கொரிய பெண்ணும் அரிய வாய்ப்பும்


காலையிலிருந்தே பெருத்த மழையாகவோ, சின்னஞ்சிறு துளிகளாகவோ விழாமல் சீராக மழை பெய்துகொண்டிருந்தது. அப்போதே எனக்குத் தோன்றியது என்னவோ நடக்கப் போகிறது என்று. சுமார் பத்து மணியளவில் அலுவலகத்திற்குப் போய் சேர்ந்தேன். அப்போதுதான் எனது பார்ட்டி ஒருவர் கூப்பிட்டார். இப்பொழுது வரப்போவதாகவும் உடனடியாக ஒரு வேலை இருப்பதாகவும் சொன்னார். சரி என்று நானும் எனது அலுவலகத்தை அவரது வருகைக்காக தயார்படுத்தி வைத்திருந்தேன்.

மழை இன்னும் விட்டபாடில்லை. பிறகு எப்படி வரப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு பியான்சியின் பாடல் ஒன்றை சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலெல்லாம் குறிப்பிட்ட பார்ட்டி வந்து சேர்ந்தார். அட அவர் மட்டும் வந்திருந்தால் பரவாயில்லை, உடன் இருவரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் கொரிய நாட்டைச் சார்ந்தவர்கள்.

சரி வந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்று உங்கள் சிந்தனைக்கு எட்டும் வரை சொல்லுகிறேனே!

அப்பா, மகளாக இருவர்..அப்பாவை விடுங்கள்,. நான் சொல்லப்போவது அந்த கொரிய மகளைப் பற்றித்தான். நன்கு சிவந்த முகம், பரந்த நெற்றி, விரிந்த கூந்தல், விலகி நிற்கும் கண்கள், முகத்தோடு சேர்ந்தவாறு சப்பை மூக்கு, சுருக்கமான வாய் ; கொஞ்சம் உதட்டுச் சாயம், வட்ட முகம்.. ஏறத்தாள என்னுடைய உயரம்.. கருப்பு வர்ண டீ சர்ட்டும் நீல வர்ண (Navy ) ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.

நான் முதலில் அவர்களோடு பேசவில்லை. பார்ட்டியோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பார்ட்டியும் அந்த கொரிய மாமாவும் (இனிமே மாமா ) ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த அந்தப் பெண், நைஸ் ஷாங் (Nice Song) என்று நான் ரசித்த பாடலை ரசித்தாள்.. (அப்பவே ஆதவன் கவுந்தான்.)

டு யூ லைக் பியான்ஸி? (Do you like Beyonce?) இது நான். அவளிடம் பேசும் பொழுது என் ஆங்கிலம் தடுமாறியது. அதைவிட பதட்டம். அவளோ பதட்டமின்றி

யா யா ஐயம் ஃபாந்த் ஆஃப் ஹெர் (I am fond of her?) என்றாள். சொன்னவள் நேரே அவள் அமர்ந்திருந்த நாற்காலியை சற்று இழுத்து, என்னருகில் அமர்ந்தாள். (ஆதவன் காலி) நான் அவள் பெயரைக் கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் மிதந்துகொண்டிருந்தேன். அவளோ என்னிடமிருந்த டிசைன் சாம்பிள்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நிமிடங்கள் கழித்து, " வேர் ஆர் யு ப்ரம்? (where are you from?) என்றேன். உடனடியாக, " கொர்ரியா" என்று பதில் வந்தது.. அத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

பிறகு அவரது அப்பா மகளிடம் ஏதோ பேசினார்.. அப்பொழுதுதான் கொரிய பாஷையைக் கேட்கிறேன். அதற்கு முன்னர் கேட்டதில்லை.. பிறகு அவர் ஒரு சிடி ஒன்றைத் தந்தார். அதை என் கணிணியில் சுழல வைத்தேன். பிறகு அந்த கொரிய பெண்,

"ஓபன் த சீதி, ஃபைந் தி திசைன் அன் ஃபாலோ தி ஆர்ட்வோர்க்" (Open the CD find the design and follow the artwork) என்றாள்.. அவளது ஆங்கிலம் ஒருமாதிரியாக இருந்தது. டி (t) என்பதை தி என்கிறார்கள். கொரிய ஆங்கிலம் அப்படித்தான் போலும். சரி நமக்கென்ன என்று சிடியைத் திறந்து டிசைன்களை எடுத்து வேலை செய்துகொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து என்னைப் பற்றி விசாரித்தாள். தட்டுத் தடுமாறி என் பெயர் என்ன, என்ன செய்கிறேன் என்பதை ஓரளவு சொன்னேன். வருமானம் உனக்கு எவ்வளவு இருக்கும் என்றாள். அதைச் சொல்லமுடியாது என்று சொல்லி சிரித்துவிட்டேன். அவளும் சிரித்தாள்.. (அடடா!!!)

