டம் முழுக்கச் செல்லும். எல்லா வகையான சூட்டர் கேம்களிலும் எதிரியைக் கொல்வதுதான் முக்கியமான நோக்கமாக இருக்கும்.  ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு சினிமாட்டிக்கான, நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மற்றும் திருப்பங்கள் நிறைந்த விளையாட்டினை பார்த்ததேயில்லை. ப்ளாக் ஆப்ஸ் மிகச்சிறப்பான கேம்ப்ளே மற்றும் திருப்பங்கள் நிறைந்த விளையாட்டு. இந்த கேம் ஏன் இவ்வளவு புகழ்பெற்றது என்று சொல்லுவதைக் காட்டிலும் காண்பிப்பதே சிறந்தது.

Call of Duty : Black Ops கதை என்ன?

அமெரிக்க உளவுத் துறையின் SOG ("Special Operations Group) ஐச் சேர்ந்த Mason எனும் போர்வீரனின் Flashback களிலேயே கதை செல்கிறது. பல டிவி பெட்டிகள் நிறைந்த ஒரு விசாரணை அறையில் கட்டப்பட்டு அவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முக்கியமாக, ஒரு Number Station பற்றி கேட்கப்படுகிறது. நினைவிழந்து கிடக்கும் மேசனுக்கு நம்பர் ஸ்டேஷன் குறித்து எந்த ஞாபகமும் வரவில்லை. அதனால் விசாரிப்பவர் மேசன் பங்கேற்ற மிஷன்கள் குறித்து கேள்விகள் கேட்கிறார். இது நடப்பது பிப்ரவரி 25, 1968ல். மேசன் தன் நினைவுக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லுகிறார்.

பிக்ஸ் விரிகுடா முற்றுகை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்க உளவுத் துறையான CIA யின் Operation 40  எனும் போர்நடவடிக்கைகளுள் ஒன்றுதான் Bay of Pigs invasion. க்யூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்காக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜான் F. கென்னடி படைகளை அனுப்பியிருந்தது வரலாறு. அதிலிருந்துதான் மேசனின் மிஷன்கள் ஆரம்பிக்கின்றன.

ஏப்ரல் 17, 1961 அன்று உட்ஸ், (Woods) மேசன் (Mason) மற்றும் போமன் (Bowman) ஆகிய மூவரும் க்யூபாவுக்கு வந்திறங்குகிறார்கள். மேசன் காஸ்ட்ரோவை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல, எதிர்பாராத விதமாக லெவ் க்ராவ்சென்கோவால்  (Lev Kravchenko) என்பவனால் பிடிக்கப்படுகிறான். மெல்ல எழுந்து கண்ணைத் துறுத்திப் பார்த்தால், அங்கே நின்று கொண்டிருப்பது உண்மையான ஃபிடல் காஸ்ட்ரோவும் (Fidel Castro ) ரஷ்ய மேஜர் ஜெனரல் நிகிடா ட்ராகோவிச்சும் (Nikita Dragovich). மேசனை ட்ராகோவிச்சிடம் ஒப்படைக்கிறார் காஸ்ட்ரோ.Woods

1961 லிருந்து 1963 வரை இரண்டு வருடங்கள் மேசனோடு செல்மேட்டாக விக்டர் ரெZனோவ் (Viktor Reznov) எனும் ரஷ்யனும் சில ரஷ்யபடை சிறைக் கைதிகளும் இருந்தனர்.  ரெஸ்னோவும் மேசனும் ரஷ்யாவின் வொர்குடா (Vorkuta) சிறையிலிருந்து தப்பி ரஷ்ய படையினரை சுட்டு வீழ்த்தி மேசன் மட்டும் ஒரு இரயிலிலேறி தப்பிச் சென்றுவிடுகிறான். ரெஸ்னோவ் மேசனோடு வராமல் ரஷ்ய வீரர்களைக் கொன்று கொண்டே செல்கிறார்.

தப்பித்த மேசன், அமெரிக்க அதிபரான கென்னடியை பெண்டகனில் சந்தித்து ட்ராகோவிச்சை கொல்லும் ஆணையை பெற்றுக் கொள்கிறான்.

November 17, 1963. சோவியத் ரஷ்யாவில் காலையில் மேசனும் உட்ஸும் போமனும் ட்ராகோவிச்சைக் கொல்வதற்காகச் செல்கிறார்கள். Baikonur எனும் இடத்தில் டேரா போட்டிருந்த ரஷ்யன் படையில் புகுந்து தாக்குகின்றனர். அங்கே CIA உளவாளி வீவரைக் காப்பாற்றிவிட்டு சோவியத் ரஷ்யாவின் விண்வெளி மையத்தையும் ராக்கெட்டையும் அழித்துவிடுகிறார்கள். ஆனால் ட்ராகோவிச் தப்பியோடிவிடுகிறான்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 1968 ல் வியட்நாமில் ட்ராகோவிச் இருப்பதாக தகவல்கள் வரவே, மேசன், உட்ஸ், போமன் ஆகியோர் அங்கே சென்று தாக்குகின்றனர். அங்கே விக்டர் ரெஸ்னோவை மீண்டும் பார்க்கும் மேசன், அங்கிருந்து தப்பிக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக க்ராவ்சென்கோவைக் கொல்லும் பொழுது போமனும் உட்ஸும் இறந்துவிடுகிறார்கள். COD BO

இதே நேரத்தில் பிப்ரவரி 9 1968, ஹாங்காங்கில் டாக்டர் டேனியல் க்ளார்கை துன்புறுத்தி Nove 6 குறித்து விசாரிக்கின்றனர் ஹட்சனும் வீவரும். Nove 6 என்பது ரஷ்யா தயாரிக்கும் ஒரு ரசாயன வெடிமருந்து புகை. Friedrich Steiner தான் இதில் முக்கியமானவர் என்று தெரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிக்கிறார்கள். டாக்டர் க்ளார்க் தப்பிக்கும் வழியில் தவறி விழ, அவரிடம் ஹட்சன், நம்பர்கள் குறித்து விசாரிக்கிறார். ஆனால் அதற்குள் சோவியத் வீரர்கள் க்ளார்கின் மண்டையில் சுட்டுவிட ”நம்பர்” பற்றி சொல்லாமலேயே இறந்துவிடுகிறார் க்ளார்க். இருப்பினும் ஹட்சனுக்கு ஸ்டீய்னரிடமிருந்து அழைப்பு வருகிறது. நம்பர் ஸ்டேஷன் குறித்தும் அமெரிக்க நகரங்களில் ரசாயன வாயுவை பரப்பாமல் தடுப்பது குறித்தும் சொல்லிவிடுவதாக சொல்கிறார். அதே நேரத்தில் மேசனும் ரெஸ்னோவும் ஸ்டீய்னர் இருக்கும் ரீபர்த் ஐலண்டுக்கு (Rebirth Island) ஸ்டீய்னரைக் கொல்லப் புறப்படுகிறார்கள். ரெஸ்னோவ் ஸ்டீய்னரின் தலையில் சுட்டு கொன்றுவிடுகிறான்.

இதுவரையிலும் நிகழ்ந்த மிஷன்கள் குறித்து மேசன் தன் நினைவுக்குத் தெரிந்தது வரையிலும் கூறினாலும் நம்பர் குறித்து எதுவும் கூறாததால் விசாரணை அறையிலிருந்து ஒருவர் இறங்கிவருகிறார். அவர் மேசனுக்கு மிகவும் பழக்கப்பட்டவர்.

மேசனை யார் விசாரிக்கிறார்கள்?, நம்பர் ஸ்டேசனைக் கண்டுபிடித்து நோவா 6 ஐ அழித்தார்களா? ரெஸ்னோவ் அதன் பின் என்னானார்? போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் கூடிய கேம்ப்ளேயின் இறுதியில் விடை கிடைக்கிறது!!

