ரஷ்யாகாரியோடு காதல்.. பாகம் 2

நடாஷாவும் அவளது அம்மாவும்

எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!

தொலைபேசி எண்ணை மீண்டும் ஒருமுறை சரி பார்த்தேன் ஆமாம்.. அது சென்னை எண்தான். என்னைத் தவிர வேறு யாருக்கும் நடாஷாவைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை. நண்பர்களிடம் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடலெல்லாம் ஒருவித நடுக்கம் உண்டாயிற்று. எங்கள் வீட்டில் இந்த விஷயம் தெரிந்தால் அடி பின்னியெடுத்துவிடுவார்கள்.

சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும் என்று சொன்னாள். அவளது குரலை முதல்முறையாகக் கேட்டாலும் நான் பேசிய முதல் வெளிநாட்டுக் காரி நடாஷாதான் (அந்த குரல் எப்படியிருக்கும் என்று வர்ணிக்க இப்பொழுது நினைவிலில்லை.) எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீ இருக்கும் இடத்திற்கும் எனக்கும் ஐநூறு கி.மீ தூரம்.. ஆதலால் கோவை வந்துவிடு என்று சொன்னேன்.. அதை புரியவைக்க நான் பட்ட பாடு இருக்கே... அதை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அடுத்தநாள் சனிக்கிழமை. எப்போது தொலைப்பேசியை பேசிவிட்டு வைத்தேனோ அப்போதிருந்தே அதன் அருகில் அமர்ந்து கொண்டேன். பின்னே.. என் அம்மா எடுத்துவிட்டால்?? (அம்மாவுக்கு இங்கிலிஷ் தெரியாதுங்கறது வேற விஷயம்) நேராக கோவைக்கு வந்தவள் அங்கேயும் ஒரு விடுதி (ஹோட்டல்) எடுத்து தங்கியிருந்தாள். வந்ததும் எனக்கு போன்.. உங்க ஊருக்கே வந்தாச்சு, சீக்கிரம் வா என்று.. (என்னோட திருமுகத்தைப் பார்க்கணும்னு அவ்வளவு அவசரம்) அடித்துப் பிடித்து பேருந்து ஏறி கோவைக்குக் கிளம்பினேன். அவள் முகவரி கொடுத்திருந்த அதே ஹோட்டலுக்கு..

மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே... என்னை ஏமாற்றிவிட்டான் என்று இவள் போலிஸில் புகார் கொடுத்துவிட்டால்??

அந்த விடுதியில் வரவேற்பாளினியிடம், நடாஷா ஃப்ரம் ரஷ்யா என்று விசாரித்து அந்த அறைக்குச் சென்றேன்.... நண்பர்களே... நீங்கள் அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனக்கு அப்ப்டியொன்றும் பெரிய வயதில்லை. பக்குவமும் இல்லை.. அறையைத் திறந்தாள்...

எனக்காகவே காத்திருந்தவளைப் போன்று என்னை அடையாளம் கண்டு கொண்டாள். எனக்கோ பெருத்த சங்கடம்.. ஒரே அறை, இளைஞன் இளைஞி யாராவது தவறாக எண்ணுவார்கள் என்று... சரி, வந்தது வந்துவிட்டோம்... பேசிவிடுவோம்.. நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள். முகத்தில் சிறு சிறு வெடிப்புகள்.. என் கண்ணுக்கு நல்ல அழகான பெண்ணாகத்தான் தெரிந்தாள். என்னை வரவேற்த்தாள் (அவர்களது பாஷையில்) மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினாள். மொழியை லாவகமாக பயன்படுத்துவதைக் கண்டு அரண்டு போய்விட்டேன். ஆனால், நிறைய ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன். இவள் பேசுகிறமாதிரி ஆங்கில வேறு எவரும் பேசியதில்லை.... அவள் பேசியதில் 60 சதம் எனக்குப் புரியவே இல்லை.

அப்படியும் இப்படியும் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிதான் கேட்டுக் கொண்டாள். (அதுமட்டும் புரிஞ்சது!!) எனக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது... ஏதோ கேஸ்ல என்னை மாட்டிவிட்டு சென்றுவிடுவாளோ என்று மனம் அடித்துக் கொண்டது. சரி... ஏதாவது சொல்லணுமே...

உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்... (நீங்க நினைக்கறமாதிரி இந்த இடத்தில டூயட் இல்லை!!ஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டு!!! 