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை நின்றுவிட்டது. அவளுக்கு மழை பிடிக்கிறதாம். ஆனால் ஊர் ரொம்ப ஹாட் என்றாள். நான் புன்னகைத்துக் கொண்டே டிசைன் வேலைகளை செய்துகொண்டிருந்தேன்.

எனது பார்ட்டி என்னிடம் வந்து, டிசைன் முடிந்ததா என்று கேட்டார். இல்லை என்றேன். உடனே அவர், தானும் அந்த கொரிய மாமாவும் அலுவலகம் வரை சென்று வருவதாகவும் மகள் இங்கேயே இருப்பாள் என்றும் (ஓவரா ஜொள்ளு விடாதே என்று எச்சரித்தும்) சென்றார்.. அப்பாவிடம் மகள் ஏதோ சொல்ல, அவரும் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு சென்றார்..

அய்யோ!!! ஆதவா.. உண்மைதானா... இதெல்லாம்.. என் கையை நானே கிள்ளிக் கொண்டேன்.

அந்தப் பெண் பெயர் இதுவரையிலும் தெரியவில்லை, நானும் எக்ஸ்க்யூஸ்மி என்றுதான் அழைத்தேன், அவளும் பெயர் சொல்கிறமாதிரி தெரியவில்லை.

சரி, வேறென்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

நான் கூல்ட்ரிங் ஆர்டர் பண்ணவா என்று கேட்டேன். நோ நோ, என்று மறுத்துவிட்டாள். அப்பறம் உங்கள் நாட்டு சமையல் எப்படி இருக்கும் என்று கேட்க, எனக்கோ விழி பிதுங்கிவிட்டது.. (சமாளிடா..) நான் மதிய உணவிற்காக கொண்டு வந்திருக்கும் எனது உணவை எடுத்துக் காட்டினேன். (கஷ்டகாலம்) இப்படித்தான் செய்வோம் என்றது, தாங்களும் அப்படித்தான் செய்வோம் என்றார்கள் (அடப்பாவமே!)

சாப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்தாள். பிறகு, என்ன நினைத்தாலோ தெரியவில்லை, டேஸ்ட் பார்க்கவேண்டும் என்றாள்.
அம்மா செய்திருந்த சுருக் சுண்டல் குருமாவும், கத்திரிக்காய் பொறியலும் சற்று ருசி பார்த்தாள். (என்னவோ கமெண்ட் செய்தாள்.. எனக்குப் புரியவில்லை)

எனக்கோ ஆனந்தம்.. தமிழ்நாட்டு சமையலை வேறு நாட்டுப் பெண்ணொருத்தி ருசி பார்க்கிறாள் என்றால் சும்மாவா?? இதுவரையிலும் எத்தனையோ ஃபாரினர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் புதிய அனுபவம்.

சிறிது நேரத்தில் சென்ற இருவரும் நந்தி மாதிரி வந்துவிட்டார்கள். திசைன் (Design) முடிந்துவிட்டது. கிளம்பிச் சென்றுவிட்டார்கள்..........

செல்லும்பொழுது, நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)

வெளிநாட்டவள் அதிலும் ஒரு பெண்ணின் பாராட்டு..... தித்திக்கும் தேன்......

பிகு: மேலேயுள்ள அந்த புகைப்படம் நான் சொன்ன கொரிய பெண் அல்ல.. இச்சம்பவம் நடந்து பல மாதங்களாகிறது , கடைசி வரைக்கும் அவளின் பெயரைக் கேட்கவேயில்லை... (என்ன கொடுமை இது!!!)

Comments

யாருப்பா அது

”நான் தேடும் செவ்வந்திப் பூ இது ”

பாடலை டெடிக்கேட் செய்வது ???
ஆதவா?? ஏற்கனவே பதில் சொல்லிட்டீங்களா ?? நான் பாக்கல.. இரிங்க பாத்துட்டு வர்றேன்..
Suresh said…
வாழ்த்துகள் மச்சான்
ஆதவா said…
ஹாஹா..... ரசித்தேன் கடைக்குட்டி!