ஒரு பர்ஃபெக்ட் கேம்ப்ளே சிறப்பான கேம் இன்ஜின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. மிகத் துல்லியமான விவரங்கள், பாத்திரங்களின் டீட்டேய்ல் வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் பின்புல காட்சிகள் இவற்றோடு ஒளி மற்றும் ஒலியில் ஒரு சிறந்த போர் திரைப்படத்தைக் காணும் உணர்வை கொண்டு வந்திருக்கின்றனர். இன் கேம் சினிமாடிக் என்று சொல்லப்படும் விளையாட்டுணர்வு, அதாவது வெறும் சுடுதல் மட்டுமே முக்கிய பணியல்ல, தப்பித்தல், பதுங்குதல், மறைந்து நின்று தாக்குதல், நீந்துதல், மலையிறங்குதல் போர்விமானத்தைச் செலுத்துதல், ஆணை பிறப்பித்தல் என பல வேலைகளும் விளையாட்டில் இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் WMD லெவலில் போர்விமானம் ஒன்றிலிருந்து கமாண்ட் சொல்லுவதும் அதன் கீழ்படியும் வேலையும் நாமே செய்வதும் சிறப்பான கேம்ப்ளேக்கு உதாரணம்.official-12-HD

பின்புல இசை அப்படியொன்றும் பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது. கால் ஆஃப் ட்யூட்டி முதல் பாகத்தில் பிண்ணனி இசை நம்மை மிரட்டும் வண்ணம் இருக்கும். இதில் சுமார்தான். பாத்திர வடிவமைப்பு அசல் மனிதர்களைக் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு போமனாக வருபவர் பிரபல நடிகர் ஐஸ் க்யூப் (Ice Cube) போல, மேசனாக வருபவர் சாம் ஒர்திங்டன்.. அவதார் படத்தின் நாயகன். அவரே குரலும் கொடுத்திருக்கிறார். கேம் சிலசமயங்களில் crash ஆகிவிடுகிறது. இதற்கு முந்தைய கேம்களில் இந்த பிரச்சனை நிகழவில்லை.

ஆக மொத்தத்தில் கணிணி விளையாட்டு விரும்புபவர்கள், குறிப்பாக First Person Shooter வகை கேம்களை விரும்புபவர்கள் நிச்சயம் விளையாட வேண்டிய விளையாட்டு இது.


System Requirements

Operating system

Windows Vista / XP / 7

CPU

Intel Core 2 Duo E6600 or AMD Phenom X3 8750 or better

Memory   

2GB

Hard drive space   

12GB

Graphics

Shader 3.0 or better 256MB NVIDIA GeForce 8600GT / ATI (AMD) Radeon Radeon X1950Pro or better


பாத்திரங்கள் :

Black_Ops_Cpt_Alex_Mason woods 395px-JBowmanCS Jason_Vietnam

மேசன்

உட்ஸ்

போமன்

ஹட்சன்

340px-Castro Dragovich Steiner-Intel Lev Kravtchenko

ஃபிடல் காஸ்ட்ரோ

ட்ராகோவிச்

ஸ்டீய்னர்

லெவ் க்ராவ்சென்கோ

Weaver ReznovinRebirth 250px-John_F._Kennedy_Black_Ops

வீவர்

ரெZனோவ்

ஜான் F கென்னடி

முந்தைய பதிவான “கிரிக்கெட் அப்டேட்” இண்ட்லியின் புதுவரவில் காண முடியவில்லை. என்ன காரணமோ எடுத்துவிட்டார்கள். நண்பர்கள் அதற்கும் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

128836

எந்த உலகக் கோப்பையிலும் இல்லாது இந்த உலகக் கோப்பை போட்டிகளை நன்றாக துவக்கியிருக்கின்றன வங்காளதேசமும் நெதர்லாந்தும். குறிப்பாக நெதர்லாந்தின் நேற்றைய ஆட்டம் பிரமிக்க வைத்திருக்கிறது. தோற்றிருந்தாலும் அவர்களின் போராட்டமும் திறமையும் ஒருங்கே வெளிப்பட்டது. 292 ரன்களை நானும் எதிர்பார்த்திருக்கவேயில்லை. ஏன், இங்கிலாந்தும் எதிர்பார்த்திருக்காது.

நெதர்லாந்து அணியை ஆல் அவுட் ஆக்க இங்கிலாந்து எத்தனையோ பிரம்மாயுதங்களை வீசியும் ten Doeschate வின் முன்னால் அது எடுபடாமல் போயிற்று. தனியாளாக 119 ரன்களை 110 பந்துகளுக்கு எடுத்திருந்தார். Cooper ஓரளவு கை கொடுத்திருந்தாலும்  Zuiderent தவிர மற்ற அனைத்து விக்கெட்டுகளும் நெதர்லாந்துக்கு போராடின. இங்கிலாந்து தரப்பில் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. ஏதோ உள்ளூர் விளையாட்டு போலவும், வார்ம் அப் மேட்சுகளைப் போலவும் உணர்ந்திருந்தார்கள் போலும். ஃபீல்டிங்கில் இப்படி மோசமாக இருந்தால் அரையிறுதியெல்லாம் கனவில்தான் எட்டமுடியும். அப்படியே காசி ராமேஸ்வரம் என்றூ போகவேண்டியதுதான். இங்கிலாந்து பவுலிங்கும் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியவில்லை. நன்கு எதிர்பார்த்த Swann மட்டுமே 35 க்கு 2 விக்கெட் எடுத்திருந்தார். ஆண்டர்சன், கொலிங்வுட் பவுலிங்கையெல்லாம் நெதர்லாந்து நாறடித்திருந்தது. பற்றாகுறைக்கு ஆடியன்ஸ் எல்லாருமே நெதர்லாந்துக்குத்தான் சப்போர்ட். இங்கிலாந்து ஒரு பவுண்டரி அடித்தால் சலனமே இல்லாமல் இருக்கிறது மைதானம்…

ஆனால் இங்கிலாந்து ஒரு அனுபவம் வாய்ந்த அணி என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. இந்தியா, இலங்கை போல நல்ல ஸ்தரமான பேட்டிங் ஆர்டர் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்கு நிலைத்து ஆடக்கூடியவர்கள் ஆங்கிலேயர்கள். ஸ்ட்ராஸ் பீட்டர்ஸன் ஜோடி 100 ரன்களைக் குவித்தபோதே நினைத்தேன். நெதர்லாந்து ஜெயிப்பது மிகவும் கடினம் என்று. இக்கட்டான சூழ்நிலைகளில் விக்கெட் எடுக்க முடியாமல் போனதும், பொறுப்பாகவும் பொறுமையாகவும் வெறும் சிங்கில்ஸிலேயே ஸ்கோரை ஏற்றியதும்தான் நெதர்லாந்தின் தோல்விக்குக் காரணமாக இருக்க முடியும். பேட்டிங்கில் தன்னை நிரூபித்த டென், பவுலிங்கிலும் 47 ரன்ன்கு 2 விக்கெட் சாய்த்திருந்தார். எப்படியோ, கொஞ்சம் சிரமப்பட்டுதான் இங்கிலாந்தால் ஜெயிக்க முடிந்தது. பழைய இந்தியாவைப் போல!!

இந்த போட்டியைப் பார்க்கும்பொழுது இங்கிலாந்து இவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? இல்லை நெதர்லாந்து பலமாகிவிட்டதா என்று தோணுகிறது. இவர்கள் இருவரோடும் இந்தியா ஆடும் ஆட்டத்திலிருந்து கணிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ரொம்பவும் பாவமான அணி எது என்று கேட்டால், அது கென்யாதான். கனடவைக் கூட அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் கென்யா பலமான அணிகளை வீழ்த்தியிருக்கிறது. மாறாக கனடா அப்படியில்லை. அந்த அணியின் மொத்த ஸ்கோரே 69 தான். அநேகமாக இந்த அணி பட்டியலில் இறுதி இடத்தை உறுதிசெய்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.

ஜிம்பாப்வே ஒரு நம்பர் ஒன் அணியுடன் மிகச்சிறப்பாக ஆடினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆஸ்திரேலியா ரன்களைக் குவிக்க வெகுவாக சிரமப்பட்டது, ஒருவர் கூட சதம் அடிக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் நல்ல பவுலிங் இருந்திருந்தால் 220 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். சேஸிங்கும் நன்றாக செய்திருக்கலாம். 1983 ல் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வென்றது நினைவிருக்கலாம். அப்படியொரு நிகழ்வு ஏற்படுமென்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ப்ச்.. ஆஸ்திரேலியா இன்னமும் பலமிழக்காத சிங்கம்.

