பாரதியும் வான்காவும் - மிகவும் பிடித்தவர்கள்

முன்குறிப்பு : கொஞ்சம் பெரிய கட்டுரைதான்.... ஆனாலும் படிச்சுடுங்க..

வேத்தியன் மாதிரி நானும் பேசாம இருந்திருக்கலாம்.. வேத்தியராச்சு பல்லு விளக்கினாரு, நான் அதுவும் பண்ணலை. போய், தேவா சார் என்ன பண்ணினாருன்னு எட்டியது குத்தமா போச்சு!!! பிடிச்சவங்களைப் புடிச்சுப் போடறதுமட்டுமில்லாம, இரண்டு பேரையும் பிடிச்சுப் போடணுமாம்.... சரி... இனி நம்ம கட்டுரைய ஆரம்பிச்சிடவேண்டியதுதான்.

மிகவும் பிடித்தவர்கள் :

பிடித்தவர்கள் என்று ஒருவர் இருவரை வகைப்படுத்த இயலாது.. ஒருவேளை அப்படி செய்யவேண்டுமெனில் என் பெற்றோரைக் கைகாட்டிவிட்டு சென்றுவிடலாம். நமக்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் மிகவும் பிடித்தவராக இருக்கலாம். மிகச் சரியாக கணித்து என்னால் இவர்தான் பிடித்தவர் என்று சொல்லமுடியவில்லை. இருப்பினும் இருவரை கை நீட்டுகிறேன்.

கலை-இலக்கியம் ஆகிய இரு துறைகள் எனக்கு மிகவும் பிடித்த துறைகள். இவ்விரு துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றும் சிறப்படைந்தும், திருப்பங்கள் கொடுத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகே அவர்களை உலகம் அடையாளம் எடுத்துக் கொண்டது.


மஹாகவி!
----------
எத்தனையோ கவிகளுக்கு ரோல் மாடலாகத் தெரிந்தவர், புதுக் கவிதைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர், புரட்சிக் கவிதைகளுக்குச் சொந்தக் காரர், என் மனம் கவர்ந்த கதாநாயகர், எனக்குக் கவிதைகளைக் கற்பித்த ஆசான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறை எழுதி உங்களை சலிப்படைய விரும்பவில்லை நான்..... அவருள் நான் வாழ்ந்ததை முடிந்தவரையில் காண்பிக்கிறேன்...

அவர் வாழ்ந்த நாட்களில் பாடிய பாடலுள் ஒன்று..

தூங்குகையிலே வாங்குகிற மூச்சு - அது
சுழி மாறி போனாலும் போச்சு.

இப்படிப்பட்ட சந்தேகம் அவருக்கு எழுந்ததும் அவர் நினைத்தது, நாம் என்ன செய்தோம் என்பதே! பாரதி என்ன செய்யவில்லை?. பாரதி பற்றிய பல எதிர்க்கூற்றுகள் படித்ததுண்டு. அவர் வாழ்ந்த காலத்துக்கும் அதிகமாகவே நமக்கு ஆவணங்கள் விட்டுச் சென்றுள்ளார்,,, வறுமையையின் கொடுமையை அனுபவித்த மாபெரும் கவிஞர்... அங்கீகாரம் அளிக்காத தமிழகம் இன்று தலைதூக்கி ஆடுவது வெட்கம்...

அன்றைய காலத்தில் மகா கவிகள் என்று சொல்லப்பட்டவர்கள் இருவர் மட்டுமே! மற்றொருவர் தாகூர். தாகூரின் எழுத்துக்களுக்கு ஒப்பானவர்.. இன்னும் சொல்லப்போனால் அதைவிடவும் மேலானவர். ஒருசில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாதிரி கவிஞர்கள் பிறப்பதுண்டு. மற்றய மொழிகளுள் அவ்வளவு பரிச்சயம் இல்லை. தமிழுக்கு பாரதியார்..

கம்பனின் ஒரு பாடலை மேற்கோளிட்டு, பின்வருமாறு அவர் கவிதைகளைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்கிறார்.

சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த .........................

ஒளி பொருந்திய தெளிவுடையதாகி, குளிர்ந்த நடையுடையதாகி, மேலோர் கவிதை போல.... என்று வருகிறது. ஒளி என்றால் காணும் கவிதை கருத்தை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும்,. கவிதையில் தெளிவு இருக்கவேண்டும், படிக்கும்போது குளிர்ந்த நடை இருக்கவேண்டும் என்று சொல்வதாக சொல்லுகிறார். பாரதி அதை ஆமோதிப்பது போல இங்கே நாம் எழுதுகிறோமா என்று கவனிக்கவேண்டும். அத்தோடு நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் அக்காலத்தில் புழங்கப்பட்ட வார்த்தைகளை/மொழிகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவையாக இருக்கும், காலம் மாற மாற மொழிச் சிதைவில் மொழி மாறிக் கொண்டே செல்லுகிறது. ஆக கவிஞர்கள் மக்களுக்குத் தெரியக் கூடிய பதங்களையே உபயோகிக்கவும் வேண்டும் என்கிறார். மிகவும் பழையமான வார்த்தைகளை உபயோகிப்பதைக் காட்டிலும் மறையக்கூடிய அல்லது புரியக் கூடிய வார்த்தைகளைக் கவிதை ஆக்குவதில் தவறில்லையே!! இன்று இசங்கள் கட்டி எழுதுவதுதான் தரம் வாய்ந்த கவிதை என்று பல கவிஞர்கள் எண்ணீக் கொண்டிருக்கிறார்கள். இது இப்பொழுது நடந்த விஷயமல்ல. பாரதி காலம் தொட்டே நடக்கிறது... மக்களுக்குப் புரியும்படியே கவிதைகள் எழுதி வந்தார்... கவிஞர்களுக்கு மட்டும் புரியும்படியல்ல...