ஆமாம் முன்னமே பதில் சொல்லிட்டேன்....
ஆதவா said…
நன்றி மாப்ள சுரேஷ்
Suresh said…
பொதுவாவே கொரியா மக்கள் பொண்ணுங்க எல்லரும் ரொம்ப நல்லவங்க

நான் சியோள் சென்ற போது இரவு ஒரு மணிக்கும் சாலையில் செல்லும் பெண்கள் தைரியமாக நடந்தை பர்த்தேன்..

பலரும் நட்புடன் அதுவும் இந்தியர்கள் என்றால் மிகவும் பாசமாக நடத்தினார்கள்

kamsamnida என்றால் thankyou என்றுஅர்த்தம்.. கம்ஸாமிதா :-)
Suresh said…
ஆமா நீ ரொம்ப கூச்சம்னு நினைத்தேன்..

ஹம்
Suresh said…
கொரிய மாமாவும் (இனிமே மாமா ) நடத்து நடத்து
Suresh said…
அவளிடம் பேசும் பொழுது என் ஆங்கிலம் தடுமாறியது.

உன் ஆங்கிலம் மட்டும் இல்லை கொரியா மக்களும் பொதுவாக கொரியா மொழியில் தான் பேசுவார்கள் ஒரு சிலர் தவிர அவர்களின் ஆங்கிலம் தடுமாறும்
//டி (t) என்பதை தி என்கிறார்கள்//
வணக்கம் ஆதவா, சீனர்கள், ஜப்பானியர்கள் கூட "T" டி யை தி என்றே சொல்லுவார்கள். அவர்கள் நாக்கில் டி சத்தம் வராது...

என்ன கொடுமை ஆதவா பேரை கேட்களையா?...... நல்ல சுவாரிசமான ஒரு அனுபவம்...
Suresh said…
//அதைச் சொல்லமுடியாது என்று சொல்லி சிரித்துவிட்டேன். அவளும் சிரித்தாள்.. (அடடா!!!)//

டைமிங்க் ;) ஹீ ஹீ
Suresh said…
//செல்லும்பொழுது, நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)

வெளிநாட்டவள் அதிலும் ஒரு பெண்ணின் பாராட்டு..... தித்திக்கும் தேன்....//

ரசியகாரி கொரியாகாரி என்று ஒரே உலக பெண்களின் ரசனைக்குறிய ஆதவா ;) நீ பெரிய ஆளு தான்

நம்ம ஊரு பெண்ணுங்களையும் கண்டுக்கபா கொவித்து கொள்ள போறாங்க
ஆதவா said…
மாப்ள... நான் எங்கையும் போனதில்லை.. ஆனா நமக்கு ஏதாச்சும் இப்படி அமையறதுண்டு...

kamsamnida சுரேஷ்
அது என்னா வாய்ப்புங்கோ
\\கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.\\நமக்கு பிடித்த இடம் இது தான்
\\kamsamnida என்றால் thankyou என்றுஅர்த்தம்.. கம்ஸாமிதா :-)\\


ha ha ha

kab sab hab nitha

this is thankyou in korea ...
( I think so)
வாவ் நல்லா எழுதுறீங்க நண்பா
sakthi said…
அந்தப் பெண், நைஸ் ஷாங் (Nice Song) என்று நான் ரசித்த பாடலை ரசித்தாள்.. (அப்பவே ஆதவன் கவுந்தான்.)

கவுந்தாச்சா குட்

வாழ்த்துக்கள்
sakthi said…
நன்கு சிவந்த முகம், பரந்த நெற்றி, விரிந்த கூந்தல், விலகி நிற்கும் கண்கள், முகத்தோடு சேர்ந்தவாறு சப்பை மூக்கு, சுருக்கமான வாய் ; கொஞ்சம் உதட்டுச் சாயம், வட்ட முகம்.. ஏறத்தாள என்னுடைய உயரம்.. கருப்பு வர்ண டீ சர்ட்டும் நீல வர்ண (Navy ) ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.

வீனஸ் தேவதையோ???
sakthi said…
செல்லும்பொழுது, நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)

வெளிநாட்டவள் அதிலும் ஒரு பெண்ணின் பாராட்டு..... தித்திக்கும் தேன்......