இந்தியா வங்காளதேசம் பார்க்காதவர்கள் இருக்கமாட்டீர்கள். இதை எழுதியும் பிரயோசனமில்லை. ஆனால் இந்தியாவின் மோசமான பவுலிங்கை குறைகூறாதவர்களே இருக்க முடியாது. எல்லாரும் ஸ்ரீசாந்தைக் குறிப்பிடுவார்கள். ஸ்ரீசாந்த் வேறுவழியில்லாமல் எடுக்கப்பட்டவர். பிரவீன்குமாராக இருந்தால் இன்னும் 20 ரன்கள் குறைந்திருக்கும், என்றாலும் ஸ்ரீசாந்த் 5 ஓவருக்கே 53 கொடுத்திருக்கிறார் என்றால் இவரையெல்லாம் நம்பி எப்படி கிண்ணத்தை வாங்குவது? என்னைக் கேட்டால் பவுலிங்கில் படுமட்டமாக இருக்கிறது இந்தியா. நிறைய ரன்களைக் குவிப்பது மட்டுமே பலமல்ல. ஒரு பேலன்ஸ்ட் அணியாக இருக்கவேண்டும். ம்ஹூம்… இந்தியா இங்கிலாந்து போட்டிக்குப் பிறகு இந்தியாவைக் கணிப்போம் மீண்டும்…

ஒரு சின்ன புள்ளிவிபரம்.

எல்லா அணிகளும் ஒரு மேட்ச் மட்டுமே ஆடியிருக்கின்றன.

  • ஷேவாக் 175 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
  • மொத்தம் 4 சதங்கள். அதில் இரண்டு இந்தியாவிலிருந்து (கோலி - 100*)
  • நெதர்லாந்து வீரர்  ten Doeschate இரண்டாம் இடத்தில்..
  • சதமடித்த நான்கு பேரின் ஸ்கோரிங் ரேட் 100 க்கும் மேல்.
  • விக்கெட்டுகளில் பெனட், ஜான்ஸனோடு முனாப் பட்டேலும் 4 எடுத்திருக்கிறார். இது ஆட்டம் செல்லச் செல்ல வெகுவாக மாறும்.
  • நெதர்லாந்தின் 292 ரன்கள் அந்த அணியின் உ.கோப்பை அதிகபட்ச டோட்டல்.

அடுத்தடுத்த மேட்ச் அப்டேட்டுகளில் நிறைய புள்ளிவிபரங்கள் காணலாம்!!!

இன்றைய போட்டி பாகிஸ்தான் கென்யா. கென்யாவுக்கு இந்த போட்டி தொடரின் இரண்டாம் போட்டி. ஓரளவு கெளரவமாக தோற்குமா அல்லது வீறுகொண்டெழுந்து ஜெயிக்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்…

NNN_promo_poster

Direction

Gautham Vasudev Menon

Starring   

Veera Bahu, Swapna Abraham, Sameera Reddy, Deva

Cinematography

Manoj Paramahamsa

Language

Tamil

Year

2011

Genre

Psychological Thriller


எச்சரிக்கை : காமம், வன்மொழி, - குழந்தைகள் தவிர்ப்பது நல்லது

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் “விண்ணைத் தாண்டி வருவாயா” வெளிவந்தது. தமிழ்சினிமாவில் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன காதல் கதையை, இன்னும் இன்னும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று எண்ணுமளவுக்கு திரைக்கதை அமைத்து தந்திருந்தார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இசையும் திரையமைப்பும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும்தான். அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ இந்த இயக்குனரின் படங்கள் என்றால் தனித்திருக்கும் என்று எல்லா ரசிகர்களுக்கும் எழுதப்பட்டிருந்தது. அந்த அதீத எதிர்பார்ப்பு, தவிர, சாருவின் தளத்தில் கூட  இப்படம் குறித்து போடப்பட்டிருந்ததும் ஆர்வத்தை கொஞ்சம் அதிகமாகவே தூண்டிவிட்டது.

சமர் எனும் மாணவன், தனது தந்தையின் காம இச்சைகளால் பாதிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் மீனாட்சி என்பவரால் காப்பாற்றப்படுகிறான். தந்தையின் கொடுமைகளுக்குப் பின்னர் மீனாட்சியிடமே வளரும் சமர், அதீத கனவுகளாலும், மனப்பிணக்கினாலும் பாதிப்புக்குள்ளாகி தன்னை விட வயதில் மூத்தவரான மீனாட்சியிடம் கட்டாய உறவு வைத்துக் கொள்கிறான். சமயம் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் மீனாட்சியின் கணவனை தீவைத்து கொளுத்திவிடுகிறான். இந்த விபத்தில் சிக்கி மீனாட்சி தீக்காயங்களோடு வீரா (சமர்) காப்பாற்றிவிடுகிறான். இருவரும் சென்னையிலுள்ள வீட்டில் தங்குகிறார்கள். தனது காம இச்சையினை சமர் தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு பெண்ணையும் வீட்டுக்கு அழைத்து வருகிறான். மீனாட்சி அவர்களைக் கொல்லுமாறு பணிக்கிறாள். இந்நிலையில் சுகன்யாவை சந்திக்கிறான் சமர். அவளை எப்படியோ கடத்தி வீட்டுக்குள் அடைத்து வைக்கிறான். மோப்பம் பிடிக்கும் காவல்துறையினர் அவளைக் காப்பாற்றுவதோடு படம் நிறைவடைகிறது.

மீனாட்சியும், வீரா எனப்படும் சமரும் இறுதியில் என்னவானார்கள் என்பது (சற்றே) திடுக்கிடும் திருப்பங்களோடு முடித்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகி என்று சொல்லப்படும் சமீரா ரெடி (சுகன்யா) வருவது மிகச்சில காட்சிகளே swapna7என்றாலும் பரவாயில்லை என்று சொல்லலாம். ஓரளவு நல்ல நடிப்புதான். அதிக வசனங்கள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் ஹால் பெர்ரியின் கோதிகா (Gothika) நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல சைக்காலாஜிகல் திரில்லர் படத்தின் நடிப்பு. ஆனால் உண்மையில் படத்தின் கதாநாயகி மீனாட்சியாக வரும்  ஸ்வப்னா ஆப்ரஹாம்தான். மிக அருமையான நடிப்பு. க்ளோசப் காட்சிகளிலேயே நடக்கும் புணர்ச்சி காட்சிகளில் இவரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. தவிர, தீக்காயங்களோடு வரும் காட்சிகளும் திடுக்கிடச் செய்யும் காட்சிகள்தான். மற்றபடி குறைந்த பாத்திரங்களே படத்தில் உள்ளதால் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. வீராவாக வரும் வீரபாஹு நன்றாகவே நடித்திருக்கிறார். எந்தளவு என்றால், திரையரங்கில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ”அவனைக் கொல்லணும்டா” என்று சொல்லுமளவு.

