தமிழின் நிலை?

இந்த படங்களை நன்கு பார்த்துவிட்டு சொல்லுங்கள், இறந்தவர் பிரபாகரன் தானா அல்லது வேறு யாராவது புலியா?




இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனைக் கொன்று விட்டதாகக் கூறி வருகிறது. இத்தகவல் உண்மையா பொய்யா என்று கூறிக் கொண்டு அழுவதைக் காட்டிலும் அடுத்த என்ன நிகழும் என்பதில்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.

பிரபாகரன் உண்மையாகவே இறந்ததாகவே இருக்கட்டும்... ஈழமக்களின் மீதான கொடூரத் தாக்குதல் இனி நிறுத்தப்படுமா? அல்லது மறைமுகமாக செயல்படுத்தப்படுமா?

வட இலங்கை இனி எப்படி இருக்கப் போகிறது? அங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கதி இனியென்ன?

விடுதலைப்புலிகளின் ஆயுத தளபாடங்கள் எங்கே போயின? அதை ஏன் இலங்கை அரசு காட்ட மறுக்கிறது?

இப்படி பல கேள்விகள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும் தமிழினம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும். 

Comments

\\பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும் தமிழினம் இலங்கையில் எப்படி இருக்கும்\\


தமிழினத்தின் நிலை குறித்தே பிரபாகரனில் நிலையில் கவனம் செல்கின்றது ...


(நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும்...)
இலங்கையில் சிங்களவர்களோடு,ஈழத்தமிழர்களுக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்த,
மத்திய அரசை கோருவோம் என தமிழக அரசு காலமெல்லாம் தண்ணீர் ஊற்ற முயலும்.

பிரபாகரன் மடிந்தாலும் தமீழிழ போராட்டம் தொடரும் என ஒரு மணி நேரம் பதாகைகளையேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, பிறகு ஐ.பி.எல் பார்க்க போய் விடுவார்கள் நம்மவர்கள்.

அப்புறம் என்ன ?? நாலஞ்சு கவிதைகள்..பதிவுகள்..தீக்குளிப்புகள்.

தமிழினம், அழிந்து வரும் உயிரின வரிசையில் அனிமல் பிளானட்டில் பிறகு காட்டப்படும்.
/தமிழினம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும்./

இக் கேள்வியேதான் மீள்கின்றது.
இனியான இலங்கை எப்படி தமிழர்களை கையாளுகின்றது என்பது
நம்பிக்கை தருமா? பதட்டத்துடன்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு. நல்லதே நடக்க வேண்டுவோம்.
திசைகளற்று, நம்பிக்கைகளற்று, நிற்கும், அந்த மக்களின் கதி துடிக்க வைக்கிறது...
இலங்கை அரசு தமிழ் மக்களையும் சமமாக நடத்த வேண்டும்.. அவர்கள் வாழ்க்கைக்கான உத்திரவாதத்தை தர வேண்டும்.. நடக்குமா?
நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!
Anbu said…
இலங்கை அரசு தமிழ் மக்களையும் சமமாக நடத்த வேண்டும்.
எனக்கும் இதே கேள்விகள்தான் ஆதவா, இதைப்பற்றி நானும் எழுதவேண்டும் என்று இருக்கின்றேன்.. நேரம் அமையவில்லை
பழைய வெறுப்புகளை சிங்கள அரசாங்கம் மறந்து தமிழர்களுக்கு ஜனநாயக முறையில் சமயுரிமை கொடுத்தால் மீதமுள்ள தமிழர்கள் மனதில் மறுமலர்ச்சி மலறும். இதுக்காகதான் இத்துனைப்போராட்டங்களும், உயிரிழப்பும், உடமையிழப்பும். அவர்களின் மறுவாழ்வு சீராக பிரார்த்திப்போம்
நல்லதே நடக்கும். நடக்கனும். நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருப்போம்!!
இனியாவது அம்மக்களுக்கு அமைதியான வாழ்வு கிடைத்தால் நாமும் மன நிம்மதியடையளாம்...
உமா said…
அது நடக்கவில்லை என்றால் தூதரக தொடர்பை துண்டித்து இராணுவரீதியாக இந்தியா, தமிழர்களைக்காப்பாற்ற வேண்டும்.பாக்கிஸ்தானை பிரிக்க உதவிய அதே கங்கிரஸ் அரசு இலங்கையில் தலையிட முடியாது எனக்கூறமுடியாது. மத்திய அரசை மாநில அரசுதான் நிர்பந்திக்க வேண்டும். மாநில அரசை நாம் தான் நிர்பந்திக்க வேண்டும். காலம் வந்தால் செய்யும் துணிவை பெருவோம், நம்பிக்கையுடன்.
ஆதவா அந்த புகைப்படங்களை பார்த்தால் உண்மை போல இல்லை... என்னவோ நடக்கிறது
1989 இல் முதலாவதாக இந்தியப்படைகள் தலைவர் பிரபாகரனைக் கொன்றனர். அவர் மீண்டும் 1990இல் முத்தமிழ் விழா மேடையில் சாவகச்சேரியில் தோன்றினார். பின்னரும் பலதரம் எங்கள் தலைவனை இந்திய இரசும் இலங்கையரசும் கொன்றனர். இறுதியில் எங்கள் தலைவன் வந்தார். இப்படி கொலைசெய்தல் புழுகு அரசு இலங்கைக்கு இது புதுமையில்லை.