ஹ ஹ ஹ

ரசித்தேன் ஆதவா

அருமை
sakthi said…
மேலேயுள்ள அந்த புகைப்படம் நான் சொன்ன கொரிய பெண் அல்ல.. இச்சம்பவம் நடந்து பல மாதங்களாகிறது , கடைசி வரைக்கும் அவளின் பெயரைக் கேட்கவேயில்லை... (என்ன கொடுமை இது!!!)

ஆதானே என்ன கொடுமை இது ஆதவா
உங்க கம்பெனியிலே வேலை கிடைக்குமா ஆதவா...!
ஆதவா said…
ஆ.ஞானசேகரன் said...
என்ன கொடுமை ஆதவா பேரை கேட்களையா?......

எப்படியும் அம்மணி திரும்பி வராதுன்னு நினைச்சுட்டுத்தான் கேட்கலை!!!!
ஆதவா said…
நட்புடன் ஜமால் said...

அது என்னா வாய்ப்புங்கோ

வாங்க.... ஏதோ நம்மளுக்கு வாய்ச்சது!!! ஹி ஹி
ஆதவா said…
மண்குதிரை said...

வாவ் நல்லா எழுதுறீங்க நண்பா

நல்லா வழியறேன்னு சொல்லுங்க... ஹா ஹா.... நன்றி நண்பரே
ஆதவா said…
sakthi said...
கவுந்தாச்சா குட்
வாழ்த்துக்கள்

என்னங்க மேடம்... இப்படி வாழ்த்து போட்டு கவுத்திட்டீங்க.... அது சும்மா போட்டேன்... ஹாஹாஹா sakthi said...
வீனஸ் தேவதையோ???

இருக்கலாம்... :D
ஆதவா said…
குடந்தை அன்புமணி said...

உங்க கம்பெனியிலே வேலை கிடைக்குமா ஆதவா...!

வாங்க குடந்தை அன்புமணி.. வேலை கிடைக்கும்.. ஆனா நீங்க மட்டும்தான் வேலை செய்யனும்.. பார்ட்டியையும் இந்தமாதிரி கெஸ்டா வரவங்களையும் நானே டீல் பண்ணிக்கிறேன்....

எப்படி???
மிகவும் சுவாரசியமான பதிவு ஆதவன் ரசித்துப் படித்தேன் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கும் தமிழ் சொற்கள் தித்திக்கும் குறும்புகள்...

//செல்லும்பொழுது, நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)//

குறும்பின் உச்சம்...
sakthi said…
பார்ட்டியையும் இந்தமாதிரி கெஸ்டா வரவங்களையும் நானே டீல் பண்ணிக்கிறேன்....

எப்படி???

gud deal


முதல் முதலாய் ஆதவனின்

வழிசல்,குறும்பு etc etc நிறைந்த

பதிவு+ பின்னூட்டங்கள்

வித்தியாசமாய் இருக்கின்றது ஆதவா
நல்ல அனுபவமா இருக்கே ஆதவா!!!

எழுத்துல சுவாரசியப் படுத்திட்டீங்க.
Unknown said…
ரசித்தேன்.கடைசியில் ஏதோ சதி இருக்குப்போகிறதோ என்று பயந்தேன்.
பார்த்தால் அனுபவம்.
சுருக் சுண்டல் குருமா...
.
.
.
அதென்னங்க சுருக்?
Anonymous said…
என்ன ஆதவா அப்பாவை விடுங்கன்னு சொல்லிட்டு பொண்ணோட உயரம் நிறம் உடுப்பு...design பண்ணியே சொல்லிடீங்க போங்க...எப்படியோ கவிந்து காலியான ஆதவன் எழுந்து வந்ததில் மகிழ்ச்சியே.....எப்படி ஒரு சம்பவத்தை இப்படி அழகா தொகுத்து வழங்கிடீங்க...புரியுது புரியுது அதான் சொன்னீங்களே ஆதவன் காலின்னு...சுவவையான தொகுப்பு....இளமை ஊஞ்சலாடியது பதிவில்........
அந்த கொரிய மாமாவும் (இனிமே மாமா )
.
.
.
அடப்பாவி!...
அவளின் பெயரைக் கேட்கவேயில்லை...
.
.
.
பேராஆஆஆஆ முக்கியம்?
அடைப்புக்குறிக்குள் இருப்பவை மிகவும் அருமை...
ஆதவா said…
புதியவன் said...
குறும்பின் உச்சம்...