நடுநிசி நாய்கள். வழக்கமான கெளதம் ஸ்டைல் நரேட்டிவ் மற்றும் நான் லீனியர் முறையிலான மனோரீதி திகில் (Psychological Thriller) திரைப்படம். பெரும்பாலான கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் பிரதானமே அவரின் பாடல்கள்தான். அவரது முதல் படத்திலிருந்து வி.தா.வ வரை எல்லா படங்களின் பாடல்களும் சாதாரண ஹிட் இல்லை. சூப்பர் ஹிட். ஆனால் இந்த படத்தில் பாடல்களுமில்லை,பிண்ணனி இசையுமில்லை. அதைவிட, அப்படியொரு குறை (?) இருப்பதாக படத்தில் தெரியவேயில்லை. இது தமிழ் சினிமாவுக்கும் புதுமுயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் சிறப்பு சப்தங்களோடே பயணிக்கிறது. உதாரணத்திற்கு கதவு திறப்பது, காலடி ஓசை போன்றவற்றிலிருந்து மழை வீழும் சப்தம் வரை கவனித்திருக்கிறார்கள். சமீபத்தில் யுத்தம் செய் சிறப்பான ஒலியமைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சமீபகால படங்களில் பாடல்களைக் குறைத்தும், காட்சிகளோடு ஓவர்லேப் செய்தும் (ஆடுகளம், யுத்தம் செய், பயணம்) வரும் படங்களில் பாடல்கள் இல்லாமலோ அல்லது தனித்தில்லாமலே இருத்தல் ஒரு குறையாகவே தெரியவில்லை. மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகி வருகிறது. எனக்குத் தெரிந்து பிண்ணனி இசையில்லாமல் வெளி வந்த ஒரே தமிழ் திரைப்படம் இது மட்டுமே. அதைவிட, ஒரு திரில்லர் படத்தில் இசை மிக மிக முக்கியம் என்றபோதும் இசையின்றி வெளிவந்தது கெளதமின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டலாம் என்று தோணுகிறது. மனோஜின் ஒளிப்பதிவு வித்தியாசமான தளத்தில் பயணிக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சப்ஜெக்டின் கண்கள்தான்.. இதை விசுவல் நரேட்டிவ் என்று சொல்லலாம். குறிப்பாக “மீனாட்சியாக” வரும் ஸ்வப்னா, தீக்காயத்துடன் சிகிச்சை பெறும் காட்சியில் அவரின் கண்களின் வழியே காட்சிகள் நகருவது போன்றவை வித்தியாசமாக இருக்கின்றன.
“மீனாட்சி”யை ரேப் செய்யும் பொழுது அவரின் முகத்தை மட்டுமே காண்பித்திருப்பதும் கூட “ரேப்பிங்” காட்சிகளைப் பொறுத்தவரை புதுமைதான். மிக நெருக்கமான க்ளோசப்கள். படத்தின் தொண்ணூறு சதம் இரவுநேர காட்சிகள் என்று தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவு இலக்கணத்தை மாற்றியிருக்கும் சில படங்களுள் ஒன்றாகிறது. (ஒருசில படங்களில் பகல் காட்சிகளையே இரவாக காண்பிப்பார்கள்!!) Nadunisi-Naaygal-05சில ஷார்ப்பான வசனங்கள், படத்திற்கு ப்ளஸ்தான்.

ஆனால்….. Multiple Personality Disorder வகையிலான படங்களை மக்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அதை சரியான நடிப்பிலும் திரைக்கதையமைப்பிலும் மக்களுக்கு யாராலும் கொண்டு செல்லமுடியவில்லை என்பதுதான். தவிர, தமிழில் நடந்த இந்த “வியாதி” படங்கள், மக்களுக்கு அதிக சலிப்பைத் தந்திருக்கின்றன. தவிர, வேற Plot களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு Paranoid schizophrenia, (A Beautiful Mind), hypopituitarism (Orphan), Antisocial Personality போன்ற தமிழுக்கு வித்தியாசமான தளத்தைத் தேர்தெடுத்திருக்கலாம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்க்கும் பொழுது இன்னும் இரண்டு பாடல்களோடு ஒருமணிநேரம் அதிகம் எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைத்தவர்கள் எல்லாருமே, “நடுநிசி நாய்கள்” திரைப்பட நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம் என்று நினைக்குமளவுக்கு சலிப்பான திரைக்கதையை கெளதம் தந்திருக்கத் தேவையில்லை.

இப்படத்தில் வரும் Incest வகை காமம் ஊருக்குள் நிகழாமல் இல்லை. எனக்குத் தெரிந்தே எங்கள் ஏரியாவில் தந்தை தன் மகளை காம இச்சைக்கு உட்படுத்திய சம்பவத்தைப் பார்த்திருக்கிறேன். தவிர நிறைய பத்திரிக்கைகளிலும் படிக்கிறோம். அதனால் இந்த படத்தின் அடிநாதம் அப்படியொன்றும் ஊருக்குள் நிகழாத கதை என்று சொல்ல முடியாது. நமக்கு அருகிலேயே நடக்கும் கதைதான். ஒருசில லாஜிக் ஓட்டைகள், திரையைக் கிழித்து பார்வையாளனின் கண்ணில் குத்துகின்றன. “யுத்தம் செய், ஆடுகளம்” போன்ற படங்களில் இருக்கும் நுணுக்கம் இப்படத்தில் துளிகூட இல்லாதிருப்பது ”இயக்கம் கெளதமா?” என்று விழிவிரியச் செய்கிறது.

இது உண்மைக்கதைச் சார்ந்தது என்று கூறியிருப்பதால், எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராயவேண்டியிருக்கிறது. முழுவதுமே உண்மையான கதையா, இல்லை வெறும் ப்லாட் மட்டும் வைத்துக் கொண்டு ஜோடிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. காமம், வன்மம், பழிவாங்கல், மெண்டல் ரேப் (நன்றி சாரு), ரேப், கொடூரம், மனநோய் போன்ற பல தளங்களில் பயணித்தாலும் அதற்கான அழுத்தம் படத்தில் துளிகூட இல்லை என்பதுதான் உண்மை… காமம் சார்ந்த காட்சிகள் அறுவறுப்பைத் தரவில்லை என்றாலும் நுணுக்கமில்லாத திரைக்கதையினால் அது சலிப்பாகிவிடுகிறது. ஒரு சைக்காலாஜிகல் திரில்லர் படத்தில் திரில்லிங் துளியும் இல்லாதிருப்பது மிகப்பெரிய பலவீனம். கெளதம் தனது டெம்ப்ளேட் கதைத்தளத்திலிருந்து தள்ளி வந்திருந்தாலும்….. “சிகப்பு ரோஜாவின்” இதழைக் கூட எட்டமுடியவில்லை என்பது வருத்தம்தான்!!!

இசையில்லா புதுமுயற்சிக்கென ஒருமுறை மட்டும் பார்க்கலாம்.


Trailer

Jennifers_Body_

Direction

Karyn Kusama

Starring   

Megan Fox, Amanda Seyfried, Adam Brody, Johnny Simmons

Cinematography   

M. David Mullen

Year  

2009

Language   

English

Genre

Horror


எச்சரிக்கை : காமம், வன்முறை, வன்மொழி – 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கவும்

ஹாரர் என்று சொல்லப்படும் திகில் படங்களுக்கு ஹாலிவுட்டில் பஞ்சமே இல்லை. ஹிட்ச்காக் காலத்திய ஸ்க்ரீன்ப்லே ஹாரரிலிருந்து பல கிராஃபிக்ஸ், ஒலியமைப்பு எல்லாம் புகுத்தி திகில் ஏற்படுத்தினாலும் நல்ல படங்கள் வருவது வெகுவாக குறைந்துதான் போயிருக்கிறது. Jennifer's Body டோரண்டோ விழாவில் திரையிடப்பட்டது என்று நம்பி பார்த்தேன்… ஆனால் அதைவிட மெகான் ஃபாக்ஸ் (Megan Fox) கதாநாயகி என்றதும் இன்னும் சுவாரசியம் பொங்க பார்த்தேன்..

கதை ஒன்றும் புதுமையானது இல்லை. அமெரிக்க திகில் ஆக்‌ஷன் திரைப்பட கிளிஷேக்கள் இதிலும் உண்டு. நீடி லெஸ்நிக்கி (Needy Lesnicki) சிறையில் இருந்தவாறே ஃப்லாஷ்பேக்கில் கதை சொல்கிறார். நீடியும் ஜெனிஃபரும் (Jennifer) சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருமுறை ஜெனிஃபர் அவளை ஒரு பாருக்கு அழைத்துச் செல்லுகிறாள். அங்கே Low Shoulder என்றழைக்கப்படும் ராக் பேண்டின் இசை கான்செர்ட் கேட்டுக் கொண்டிருக்கையில் திடீரென பாரில் தீப்பிடிக்கிறது. ஜெனிஃபரும் நீடியும் தப்பி வெளியேmegan-fox-amanda-seyfried-jennifers-body-560x326 வந்துவிடுகிறார்கள். ஜெனிஃபர் அந்த இசைக்குழுவினரோடு ஒரு வேனில் அவள் விருப்பப்படியே கடத்தி செல்லப்படுகிறாள். அன்றிரவு நீடியின் வீட்டிற்கு ஜெனிஃபர் வருகிறாள். உடல் முழுக்க இரத்தத்தோடு வந்து வாந்தியும் எடுத்துவிட்டுப் போகிறாள். மறுநாள் கல்லூரிக்கு ஜெனிஃபர் எந்த பிரச்சனையுமின்றி வருவதைப் பார்த்த நீடி இவளுக்கு என்னவோ ஆகியிருக்கிறது என்பதை உணர்கிறாள். கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக ஜெனிஃபரால் இறக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கொலை செய்வது ஜெனிஃபர்தான் என்றறிருந்த பிறகு வழக்கமான அமெரிக்க படங்களைப் போல புத்தகங்களை ஆராய்ந்து விடை அறிகிறாள். ஜெனிஃபரின் அடுத்த டார்கெட் நீடியின் காதலன்.

