ஜெஸிகாவுக்குப் பிடிக்காத ஓவியம்

எனக்கும் ஜெஸிகாவுக்கும் சிலசமயங்கள்ல சண்டை நடக்கும்.. சண்டைன்னா கட்டிப் புரண்டு உருண்டு, பல உதை வாங்கி... அது வன்முறை மாதிரி இருக்கும்ங்க... அப்படி ஒருநாள் சண்டை போட்டப்போதான் ”நீ எவளையோ கட்டிக்க போ” னு திட்டி அனுப்பிட்டா...  நானும் கோபத்தில வெளியே வந்துவிட்டேன். பின்ன என்னங்க?? எந்த விஷயத்தை எடுத்தாலும் சண்டை சண்டை சண்டை…. நீங்களே சொல்லுங்க, ஒரு மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் உதை வாங்கிகிட்டே இருக்கிறது??? அதான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.… ஜெஸிகாவைவிட அழகானப் பெண்ணைத் தேடிப் பிடிச்சு கல்யாணம் பண்ணி அவளுக்கு முன்னேயே கொண்டுபோய் நிறுத்தி பழிவாங்கணும்

ஆனா யாரைப் பிடிக்கிறது?? பல அழகானப் பெண்களைப் பார்க்கிறப்போல்லா அவங்களோட அழகில மயங்கி குப்புற விழுந்து அடிவாங்கி, பின்னயே சுத்தியிருக்கேன்.. அழகுன்னா சிலசமயம் முகத்தில இல்லாட்டியும் மனசில இருக்கிறவங்க பின்னயும்தான். ஆனா என்னயெல்லாம் யாரும் பார்த்ததா சரித்திரமே இல்ல.

ஐடியா!!!

ஜெஸிகாவை அட்லீஸ் ஏதாவது ஒரு போட்டோ காட்டியாவது ஏமாத்தி மிரட்டலாமே??? அதுவும் ரொம்ப அழகானப் பொண்ணு….. நாமளே வரைஞ்சுட்டா எப்படி இருக்கும்???

பெண்களைப் பார்த்ததும் முதல்ல ஈர்க்கறது அவங்களோட கண்கள் ரெண்டும் தாங்க.. எனக்குப் பெரும்பாலும் குண்டு கண்களை ரொம்பப் பிடிக்கும். நடிகை மீனாவோட கண்களைப் பார்த்திருப்பீங்க.. எவ்வளவு அழகு??? அப்படியொரு ஜிலேபி மீன் கண்ணைத்தான் முதல்ல வரையணும்.

eye

அட… கண்களைப் பார்க்கிறதுக்கே எப்படி இருக்கு பாருங்க!! அப்படியே மூக்கும் வாயும் வரைஞ்சுட்டோம்னா..?  அதிலும் உதடு தேன்ல முக்கி எடுத்த ஆரஞ்சுபழம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னி அப்படியே திங்கத் தோணனும்.. அப்பத்தான் ஜெஸிகாவுக்கு வயிறு எரியும்.

eyenosemouth

ம்ம்.. இப்ப பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி முகத்தையும் வரைஞ்சுட்டோம்னா?….  அதுவும் ஜெஸிகாவை விட நல்ல கலர்ல இருக்கணும்

faceonly

இது கொஞ்சம் இந்தியன் லுக் இருக்கிறதால வெள்ளைக்காரிங்க மாதிரி வெள்ளை முடிதான் இருக்கணும்.. Blonde hair பெண்களைப் பார்த்தாக்க எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு இருக்கும்.facehair

அப்பாடி…. அவ்வளவுதான்// ஜெஸிகாவுக்கு பிடிக்கவே பிடிக்காத மஞ்சள் கலரில்தான் ட்ரஸ் இருக்கணும்.. ங்கொய்யால அப்படியே பார்த்துட்டு மயங்கி விழுந்துடணும்.

finished

 

எப்பூடி??? நம்ம ஃபிகரு?? நல்ல கும்முனு வெள்ளைக்காரி மாதிரி இல்ல?? இப்போ இப்படியே கொண்டு போனா ஜெஸிகா நம்ப மாட்டாளே… வரைஞ்சதுன்னு சொல்லிடுவா……. அதனால நாம கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலையெல்லாம் செஞ்சாத்தான் ஒரிஜினாலிடி வரும். இதுக்காக ஒருநாள் முழுக்க வேலை செஞ்சதில்……………………….

digital-Female

ஆங்…. ரெடியாயிட்டா…………. என்ன மக்களே!!! இந்த போட்டோவைப் பார்த்தா ஜெஸிகா ஏமாந்துடமாட்டாளா?? இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னொ ஒரு மிரட்டு மிரட்டினா கொஞ்சம் உதைக்கிறது நிக்குமா??? எதுக்கும் இந்த பொண்ணை கொஞ்சம் க்ளோஸப்ல காட்டறேன். உங்க தங்கச்சியை மாதிரி நினைச்சு…. பார்த்துடுங்க…

close-up


பிகு : இந்த போட்டாவை ஜெஸிகாகிட்ட காமிச்சேன்.. கொஞ்சம் மிரண்டவ, அப்படியே நம்மள பார்த்து மொரச்சா…. ஏண்டா ஆதவா, வரைஞ்சுட்டு வந்து காமிச்சு ஏமாத்திறயான்னு கண்டுபிடிச்சுட்டா??? எப்படிடீ கண்டுபிடிச்சேன்னு கேட்டா… எல்லாத்தையும் ஒழுங்கா வரைஞ்சயே, இந்த புருவத்தை மட்டும் கவனிக்கலையாடா மடையானு கேட்டு திட்டிட்ட்டா….

அவ்வ்…. இனிமே வேற ஃபிகர்தான் தேடணும்!!

யாராச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க!

அன்புடன்
ஆதவா

நன்றி : இந்த புள்ளைய பெத்த மவராசன்,… எங்கிருந்தாலும் வாழ்க மாமோவ்!!!

Comments

அவ்வ்…. இனிமே வேற ஃபிகர்தான் தேடணும்!!

யாராச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க!


பண்ணிடுறோம்! பிரெஞ்சுக்காரி ஓகே வா?
எதுக்கும் இந்த பொண்ணை கொஞ்சம் க்ளோஸப்ல காட்டறேன். உங்க தங்கச்சியை மாதிரி நினைச்சு…. பார்த்துடுங்க...//

ஆஹா.. ஆஹா.. பாஸ் என்ன ஒரு பாசப் பிணைப்பு. பின்னிட்டிங்க போங்க.
ஓவியங்கள் யாவும் அருமை. வரைகலையில் எப்போதுமே ஆதவா தான் என்பதனை நிரூபித்து விட்டீர்கள்.
Anonymous said…
அருமையான ஓவியம் கண்ணில் ஆரம்பித்த பெண்ணின் ஓவியத்தின் அழகு பெண்கள் பொறாமை படும் அழகு தான் ஆதவா.. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் மனமார..

Popular Posts