முறிந்த சிறகு

வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள் 
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது

Comments

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்]]

இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்]]

ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது]]


அருமை ஆதவா!
ஆதவா! இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. இதன் வெறுமையும் முறிந்த சிறகுகளாக விரியும் எண்ணக் கோர்வைகளும் சட்டென சொல்லிவிட முடியாதொரு கனங்களுக்குள் எப்பவும் இழுத்துச் செல்லும். இரண்டு மூன்று முறை படித்திருக்கின்றேன் ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் மேலிட்டுக் கொண்டேதான் செல்கின்றது.

இன்னும்......!!!
என்னவோ செய்கிறது. உலர்தன்மையை வார்த்தைகளிலேயே காட்சிப்படுத்தும் கவிதை.
Vidhoosh said…
இந்த பறவையும், கடிதமும் எத்தனை விதமான உருவங்கள் கொள்கின்றன... காட்சிகள் கண்முன் விரிவது போல இருக்கிறது.
:)
--வித்யா
அருமையான கவிதை ஆதவா.. ஏதோ ஒரு வெறுமையை சொல்லிச் செல்லும் வார்த்தைகள்..
anujanya said…
நல்லா இருக்கு ஆதவா.

அனுஜன்யா
Anonymous said…
வெறுமையின் வெளிப்பாடு......இனம் புரியா வலியோடான வார்த்தை ஏதோ ஒரு பறவையின் முறிந்த சிறகு..
Anbu said…
நல்லா இருக்கு அண்ணா
கடிதத்த ஓபன் பண்றதுக்கு முன்னாடியே இவ்வளவு யோசிப்பீங்களா...??

அவ்வ்வ்வ்வ்வ் !!!!
உலர்ந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதிய அழகான கவிதை.

முறிந்த சிறகுகள் என்ற கற்பனை, ஏதோ ஒரு இழப்பையோ தோல்வியையோ குறிக்க போதுமானதாக இருந்தது.

மீண்டும் மீண்டும் வாசித்து என்னுள் எழும் சிந்தனைகளை வெவ்வேறு வடிவங்களில் புணரமைக்க முயல்கிறேன்.

கொள்ளை அழகு !!!! வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஆதவன் !!!!
Unknown said…
நல்லா இருக்கு ஆதவா. கவித்துவம்
இருக்கிறது.

என் பார்வையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் மாதிரி படுகிறது.
அருமை. வாழ்த்துக்கள்!
மீண்டும் வலைப்பக்கம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
முறிந்த சிறகு சொல்லும் ரகசியங்களில் சட்டென மனசுக்குள் ஏதோதோ உருளுகிறது.

நல்லாருக்கு நண்பா...
நன்றாக இருக்கின்றது... முறிந்த சிறகு கூறும் வெறுமை....
கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
//அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது//

முறிந்த பறவையின் சிறகா அல்லது.........
உங்க கவிதைய படிச்சி கை நம நமன்னு அரிச்சது... அதனாலே இந்த மொக்கைய ரெடி பண்ணிட்டேன். உங்கள் ஒப்புதல் கிடைத்தால் என் தளத்திலே ஏற்றுவேன். இல்லைஎனில் இங்கேயே அழித்து விடலாம்.

வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு பாட்டல் கிடைத்தது

சுட்டெரிக்கும் வெயிலின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மயக்கத்தை
அப்பாட்டல் ஏற்படுத்தியிருந்தது

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் பாட்டல் வாங்கப்பட்டிருக்கலாம்

இன்னும் உடைத்து அடிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை வைத்திருக்க கூடும்

என்ன இருக்கும் உள்ளே
தெரிந்து கொள்ளும் ஆவலில்
பாட்டலை உடைத்தேன்
அதனுள்
"குடித்து" முடித்தவன்
"அடித்து" விட்டு சென்றுள்ளான்.