இப்பொழுதே விடுதியிலிருந்து என் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள்.... ஆஹா... வெச்சுட்டாய்யா ஆப்பு என்று வடிவேல் கணக்காக துள்ளிவிட்டேன்... அப்பறமாக வீடு சரியில்லை, பாதை நொள்ளை என்று சாக்கு, என்னை நம்பு (எல்லாரும் சொல்ற வார்த்தை) என்று சொல்லிவிட்டு அவளைப் பற்றி விசாரித்தேன்..

இந்தியா வந்த காரணத்தைச் சொன்னாள்... ஆனால் எனக்கு என்ன சொன்னாள் என்று ஏறவேயில்லை.. தலையைத் தலையை ஆட்டினேன். பயணிகள் விசாவில் (டூரிஸம்) வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. யாருடன் வந்திருக்கிறாள் என்ற விபரங்கள் அவள் சொன்னாளா இல்லை சொல்லவில்லையா என்று தெரியவில்லை... ஹி ஹி...

சரி... இன்னும் ஏதாவது குண்டு பாக்கியிருக்கிறதா???

நான் தான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை... நீயாவது எங்கள் ஊருக்கு வரலாமே என்று கேட்டுத் தொலைந்தாள்.. நல்லவேளையாக, பாஸ்போர்ட் இல்லை அதனால் வரமுடியாது என்று சொன்னேன்.. பிறகு இந்தியா பற்றியும் பார்க்கவேண்டிய தமிழ்நாட்டுக் கோவில்கள் பற்றியும், முக்கியமாக தாஜ்மகால் பற்றியும் கூறி, நேரம் கிடைத்தால் போய் பார் என்றேன்... இப்படியே அன்று சாயங்காலம் முடிந்துவிட்டது... இனியும் இருப்பது ஆபத்து என்று தோன்றியது. நான் அவளிடம் விடைபெற்றூக் கொண்டு விடிவிடுவென ஊருக்குத் திரும்பினேன்.

அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்... (நம்ம மூஞ்சியப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லியிருப்பா..) எனக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது. அவளிடமிருந்து மடல் போக்குவரத்து குறைந்தது.. நாளடைவில் நானும் சுத்தமாக நிறுத்திக் கொண்டேன்... யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்னோடு உண்டான அவளின் காதல்.........

அதில் விட்டதுதான்... அரட்டை அடித்தே ஐந்து வருடங்கள் ஆகின்றன. 

சரி.... இப்பொழுது சில துளிகள்..

1. அவளது புகைப்படம் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. (முதல் பதிவிலும் இப்பதிவிலும் கொடுத்திருக்கிறேன்)

2. அவள் என்னைவிட வயதில் மூத்தவள்

3. எப்படி, யாருடன் இந்தியா வந்தாள் என்கிற விபரங்கள் எனக்குக் கடைசி வரையிலும் தெரியவில்லை...

4. ஏன் என்னை வேண்டாம் என்று சொன்னாள் என்பதும் புரியவில்லை... 

5. எங்கிருந்தாலும் என்னை முதன்முதலாக காதலித்த நடாஷாவை என்னால் மறக்க முடியவில்லை...

6. துரதிர்ஷ்டவசமாக அவளது கடிதங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தொடர்ந்தாற் போல் நான்கைந்து மாதங்கள் யாஹூவை உபயோகிக்காததால் அவர்கள் அழித்துவிட்டனர்.

7. யாஹூ அக்கவுண்ட் உபயோகப்படுத்தியே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த அனுபவத்தைப் படித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி!!!

Comments

\\நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள்\\

ஹா ஹா ஹா

ஆதவா!

இரு வர்றேன் ...
விடுங்கப்பு... முதல் காதல் தோல்வியில முடிஞ்சாதான், அடுத்த காதலாவது ஸ்ட்ராங்கா இருக்கும். சொர்க்கமே என்றாலும் நம்மூர போலாகுமா?
நல்ல எழுதியிருக்கீங்க ஆதவா!

இப்ப சாட்டிங் தொடங்கி இருக்கனுமே
திடீரென்று ஏன் காதல் வேண்டாம் என்று அந்தப்பெண் சொல்ல வேண்டும் நண்பா.. இதில் ஏதும் சூது இருக்குமோ? முதல் காதலின் வலி இருக்கத்தான் செய்யும்.. நீங்கள் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயலவில்லையா? செய்து பாருப்பா..
/நடாஷா ஃப்ரம் ரஷ்யா /
இந்தளவுக்கு இங்கிலீஷ் பேசத்தெரிஞ்சுருக்கே.பொறாமை எனக்கு.

