வித்தியாசமாக ஒரு பாடல் விமர்சனம்

பாடல்: Because of You
பாடியவர் : Kelly Clarkson.

கெல்லி ஒரு சிறு அறிமுகம்..

அமெரிக்க பாடகியான கெல்லி கிலார்க்ஸன், பாடல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி அவார்டு வாங்கிய கண்மணி. அமெரிக்க தொல்லைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் American Idol நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். பாப் மற்றும் ராக் இசையில் கைதேர்ந்த கலைஞி.. இவருடைய முதல் இசை வெளியீடு Thankful, 2003 ம் வருடம் வெளிவந்தது. அதற்கடுத்த வருடமே (2004) Breakaway என்ற இசைத் தொகுப்பினை வெளியிட்டு இதயங்களை பிரேக் செய்தவர்..
இவரின் Breakaway ஆல்பத்திலிருந்து இந்த பாடலை விமர்சனம் செய்கிறேன்.இந்த பாடல் ஒரு தம்பதியின் ஊடல் பற்றியது.


ரு அழகான இல்லத்தை மரங்களின் ஊடாகக் காண்பித்து காமிரா செல்லுகிறது.. அங்கே தம்பதிகளிருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். கெல்லியும் அவரது கணவரும் என்று வைத்துக் கொள்வோமே... சண்டை முற்றிப்போய் கணவனைத் தள்ளி விட்டு செல்கிறாள் கெல்லி. காட்சி அப்படியே பாடகி கெல்லியாக மாறி, அவள் பாடுகிறாள் பின்னோக்கி நகர்ந்தவாறே!! அவள் கேசம் கலைந்திருக்கிறது.. உதடுகளுக்கு சாயமில்லை. ஆடை சற்று பழையதாக தோற்றமளிக்கிறது... கவிதையாக நகர்கிறது கேமிரா.முதல் வரிகளிலேயே தெரிந்துவிடுகிறது ஊடலின் விதை..
I will not make the same mistakes that you did....................
கணவன் திருமணப் படத்தை எடுத்துவந்து வாக்குவாதம் செய்யும் போது கையிலிருக்கும் திருமணப் படத்தை வீச எத்தனிக்கும்போது பாடல் காட்சி அப்படியே நின்றுவிடுகிறது..கணவனுக்கு மாத்திரம். கெல்லி மட்டும் திரும்புகிறாள் கணவன் அப்படியே நிற்கிறான். கெல்லி மெதுவாக நகர்ந்து கதவருகே பார்க்கும்போது அவளே குழந்தையாக இதை கவனிக்க வருகிறாள்.பாடல் காட்சிகளில் மாற்றம் செய்திருக்கின்றனர்.. கெல்லியின் பிம்பங்கள் பாடுகின்றது சோகமாக.அவளும் அவளின் குழந்தைப் பருவமும் மெல்ல காலத்தை பின்னோக்கி கடக்கிறார்கள்..அங்கே குழந்தை கெல்லி அவள் அப்பாவிடம் தான் வரைந்த ஓவியத்தைத் தருகிறாள். கெல்லியின் அப்பாவோ போன் பேசிக்கொண்டு அதை கவனிக்காமல் போய்விடுகிறார். குழந்தை கெல்லிக்கு ஏமாற்றமாக இருக்கிறது.. இதை மறைவாக கண்மணி கெல்லியும் அவளின் குழந்தைப் பருவ உருவமும் (அதுவும் அதே குழந்தைதான்) பார்க்கிறது.அந்த நேரத்திலே ஆங்கிலத்தில் I am afraid என்று பாடுகிறாள்.அடுத்து, மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவில் கெல்லியின் அம்மா எழுந்து அழுதவாறே இரவு உணவுகளை குப்பையில் எறிகிறார். இதை மெல்ல கிச்சனில் உட்கார்ந்து கொண்டு கவனிக்கிறார்கள் இறந்த காலத்திற்கு வந்த கெல்லியும் அவள் குழந்தைப் பருவமும்.கெல்லி பாடுகிறாள்.. அவள் பாடலில் ராக் சற்று எட்டிப் பார்க்கிறது. தொனியில் அழுதவாறு பாடுகிறாள். அவள் அம்மா ஏதோ மாத்திரை உட்கொள்வதை குழந்தை கெல்லி பார்வையிடுகிறாள். உடனே அவர் கதவை இழுத்து மூடி அழுகிறார். அச்சமயம் காமிரா அருமையான பயணமிக்கிறது.. கதவிலே கண்ணாடியிருந்தும் காமிரா தெரிவதில்லை. பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தை கெல்லி நிற்கிறாள்.. மெல்ல மெல்ல படியிறங்கி போகிறாள். அடுத்த காட்சியிலே கெல்லியின் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகின்றனர்.. அது முற்றிப் போய் டீப்பாயை எடுத்து எறிகிறார் கெல்லியின் அப்பா!! அவள் அம்மாவும் கண்ணாடி தம்ளரை வீசுகிறாள்,.. அப்பா படியேற, அதைப் பார்க்கிறார்கள் இறந்த காலத்திற்கு வந்த கெல்லியும் அவள் குழந்தைப் பருவமும்கெல்லியின் அப்பா வீட்டை விட்டு செல்லுகிறார். பெட்டி படுக்கைகள் எடுத்து வைக்கயிலே எதுவுமறியாத குழந்தை கெல்லி அவள் அப்பாவுக்கு உதவுகிறாள். அப்பா அவளை உதறிவிட்டு காரிலே செல்கிறார்.. அதை ஏமாற்றமாய் அக்குழந்தை வந்து பார்க்கிறது.. கூடவே கண்மணி கெல்லியும் குழந்தைப் பருவமும்./. அப்படியே பாடல் ராக் கிற்கு மாறிவிடுகிறது. அழுதவாறே சத்தமாக பாடுகிறாள் (தமிழில் ஒரு பாடல்கூட இப்படி நான் பார்த்ததில்லை..) இப்படி கணவன் மனைவியால் பிரிந்து தான் அன்று துன்பப் பட்டதை தன் குழந்தையும் படவேண்டுமா என்றெண்ணி ஓடுகிறாள் வீட்டிற்குள்... இது கண்மணி கெல்லி.அங்கே திருமணப் படத்தை வீச நின்றிருக்கும் கணவனை மெல்ல தழுவுகிறாள்... அதை கெல்லியின் குழந்தை பார்க்கிறது... கணவனும் மனைவியும் குழந்தையை ஆரத் தழுவுகிறார்கள்..