ஜெனிஃபருக்கு என்னவாயிற்று? நீடியின் காதலன் தப்பித்தானா? நீடி ஜெனிஃபரை என்ன செய்தாள்? நீடி ஏன் சிறைக்கு வந்தாள்? போன்ற கேள்விகளோடு அமானுஷ்யம் நிறைந்த இறுதிக் காட்சிகளை Jennifer's Body திரைப்படத்தில் கண்டுவிடுங்கள். தவிர, ஜெனிஃபரைக் கடத்திச் சென்ற அந்த ராக் பேண்ட் குழுவினருக்கும் ஜெனிஃபரின் மர்மமான நடத்தைக்கும் சம்பந்தமிருக்கிறது. அட்லீஸ்ட் இதை ஒரு சஸ்பென்ஸாக வைக்கிறேன். ஒரு எழவு சஸ்பென்ஸும் இல்லாத இந்த படத்தை இதற்காகவேனும் பார்க்க பலர் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜெனிஃபராக மெகான் ஃபாக்ஸ், ஷகீராவுக்குப் பிறகு இடுப்பை ரசித்தது யாருடையது என்றால் மெகான் ஃபாக்ஸ்தான். சைடில் இருக்கும் இந்த படத்தைப் பாருங்கள். இடுப்பு எவ்வளவுதூரம் megan_fox_01வளைந்து நெளிந்து இருக்கிறது என்று.. மெகான் தற்சமயம் ஒரு ஹாட் கேக்.. இளைஞர்களுக்கு..    Transformer 2 ல் மெகானின் மெகா குலுக்கலை யார் மறந்தாலும் இளைஞர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை!! இந்த படத்தில் காலேஜ் “Devil” மற்றும் உண்மையான “Devil” ஆக வரும் மெகான் “அரைகுறையாக” நடித்திருக்கிறார். மெகானின் ப்லஸ் அவளது உதடுகளும் உடலமைப்பும்தான். எந்த ஒரு ஆணையும் சுண்டியிழுக்கும் கவர்ச்சியான நடிகை. (போதும் போதும் இதுக்கும் மேல சொல்லவேணாம்.) நீடியாக  Amanda Seyfried. இவளையெல்லாம் எவன் கதாநாயகியா போட்டான்? சோடாப்புட்டி கண்ணாடியோடு வரும் இவர் ஜெனிஃபர் ஒரு இன்னொசண்ட், இன்செக்யூர் மாணவியாக வலம் வருகிறார். காதலனோடு அம்மா அப்பா விளையாட்டும் விளையாடும் இவரையும் சரி, மெகானையும் சரி, சரியாக “நடிக்க” வைக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. (அமண்டாவும் மெகானும் இணைந்து தரும் லெஸ்பியன் கிஸ் ரொம்ப ஃபேமஸ்!!) மற்ற எவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.

இசை, ஒளிப்பதிவும் ஆகியவற்றில் எந்த புதுமையும் திகில்தனமும் இல்லை. இத்தனைக்கும் நான் ஒலியளவை அதிகமாக வைத்துத்தான் படத்தையே பார்த்தேன். கதையில் ஒரு திருப்பம் இல்லை, திடுக்கிடும் காட்சிகள் இல்லை, ஓரிரு முத்தக் காட்சிகள். புணர் காட்சிகள் சில காண்பிக்கப்படாத கொலைக் காட்சிகள் அவ்வளவே… முழுக்க முழுக்க மெகானின் உதட்டை மையமாக வைத்தே இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. லோ ஷோல்டர் குழுவினர் பாடும் I Can See Clearly Now என்ற பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்கும் பாடல். படத்தின் மிகப்பெரிய ப்ளஸும் இந்த பாடல்தான். வரிகள் கூட “ஜூப்பராக” இருக்கிறது,.

மெகான் காட்டுக்குள்ளே வேட்டையை ஆரம்பிக்கும் பொழுது “ஐ!!” என்று அமர்ந்த நான், பிறகு “அய்யோ” என்று புஸ் ஆகிப்போனதுதான் மிச்சம். இந்த படத்தையெல்லாம் எவன் டொரண்டோ விழாவில் காண்பிக்க அனுமதித்தான் என்றுதான் முதலில் தோன்றியது. புராண கால நம்பிக்கை, கன்னிப்பெண்ணை பலியிடல், மறுபிரவேசம் என்று அமானுஷ்ய காட்சிகள் இருந்தாலும் திகிலும் இல்லாமல், கவர்ச்சியும் இல்லாமல் ஜெனிஃபரின் பாடி தெருநாய் பாடி மாதிரி மொக்கையாகிப் போய்விட்டது. ஒருவேளை எனக்கு அப்படித் தோணலாம்.

மெகான் ஃபாக்ஸுக்காக ஒருமுறை பார்க்கலாம். அப்பறம்…. மெகான் இந்த படத்தில் இறுதியாகப் பேசும் டயலாக்கும் அதற்கு பஞ்ச் கொடுக்கும் நீடியின் டயலாக்கும் அருமை!!! படத்தைப் பார்த்துவிட்டு பகிர்ந்து கொள்ளவும்!!!


Trailer

துவங்கியது யுத்தம்

128190

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. பயிற்சிப் போட்டி என்பதாலோ என்னவோ இரண்டு அணிகளுமே அசால்டாக ஆடினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பவுலிங் இன்னும் ஷார்ப்பாக இருப்பதாகவே தெரிந்தது. ப்ரட் லீ மற்றும் பொலிங்கர் இருவரது பவுன்ஸர்களையும் எதிர்த்தாட நமது வீரர்கள் சற்றே சிரமப்பட்டார்கள். நான் மிகவும் எதிர்பார்த்தபடி ஷேவாக் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி கோலியும் பதானும் ஓரளவு ரன்களைச் சேர்க்க, மற்றவர்கள் பொல பொல.. அதிலும் எனக்கு யுவராஜை இன்னமும் அணியில் வைத்திருப்பது பிடிக்கவேயில்லை. கடந்த இருபது போட்டிகளில் மூன்றே அரைசதம் தான் அடித்திருக்கிறார். மற்ற போட்டிகளிலும் சொற்ப ரன்களே… நேற்றும் ஒற்றை ரன்னோடு நடையைக் கட்டினார். தோனியின் ஃபார்ம் சரியில்லை. ஸ்ரீஷாந்த் ஆக்ரோஷம் மட்டுமேதான் காண்பிக்கிறார். மிகவும் எதிர்பார்த்த சாவ்லா நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அணியில் இடம்பிடித்தது சரியென நிரூபித்திருந்தார். எப்படியோ ஆஸ்திரேலியாவை 176 ரன்களுக்குள் சுருட்டி இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சொன்னான்.. “ டெண்டுல்கர் இறங்கலை பார்த்தியாடா? வார்ம் அப் மேட்சுங்கறதால அடிக்கிற ரன்னு கணக்கில சேராதுன்னு இறங்கல”  என்றான்.. அடப்பாவிகளா, இப்படியா எண்ணுவீர்கள்.. சென்னையில் நடைபெற இருக்கும் மேட்சில் டெண்டுல்கர் இறங்குவார் என்று தோனி சொன்னதை இவன் கேட்கவேயில்லை. எப்படியோ, உலகக் கோப்பைக்கான யுத்தம் துவங்கிவிட்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதால் தலையில் வைத்து கொண்டாடாதீர்கள் ரசிகர்களே… இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். ஆஸ்திரேலியாவின் முழு பலம் 4 ஆம் தேதியிலிருந்து தெரியும்….


