இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன். பிறகு இரண்டு வருடங்கள் அப்படி ஏதும் எழுதவில்லை...அவற்றுள் பல என் பால்ய கவிதைக் காலங்களில் குறும்பாக எழுதியது!!

இப்பொழுது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். யாரும் முகம் சுளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மேல் நோக்கிப் பார்க்கும்
எனது இடுப்பிலிருந்து கீழாய்
துலாவி, என்னுயிரினில்
இடுகிறாய்
என் கண்களும் காணாத
உன்னுயிரை!
காலக்கெடுவினில்
வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..

---------------------------------------------------------------------

உனக்கு கூடல்
தெரியாதெனில்
ஊடல் புரிந்துவிடு
உன்னை!

---------------------------------------------------------------------

வீதியிலே தேவர்கள் கூட்டம்
திண்டாடும் ரம்பைகள்
பாதியிலே எழுந்துவர
மனமில்லாத அர்ச்சுனர்கள்;
கையிலே பூமாலை;
காதிலே காதல் சொற்கள்;
நெஞ்சிலே வஞ்சமுண்டு
தேவர்கள் போல் தெரிகிறார்கள்
தேடி அலைபவர்கள்..
---------------------------------------------------------------------

தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!!
---------------------------------------------------------------------

என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை
---------------------------------------------------------------------

இரவு நேரப் பனியில்
இதயம் தாலாட்டும்
இன்னிலவோடும்
இதழோரப் புன்னகையோடும்
இவளுடன்
இருந்தேன்
இனிமையாக..
---------------------------------------------------------------------

விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...

47 ஊக்கங்கள்:

நிலாவும் அம்மாவும் said...

first first...I first

புதியவன் said...

கவிதைகளில் அப்படியொன்றும் விரசம் தெரியவில்லை ஆதவன்...

//தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!!//

இந்தக் கவிதை அருமை...

நிலாவும் அம்மாவும் said...

நல்லா இருக்கு ஆதவா

அ.மு.செய்யது said...

//இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்.//

ஆனாலும் உங்களுக்கு தகிரியம் அதிகம் ஆதவன்.

அ.மு.செய்யது said...

//தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!! //

கிளாஸ்..

அ.மு.செய்யது said...

//என் கண்களும் காணாத
உன்னுயிரை!
காலக்கெடுவினில்
வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..//

பொருள் சிதையாமல் உயிர்ப்புடன் வெளி வந்திருக்கிறது.

வார்த்தைகளை கையாளும் விதம் அருமை.

அ.மு.செய்யது said...

கடைசி கவிதை நச்.....

ச்சீ..தள்ளி நில்லு..

நட்புடன் ஜமால் said...

ஆத்தா!

எனக்கு எதிறா கிளம்பி இருக்கீய!

நட்புடன் ஜமால் said...

\\உனக்கு கூடல்
தெரியாதெனில்
ஊடல் புரிந்துவிடு
உன்னை!\\

அழகாயிருக்கே!

நட்புடன் ஜமால் said...

\இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்\

எப்படிப்பா இப்படி போட்டு உடைக்கிறீங்க

நட்புடன் ஜமால் said...

\\விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...\\

எதார்த்தம் ...

வேத்தியன் said...

கவிதை எல்லாம் அருமை...
வாழ்த்துகள்...

வேத்தியன் said...

// தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!! //


இது கலக்கல் ஆதவா...

வேத்தியன் said...

// விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு... //


இது சூப்பர் ஆதவா...
:-)

வேத்தியன் said...

தமிழ்மணம்,தமிழிஷ் ஓட்டு போட்டாச்சு...
சூப்பர் கவிதைகள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க சங்கடப்படுற அளவுக்கு கவிதைகள் விரசமாக இல்லை ஆதவா.. எல்லாமே அருமை.. குறிப்பா..
//என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை//

எனக்கு இது ரொம்ப பிடிச்சது..

ஆ.முத்துராமலிங்கம் said...

ஆதவா கவிதைகள் அனைத்தும் நல்லாயிருக்கு நீங்கள் முன்னுரையிட்டது போல் ஒன்றும்
தெறியவில்லை

//என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை//

இக்கவிதை மிகவும் ரசித்தேன்

ஆ.ஞானசேகரன் said...

//விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...//

நச்..

கமல் said...

வீதியிலே தேவர்கள் கூட்டம்
திண்டாடும் ரம்பைகள்
பாதியிலே எழுந்துவர
மனமில்லாத அர்ச்சுனர்கள்;
கையிலே பூமாலை;
காதிலே காதல் சொற்கள்;
நெஞ்சிலே வஞ்சமுண்டு
தேவர்கள் போல் தெரிகிறார்கள்
தேடி அலைபவர்கள்..
//என்னய்யா நடக்குது இங்கை???

கலை - இராகலை said...

ஓ இது எனக்கில்லையா! 14+ க்கெல்ல்லாம் மழலை கவிதை மாதிரி ஏதும் இல்லை சார்!!
ஹிஹிஹி.

கமல் said...

இரவு நேரப் பனியில்
இதயம் தாலாட்டும்
இன்னிலவோடும்
இதழோரப் புன்னகையோடும்
இவளுடன்
இருந்தேன்
இனிமையாக..//


நல்லதொரு சிந்தனா வாதி நீங்கள்?

வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது இது தானோ???

Rajeswari said...

நன்றாக இருக்கிறது...தொகுப்புக்கள் ஏதேனும் இருக்கிறதா ஆதவா அவர்களே?

குடந்தைஅன்புமணி said...

அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. அதிலும் அந்த கடைசி கவிதை... யதார்த்தம்.

Ravee (இரவீ ) said...

நல்லா இருக்கு ஆதவன்.

Ravee (இரவீ ) said...

சும்மா தலைப்பும் - கொஞ்சம் விளக்கமும் கொடுத்து பயமுறுத்துறீங்க.

Ravee (இரவீ ) said...

குறிப்பாக ...
//தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!!//
மிக அருமை.

நசரேயன் said...

பொதுக்கவிதை தான் .. எல்லாம் நல்லா இருக்கு

ஷீ-நிசி said...

என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை////

ஆதவா! இந்த வரிகள் மிக அழகு!

ஆமாம் 18+ போட்ட..... :)

சொல்லரசன் said...

நல்லாதான் இருக்கு இதற்க்கு ஏன் + 18

yathra said...

\\ யாரும் முகம் சுளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்\\

இதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள்,

மிக நன்றாயிருக்கிறது,

கவிதை எல்லா வழக்கமான பிரதேசங்களையும் தாண்டி பயணிப்பது நல்ல விடயமே.

ஹேமா said...

//விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...//

இது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் எழவு,சனியன் எல்லாம்.
உண்மையிலேயே அன்பு கூடுமே தவிரக் குறையாது !

ஹேமா said...

ஆதவா,விரசம் என்று எதுவும் இல்லை.இயல்பு வாழ்வியல்தானே.ஊடலின் மொழிகள் கவிதையாக !

// தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!! //

மிகவும் ரசித்தேன்.

மோனி said...

___//மேல் நோக்கிப் பார்க்கும்
எனது இடுப்பிலிருந்து கீழாய்
துலாவி, என்னுயிரினில்
இடுகிறாய்
என் கண்களும் காணாத
உன்னுயிரை!
காலக்கெடுவினில்
வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..//___

மிக மிக
அற்புதமான வரிகள் ...
ஏன் இதை யாருமே விமர்சிக்கவில்லை என்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது ...

கவிதைகள் அழகு ...
ஆதவா !
விரைவாய்
தொடருங்கள் ...

மோனி said...

இந்த கவிதைகளில்
விரசம் என்ற ஒரு விஷயத்தை நான் காணவில்லை ...
ஒருவேளை
அப்படி இனி வரும் கவிதைகளில் இருப்பினும்
கவிதையை பொறுத்தவரை
விரசமும் இரசிக்க வேண்டிய விஷயமே ...

அபுஅஃப்ஸர் said...

//இரண்டு வருடங்களுக்கு முன்னர், தொடர் கவிதைகளைப் போன்று பல காமக் கவிதைகள் எழுதி வந்தேன்//

ஆதவா ஏன் ஏன் இப்படியெல்லாம்... ஹூம்..