ஒரு சின்ன கருத்துதான் என்றாலும் அதி முக்கியமான கருத்து...கணவன் மனைவி சண்டைகள் குழந்தைகளை எவ்வளவு தூரம் பாதிக்கிறது!!! கெல்லியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை
I watched you die, I heard you cry, every night in your sleep. I was so young, you should have known better than to lean on me.
இந்த வரிகள் சாதாரணமானவைதான். ஆனால் இந்த கருத்தை வலியுருத்தும்போது கடினமாகத் தோன்றுகிறது.And now I cry in the middle of the night, doin the same damn thing இந்த வரிகளில் நான் மிகவும் என்னை இழந்தேன்... பாடல் கிடைத்தால் பாருங்கள்.. என்னிடம் உள்ளது.. கேட்பவர்கள் அதிகம் என்றால் அப்லோடு செய்கிறேன்..மொத்தத்தில் அழகாக உடை அணிந்து நூறுபேர் நடனத்துடன் முன்னே ஆடும் தமிழ் பாடல்களை விட்டுத்தள்ளி ஒரு அழகிய காவியமாய் தோன்றுகிறது.. இந்த பாடலுக்கும் Since you been gone என்ற பாடலுக்கும்தான் எம்மி விருது வாங்கினாள் என்னவள் கெல்லி.அவசியம் பார்க்கவேண்டிய பாடல்..

Comments

Popular Posts