இது வாலிப வயசு. ஹி ஹிஹி

நன்றி புதியவன்.
sakthi said...
முதல் முதலாய் ஆதவனின்

வழிசல்,குறும்பு etc etc நிறைந்த

பதிவு+ பின்னூட்டங்கள்

வித்தியாசமாய் இருக்கின்றது ஆதவா

கொஞ்சம் மாறுதலாய்.... எத்தனை நாளைக்குத்தான் உர்ரென்றே முகத்தை வைத்துக் கொண்டிருப்பது??? ரொம்ப நன்றிங்க சக்தி
ஆ.முத்துராமலிங்கம் said...
எழுத்துல சுவாரசியப் படுத்திட்டீங்க.

எழுத்தே இப்படின்னாக்கா, அனுபவிச்ச எனக்கு எப்படி இருந்திருக்கும்???!!!!!
ஆதவா said…
கே.ரவிஷங்கர் said...

ரசித்தேன்.கடைசியில் ஏதோ சதி இருக்குப்போகிறதோ என்று பயந்தேன்.
பார்த்தால் அனுபவம்.

எனக்கு ஒரு சந்தேகம்... நீங்க எதுக்கு பயந்தீங்க??? :)
நன்றிங்க கே.ரவிஷங்கர்....
reena said...


சுருக் சுண்டல் குருமா...
.
.
.

அதென்னங்க சுருக்?

நீங்க ஒருநாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க, சுருக்குனு குருமா வெச்சுத் தரச்சொல்றேன்.. சாப்பிட்டுட்டு ஆ ஊ ன்னு கத்தக்கூடாது!!! (அவ்ளோ காரம் இருக்கும்.)
ஆதவா said…
தமிழரசி said...

என்ன ஆதவா அப்பாவை விடுங்கன்னு சொல்லிட்டு பொண்ணோட உயரம் நிறம் உடுப்பு...design பண்ணியே சொல்லிடீங்க போங்க...எப்படியோ கவிந்து காலியான ஆதவன் எழுந்து வந்ததில் மகிழ்ச்சியே.....எப்படி ஒரு சம்பவத்தை இப்படி அழகா தொகுத்து வழங்கிடீங்க...புரியுது புரியுது அதான் சொன்னீங்களே ஆதவன் காலின்னு...சுவவையான தொகுப்பு....இளமை ஊஞ்சலாடியது பதிவில்......

வாங்க தமிழரசி... அப்பா முக்கியமல்ல.. பொண்ணுதான் முக்கியம்னு அப்படிச் சொல்லிப்புட்டேன்..... அவரை எப்பவோ நான் மறந்துட்டேன்.. ஹி ஹி
நைய்ய்ஸ் காய் (Nice Guy)

இரண்டு பேருக்குமே .
அன்பு ஆதவா, இப்படித் தான் கடந்து போகிற கணங்களில் கடந்து போகிற மனிதர்கள் எவ்ளோ பேர் இல்லையா, அதுவும் அழகான பெண்கள்.
//தமிழ்நாட்டு சமையலை வேறு நாட்டுப் பெண்ணொருத்தி ருசி பார்க்கிறாள் //


சமையலை மட்டுந்தானே ??

//நைய்ய்ஸ் காய் (Nice Guy) என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.. (என்னையா? இல்லை கத்திரிக்காயையா?)//

இந்த கேள்வியை நீங்க அங்க கேட்டிருக்கணும். ஒரு வேள கொரிய மொழியிலயும் "காய்" நு தான் சொல்வாங்களோ..

//வெளிநாட்டவள் அதிலும் ஒரு பெண்ணின் பாராட்டு..... //

அதென்ன‌ங்க‌ வெளிநாட்ட‌வ‌ர்.."ஒரு பெண்ணின் பாராட்டு .." இதாங்க‌ முக்கிய‌ம்.

சுவார‌ஸிய‌மாக‌ இருந்த‌து.அந்த‌ ப‌ட‌மும் அழ‌கு.
திஸ் கதை.. எனக்கு ஆல்ரெடி தெரியும்.. ஐ நோ.. இருந்தாலும் கேக்க குமால்டிக்கா இருக்கு.. ஓகே ஓகே
ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே....

நமக்கு மட்டும் இதுமாதரி நடக்கவே மாட்டேன்கிதே...