எக்கேடோ கெட்டு போங்கள்!

ராஜ் டிவியில் Guess the Actor எனும் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டிவி நிகழ்ச்சிகளிலேயே மிகக் கேவலமானதும் பொதுமக்களை ஏமாற்றக்கூடியதாகவு இருக்கும் இந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்றால் எத்தனை பேர் தினமும் ஏமாந்து கொண்டிருப்பார்கள்? அப்படியென்ன நிகழ்ச்சி அது?

இரண்டு பிரபல நடிகர்களின் முகத்தை போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு இணைத்து அந்த இரண்டு பேரும் யார் என்று கேட்பார்கள். பதில் சொன்னால் 40000 ரூபாய் பரிசு. போன் பேச 1 காலுக்கு 10 ரூபாய். இதில் என்ன கொடுமை என்றால் நன்றாகவே தெரியும் அவர்கள் யார் என்பது. நேற்று அப்படித்தான் யதேட்சயாகப் பார்த்த பொழுது சரத்குமாரையும், ரஜினிகாந்தையும் இணைத்து இவர்கள் யார் என்று கேட்க.. நீண்ட நேரம் கழித்து ஒரு கால். “முரளியும் கமலஹாசனும்” என்று ஒருவர் சொல்கிறார். அட அறிவுகெட்டவனே, முரளி எங்கே சரத்குமார் எங்கே? ரஜினிகாந்தின் கண்ணைப் போட்டால் கூட குழந்தை கூட பதில் சொல்லுமே…

பிறகு விசாரித்ததில் ராஜ்டிவி எவ்வளவு கேவலமான கொள்ளை அடிக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களுக்குப் பேச நிமிடத்திற்கு 10 ரூபாய். போன் போட்டவுடனே அவர்களுக்குப் போகாது. ஒரு கம்ப்யூட்டர் பெண்குரல் மட்டும்தான் பேசும். அதுவும் ரொம்ப நேரம் லைனிலேயே காத்திருக்கவேண்டும். ஒரு ஐந்தாறு நிமிடங்கள் கழித்து (அதாவது நம்மிடமிருந்து 60 ரூபாய் போனபிறகு) ” நீண்டநேரம் காத்திருந்தால் லைனைத் துண்டித்து திரும்பவும் கால் செய்யவும்” என்று கம்ப்யூட்டர் சொல்லும். திரும்பவும் அழைத்தால் எடுப்பதற்கு ஒரு பயலும் இருக்கமாட்டார்கள். வீணாக நிமிடத்திற்குப் பத்துரூபாய் செலவழிப்பதுதான் தண்டம். அப்படியிருந்தும் யார் போன் செய்கிறார்கள்? ராஜ் டிவியின் கொள்ளைக்குத் துணை போகும் அவர்களது ஊழியர்களேதான் இந்த வேலையைச் செய்வது. எவனாது விஜய் போட்டாவைப் பார்த்து ப்ரித்விராஜ் என்று சொல்லுவானா? சிலசமயம் இந்த நிகழ்ச்சி லைவ் இல்லாமலும் நடக்கும். அச்சமயத்தில் உண்மையிலேயே பேசும் வாய்ப்பு உள்ளவர்கள் சரியாக பதில் சொன்னாலும் லைவ் இல்லாததால் படம் மாற்றப்பட்டு வேறொரு படமும் வந்திருக்கும். இப்படி ஏமாறிய நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நிமிடத்திற்கு 10 ரூபாய். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது லைனில் இருக்கவேண்டும் (அப்படியும் பேசவாய்ப்பு சுத்தமாகக் கிடைக்காது) 5 X 10 = 50 ரூபாய். ராஜ் டிவியை தமிழ்நாட்டில் எத்தனை பேர் பார்க்கிறார்கள்? அதிலிருந்து எத்தனை சதவிகிதம் அழைப்பார்கள்.. நான் நினைக்கிறேன் ஒரு மணிநேரத்திற்கு கிட்டத்தட்ட 1000 பேராவது அழைப்பார்கள் என்பது என் கருத்து. 10 X 1000 = 50000 ரூபாய்… ஆயிரம் பேர் என்று சொன்னதெல்லாம் சும்மா ஒரு கணக்குதான். நிறைய பேர் கூப்பிட வாய்ப்பு உண்டு. பரிசு 40000 ரூபாய்!!!!! ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்று கூப்பிடுபவர்களே மிக அதிகம்..

மக்களே…!!! எக்கேடோ கெட்டு போங்கள்!!


உடைந்த சஸ்பென்ஸ்

நேற்று எங்கள் ஊரெங்கும் யுத்தம் செய் படத்தின் புது போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுவரையிலும் சேரனை மையப்படுத்தியே வந்த போஸ்டர்கள் எந்த சஸ்பென்ஸையும் உடைக்காமல் அருமையாக இருந்தன. நேற்றோ “ஒரு குடும்பம் பழிவாங்கும் கதை” “ஒரு தாயின் பழிவாங்கல்” என்று ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் லக்‌ஷ்மி ஆகியோரது மொட்டை ஸ்டில்கள் போடப்பட்டு படத்தின் மிகப்பெரும் சஸ்பென்ஸை உடைத்துவிட்டார்கள். இன்னும் படம் பார்க்காதவர்கள் உண்டு என்பதை மறந்து இப்படி வெளிப்படையாகவா விளம்பரம் செய்வது?


ஹார்மோன் செய்யும் கலகம்தானடா

நேற்று இரவு நீயா நானாவில் “காதல் புனிதமானதா Vs காதல் இயல்பானதா என்றொரு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. வலைப்பதிவர்களும் எழுத்தாளர்களுமான “தமிழ்நதியும்உமாஷக்தியும்” பங்கேற்றிருந்தார்கள். நீண்டநாள் கழித்து முழு நிகழ்ச்சியையும் பார்த்தேன். அதுவும் தமிழ்நதியும் உமாஷக்தியும் அமர்ந்திருந்ததாலேயேதான். காதல் இயல்பானது என்ற வரிசையும் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். டிவி நிகழ்ச்சி என்பதால் கட்டுப்பாடோ என்னவோ நிறைய விஷயங்களைப் பேசமுடியாமல் போயிருக்கும். தமிழ்நதி நன்றாக (அல்லது ஓரளவு) பேசினார். இயக்குனர் கரு.பழனியப்பனும், கவிஞர் தபூ சங்கரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்கள். கரு.பழனியப்பன் புனிதம்+இயல்பு இரண்டையும் முடிச்சு போட்டு நிகழ்ச்சியை முடித்து வைத்தார். தபூ சங்கரை எதற்குக் கூப்பிட்டார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வார்த்தை கூட அண்ணன் பேசவேயில்லை.

புனிதமான காதல் என்று ஒன்றுமே கிடையாது. வைரமுத்து சொல்வது போல காதல் என்பது வெறும் ஹார்மோன்களின் கலகம்தான்… எல்லா இடங்களிலும்தான் காதல் இருக்கிறது. அம்மா மகனிடமும், தம்பி, தங்கையிடமும், அத்தை, மருமகனிடமும், மாமா, அண்ணியிடமும் காதல் இருக்கிறது. ஆனால் எப்பொழுது காதல் சிறப்பாகிறது? காமத்தில்தான்… மேற்சொன்ன அனைவரும் தம் காதலை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். ஆனால் ஒரு காதலன் தன் காதலியிடம் உடலையும் சேர்த்து பகிர்ந்து கொள்வான். அவ்வளவேதான்…. காமம் என்ற ஒன்று இல்லாவிடில் காதலர்களே இல்லை… அந்த ஒன்றுக்காகத்தான் எல்லாமே!!! ரொம்ப எதிர்பார்த்த உமாஷக்தியும் அதிகம் பேசவில்லை. பேசிய காட்சிகளை வெட்டிவிட்டார்களோ என்னவோ?