உள்ளூர் பொண்ணுக்கே வழியில்லாம கிடந்த எங்கமாதிரி ஆளுக்குல்லாம்தான் தெரியும்,மகத்துவம்.
என்னவோ ஒரு சோ(சு)கம், இழையோடுது.
ஆதவா said…
ஜமால்.... முதல் பின்னூக்கத்திற்கு நன்றி தல......

சாட் இப்ப அதிகம் செய்யறதிதல்லை... தெரிஞ்சவங்க மட்டும்தான்... (சாட் பாக்ஸ் சேர்த்திருக்கேன் பாருங்க... ஹி ஹி.. எல்லாம் குசும்புதான்.)
ஆதவா said…
உண்மைட்தான் அன்புமணி.... அது அப்பவே விட்டாச்சு!!!

ஆனா.....

செட்டில் ஆகியிருக்கலாம்..... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்..
ஆதவா said…
நீங்கள் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முயலவில்லையா? செய்து பாருப்பா..

இல்லை.. நண்பரே.. எனக்கு அவள் நீங்கிய பிறகும் பயம் இருந்தது!!! வீண் ரிஸ்க் எடுக்கவேண்டுமா என்று தோணியது!!

நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்..
ஆதவா said…
முத்துவேல் சார்...

எனக்கென்னவோ பெரிய வருத்தம் இல்லை... ஏன்னு தெரியலை... ஆனா, நான் காதலில் தோல்வி அடைந்த கதையும் உண்டு!! அது பெரிய கதை!!! வருத்தங்கள் தோய்ந்த கதை!!
//அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே... என்னை ஏமாற்றிவிட்டான் என்று இவள் போலிஸில் புகார் கொடுத்துவிட்டால்??

//

ஹா ஹா பயம் வயத்தை கிள்ளியதோ
//நல்ல சிவப்பு பொம்மையைப் போன்று இருந்தாள்/

எல்லாம் நல்லாதான் இருப்பாங்க, குளீச்சி எத்தனைநாளாச்சினு கேட்டீங்களா
//என்னை வரவேற்த்தாள் (அவர்களது பாஷையில்) மிகச் சரளமாக ஆங்கிலம் பேசினாள். மொழியை லாவகமாக பயன்படுத்துவதைக் கண்டு அரண்டு போய்விட்டேன்.//

ரஷியர்களுக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
//நீயாவது எங்கள் ஊருக்கு வரலாமே என்று கேட்டுத் தொலைந்தாள்.//

சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களே தல‌
//தமிழ்நாட்டுக் கோவில்கள் பற்றியும், முக்கியமாக தாஜ்மகால் பற்றியும் கூறி, நேரம் கிடைத்தால் போய் பார் என்றேன்... இப்படியே அன்று சாயங்காலம் முடிந்துவிட்டது... /

ஹா ஹா சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார், அதை நீர் தவறாக புரிந்துக்கொண்டு காதல்.. கீதல்... அப்படினு பினாத்திக்கிட்டிருக்கிறீகளே தல.. ஹய்யொ ஹய்யோ....
//ஆதவா கூறியது...
முத்துவேல் சார்...

எனக்கென்னவோ பெரிய வருத்தம் இல்லை... ஏன்னு தெரியலை... ஆனா, நான் காதலில் தோல்வி அடைந்த கதையும் உண்டு!! அது பெரிய கதை!!! வருத்தங்கள் தோய்ந்த கதை!!
///

அப்போ அடுத்தடுத்த பதிவெல்லாம் கலைக்கட்டும் இல்லியா
ஆதவா இந்த காதல் சக்ஸச் ஆகிருந்தா நீங்க ரஷ்யமொழிலே பிளாக் எழுதிக்கிட்டிருப்பீங்க இல்லியா?
உண்மை சில நேரம் கற்பனையைவிட சுவாரசியமாக இருக்கும்...உங்கள் அனுபவமும் அப்படித்தான் ...

//யாருக்கும் தெரியாமல் மறைந்து போனது என்னோடு உண்டான அவளின் காதல்//

ம்ம்ம்...வருத்தம் தெரிகிறது ஆதவன்...
தப்பித்து பிழைத்தீர்கள். வாழ்த்துக்கள்.
Joe said…
நல்லதொரு பதிவு.

