உலகக்கோப்பை 2011 : Updates (26-02-11)

முதல் மேட்ச் ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும்.

128968நியூஸிலாந்துகாரனுங்க சின்னப்பசங்கடா

சின்னப் பிள்ளையக் கேட்டால் கூட சொல்லிவிடும், ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் என்று. காரணம், வலுவில்லாத பங்களாதேஷிடமே தோற்ற நியூஸிலாந்து, நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை ஜெயிக்கும் என்று யாராவது தப்பித் தவறி சொல்லிவிடமுடியுமா? நேற்று அப்படித்தான் நடந்தது.

பாண்டிங், வெட்டோரியைப் பார்த்து “மவனே, கென்யாவைப் போட்டு என்னா தாளி தாளிச்சீங்க,. இன்னிக்கு இருக்குடா உங்களுக்கு ஆப்பு!!” என்று சொல்லிவிட்டாரா என்ன… 73 ரன் எடுப்பதற்குள்ளாகவே 6 விக்கெட் பொள பொளவென போய்க்கொண்டே இருந்தது. சர்தான், கென்யாவுக்காக ரிவஞ்ச் என்றுதான் நினைத்தேன். 100 க்குள்ளாகவே ஆல் அவுட் ஆகவேண்டியது, மெக்கல்லம் வந்து காப்பாற்றினார். 76 பந்துகளைப் பிடித்தாலும் 52 ரன்கள் எடுத்து ஓரளவு கவுரவத்தைக் காப்பாற்றினார். அவரோடு வெட்டோரியும் அடித்து ஆட 200 ஐ கடந்தது. அப்பறமென்ன… சேனலை மாற்றிவிட்டு திரும்பி வருவதற்குள் 206 க்கு ஆல் அவுட்…  கலக்குங்கடா நியூஸிலாந்து காரனுங்களா!

128991நாதன் மெக்கல்லம்: நான் இருக்கேண்டா

bollyபொலிங்கர் இல்லாமல் ஆஸ்திரேலியா பவுலிங் ஆரம்பித்தது. என்னடா என்று பார்த்தால், ஆளை பேக்கப் செய்து ஊருக்கே அனுப்பிவிட்டார்களாம். அதுசரி, ஹஸிக்கு காயமானது போல பொலிங்கருக்கும்… இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பெரிதாக எந்த நட்டமும் ஆகிவிடப்போவதில்லை. ப்ரட் லீ, மிச்சல் ஜான்ஸன், வாட்சன், டைட், என வேகப் பட்டாளமே இருக்கிறது. (நம்ம டீமுக்கு ஜாஹிரை விட்டால் ஆளில்லை) ஒரே ஒரு முக்கியமான விக்கெட் எடுத்திருந்தாலும் நன்றாக பவுலிங் போட்டது ப்ரட் லீ தான். எவனாலயும் தொடவே முடியவில்லை. முதல் ஓவரைப் பிடித்த குப்தில்லுக்கு வேர்த்தேவிட்டது. ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை. ப்ரட்லீயை விடவும் துள்ளித் துள்ளி ஓடி வந்து பவுலிங் போடும் ஜான்ஸன் அருமையான பவுலிங்கை வெளிப்படுத்தினார். 9 ஓவருக்கு 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்…

பிறகென்ன…

ஆஸ்திரேலியா வழக்கம்போல பின்னியெடுத்துவிட்டது. பாவம் நியூஸிலாந்து. கென்யாவுக்கு எதிராக ஏதோ வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக இப்படியா பழிவாங்கப்படுவது? வாட்சனும் ஹடினும் ஏதோ இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வது போல எல்லாருடைய ஓவரையும் பதம் பார்த்தார்கள். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 135  ரன்கள்… நான்கூட விக்கெட்டே போகாமல் ஜெயித்துவிடுவார்களோ என்று நினைத்தேன். ஹடின் நடையைக் கட்டியதும் வாட்சன் பின்னாலேயே தொடர்ந்தார். அடுத்து வந்த பாண்டிங் தடவிக் கொண்டே இருந்தார். ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. சரி இறங்கி அடிப்போம் என்று இறங்கினார்….. ஸ்டம்ப்ட்.. வைடில் ஒரு ரன் கிடைத்ததுதான் மிச்சம். மிச்ச சொச்சத்தை கேமரூன் ஒயிட்டும் மைக்கேல் க்ளார்க்கும் பொறுக்கினார்கள். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…

பெட்டர்லக் நெக்ஸ்டைம் நியூஸி!

ஆல்ரவுண்டர் வாட்சன் (இந்தாளைக் கண்டா பொறாமையாத்தான் இருக்கு) கடந்த ஐந்து இன்னிங்ஸில் 4 அரைசதம் அடித்திருக்கிறார்.. படுபாவி, இவர்தான் இப்பொழுது ஹை ஸ்கோரில் இரண்டாமிடம். மொத்தம் 141 ரன்கள். இரண்டு போட்டியிலும் அரைசதம்..!! மிட்சல் ஜான்ஸன் விக்கெட் வீழ்த்தியதில் முதலிடம். மொத்தம் 8 விக்கெட்டுகள்!!! மெக்ராத்தின் சாதனையை முறியடிப்பாரா ஜான்ஸன்!??