அழும் சினிமா

இளைஞன் ட்ரைய்லரை இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் ஒரு தியேட்டரில் கூட படம் ஓடக்கிடையாது. கலைஞ்ஜர் டிவியில் ட்ரைய்லர் ஓடிய அளவுக்கு அந்த படம் ஓடியிருக்க வாய்ப்பே இல்லை…. கலைஞர் வசனம் இல்லையென்றால் ஓடியிருக்குமோ என்னவோ… இந்த லட்சணத்தில் வசனம் எழுதியதற்கு கலைஞ்ஜருக்கு விருது தரப்போகிறார்களாம்!!   தமிழ்சினிமாவுக்கு கண்களிருந்தால் அழுதழுது சென்னையே மூழ்கியிருக்கும் போங்கள்!!


Nothing Special

53rd.poster.final_53வது கிராமி விருதுகள் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. போன முறை போல இம்முறை பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ரஹ்மானுக்கு இம்முறை பரிந்துரைப்பு இல்லை என்பதாலும் எனது ஃபேவரைட் ஆர்டிஸ்ட்களான பியான்ஸே, கெல்லி க்லார்க்‌ஷன் போன்றவர்களின் ஆல்பம் வரவில்லை என்பதாலும்தான்.. எனினும் ஓரிரு விருதுகளை மட்டும் அவதானிப்பதுண்டு. Record of the Year விருதை Lady Antebellum எனும் குழுவினருக்குக் கிடைத்திருக்கிறது. இவர்களது பாடல்கள் ஒன்றைக்கூட கேட்டதேயில்லை.  Song of the Year உம் இவர்களேதான். Best New Artist விருதை பதினாறே வயதான Justin Bieber பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். Best Female Pop விருது லேடி ககா என்ற கிழவிக்கு (ஆக்சுவலி அவ குமரிதான்) கொடுத்திருக்கிறார்கள். அதிலும் Bad Romance என்ற அந்த பாடல் ஒரு கன்றாவி! அதில் லேடிககாவின் மூஞ்சியும் டான்ஸும் சுத்தம்!!!! இவளது The Fame Monster ஆல்பத்திற்குத்தான் Best Pop Vocal Album விருதும் கிடைத்திருக்கிறது. லேடி ககாவும் நம்ம ஃபேவரைட் பியான்ஸியும் பாடிய ஒரே ஒருபாடல்தான் (Video Phone )லேடிககா வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்.. (அதேமாதிரி (தலைப்பில்) Telephone featuring பியான்ஸே!) Best Rap விருது நம்ம தலைவர் Eminem வாங்கியது மட்டுமே எனக்கு பிடித்த விஷயம். மற்றவர்களையெல்லாம் தெரியாது!!


Happy Valentine's day

இன்று காலை நண்பன் அழைத்திருந்தான் “ நீயும் உன் தம்பியும் இனிய மருமகள்களை அம்மாவுக்குக் காட்ட வாழ்த்துக்கள் “ என்று சுருதி சுத்தமாகக் கூறினான். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. “என்ன மேட்டர்டா?” என்றேன் ” இன்னிக்கி வேலண்டைன்ஸ் டே டா கூமுட்ட” என்றான். ”அதுக்கெதுக்கு எங்கிட்ட சொல்ற? என்று புரியாமல் கேட்டேன். “ ஏன்? வேலண்டைன்ஸ்டேன்னா கூப்பிட்டு விஷ் பண்ணமாட்டேன்னு பாத்தியா? காலையிலருந்து எவனுக்கெல்லாம் கூப்பிடக்கூடாதோ அவனுக்கெல்லாம் கூப்பிட்டு சொல்லிட்டி இருக்கேன்” என்றான். அடப்பாவி!!! இப்படியும் ஒரு குரூப் அலையுதுய்யா!!! இன்னிக்கி நாந்தானா போணி!! கடுப்பேத்தறான் மைலார்ட்!!

காதலர்தின வாழ்த்துக்கள்!!!

99998happy_valentines_day

எனக்கும் ஜெஸிகாவுக்கும் சிலசமயங்கள்ல சண்டை நடக்கும்.. சண்டைன்னா கட்டிப் புரண்டு உருண்டு, பல உதை வாங்கி... அது வன்முறை மாதிரி இருக்கும்ங்க... அப்படி ஒருநாள் சண்டை போட்டப்போதான் ”நீ எவளையோ கட்டிக்க போ” னு திட்டி அனுப்பிட்டா...  நானும் கோபத்தில வெளியே வந்துவிட்டேன். பின்ன என்னங்க?? எந்த விஷயத்தை எடுத்தாலும் சண்டை சண்டை சண்டை…. நீங்களே சொல்லுங்க, ஒரு மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் உதை வாங்கிகிட்டே இருக்கிறது??? அதான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.… ஜெஸிகாவைவிட அழகானப் பெண்ணைத் தேடிப் பிடிச்சு கல்யாணம் பண்ணி அவளுக்கு முன்னேயே கொண்டுபோய் நிறுத்தி பழிவாங்கணும்

ஆனா யாரைப் பிடிக்கிறது?? பல அழகானப் பெண்களைப் பார்க்கிறப்போல்லா அவங்களோட அழகில மயங்கி குப்புற விழுந்து அடிவாங்கி, பின்னயே சுத்தியிருக்கேன்.. அழகுன்னா சிலசமயம் முகத்தில இல்லாட்டியும் மனசில இருக்கிறவங்க பின்னயும்தான். ஆனா என்னயெல்லாம் யாரும் பார்த்ததா சரித்திரமே இல்ல.

ஐடியா!!!

ஜெஸிகாவை அட்லீஸ் ஏதாவது ஒரு போட்டோ காட்டியாவது ஏமாத்தி மிரட்டலாமே??? அதுவும் ரொம்ப அழகானப் பொண்ணு….. நாமளே வரைஞ்சுட்டா எப்படி இருக்கும்???

பெண்களைப் பார்த்ததும் முதல்ல ஈர்க்கறது அவங்களோட கண்கள் ரெண்டும் தாங்க.. எனக்குப் பெரும்பாலும் குண்டு கண்களை ரொம்பப் பிடிக்கும். நடிகை மீனாவோட கண்களைப் பார்த்திருப்பீங்க.. எவ்வளவு அழகு??? அப்படியொரு ஜிலேபி மீன் கண்ணைத்தான் முதல்ல வரையணும்.

eye

அட… கண்களைப் பார்க்கிறதுக்கே எப்படி இருக்கு பாருங்க!! அப்படியே மூக்கும் வாயும் வரைஞ்சுட்டோம்னா..?  அதிலும் உதடு தேன்ல முக்கி எடுத்த ஆரஞ்சுபழம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னி அப்படியே திங்கத் தோணனும்.. அப்பத்தான் ஜெஸிகாவுக்கு வயிறு எரியும்.

eyenosemouth

ம்ம்.. இப்ப பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி முகத்தையும் வரைஞ்சுட்டோம்னா?….  அதுவும் ஜெஸிகாவை விட நல்ல கலர்ல இருக்கணும்

faceonly

இது கொஞ்சம் இந்தியன் லுக் இருக்கிறதால வெள்ளைக்காரிங்க மாதிரி வெள்ளை முடிதான் இருக்கணும்.. Blonde hair பெண்களைப் பார்த்தாக்க எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு இருக்கும்.facehair

அப்பாடி…. அவ்வளவுதான்// ஜெஸிகாவுக்கு பிடிக்கவே பிடிக்காத மஞ்சள் கலரில்தான் ட்ரஸ் இருக்கணும்.. ங்கொய்யால அப்படியே பார்த்துட்டு மயங்கி விழுந்துடணும்.

finished

 

எப்பூடி??? நம்ம ஃபிகரு?? நல்ல கும்முனு வெள்ளைக்காரி மாதிரி இல்ல?? இப்போ இப்படியே கொண்டு போனா ஜெஸிகா நம்ப மாட்டாளே… வரைஞ்சதுன்னு சொல்லிடுவா……. அதனால நாம கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலையெல்லாம் செஞ்சாத்தான் ஒரிஜினாலிடி வரும். இதுக்காக ஒருநாள் முழுக்க வேலை செஞ்சதில்……………………….

digital-Female

ஆங்…. ரெடியாயிட்டா…………. என்ன மக்களே!!! இந்த போட்டோவைப் பார்த்தா ஜெஸிகா ஏமாந்துடமாட்டாளா?? இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னொ ஒரு மிரட்டு மிரட்டினா கொஞ்சம் உதைக்கிறது நிக்குமா??? எதுக்கும் இந்த பொண்ணை கொஞ்சம் க்ளோஸப்ல காட்டறேன். உங்க தங்கச்சியை மாதிரி நினைச்சு…. பார்த்துடுங்க…

close-up


பிகு : இந்த போட்டாவை ஜெஸிகாகிட்ட காமிச்சேன்.. கொஞ்சம் மிரண்டவ, அப்படியே நம்மள பார்த்து மொரச்சா…. ஏண்டா ஆதவா, வரைஞ்சுட்டு வந்து காமிச்சு ஏமாத்திறயான்னு கண்டுபிடிச்சுட்டா??? எப்படிடீ கண்டுபிடிச்சேன்னு கேட்டா… எல்லாத்தையும் ஒழுங்கா வரைஞ்சயே, இந்த புருவத்தை மட்டும் கவனிக்கலையாடா மடையானு கேட்டு திட்டிட்ட்டா….

