அப்பா - மிளகு கவிகள்
எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!
XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx
அவரிடமிருந்து அதட்டல்
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?
XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx
தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்
XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx
சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.
XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx
குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.
Comments
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று//
ம்ம்ம்.. நல்லா இருக்கு ஆதவா..
குறையை கண்டு இருந்தால் பயம் தான்....
எச்சரிக்கையாய் அக்கறைத்தாங்க....
இதாங்க உண்மை.....
மனித இயல்பு........
ஏனோ நீங்க அடித்தது மட்டும் வலிக்கிறது...(கவிதையில் தான்)
ஆனா குழந்தை மனதின் வலியும் இதில் உணர்த்தியிருப்பது தான் சிறப்பு....... நல்லாயிருக்கு ஆதவன்.....
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.
ஏன் அப்படி ஆதவா???
கடையி கவிதை சட்டென்று அறைகின்றது. மற்றவைகளை இன்னொரு முறை படித்து விட்டு பிறகு வருகிறேன்.
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்
\\
சிறந்த மகனாக தொடங்கி ...
முடிவில் ...
இதயத்தில் அடித்தது ஏனோ வலிக்கின்றது
mankuthiray
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?//
இது அக்கறை கலந்த எச்சரிக்கை...
அப்பா மிளகுக் கவிகளில் கடைசிக் கவிதை மிளகு போலவே காரமாக இருக்கு ஆதவன்...
இவை அனைத்துமே (என்னுடைய)ஒரு கதையின் வழியே வெவ்வேறு காலகட்டங்களில் பிறந்தவை. ஒரு தந்தை மகன் உறவில் ஏற்படும் விரிசல்களும் புரிதல்களும் நிறைந்த குழப்பத்தையே ஓரளவு கவிதையாக்கியிருக்கிறேன்.
இறுதி கவிதையானது மகன் தன்னையே உணர்ந்து கொண்டதைக் குறிக்கிறது. கவிதையில் காலம் மிக முக்கியம்... அக்கவிதையை இறந்த காலத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதயத்தில் அடித்து பழிதீர்த்து விட்டான்.. அதற்கு அடுத்தது இன்னும் தந்தையை புரிந்து கொண்டானா இல்லை அப்படியே தொடருகிறானா என்பது வாசகர் யூகம்.
இக்கவிதைகளைத் தனித்தனியே படித்துப் பாருங்கள்.... வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்...
அன்புடன்
ஆதவா
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்//
நல்லா இருக்கு...
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.//
வித்தியாசமாக இருக்கு ஆதவா...
ரசித்தேன்...
ம்ம்ம் இன்று சரியாக இருக்கின்றது
தங்களின் உதவிக்கு நன்றி
இராஜராஜன்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்//
சதை என்ற கொச்சை தமிழ் சொல்லை "தசை" என்று மாற்றி பொருத்தியிருப்பது,
வார்த்தைகளை எவ்வாறு கவனமாக கையாள்கிறீர்கள் என்பதற்கு தக்க சான்று.
//குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.//
இந்த வரிகள் என் கன்னத்தில் அறைந்து விட்டதாய் உணர்ந்தேன்.
ஃபேண்டஸியிக்கு மட்டுந்தான் ஆதவன் என்ற கூற்றை தவிடுபொடியாக்கிய கவிதை.
யதார்த்தமும் உங்களுக்கு நன்றாகவே வருகிறது.
அசத்தல் டச் !!!!!!!!!!
குறிப்பிட்டு சொல்ல விரும்ப வில்லை..அனைத்து வரிகளும் நன்றாக உள்ளது...
மீறுகிற குணம் இயல்பாகவே மனிதருக்குள் இருக்கிறது. அதிலும், தந்தை, மகன் உறவில் இது அதிகமாகவே இருக்கிறது.
எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!//
-:)
அடுத்த கவிதை அப்பாவின் குனங்களிலிருந்து விலகும் அல்லது அவரது சுபவங்களில் பயம் கொள்ளும் ஒரு மகனின் பயமாக இருக்கின்றது.
இரண்டாவது கவிதையில் நீங்கள் கேட்கும் கேள்வியன் பதில் இரண்டுமேதான். அக்கரையான அதட்டலில் அவரின் அனுபவமும் கலந்திருக்கும்
மூன்றாவது உண்ர்ச்சி.
இது எல்லோருக்கும் உண்டாவது. மிக எதார்த்தமாக சின்னதா அழகா சொல்லி இருக்கீங்க,
அப்பா யாருடனோ அல்லது நம்மிடமோ வாக்குவாதம் ஏற்படும் போது நம் மனம் அப்பவின் மனதிலேயே குவிந்து நிற்கும்.
நான்காவது... வருங்காலத்தைப் பற்றிய பயம். சிறிய வார்த்தைக்குள் அடைத்திருக்கின்றீர்கள்.
ஐந்தாவது.... இதற்கு முன்பே சொல்லி விட்டனேன்.
தலைப்பு, புகைப்படம், கவிதைகள் என எல்லாமெ நல்லாருக்கு.
எனக்கு நெருக்கமான உணர்வுகளைத் தருகிறது இக் கவிதைகள்.
வனம்,
அ.மு.செய்யது. (மிக்க நன்றிங்க தல.)
நன்றிங்க வழிப்போக்கன்,
மாதவராஜ்,
அண்டோ... (வரவுக்கு வரவேற்புகள்)
பித்தன்..
அத்திரி, அன்பு, சென்ஷி, தமிழர்ஸ்
நன்றிங்க ச.முத்துவேல்... யாத்ரா, தமிழ்பறவை..
<<<<< அனைவருக்கும் எனது நன்றி >>>>>
தேவா.
ரொம்ப அருமை...
நன்றிங்க ராஜேஷ்வரி மேடம்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்""
அருமை உங்களின் தந்தையின் மனதை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்.