Jennifer's Body (18+) - விமர்சனம்

Jennifers_Body_

Direction

Karyn Kusama

Starring   

Megan Fox, Amanda Seyfried, Adam Brody, Johnny Simmons

Cinematography   

M. David Mullen

Year  

2009

Language   

English

Genre

Horror


எச்சரிக்கை : காமம், வன்முறை, வன்மொழி – 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கவும்

ஹாரர் என்று சொல்லப்படும் திகில் படங்களுக்கு ஹாலிவுட்டில் பஞ்சமே இல்லை. ஹிட்ச்காக் காலத்திய ஸ்க்ரீன்ப்லே ஹாரரிலிருந்து பல கிராஃபிக்ஸ், ஒலியமைப்பு எல்லாம் புகுத்தி திகில் ஏற்படுத்தினாலும் நல்ல படங்கள் வருவது வெகுவாக குறைந்துதான் போயிருக்கிறது. Jennifer's Body டோரண்டோ விழாவில் திரையிடப்பட்டது என்று நம்பி பார்த்தேன்… ஆனால் அதைவிட மெகான் ஃபாக்ஸ் (Megan Fox) கதாநாயகி என்றதும் இன்னும் சுவாரசியம் பொங்க பார்த்தேன்..

கதை ஒன்றும் புதுமையானது இல்லை. அமெரிக்க திகில் ஆக்‌ஷன் திரைப்பட கிளிஷேக்கள் இதிலும் உண்டு. நீடி லெஸ்நிக்கி (Needy Lesnicki) சிறையில் இருந்தவாறே ஃப்லாஷ்பேக்கில் கதை சொல்கிறார். நீடியும் ஜெனிஃபரும் (Jennifer) சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருமுறை ஜெனிஃபர் அவளை ஒரு பாருக்கு அழைத்துச் செல்லுகிறாள். அங்கே Low Shoulder என்றழைக்கப்படும் ராக் பேண்டின் இசை கான்செர்ட் கேட்டுக் கொண்டிருக்கையில் திடீரென பாரில் தீப்பிடிக்கிறது. ஜெனிஃபரும் நீடியும் தப்பி வெளியேmegan-fox-amanda-seyfried-jennifers-body-560x326 வந்துவிடுகிறார்கள். ஜெனிஃபர் அந்த இசைக்குழுவினரோடு ஒரு வேனில் அவள் விருப்பப்படியே கடத்தி செல்லப்படுகிறாள். அன்றிரவு நீடியின் வீட்டிற்கு ஜெனிஃபர் வருகிறாள். உடல் முழுக்க இரத்தத்தோடு வந்து வாந்தியும் எடுத்துவிட்டுப் போகிறாள். மறுநாள் கல்லூரிக்கு ஜெனிஃபர் எந்த பிரச்சனையுமின்றி வருவதைப் பார்த்த நீடி இவளுக்கு என்னவோ ஆகியிருக்கிறது என்பதை உணர்கிறாள். கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக ஜெனிஃபரால் இறக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கொலை செய்வது ஜெனிஃபர்தான் என்றறிருந்த பிறகு வழக்கமான அமெரிக்க படங்களைப் போல புத்தகங்களை ஆராய்ந்து விடை அறிகிறாள். ஜெனிஃபரின் அடுத்த டார்கெட் நீடியின் காதலன்.

ஜெனிஃபருக்கு என்னவாயிற்று? நீடியின் காதலன் தப்பித்தானா? நீடி ஜெனிஃபரை என்ன செய்தாள்? நீடி ஏன் சிறைக்கு வந்தாள்? போன்ற கேள்விகளோடு அமானுஷ்யம் நிறைந்த இறுதிக் காட்சிகளை Jennifer's Body திரைப்படத்தில் கண்டுவிடுங்கள். தவிர, ஜெனிஃபரைக் கடத்திச் சென்ற அந்த ராக் பேண்ட் குழுவினருக்கும் ஜெனிஃபரின் மர்மமான நடத்தைக்கும் சம்பந்தமிருக்கிறது. அட்லீஸ்ட் இதை ஒரு சஸ்பென்ஸாக வைக்கிறேன். ஒரு எழவு சஸ்பென்ஸும் இல்லாத இந்த படத்தை இதற்காகவேனும் பார்க்க பலர் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜெனிஃபராக மெகான் ஃபாக்ஸ், ஷகீராவுக்குப் பிறகு இடுப்பை ரசித்தது யாருடையது என்றால் மெகான் ஃபாக்ஸ்தான். சைடில் இருக்கும் இந்த படத்தைப் பாருங்கள். இடுப்பு எவ்வளவுதூரம் megan_fox_01வளைந்து நெளிந்து இருக்கிறது என்று.. மெகான் தற்சமயம் ஒரு ஹாட் கேக்.. இளைஞர்களுக்கு..    Transformer 2 ல் மெகானின் மெகா குலுக்கலை யார் மறந்தாலும் இளைஞர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை!! இந்த படத்தில் காலேஜ் “Devil” மற்றும் உண்மையான “Devil” ஆக வரும் மெகான் “அரைகுறையாக” நடித்திருக்கிறார். மெகானின் ப்லஸ் அவளது உதடுகளும் உடலமைப்பும்தான். எந்த ஒரு ஆணையும் சுண்டியிழுக்கும் கவர்ச்சியான நடிகை. (போதும் போதும் இதுக்கும் மேல சொல்லவேணாம்.) நீடியாக  Amanda Seyfried. இவளையெல்லாம் எவன் கதாநாயகியா போட்டான்? சோடாப்புட்டி கண்ணாடியோடு வரும் இவர் ஜெனிஃபர் ஒரு இன்னொசண்ட், இன்செக்யூர் மாணவியாக வலம் வருகிறார். காதலனோடு அம்மா அப்பா விளையாட்டும் விளையாடும் இவரையும் சரி, மெகானையும் சரி, சரியாக “நடிக்க” வைக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. (அமண்டாவும் மெகானும் இணைந்து தரும் லெஸ்பியன் கிஸ் ரொம்ப ஃபேமஸ்!!) மற்ற எவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.

