தமிழின் நிலை?
இந்த படங்களை நன்கு பார்த்துவிட்டு சொல்லுங்கள், இறந்தவர் பிரபாகரன் தானா அல்லது வேறு யாராவது புலியா?
இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனைக் கொன்று விட்டதாகக் கூறி வருகிறது. இத்தகவல் உண்மையா பொய்யா என்று கூறிக் கொண்டு அழுவதைக் காட்டிலும் அடுத்த என்ன நிகழும் என்பதில்தான் ஒட்டுமொத்த தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.
பிரபாகரன் உண்மையாகவே இறந்ததாகவே இருக்கட்டும்... ஈழமக்களின் மீதான கொடூரத் தாக்குதல் இனி நிறுத்தப்படுமா? அல்லது மறைமுகமாக செயல்படுத்தப்படுமா?
வட இலங்கை இனி எப்படி இருக்கப் போகிறது? அங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கதி இனியென்ன?
விடுதலைப்புலிகளின் ஆயுத தளபாடங்கள் எங்கே போயின? அதை ஏன் இலங்கை அரசு காட்ட மறுக்கிறது?
இப்படி பல கேள்விகள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும் தமிழினம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும்.
Comments
தமிழினத்தின் நிலை குறித்தே பிரபாகரனில் நிலையில் கவனம் செல்கின்றது ...
(நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும்...)
மத்திய அரசை கோருவோம் என தமிழக அரசு காலமெல்லாம் தண்ணீர் ஊற்ற முயலும்.
பிரபாகரன் மடிந்தாலும் தமீழிழ போராட்டம் தொடரும் என ஒரு மணி நேரம் பதாகைகளையேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, பிறகு ஐ.பி.எல் பார்க்க போய் விடுவார்கள் நம்மவர்கள்.
அப்புறம் என்ன ?? நாலஞ்சு கவிதைகள்..பதிவுகள்..தீக்குளிப்புகள்.
தமிழினம், அழிந்து வரும் உயிரின வரிசையில் அனிமல் பிளானட்டில் பிறகு காட்டப்படும்.
இக் கேள்வியேதான் மீள்கின்றது.
இனியான இலங்கை எப்படி தமிழர்களை கையாளுகின்றது என்பது
நம்பிக்கை தருமா? பதட்டத்துடன்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு. நல்லதே நடக்க வேண்டுவோம்.
இறுதியாக சுனாமிப்பேரலை தலைவர் பிரபாகரன் அவர்களை இழுத்துப்போய் மீளவும் கொண்டு வந்துவிட்டது. அதுபோல எங்கள் தலைவன் நலமுடன் மீளவும் எங்கள் தேசம்காண்பார். யாரும் தற்போதைய ஏமாற்று நாடகத்தில் குழப்பமடையத் தேவையில்லை.
சாந்தி
இந்த பிளாக்கைப் பாருங்கள்.
Prabakaranai Suttavanum illai.
( Nile Raja )
சரியாச்சொன்னீங்க....
நல்லதே நடக்க வேண்டும்
என்ற நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும்
இன்று இரவு 10.30 மணிக்கு மறக்காமல் ஜீ டிவி பாருங்கள்
:(