நம்மள வெறுப்பபேத்தவே இப்படி எழுதுவாங்கலோ ?
// கார்த்திகைப் பாண்டியன் said...
திஸ் கதை.. எனக்கு ஆல்ரெடி தெரியும்.. ஐ நோ.. இருந்தாலும் கேக்க குமால்டிக்கா இருக்கு.. ஓகே ஓகே
//

பெரியவருக்கு லொள்ள பாரு லோலாய பாரு
கலக்கலான அனுபவப் பகிர்வு ஆதவா...
நானும் இப்பிடித் தான்..
இலங்கைக்கும் சுற்றுலாப் பிரயாணிகள் அதிகமா வருவாங்கல்ல...
அதிலும் நான் இருப்பது தலைநகரத்தில்..
சொல்லவா வேண்டும்??

சிலவேளைகளில் என்னிடம் வந்து வழி கேட்பார்கள்...
ஆண்களாக இருந்தால் சொல்லிவிடுவேன் எளிதில்..
பெண்களாக இருந்தால், அதிலும் என் வயதாக இருந்தால் சமாளிப்பேன்ல..
எளிதுல சொல்லவே மாட்டேன்..
சுத்தி சுத்தி கடைசில சொல்லி முடிப்பேன்..
:-)

என்ன பண்றது??
எல்லாம் வயசு..
:-)
ஓட்டுப் போட்டாச்சு...
:-)
மீ த 50...

(மன்னிக்கவும்..)
Unknown said…
அழகான பதிவு.சுவாரஸ்யமான நடை.வாழ்த்துக்கள்......
அழகான மழையின் தூரலில் ஆரம்பித்து, புதிய அழகான கொரிய நாட்டு இளம்பெண்ணை மீட் பண்ணி, தனிமையான சூழ்நிலை அமைந்து, அம்மா சமைத்த சாப்பாட்டை சுவைத்து ஒரு காதல் அப்படிங்குற தொடர் இருந்து ஒரு தொடர் காதல் கவிதைகள் (கொரியன் மொழியில்) எங்களுக்கெல்லாம் காணக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டுவிட்டீர் முடிவில்.....

ஆதவா ஒரே இன்டர்நேஷனல் ஃபிகரா மாட்டுதே, மச்சமையா உமக்கு

சொல்லப்பட்ட விதம் அருமை, ரசித்தேன் முழுவது, படிக்கயில் ஒரு நெகிழ்ச்சி அடுத்து என்னா என்று, ஏமாற்றம் கடைசியில்...

தொடரும்.... வாழ்த்துக்கள்
//நன்கு சிவந்த முகம், பரந்த நெற்றி, விரிந்த கூந்தல், விலகி நிற்கும் கண்கள், முகத்தோடு சேர்ந்தவாறு சப்பை மூக்கு, சுருக்கமான வாய் ; கொஞ்சம் உதட்டுச் சாயம், வட்ட முகம்.. ஏறத்தாள என்னுடைய உயரம்.. கருப்பு வர்ண டீ சர்ட்டும் நீல வர்ண (Navy ) ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.
//
ரசித்தேன் இந்த வர்ணனையை


//கழுத்தில் மூக்கில் கையில் என்று எந்த இடத்திலேயும் உலோக ஆக்கிரமிப்பு இல்லை.
//

இது புது வார்த்தை பிரயோகம்
ஆதவா இதை ஏற்கெனவே படித்த போல் இருக்கிறதே?
:))))))))))))))))))))))))
யோவ்.. உமக்கு என்ன எல்லாம் வெளி நட்டு பெண்ணா சிக்குது, நான் எல்லாம் மண்ட காஞ்சு பொய் கிடக்கேன்.. எல்லாம் ஒரு வயத்த எரிச்சல் தான்
உயிரோசையில் 'வெறுமையின் நிழல்' படித்தேன் அருமையான கவிதை.
கிடைத்த சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டு கதை எழுதும் மடையனைக் கண்டேன். ..அடுத்தமுறை அந்த கொரியப் பெண்ணை எப்போ காணப் போகிறீர்.
ஹ ஹ ஹா
Anonymous said…
அப்போம் ரஷ்யா....இப்போம் கொரியாவா....ம்..ம். நடத்துங்கப்பா.
கொரிய பொண்ணுங்க முகமெல்லாம் ஒரே மாதிரி இருக்கும்!
எப்படிக்கண்டுபிடிப்பது?
ஆதவா said…
ச.முத்துவேல் said...
நைய்ய்ஸ் காய் (Nice Guy)
இரண்டு பேருக்குமே

வாங்க முத்துவேல்.... நீங்களுமா??
yathra said...
அன்பு ஆதவா, இப்படித் தான் கடந்து போகிற கணங்களில் கடந்து போகிற மனிதர்கள் எவ்ளோ பேர் இல்லையா, அதுவும் அழகான பெண்கள்.

