இருதாய்கள்
என் தாயொரு தடாகத் தாமரை
வாழ்விலே முற்றிலும் மூழ்காதவள்
மூழ்கினும் தன்மை மாறாதவள்
எனக்கு உடன் பிறக்க வழியின்றி
உயிர் சுமக்கா
உடலைக் கொண்டவள்
பால் சுரக்கா முலைகளும்
வரி படறா வயிறும்
வாழ்வோவியத்தின்
வேண்டாத வர்ணங்களாய்
எண்ணிக் கொண்டிருப்பவள்
அன்றொருநாள்
கட்டுக் கடங்காத உண்மை
வெடித்த போது உணர்ந்துகொண்டேன்
எனக்கு மட்டும் இருதாய்கள்
கைபடாத பத்தினியாய்
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்
---------------------------------------
வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்
தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க
Comments
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்//
எனக்கு பிடித்திருந்தது...
அழகான வரிகள்.
நல்ல சிந்தனை.
வாழ்த்துகள்...
என்னால் முடிந்த உதவியை செய்தேன்...
வாக்களித்து விட்டேன்...
வித்தியாமான சிந்தனைக்கு நீங்க
எப்போதும் தனித்தே வருகின்றீர்கள் ஆதவன். கவிதையின் வரிகள் புது வடிவம் கொண்டு இருக்கின்றது. கடைசி வரிகளில் கவிதையின் கரு உடைத்தது அருமை.
நல்லா இருக்கு ஆதவா!!
-*-*-*-*-*-
உங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.
-*-*-*-*-*-
//ஆ.முத்துராமலிங்கம் said...
உங்கள் உம்புக்கு சரியில்லைனு கேள்விப் பட்டேன் உடம்ப பார்த்துக்குங்க.//
அப்படியா ஆதவா?? என்ன ஆச்சு. உடம்ப பார்த்துக்குங்க
புனையப்பட்டிருகிறது ஆதவன் கவிதை
கடைசி பத்தியில் கவிதையின்
முழு கருத்தும் வெளிப்படுகிறது...
மிக மிக அருமை
வார்த்தைகளில் நல்ல அழுத்தம்
அழகான வித்தியாசமான படைப்பு
எங்கேயோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து பூகப்பத்தில் வெடிப்பதான் கவிதைவரிகளில் முடித்திருக்கிறீர்.. என்றும்ப்போல் ரொம்ப நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள்
இப்போ உடம்பு எப்படி இருக்கிறது.. டேக் கேர்
உடல்நிலை சரியில்லாததால் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று கார்த்தி எழுதியிருந்தார். என்னாச்சு? உடம்பை பார்த்துக்கோங்க.
அந்த வேண்டாத வர்ணங்கள் மிகவும் அருமை.
ரொம்ப சிரமம் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறது..
பெற்றெடுத்தவளும்
எனக்காகவே வாழும்
வளர்த்தெடுத்தவளும்//
ஆதவா கொல்லுங்க!!
காய்ச்சல் ஒக்கேயா?
உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.... நன்றி மக்களே!!
அனைவருக்கும் மனமாழ்ந்த நன்றி!!!