அவ்வ்…. இனிமே வேற ஃபிகர்தான் தேடணும்!!

யாராச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க!

அன்புடன்
ஆதவா

நன்றி : இந்த புள்ளைய பெத்த மவராசன்,… எங்கிருந்தாலும் வாழ்க மாமோவ்!!!

இந்தியாவின் ஒரே மனுஷி

Sharmila

மணிப்பூர் மக்களின் உரிமைக்காகப் போராடி வரும் ஐரோம் சர்மிளா குறித்த நாடகம் மதுரை காந்தி ம்யூசியத்தில் நடைபெற்றது. மணிப்பூரின் வன்னரசு நிகழ்த்தும் வரலாறு, பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் உள்ளிட்ட மணிப்பூர் மற்றும் ஐரோம் சர்மிளா பற்றிய ஏனைய செய்திகளோடு சிறப்பாக நடைபெற்ற இந்நாடகத்தை பொன்னியின் செல்வன் கார்த்திகைப் பாண்டியன் சிறப்பான முறையில் தொகுத்திருக்கிறார். ஒரு துண்டிக்கப்பட்ட மாநிலத்தைப் போலவே உணரும்படியான நாடக செய்திகளைப் படிக்கும் பொழுதெல்லாம் இந்திய அரசின் வடகிழக்கு மாநிலங்கள் மீதான மெத்தனப் பார்வையையும் கொடுமையையும் உணரமுடிகிறது. அந்நாடகம் குறித்த கார்த்திகைப் பாண்டியனின் பார்வையை இங்கே படிக்கவும்.

சாப்பாட்டுப் பிரியர்

my photo

திருப்பூரிலிருந்து எழுதும் புதிய பதிவர் சரவணக்குமார், வலைப்பதிவுகள் மற்றும் எழுத்துக்களுக்கு மிகப்புதியவர். தற்சமயம் ஒன்றிரண்டு பதிவுகளே தந்திருந்தாலும் நிறைவாகத் தரவேண்டும் என்ற ஆர்வம் அவரது பதிவுகளில் தெரிகிறது. சமீபத்தில் சாப்பிடுவதற்காகவே திருப்பூரிலிருந்து மதுரை சென்று வந்த செய்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதைவிட தமிழகம் முழுக்க எங்கெங்கே என்னன்ன கடைகளில் எதெது சிறப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார்.. சாப்பாட்டுப் பிரியரான இவர் புத்தகப் பிரியரும் கூட, நிறைய நாவல்களையும் சிறுகதைகளையும்  தொடர்ந்து வாசித்து வருகிறார். தமிழில் எழுத சிரமப்பட்டாலும் நிறைவாக எழுதவேண்டும் என்று நம்பிக்கையுடன் எழுதுவது ஆரோக்கியமான விஷயம். தொடர்ந்து அவருக்கு ஆதரவளியுங்கள்..

கற்பனையற்ற சினிமாக்காரன்

சினிமா கதைகளைத்தான் எழுதுவதற்கு ஆட்கள் இல்லை என்கிறார்கள்; அட்லீஸ்ட் போஸ்டர் டிசைன் செய்யக் கூடவா ஆட்கள் இல்லை?? வந்தான் வென்றான் திரைப்படத்தின் போஸ்டர் டிசைன், Going the distance  எனும் திரைப்படத்திலிருந்து அப்படியே சுடப்பட்டிருக்கிறது. கீழே அதற்கு ஆதாரம்… நன்றாக கவனியுங்கள், சுவறில் அதே வர்ணங்கள், கட்டிடம் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது; கதாநாயகனும் அதே வர்ணத்தில் ஆடை அணிந்திருக்கிறார்…. தமிழகத்தில் கற்பனைத் திறன் வாய்ந்த டிசைனர்களே இல்லை என்பது போல இருக்கிறது இவர்களின் கேவலமான நடவடிக்கை… அய்யா சினிமாக்காரர்களே… நானும் ஒரு டிசைனர்தான், என்னிடம் கொடுத்திருந்தால் நூறு புதிய போஸ்டர் டிசைன்களைச் செய்து தந்திருப்பேன்…

going   vandan 

I-Hate-Luv-Storys1Vandhan-Vendran-wallpapers-1

Yuvan_Yuvathi_Movie_Posters_wallpapers_02 lovers23

 

கவித.. கவித

வாசல்கள் அடைக்கப்பட்டே இருக்கிறது

ஒன்றேனும் திறந்திருக்கக்கூடுமென்ற
நம்பிக்கையில்
தடித்த வெயிலில் முனைப்புடன்
சென்று கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்

இதயத்தைச் சுருட்டுகிறது
ஆதியிலருந்திய பால் வாசம்

உங்களுக்கு முன்பாக
பீடத்திலிருந்து எழுந்த கடவுளும்
விரைந்து கொண்டிருக்கிறார் வாசலைத் தேடி

திறப்புக்கான வாடை நாசிகளை நிறைக்கிறது

மூடிக்கிடந்த கண்கள் திறந்து
நடை விரைகிறது

விரல் நுனிகளில் குருதி கொப்பளித்து அழுந்த
கடவுளை முன்னேறிச்சென்று
வாசலைத் திறக்கின்ற உங்கள் முன்பாக
ஓய்ந்தடங்கா அலைகளோடு
வியாபித்திருக்கிறது கடல்.

பொன்.வாசுதேவனின் இக்கவிதை, இறைவனின் இருப்பையும், அவனது வியாபித்தலையும், சமூகத்தை எதிர்கொள்ளலையும்  அற்புதமாகக் கூறுகிறது. இறைவன் என்பது இறைவன் மட்டுமேயல்ல, நமக்குள்ளும் நிறைந்திருக்கும் மனத்தின் கனம் பற்றியதும் கூட. எல்லையில்லாத வெளியில் நிறைந்திருக்கும் மனதிற்குப் பின்னே நடை மூடி காத்திருக்கிறோம். இறைவன் உங்களோடே உள்ளான்… திறந்து செல்ல வழிகளுண்டு… கற்பனை என்பது வெறும் கையில் அடங்கிவிடக்கூடிய லட்டு அல்ல. ஓய்ந்தடங்கா அலைகளடங்கிய மாபெரும் கடல்!! வாசல்கள் அடைக்கப்பட்டே இருக்கிறது. இறைவனுக்கும்…..

ஆங்கிலத் தேனும் அழகுப் பாலும்

Beyoncé Knowles ன் Halo எனும் இப்பாடலை நிறைய பேர் கேட்டிருப்பீர்கள். R&B வகைப் பாடலான இது I Am... Sasha Fierce எனும் ஆல்பத்திலிருந்து பாடப்பட்டிருக்கும் சிங்கில்ஸ். பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் பியானோவும் பியான்ஸியின் குரலும், தேனுடன் பால் கலந்ததைப் போன்ற சுவையைத் தந்தது என்பது மறுப்பதற்கில்லை. குறைந்த saturate ல் படமாக்கப்பட்டிருக்கும் இப்பாடல் எனது ஒன் அஃப் த ஃபேவரைட்…. கேட்டுப்பாருங்களேன்….

 

Subscribe