இருதாய்கள்



என் தாயொரு தடாகத் தாமரை
வாழ்விலே முற்றிலும் மூழ்காதவள்
மூழ்கினும் தன்மை மாறாதவள்
எனக்கு உடன் பிறக்க வழியின்றி
உயிர் சுமக்கா
உடலைக் கொண்டவள்

பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்
வாழ்வோவியத்தின்
வேண்டாத வர்ணங்களாய்
எண்ணிக் கொண்டிருப்பவள்

அன்றொருநாள்
கட்டுக் கடங்காத உண்மை
வெடித்த போது உணர்ந்துகொண்டேன்

எனக்கு மட்டும் இருதாய்கள்

கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்

---------------------------------------
வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்

தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க

Comments

மீ த பர்ஷ்ட்டு !!!
கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்//

எனக்கு பிடித்திருந்தது...

அழகான வரிகள்.
நல்ல சிந்தனை.
வாழ்த்துகள்...
வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்//

என்னால் முடிந்த உதவியை செய்தேன்...

வாக்களித்து விட்டேன்...
அப்ப... நான்தான் இரண்டாவது!!!
வித்தியாமான சிந்தனைக்கு நீங்க
எப்போதும் தனித்தே வருகின்றீர்கள் ஆதவன். கவிதையின் வரிகள் புது வடிவம் கொண்டு இருக்கின்றது. கடைசி வரிகளில் கவிதையின் கரு உடைத்தது அருமை.

நல்லா இருக்கு ஆதவா!!

-*-*-*-*-*-
உங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.
ரொம்ப சிம்பிளான கவிதை ஆதவா.. இன்னும் கொஞ்சம் நீட்டி சொல்லி இருக்கலாம்..
Rajeswari said…
கடைசி பத்தி அருமை.நல்ல கவிதை

-*-*-*-*-*-
//ஆ.முத்துராமலிங்கம் said...
உங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.//

அப்படியா ஆதவா?? என்ன ஆச்சு. உடம்ப பார்த்துக்குங்க
மீண்டும் மீண்டும் படிக்கின்றேன் ஆதவா!
ரொம்ப நல்லாயிருக்கு
எளிமையான வார்த்தைகளில் அருமையாக
புனையப்பட்டிருகிறது ஆதவன் கவிதை
கடைசி பத்தியில் கவிதையின்
முழு கருத்தும் வெளிப்படுகிறது...
நல்லா இருக்கு ஆதவா. நண்பர் முத்துவேலும் ஒரு அம்மா கவிதை எழுதியிருந்தார். ரசித்தேன்.
sakthi said…
அருமை ஆதவா
மிக மிக அருமை
வார்த்தைகளில் நல்ல அழுத்தம்
அழகான வித்தியாசமான படைப்பு
வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு ஆதவா
எங்கேயோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து பூகப்பத்தில் வெடிப்பதான் கவிதைவரிகளில் முடித்திருக்கிறீர்.. என்றும்ப்போல் ரொம்ப நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள்

இப்போ உடம்பு எப்படி இருக்கிறது.. டேக் கேர்
அழகு ஆதவா....
அழகு ஆதவா....
கவிதை அழகான வார்த்தைப் பின்னல்களோடு எளிமையாய் இருக்கிறது.
உடல்நிலை சரியில்லாததால் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று கார்த்தி எழுதியிருந்தார். என்னாச்சு? உடம்பை பார்த்துக்கோங்க.
நீங்க எழுதின கவிதையிலே இதுதான் என்னோட ஃபேவரைட்டா இருக்கும்னு நினைக்கிறேன்.

அந்த வேண்டாத வர்ணங்கள் மிகவும் அருமை.

ரொம்ப‌ சிர‌ம‌ம் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிற‌து..
Unknown said…
நல்லா இருக்கு.கவித்துவம் இருக்கு.
நல்லா இருக்கு ஆதவா.
கவிதை நல்லா இருக்கு ஆதவா.
Anonymous said…
உடம்பு எப்படி இருக்கு!
கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்//

ஆதவா கொல்லுங்க!!
ஆதவாவின் கவிதைகள் தனி!!
ஆதவா!!
காய்ச்சல் ஒக்கேயா?
ஆதவா said…
அனைவருக்கும் என் நன்றி.... உடல்நிலை இப்பொழுது சரியாகிவிட்டது. வெறும் காய்ச்சல்தான். வீட்டு விஷேஷத்திற்கு ஓடியாடி திரிந்ததில் வந்திருக்கவேண்டும்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.... நன்றி மக்களே!!

அனைவருக்கும் மனமாழ்ந்த நன்றி!!!
நல்ல கவிதை ஆதவா !