ஆமாம் யாத்ரா.... அதில் யாராவது சிலர் இப்படி கண்ணுக்கு விருந்து வைப்பதுண்டு!!!!
ஆதவா said…
அ.மு.செய்யது said...
சுவார‌ஸிய‌மாக‌ இருந்த‌து.அந்த‌ ப‌ட‌மும் அழ‌கு.

நன்றிங்க அ.மு.செய்யது. கொரிய மொழியில என் பெயரை எழுதச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா வந்த பார்ட்டிகிட்ட கண்டதெல்லாம் பேசக்கூடாதுன்னு மெளனமா இருந்துட்டேன்....
கார்த்திகைப் பாண்டியன் said..
கேக்க குமால்டிக்கா இருக்கு..

என்ன கொடுமை இது.... அது சரிங்க, அதென்ன குமால்டிக்??? என்னை நீங்க திட்டலையே??? :)
ஆதவா said…
பித்தன் said...
ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே....

நமக்கு மட்டும் இதுமாதரி நடக்கவே மாட்டேன்கிதே...

நம்மள வெறுப்பபேத்தவே இப்படி எழுதுவாங்கலோ ?

சரி சரி.... நீங்க ரொம்ப பொறாமைப் படறது தெரியறது..... ஒரு பெரிய பெருமூச்சு விட்டுக்குங்க.... ஹாஹா..
வேத்தியன் said...
சிலவேளைகளில் என்னிடம் வந்து வழி கேட்பார்கள்...
ஆண்களாக இருந்தால் சொல்லிவிடுவேன் எளிதில்..
பெண்களாக இருந்தால், அதிலும் என் வயதாக இருந்தால் சமாளிப்பேன்ல..
எளிதுல சொல்லவே மாட்டேன்..
சுத்தி சுத்தி கடைசில சொல்லி முடிப்பேன்..
:-)

என்ன பண்றது??
எல்லாம் வயசு..

என்னை விடவும் நீங்க ஜொள்ளரா இருப்பீங்க போலிருக்கே..... நீங்க சொன்னதேதான்.... வயசுதானே எல்லாத்துக்கும் காரணம்!!!!
ஆதவா said…
anto said...
அழகான பதிவு.சுவாரஸ்யமான நடை.வாழ்த்துக்கள்.....

வாங்க அண்டோ... புதுவரவுக்கு வரவேற்புகள்!!!! நன்றி!!!!
அபுஅஃப்ஸர் said...
ஆதவா ஒரே இன்டர்நேஷனல் ஃபிகரா மாட்டுதே, மச்சமையா உமக்கு

நீங்க வேற அஃப்ஸர்.... ரஷ்யாகாரி மனசு வரைக்கும் வந்தா... அது கதையே வேற.. அது நடந்து நாலஞ்சு வருஷத்துக்கு அப்பறமா ஒரு கொரியா காரிய சந்திச்சு பேசியிருக்கேன்..... எவ்வளவு கால இடைவெளி பாருங்க.... ம்ஹூம்....
சொல்லரசன் said...
ஆதவா இதை ஏற்கெனவே படித்த போல் இருக்கிறதே?

உங்க கிட்ட நான் சொன்னேன்..... நன்றிங்க சொல்லரசன்...
நன்றிங்க ரிஷான்!!!!
நசரேயன்...
ஆ.முத்துராமலிங்கம்....
தமிழிச்சி.... புதியவரவுக்கு வரவேற்புகள்....
கடையம் ஆனந்த்......

தேவன் சார்.. எனக்கு இப்ப சுத்த்மாவே அந்த பொண்ணோட ஞாபகம் இல்லை... இப்ப நேர்ல கூட்டிட்டு வந்தா கூட எனக்கு அடையாளம் தெரியாது!!!!
அருமையாக இருக்கிறது .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
Rajeswari said…
ரொம்ப கொரிய பொண்ண மிஸ் பண்ணுறீங்க போலா....ஏக்கம் எழுத்துக்கள்ல தெரியுது.

பதிவு லைவ்லியா இருந்தது .வாழ்த்துக்கள்
Joe said…
All the best ;-)

Popular Posts