முறிந்த சிறகு
வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது
Comments
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்]]
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்]]
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது]]
அருமை ஆதவா!
இன்னும்......!!!
:)
--வித்யா
அனுஜன்யா
அவ்வ்வ்வ்வ்வ் !!!!
முறிந்த சிறகுகள் என்ற கற்பனை, ஏதோ ஒரு இழப்பையோ தோல்வியையோ குறிக்க போதுமானதாக இருந்தது.
மீண்டும் மீண்டும் வாசித்து என்னுள் எழும் சிந்தனைகளை வெவ்வேறு வடிவங்களில் புணரமைக்க முயல்கிறேன்.
கொள்ளை அழகு !!!! வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஆதவன் !!!!
இருக்கிறது.
என் பார்வையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் மாதிரி படுகிறது.
மீண்டும் வலைப்பக்கம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
நல்லாருக்கு நண்பா...
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது//
முறிந்த பறவையின் சிறகா அல்லது.........
வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு பாட்டல் கிடைத்தது
சுட்டெரிக்கும் வெயிலின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மயக்கத்தை
அப்பாட்டல் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் பாட்டல் வாங்கப்பட்டிருக்கலாம்
இன்னும் உடைத்து அடிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை வைத்திருக்க கூடும்
என்ன இருக்கும் உள்ளே
தெரிந்து கொள்ளும் ஆவலில்
பாட்டலை உடைத்தேன்
அதனுள்
"குடித்து" முடித்தவன்
"அடித்து" விட்டு சென்றுள்ளான்.
கண்டு கொள்ளுங்கள்.
காண்டு கொள்ளவேண்டாம்.
அருமை ஆதவரே
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம் //
நல்ல கவிதை.
முறிந்த சிறகு கிடந்தது
//
-:(((
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
எனக்கு நிறைய...
யோசிக்க விடயம் கொடுத்தது சந்தோஷம்
தொடருங்கள்
புதியதாய் வரவளித்த ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நையாண்டி நைனா ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்!!
@நையாண்டி நைனா...
பதில் கவிதை ரசித்தேன்... உங்கள் தளத்திலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்!!
vaazhththukkaL aathvaa!
:)))
முறிந்த சிறகு " சிந்திக்க வைக்கிறது இக்குறியீடு.
மீண்டும் மீண்டும் படித்து
'வெறுமையின் மத்தியில்'
'தனிமையின் நிழலை'
உள்வாங்க வேண்டும் போலிருக்கிறது.
இதே சிறகை வைத்து வேறோரு கவிதை இருக்கிறது ஆதவா..
ஞாபகம் வருகிறதா?
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது//
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் இலக்கியம் போல இக்கவிதையின் சிறகுகள் புதிதாய் ஞாபகம் கொள்கின்றன.
பாராட்டுக்கள் ஆதவா.
சாந்தி
//நிரம்பி வழியும் தனிமையின் நிழல்//
வழியும் நிழல்[மிக மிக அருமை..]
you can also discontinuation our innovative [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] oversight at http://freecasinogames2010.webs.com and win energy incredibly misled !
another voguish [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] handy is www.ttittancasino.com , during german gamblers, charge during protected from online casino bonus.
sashi
மிக அருமையான க விதை
சுகம்தானே ஆதவா !