கண்டு கொள்ளுங்கள்.
காண்டு கொள்ளவேண்டாம்.
படிக்க படிக்க புது புது பொருளை தருகிறது..ந்ல்ல கவிதை நண்பா..
முதல் பந்திலேயே அடித்த சிக்சர்.
sakthi said…
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கவிதை

அருமை ஆதவரே
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம் //

நல்ல கவிதை.
//ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது
//

-:(((
நல்லா இருக்கு ஆதவா
கவிதை அருமை .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
கவிதை வரிகள் நிறைய யோசிக்கவைக்கிறது அவரவர் பரிணாமங்களில்...

எனக்கு நிறைய...

யோசிக்க விடயம் கொடுத்தது சந்தோஷம்

தொடருங்கள்
ஹேமா said…
ஆதவா,கவிதை கனகதை சொல்கிறது.எழுத்தில் சொல்லமுடியா வேதனையை-விஷயத்தை முறிந்த சிறகின் மூலமாக முறிந்த சிறகே சொல்லும்.குறைந்த வரிகளில் நிறைந்த கவிதை.அழகு.
ஆதவா said…
அனைவரின் அன்புக்கும் நன்றி!!!
புதியதாய் வரவளித்த ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நையாண்டி நைனா ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்!!

@நையாண்டி நைனா...

பதில் கவிதை ரசித்தேன்... உங்கள் தளத்திலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்!!
nice one. already i had seen in navina virutsam.

vaazhththukkaL aathvaa!
கவிதை வருடுகிறது...
:)))
"பறவையின்
முறிந்த சிறகு " சிந்திக்க வைக்கிறது இக்குறியீடு.

மீண்டும் மீண்டும் படித்து
'வெறுமையின் மத்தியில்'
'தனிமையின் நிழலை'

உள்வாங்க வேண்டும் போலிருக்கிறது.
dharshini said…
கவிதை அழகு ஆதவா.. [சில சமயங்களில் தனியாக மொட்டை மாடியில் இருக்கும் போது தூதுவிட்டு செல்லும் முறிந்த சிறகு]
நன்றாக இருக்கிறது!


இதே சிறகை வைத்து வேறோரு கவிதை இருக்கிறது ஆதவா..

ஞாபகம் வருகிறதா?
Anonymous said…
நண்பா சமீப காலமாக உங்கள் பதிவு பக்கம் வர முடியவில்லை. மன்னிக்கவும். உங்கள் பதிவுக்கு வரும் போதெல்லாம் ஏதாவது தொழிற்பகோறு ஏற்பட்டு விடுகிறது. இப்போது சரியாகி விட்டது கருத்துரையும் வழங்கி விட்டேன்.
Anonymous said…
கவிதையின் அர்த்தம் மனதை கனக்க செய்வது போல் உள்ளது.
அந்த முறிவு எதனால் ஏற்பட்டிருக்கும்.துயரங்களூடே யோசனை நிரம்பி வழிகிறது.
//கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது//

கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் இலக்கியம் போல இக்கவிதையின் சிறகுகள் புதிதாய் ஞாபகம் கொள்கின்றன.

பாராட்டுக்கள் ஆதவா.

சாந்தி
நல்லா இருக்கு ஆதவன்!
நளன் said…
This comment has been removed by the author.
சௌமியா said…
அருமையான கவிதை ஆதவன்..

//நிரம்பி வழியும் தனிமையின் நிழல்//
வழியும் நிழல்[மிக மிக அருமை..]
Anonymous said…
Form the organism with two backs casinos? seal of approval on this advanced [url=http://www.realcazinoz.com]casino[/url] exemplar and put up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also discontinuation our innovative [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] oversight at http://freecasinogames2010.webs.com and win energy incredibly misled !
another voguish [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] handy is www.ttittancasino.com , during german gamblers, charge during protected from online casino bonus.
Lakshman said…
I am feeling something very different.
sashi
Anonymous said…
Making money on the internet is easy in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat cpa[/URL], You are far from alone if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or misunderstood methods to produce an income online.
மனதை ஏதோ செய்கிறது இந்த முறிந்த சிறகு.

மிக அருமையான க விதை
கனம் நிறைந்த வரிகள்
ஹேமா said…
ஆதவா அப்பப்போ சிலநேரங்களில் சில பதிவுகளில் உங்களைக் காண்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.
சுகம்தானே ஆதவா !