முன்னாள் காதலியின் புகைப்படத்தை இணையத்தில் அனைவரின் பார்வைக்கும் வைப்பது அநாகரீகமாக தோன்றுகிறது.
ஆதவா said…
வாங்க அபு!!!!


////ஹா ஹா சுற்றுலாவுக்காக வந்திருக்கிறார், அதை நீர் தவறாக புரிந்துக்கொண்டு காதல்.. கீதல்... அப்படினு பினாத்திக்கிட்டிருக்கிறீகளே தல.. ஹய்யொ ஹய்யோ..../////

எனக்காக ஒரு பெண் சென்னையிலிருந்து கோவை வந்ததே பெரிய விசயம்தானே??? சுற்றுப் பார்க்க மட்டும் வந்திருந்தா....

ம்ம்ம்... மிஸ், மிஸ்ஸாயிடுச்சே!!!! சே!!!
ஆதவா said…
புதியவன்... மாதவராஜ்... ஜோ...

மூவருக்கும் நன்றி..

புதிய்வர் ஜோவுக்கு சிறப்பு நன்றி!!

ஜோ,

ஒரு செயல் மற்றவரை பாதிக்காத வரையிலும் அது அநாகரீகம் ஆவதில்லை...

நடாஷாவின் முகவரி முழுக்க மறந்துபோன எனக்கு, இப்பதிவு ஒரு ஆறுதல்... பகிர்தலில் ஒரு சுகம்.. அவ்வளவே!!!

நன்றி தல..
Anbu said…
நன்றாக இருக்கிறது அண்ணா..

உங்கள் கருத்து
சான்ஸே இல்லங்க...


செம்ம இண்ட்ரஸ்டிங்கா போச்சு...ஆனாலும் வெளிநாட்டு கார பொண்ணுங்க நம்ம ஊர் கல்ட்சருக்கு செட் ஆகுறதெல்லாம் கொஞ்சம் கஷ்டந்தான்..

நீங்க கிரேட் எஸ்கேபூ..
ஆதவா கைவசம் நிறைய அனுபவங்கள் இருக்கும் போலிருக்கிறது, நல்லா இருக்கு ஆதவா
ஹேமா said…
ஆதவா,என்னதான் நகைச்சுவையாக எழுதி முடிச்சிருந்தாலும் மனதுக்குள் ஒரு பாரம் அழுத்திவிட்டது.ஏன் என்று தெரியவில்லை.
ஆதவாவுக்காகவா இல்லை நடாஷாவுக்காகவான்னு தெரியவில்லை!
ஆதவா said…
அன்பு.... கருத்தா??? என்ன கருத்துங்க சொன்னேன்....

நன்றிங்க அன்பு.

செய்யது சார்/// எஸ்கேப்ப்//// எஸ்கேப்//// கிரேட் எஸ்கேப்//// ஹி ஹிஹி... நன்றி தல.

யாத்ரா..

நிறைய இருக்குங்க.. வாழ்க்கையில நாம திரும்பிப் பார்த்தா ஏகப்பட்டது இருக்கும்.. அதில முதலாவதா எனக்குள்ள நிக்கிறது ரஷ்யாக்காரியோட காதல் தான்...

ஹேமா சகோதரி..

நடாஷாவுக்கே இப்படியென்றால்..... ???
நன்றிங்க...
இரண்டாவது பாகம் சூப்பர். ஆனால் கதை இப்படி முடியும் என நினைக்கவில்லை. ரொம்ப சோகமா முடிந்து விட்டதே!!!!
Highlights

//மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே..///


//உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்..//
high Lights

//அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..//
ஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா?
ரெம்ப நல்லா இருக்கு, ஒரு பாலிவுட் கதை இருக்கு உங்க கிட்ட
Anonymous said…
Hi first i want to tell you about Russian girls,may you think how do i know about them,because i studied 7 years their even iam going to marry russian girls.
Russian Girls belives that indian guys loves their whifes forever!and they lives with their whife whole life.this is the main reason and they like our indian culture and dance!so they have so many hope about us.But our guys who are studying their 99.9% they miss use them.
some of them are like me take them with us.
My opinion Don't give hope then,don;t cheat!
but your story is diffrent!
You had a nice experence!!!
Good luck brother
Anonymous said…
But they are very soft in character!
open type!
very beautiful
there are lot of things better than our girls!but know we can take them to our way very easily(i mean to our tradition and culture)
Anonymous said…
நம்ம மூஞ்சியப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லியிருப்பா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Anonymous said…
ஆதவா நீ ரொம்பவே மிஸ் பண்ணிடாய்.... அவளை பார்த்த பிறகுமா காதலை ஏத்துக்கலை..
நானாயிருந்தால் இந்நேரம் ரஸ்யாவிலை செட்டிலாகியிருப்பன்
இருவரின் நிலைபாடும் சரியே,
கண்மூடித்தனமான காதல் கஷ்டமானதே.
ஆதவா said…
மிக்க நன்றி மிட்க்ளோப் அவர்களே!

ஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா?

ஏனோ இப்போது அப்படியொரு உணர்வு ஏற்படவில்லை.. அதற்கு என்ன காரணமென்றும் தெரியவில்லை. ஒருவேளை அவள் வெளிநாட்டவள் என்பதாலா? இல்லை வயது குறைச்சல் என்பதாலா... ம்ஹூம்... தெரியவில்லை....
ஆதவா said…
நசரேயன்... எல்லோரிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்திருக்கலாம்...

எனக்கு சுவாரசிய அனுபவங்கள் குறைவு... ஆனால் பல நிகழ்வுகள் வாழ்வுப் பாதையின் முக்கிய மைல்கற்களாக இருந்திருக்கின்றன...

அவற்றை ஒவ்வொன்றாய் உங்களுக்குப் பகிர்கிறேன்.
ஆதவா said…
அநாநி நண்பருக்கு..

உலகம் முழுக்க இப்படித்தானே நடந்துவருகிறது.. நானும் எங்கள் ஊரில் நிறைய பார்த்திருக்கிறேன். காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றுவது வழக்கமாக பார்த்துவருகிறேன்.

என் ரஷ்ய (ஈழ)நண்பர் (இப்பொழுது வேறு நாட்டில்) , நீங்கள் சொன்னதையே சொன்னார்.. பொதுவாக வெளிநாட்டவருக்கு இந்திய கலாச்சாரம் பிடிக்கும் என்பது என் கருத்து....

But they are very soft in character!
open type!
very beautiful

நான் நடாஷாவிடம் பேசியபொழுது நீங்கள் சொன்னவற்றை அப்படியே உணர்ந்தேன்.. எனக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்பு கார்ல் மார்க்ஸ், லெனின், எங்கெல்ஸிலிருந்து ஆரம்பித்து, நடாஷாவரை தொடர்கிறது!!!!

உங்களுக்கு ஒன்று தெரியுமா... எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த நிறம் அடர் சிவப்பு.... ம்ம்ம்.....
ஆதவா said…
கவின், எனக்கு அன்று இருந்த சூழ்நிலையே வேறு..

வெளிநாட்டவர் என்றாலே அலர்ஜி.. ஏமாற்றுவார்கள், ஏமாறுவார்கள் அல்லது பொழுது போக்குக்காக காதலிப்பார்கள்... இப்படி பல வட்டங்களுக்குள் சுருங்கிக் கிடந்தேன். அவர்களுக்குள்ளும் காதல் உண்டு என்ற உணர்வை என்னால் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு அன்று பக்குவம் இருந்திருக்கவில்லை.

இரவீ!!!

கண்மூடித்தனமானது என்ற வார்த்தையைத்தானே காதலுக்குக் கண்ணீல்லை என்றூ மாற்றி சொல்கிறார்கள்.... காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் வந்த காதல் இப்படித்தான் இருக்கவேண்டு என்ற வரையறை வேண்டும்..

நன்றி நண்பர்களே
ராம்.CM said…
அவள் சாகும் வரை அவள் மனதில் உங்கள் காதல் பறந்துகொண்டேதான் இருக்கும். ஒரு வெளிநாட்டுபெண் சாகும் வரை உங்களை நினைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள தாங்கள் கொடுத்து வைத்தவர்தான்! கவலைபட தேவையில்லை!
ஏன் அவள் காதலை உங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை? பரவாயில்லை மறந்துவிடுங்கள்...
ஆதவா said…
ராம் C... நீங்கள் சொல்வது படி நான் கொடுத்து வைத்தவன் தான்... இப்போது அவளை காண்டாக்ட் செய்யமுடியாமல் இருக்கிறேன்..

எங்கிருந்தாலும் வாழ்க...

ஞானசேகர் சார், ஏன்னே தெரியலை...