இசை, ஒளிப்பதிவும் ஆகியவற்றில் எந்த புதுமையும் திகில்தனமும் இல்லை. இத்தனைக்கும் நான் ஒலியளவை அதிகமாக வைத்துத்தான் படத்தையே பார்த்தேன். கதையில் ஒரு திருப்பம் இல்லை, திடுக்கிடும் காட்சிகள் இல்லை, ஓரிரு முத்தக் காட்சிகள். புணர் காட்சிகள் சில காண்பிக்கப்படாத கொலைக் காட்சிகள் அவ்வளவே… முழுக்க முழுக்க மெகானின் உதட்டை மையமாக வைத்தே இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. லோ ஷோல்டர் குழுவினர் பாடும் I Can See Clearly Now என்ற பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைக்கும் பாடல். படத்தின் மிகப்பெரிய ப்ளஸும் இந்த பாடல்தான். வரிகள் கூட “ஜூப்பராக” இருக்கிறது,.

மெகான் காட்டுக்குள்ளே வேட்டையை ஆரம்பிக்கும் பொழுது “ஐ!!” என்று அமர்ந்த நான், பிறகு “அய்யோ” என்று புஸ் ஆகிப்போனதுதான் மிச்சம். இந்த படத்தையெல்லாம் எவன் டொரண்டோ விழாவில் காண்பிக்க அனுமதித்தான் என்றுதான் முதலில் தோன்றியது. புராண கால நம்பிக்கை, கன்னிப்பெண்ணை பலியிடல், மறுபிரவேசம் என்று அமானுஷ்ய காட்சிகள் இருந்தாலும் திகிலும் இல்லாமல், கவர்ச்சியும் இல்லாமல் ஜெனிஃபரின் பாடி தெருநாய் பாடி மாதிரி மொக்கையாகிப் போய்விட்டது. ஒருவேளை எனக்கு அப்படித் தோணலாம்.

மெகான் ஃபாக்ஸுக்காக ஒருமுறை பார்க்கலாம். அப்பறம்…. மெகான் இந்த படத்தில் இறுதியாகப் பேசும் டயலாக்கும் அதற்கு பஞ்ச் கொடுக்கும் நீடியின் டயலாக்கும் அருமை!!! படத்தைப் பார்த்துவிட்டு பகிர்ந்து கொள்ளவும்!!!


Trailer

Comments

King Viswa said…
என்னாதான் சொன்னாலும் இது ஒரு மொக்கைப்படம் என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்
ஒரு டப்பா படத்த.. கதானாயகிய வர்ணிக்க முன்னிட்டு.. ஆதவா.. தேறிட்டே வர்றீங்க..:-))

அப்புறம் நண்பா.. உங்க அலைபேசி எண்ணைத் தெரியாத்தனமா டெலீட் பண்ணிட்டேன்.. நேரம் இருக்கும்போது கூப்பிடுங்க இல்லனா என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்புங்க..
Unknown said…
கோபித்து கொள்ள வேண்டாம்,பதிவு போடும் அளவுக்கு இது சிறந்த படம் கிடையாது எனபது என் கருத்து,ஆனால் உங்கள் எழுத்து மிகவும் அருமை........
@ டெனிம்
// கோபித்து கொள்ள வேண்டாம்,பதிவு போடும் அளவுக்கு இது சிறந்த படம் கிடையாது எனபது என் கருத்து... //

எந்தப்படமா இருந்தா என்ன...?

// ஆனால் உங்கள் எழுத்து மிகவும் அருமை... //

இதுதானே முக்கியம்...
மேகன் பாக்ஸ் இடுப்பு பற்றிய சிலாகிப்பு பிரமாதம்...
இன்ட்லியில் ஏதோ கோளாறு போல தெரிகிறது...
Unknown said…
//ஜெனிஃபராக மெகான் ஃபாக்ஸ், ஷகீராவுக்குப் பிறகு இடுப்பை ரசித்தது யாருடையது என்றால் மெகான் ஃபாக்ஸ்தான். சைடில் இருக்கும் இந்த படத்தைப் பாருங்கள். இடுப்பு எவ்வளவுதூரம்
வளைந்து நெளிந்து இருக்கிறது என்று.. மெகான் தற்சமயம் ஒரு ஹாட் கேக்.. இளைஞர்களுக்கு.. Transformer 2 ல் மெகானின் மெகா குலுக்கலை யார் மறந்தாலும் இளைஞர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை!!//

ஹஹா நல்ல ரசனை பாஸ் உங்களுக்கு!!

மறக்க முடியுமா அதை!!!!

http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.ஹ்த்ம்ல்
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!
அடல்ஸ் ஒன்லி மேட்டரா? ஆனாலும் படத்தை விமர்சித்த விதம் அருமை.
இந்த வரிசையில் Drag me tho the hell, The unborn baby, Needle முதலிய படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.