குழந்தை ஓவியம்
மலைமுகடுகளுக்கிடையே
சூரியன் ஒளிந்திருப்பதாய்
வானம் குறுகி நிலப்பரப்பில்
பொதிந்திருப்பதாய்
தமிழின் எழுத்தொன்று
தலைகீழாய் அந்தரத்தில் தொங்குவதாய்
திரிந்த கயிற்றின் முனை
கீற்றுகளாய் படிந்திருப்பதாய்
அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது
நல்லாயிருக்கா டாடி என்று
நீட்டுகிறாள்
வெரிகுட் என்று சொல்லியபடி
புன்னகைக்கிறார் கண்ணில்லாத அப்பா.
--------------------------------------
அவள் வரைந்த காகிதத்தின் வழியே
லாஸ்காக்ஸின்
கொம்புடைந்த காட்டெருமையொன்று
திறக்காத கதவின் வழியே
மூர்க்கமாக முட்டி வெளியேறுகிறது
ஒன்றன்பின் ஒன்றாய்
வீடுமுழுக்க
புற்களினிடையே பூண்டுகள்
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
தரைமுழுக்க
நிறங்களின் சாம்ராஜ்யம்
கொடிகட்டிப் பறக்கிறது
என் தலைக்கு மேலே
ஒரு விண்மீன்
ஊர்ந்து செல்லுகிறது
இன்னும் என்னென்ன
உருப்பெற காத்திருக்கின்றனவோ
அதென்னவோ தெரியவில்லை
நான் வரையும் பொழுது
எதுவுமே உருப்பெற்று
வெளியேறியதில்லை!
Comments
ரசித்தேன் முழுமையாய்
அப்பா அப்பப்பா ...
------------------
உறுபெற்றவை வெளியேறவில்லை
இரண்டாவது ஓவியம் ஒன்னும் சொல்வதற்கில்லை
எதுவுமே உருப்பெற்று
வெளியேறியதில்லை!
அதே அதே நான் வரையும் எதுவும் உருப்பெற்று வெளியேறியதில்லை எனும் வழி என்னிடமும்!!!!
அதுவே சந்தோஷம்.
முதக் கவிதை மனதை அழுத்தியது ஆதவா.
கவிதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
ஆதவா.