இறுதியாக சுனாமிப்பேரலை தலைவர் பிரபாகரன் அவர்களை இழுத்துப்போய் மீளவும் கொண்டு வந்துவிட்டது. அதுபோல எங்கள் தலைவன் நலமுடன் மீளவும் எங்கள் தேசம்காண்பார். யாரும் தற்போதைய ஏமாற்று நாடகத்தில் குழப்பமடையத் தேவையில்லை.

சாந்தி
உமா said…
ஆதவா http://veltharma.blogspot.com/

இந்த பிளாக்கைப் பாருங்கள்.
Anonymous said…
Intha Ulagathil Suriyanai Thottavanum illai.
Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )
போர் நிறைவுற்றுவிட்டது என்ற காரணத்தைக்காட்டி, இந்தியா எல்லா அகதி முகாம்களையும் மூடிவிட உத்தரவிட்டு, இலங்கைக்கே ஓடிவிடுங்கள் என்று சொல்லுமோ என்ற கவலையும் உள்ளது.
அழுவதைக் காட்டிலும் அடுத்த என்ன நிகழும் என்பதில்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.//

சரியாச்சொன்னீங்க....
இந்த கேள்விகள் எனக்குள்ளும் இருக்கிறது


நல்லதே நடக்க வேண்டும்
என்ற நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும்
ஈழத்தமிழினம்.....................??????????????????///
Rajeswari said…
ஒரே குழப்பமா இருக்குங்க..எப்போ உண்மையான செய்தி வருமோ..
இன்று இரவு 10.30 மணிக்கு மறக்காமல் ஜீ டிவி பாருங்கள்
Rajeswari said…
ஜீ தமிழ் டிவி மற்றும் ராஜ் டிவி
\\திசைகளற்று, நம்பிக்கைகளற்று, நிற்கும், அந்த மக்களின் கதி துடிக்க வைக்கிறது\\

:(
விடியல் விரைவில் வரும் என நம்புவோம்
Prabhu said…
To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan...... wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body....big and small.
எனக்கு இது இலங்கை அரசின் நாடகம் என்றே தோன்றுகிறது
தங்கள் பதிவில் வெளியிட்டுள்ள இரண்டு படங்களும் அருமை. உலக சமுதாயம் சிந்திக்கட்டும். இலங்கை பிரபாகரன் மரணத்தில் எவ்வளவு பொய் செய்தியை வெளியிடுகிறது என்பதை நாம் உணரவேண்டும். உண்மையை அறிய உங்கள் பதிவு உதவியமைக்கு நன்றி.....நன்றி.....
Suresh said…
அவரு எல்லாம் கண்டிப்பா இருப்பாரு மச்சி அதுல எல்லாம் துளிக்கூட சந்தேகம் வேண்டாம்