அடுத்து பங்களாதேஷ் - அயர்லாந்து

129007அடுத்த வேல்ட்கப் நமக்குத்தான்

சின்னப் புள்ளைங்க மேட்ச் என்று எண்ணிவிடமுடியாத அயர்லாந்து பங்களாதேஷ் மேட்சும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகத்தான் சென்றது. 86 க்கு 4 என்று பங்களாதேஷ் தத்தளித்ததுமே, இந்தியாவின் பவுலிங் திறமைதான் ஞாபகத்திற்கு வந்தது. அதெப்படி அயர்லாந்திடம் இப்படி மோசமாக ஆடுகிறார்கள் நம்மிடம் மட்டும் 283??? முஸ்ஃபிகர்  ரஹீமும், ரஹிபுல் ஹஸனும் ஓரளவு ரன் சேர்தார்கள். அயர்லாந்தில் ஒரு நாலு பேர்தான் பவுலிங் போடவில்லை, மீதி எல்லாருமே ஆளுக்கு நாலு ஓவரைப் போட்டு விடுகிறார்கள். போத்தாவும் (Botha) டாக்ரெலும் (Dockrell) சிறப்பாக வீசினர். டாக்ரெல் 10 ஓவரில் 23 ரன்களை மட்டும்தான் தந்திருந்தார். (நோட் திஸ் பாயிண்ட் இண்டியன்ஸ்) பங்களாதேஷ் மக்களின் ஆராவாரம் அடங்கிக் கொண்டே வந்தது. இருக்கிற விக்கெட்டுகளும் மடமடவென கழன்றுவிட, சொல்லிவைத்தாற் போல 205. (நியூஸி 206)

129008பவுலிங்ல வெச்சுக்கறேண்டா

சென்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்பேற்றிய அயர்லாந்து இம்முறை பழைய பாகிஸ்தானான பங்களாதேஷையும் வீழ்த்திவிடுமென்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். சீரான இடைவெளியில் விழுந்த விக்கெட்டுகள் பங்களாதேஷ் ரசிகர் நெஞ்சில் பாலை வார்த்துக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸில் ப்ராவோ சகோதர்கள் நன்றாக ஆடியது போலவே இதிலும் O'Brien சகோதர்கள் ஓரளவு ஆடினார்கள். இருவருமே கிட்டத்தட்ட ஒரே ரன்கள்தான் (37,38). ஓபனர்கள் சரியாக ஆடியிருந்தால் ஜெயித்திருக்கலாம். எனினும் பங்களாதேஷ் சிரமப்பட்டுத்தான் ஜெயிக்க வேண்டியிருந்தது!!


Result

நியூஸி 206 - ஆஸி 207/3 (34 ov)

ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


பங்களாதேஷ் 205 – அயர்லாந்து 178 (45 ov)

27 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி


சரி, கடைசியா ஏதாவது சொல்லணும்ல….

ஆஸ்திரேலியாவின் பவர் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது என் கணிப்பு. இலங்கைக்கெதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் உண்மையான வலிமையை எடை போடலாம்.

சின்னச் சின்ன அணிகளும் நன்றாக தாக்குப் பிடிக்கிறார்கள். நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்றவைகள் எதிர்பார்த்ததைவிட நன்றாக ஆடுகிறார்கள். கென்யாவின் நிலைமைதான் படுமோசமாக இருக்கிறது.

நேற்றைய பங்களாதேஷின் பேட்டிங்கைப் பார்க்கையில் (அதே மைதானம்) இந்தியாவின் பவுலிங், கோப்பை வாங்கப் போதாது என்று தெரிகிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போட்டிகளில் “திறமை” தெரிந்துவிடும்.


புள்ளி பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Australia     2 2 0 0 4
Sri Lanka 1 1 0 0 2
Pakistan 1 1 0 0 2
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     1 0 1 0 0
Canada     1 0 1 0 0
Kenya 2 0 2 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         1 1 0 0 2
South Africa 1 1 0 0 2
England     1 1 0 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 1 0 0 0 0
Ireland 1 0 1 0 0
West Indies    1 0 0 0 0

பிகு: மக்களே, அடுத்து இந்தியா இங்கிலாந்து போட்டி மற்றும் ஆஸ்கர் ஸ்பெஷல் + பதிவு!! மறக்காமல் வருகை தரவும்!!

Comments

Unknown said…
குரூப் பியில் நாலாம் இடத்துக்கு நான்கு அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கப் போகிறது பாஸ்.இருந்து பாருங்கள்..
இன்று இலங்கை பாகிஸ்தான் அனல் பறக்கும் முதல் போட்டியாக இருக்கலாம் இம்முறை உலகக்கிண்ணத்தில்!!
ஆதவா said…
வெஸ்ட் இண்டீஸை பங்களாதேஷ் தோற்கடித்தால் நாலாவது இடம் பங்களாதேஷுக்குத்தான்...
வெஸ்.இ Vs பங்ளாதேஷ் மேட்ச் ரொம்ப முக்கியமான மேட்ச்!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_26.html
ஆதவா said…
நன்றி நண்பர்களே!!
டாக்ரெல் 10 ஓவரில் 23 ரன்களை மட்டும்தான் தந்திருந்தார். (நோட் திஸ் பாயிண்ட் இண்டியன்ஸ்//

நன்றாகத் தான் காமெடி பண்ணுறீங்கள். வரும் ஞாயிறு மாலை ஆஸ்திரேலியா, இலங்கை மோதப் போகுதில்லை. அப்ப வைச்சுக்கிறன்.
அலசல் அருமை. இப்போதை நிலமைப் படி இந்தியா இங்கிலாந்து ஆட்டம் Tied.