அபுஅஃப்ஸர் said...

//வலியோடு பிடுங்கியெடுக்கிறாய்
நீயிட்ட நம்முயிரை..
/

அர்த்தம் புரிந்தவர்களுகு....

வரிகள் கலக்க ஆதவா

அபுஅஃப்ஸர் said...

//உனக்கு கூடல்
தெரியாதெனில்
ஊடல் புரிந்துவிடு
உன்னை!
//

ஹா ஏதாவது சொல்லிக்கொடுங்க தல‌

அபுஅஃப்ஸர் said...

//தவித்துப் போயிருந்த என்
இதயத்தை எடுத்து
வலிக்காமல் எச்சப்படுத்தி
வேறிடத்தில் வைத்துவிட்டாய்
இன்னொரு இதயம்
உதயமாக!! ---------------------------------------------------------------------
//

ரொம்ப......எச்சமோ, கலக்கல் வரிகள்

அபுஅஃப்ஸர் said...

//என் ஒவ்வொரு காகிதங்களும்
உனக்காக கவிதை எழுதி
வீணாகவே போகின்றன.
விழும்போது அவை
உன் பெயரையோ அல்லது
உன் இரவையோ நினைவு படுத்தாது
போவதில்லை
---------------------------------------------------------------------
//

கவிதை சொல்லும் வரிகள் அழகு, குறிப்பிடும்படி விரசம் தெரியவில்லை எதிலுமே

அபுஅஃப்ஸர் said...

//இரவு நேரப் பனியில்
இதயம் தாலாட்டும்
இன்னிலவோடும்
இதழோரப் புன்னகையோடும்
இவளுடன்
இருந்தேன்
இனிமையாக.. ---------------------------------------------------------------------

விடிய விடிய சொர்க்கம் நீ எனக்கு
விடிந்தபின்
எழவே! சீ! தள்ளி நில்லு...
//


ஹா... யதார்த்தம் சொல்லும் வரிகள்...
அந்தளவிற்கு விரசம் தெரியவில்லை உங்கள் வரிகளில், இருந்தாலும் ரொம்ப அருமை... வாழ்த்துக்கள்

குடந்தைஅன்புமணி said...

எனது பதவில் பின்னூட்டமிட.... செலக்ட் புரொபயில் > கூகில் அக்வுண்ட்> கமெண்ட் > போஸ்ட் கமெண்ட் . அவ்வளவுதானே... (தமிழ் மணத்தில் ஓட்டளிக்க இதுதான் வசதியாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால் மாற்றினேன்.)

reena said...

மிக அழகிய கவிதைகள் ஆதவன்... முகம் சுளிக்கும்படி ஏதுமில்லையே... அழகான வார்த்தை பிரயோகம்... வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய குறுங்கவிதைகள் இருக்கின்றனவா? இடுங்களேன்... காத்திருக்கிறோம் படிப்பதற்கு

கவின் said...

பிட் படம் பார்கிறமாதிரி பயந்து பயந்துதான் படித்தேன்....! ஏமாத்திட்டியே ஆதவா?
18+ சமாச்சாரங்கள் ஒன்னையும் கானமே????

அகநாழிகை said...

ஆதவா,
கவிதைகள் மிக அருமை.
18+ போட்டிருக்க வேண்டாம்.

//வீதியிலே தேவர்கள் கூட்டம்
திண்டாடும் ரம்பைகள்
பாதியிலே எழுந்துவர
மனமில்லாத அர்ச்சுனர்கள்;
கையிலே பூமாலை;
காதிலே காதல் சொற்கள்;
நெஞ்சிலே வஞ்சமுண்டு
தேவர்கள் போல் தெரிகிறார்கள்
தேடி அலைபவர்கள்..//

இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு உங்களுக்கும் , அன்புமணி அண்ணனுக்கும் எனது வாழ்த்துகள்...

வேத்தியன் said...

ஐ...
ஃபாலோவர்ஸ் வந்துடுச்சே...
எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாங்க...
ச்சும்மா உல்லூலாயிக்கு...
:-)

தமிழ்நெஞ்சம் said...

நல்லா இருக்கு.. தொடருங்க

Subscribe