நன்றீங்க...
kuma36 said…
பிளாகர் Midglobe Trading Pvt Ltd கூறியது...
Highlights

//மனதெல்லாம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அவள் பேசிய முதல் நாளிலிருந்து நடுக்கமோ நடுக்கம் அப்படியொரு நடுக்கம்.. தேவையில்லாமல் அரட்டை அடித்து மாட்டிக் கொண்டேனே..///


//உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்..//


பிளாகர் Midglobe Trading Pvt Ltd கூறியது...

high Lights

//அவள் சுமார் ஒருமாதம் கழித்து எனக்கு மடல் அனுப்பினாள்... என்னவோ தெரியவில்லை... அந்த மடலில் காதல் குறித்தெல்லாம் எழுதவில்லை... அப்படியே படிப்படியாக காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..//

பிளாகர் Midglobe Trading Pvt Ltd கூறியது...

ஆமா அந்த நடாஷவை மிஸ் பன்னிடதா பீல் பன்னுறிங்களா?


ஆஹா எல்லாம் மாறிபோச்சே இந்த பெயரில் வந்தவன் நான் தான் இது நான் தொழில் புரியும் நிறுவனத்தின் பெயர்.
சற்று முன் தான் வந்தேன்...
பிறகு வாசித்து பின்னூட்டம் போடுறேன்...
:-)
Anonymous said…
பொன்னு நல்லாதாம்லே இருக்கு! கட்டியிருந்திருக்கலாம்யா! தப்பு பன்னிட்டியே! :)
Rajeswari said…
அப்பாடா தப்பிசிட்டேங்கலே (என்ன பண்றது விதி)..சரி பீல் பண்ணாதிங்க
நம்ம கடைக்கு வரவும்...
உங்களுக்கு ஒரு வேலை இருக்குங்க...
:-)
ஆதவா said…
வாங்க வேத்தியன்....

ஷீ!!! சான்ஸே இல்லை......

ராஜேஷ்வரி... நன்றிங்க...

வேத்தியன்.... வேலையா????
உன்னைத் திருமணம் செய்ய நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று ஒரே போடு போட்டேன்... (நீங்க நினைக்கறமாதிரி இந்த இடத்தில டூயட் இல்லை!!ஹி ஹி) ஒருவழியாக அவளது ஆங்கிலத்திலிருந்து தப்பித்தேன்... அடுத்தது போட்டாள் ஒரு குண்டு!!!//


அடப் பாவிப் பசங்களா??
நல்லாப் பிழைக்கத் தெரிஞ்ச பையன் தான் நீங்கள்./..
பாவம் அவள்?
ஏமாந்த சோனகிரியாகிவிட்டாள்?
Anonymous said…
ஆதவா அருமையாக எழுதியருக்கிறீர்கள். ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி கிடைகிறது. சுவாரசியம் மிகுந்த படைப்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் ரஷ்யா பெண்ணிடம் நீங்கள் சிக்கி தவித்ததை நினைத்து பார்க்கும் போது ஒரு படத்தில் செந்தில் சொல்வாரே, 'உலகதை நினைச்சேன் சிரித்தேன்', அது தான் நினைவுக்கு வந்தது.

படு தாமாசு போங்க. தொடர்்ந்து இப்படியே எழுதுங்க. எங்களுக்கும் பொழுது போகும்.
Anonymous said…
வாழ்வே மாயம் பாட்டெல்லாம் பாடினீங்களா? இல்ல எங்கிருந்தாம் வாழ்க என்ற பாடலை பாடினீங்களா? அதை குறிப்பிடவேயில்லை.
என்ன தல..மிஸ் பண்ணிடீங்களே.. அட்லீஸ்ட் அவ செலவுல ரஷ்யா சுத்திப் பார்த்திட்டாவது வந்திருக்கலாம்.
அப்புறம்.. அவ ரூமுக்கு போயி சாய்ந்திரம் வரை வெட்டியா பேசதான் செஞ்சீங்களாக்கும். இன்னும் அதிகமா உங்க கிட்ட எதிர்பார்தேன் தல.
அண்ணே நானும் மொதமொதல்ல ஃபாரின் பொண்ணைத்தான் காதலித்தேன்.

ஆமா...ரஷ்யாவுல இருக்குறவுங்களுக்கு இந்தியா ஃபாரின்தான??

ஹி...ஹி...ஹி...
Jay said…
மன்றத்திலே வாசித்த ஞாபகம் இன்னும் எனக்கு இருக்கு ;)