பின்வரும் பாடலைக் கவனியுங்கள்... எத்தனை அழகு... அப்படியே பாடுவதைப் போல உணர்வு ஏற்படுகிறது... இங்கே அவர் சொல்லிய வார்த்தை ஆடலைக் கவனியுங்கள்... ஏதேனும் ஒரு வார்த்தை உங்களுக்குப் புரியவில்லை எனில் தமிழராய் பிறந்ததில் அர்த்தமில்லாமல் போய்விடும்....

காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்;
எப்போ எப்போ கலியாணம்?
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக்
குழைய லிட்டே தாலிகட்டிக்
காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்.


மாதர் பற்றி பாரதி என்ன சொன்னார்? எனக்குள் நீண்ட நாட்களாக எழுந்த கேள்வி.. பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள் என்று மார்தட்டி சொல்லிக் கொள்கிறோம். பாரதி அப்படி என்னவெல்லாம் கண்டார்..?? அவரே சொல்கிறார் பாருங்கள்

  1. ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் (பாரதி காலத்தில் ஆணுக்கும் ஓட்டுரிமை இல்லை)
  2. வயது வந்த பிறகு பெண்ணுடைய இஷ்டப்படியே திருமணம் முடித்து வைக்கவேண்டும்
  3. கணவன் கொடுமை புரிந்தால் உடனே விவாகரத்து செய்யும்படி பெண்ணுக்கு உரிமை வழங்கப்படவேண்டும்
  4. அது மட்டுமல்ல, விவாகரத்து செய்வதை ஊர்மக்கள் தூற்றுவதைத் தடுக்கவும் வேண்டும்
  5. பெண்ணை சம்பாதிக்க விட்டு பிழைக்கக் கூடாது. தந்தை தனது சொத்தில் பெண்ணுக்கு பங்கு தரவேண்டும்
  6. கணவனுடைய சொத்தை மனைவி பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
  7. பெண்கள் தங்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
  8. தனி இடங்களில் அவர்களைக் கண்டால் மரியாதை செய்து வணங்க வேண்டும்
  9. அப்படி மரியாதை செய்யாத மனிதர்களிடம் மற்றவர்கள் நெருங்கக் கூடாது


யோசித்துப் பாருங்கள்.. அன்றைய இந்தியாவில் பெண்கள் எப்படி இருந்திருக்கிறார்கள்.... கிட்டத்தட்ட அவர் நினைத்தது எல்லாமே மாறிவிட்டாலும்...........

  • எந்த ஒரு மனைவியும் கணவனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது

என்று அவர் சொன்ன ஒரு விதி மட்டுமே இன்னும் விலக்காக இருக்கிறது. பெண் தனது அடிமைத் தனத்திலிருந்து முற்றிலும் வெளியே வந்துவிட்டாளா? இல்லை. முற்றிலும் என்று சொல்லமுடியாது. இன்றைக்கும் விவாகரத்தான பெண்ணை வேறுவிதமாக ஊரார் நினைப்பதுண்டு. தனது மகளுக்கு பல அப்பாக்கள் சொத்து பிரித்துக் கொடுபபதில்லை. பெண்ணை ஒரு பொருளாக நினைப்பவர்களே அதிகம்.

உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ்வது அவசியம். இன்பத்திற்கு விடுதலை அவசியம்... பாரதியின் வைரவரிகள் இன்றைக்கு எத்தனை தூரம் உண்மையாக இருக்கிறது? ஆனால் ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள். பெண்களை கடவுளாக பூசித்தவர்கள் நம் தமிழர்கள். என்றைக்கு இந்த நிலை மாறியது? ஒருசிலர் ஆரியர் உட்புகுதலில் மாறிவிட்டதாக எண்ணுகிறார்கள். இருக்கலாம். பழங்கால இலக்கியங்கள் பெண்ணிற்கு மட்டுமே பாடிய பாட்டுக்கள் ஏராளம். குறிப்பாக, எம்பாவை, அம்மானை, தூது, தெள்ளேணம், சாழல், உந்தி, பூவல்லி, ஊசல், காலைத் துயில் எழுப்பும் பாட்டு, கும்மி, தாலாட்டு, என பல வகைகள் உண்டு... பழங்காலய நாகரீகத்தில் பெரும்பகுதியைத் தொலைத்துவிட்டுத்தான் நாம் இங்கே விதிகளையும் சட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களைப் பற்றி ஒரு இடத்தில் சொல்லுகிறார்,,,,

"பெண்கள் பத்தினியாக இருக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்புகிறார்கள் அதிலே கஷ்டம் என்ன வென்றால் ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதையாக இருக்கவேண்டுமென்று எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர பெண்களின் பதிவிரதயத்திலே காட்டுவதில்லை. ஓவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து பெண்களை மட்டுமே பத்தினி என்று நம்புகிறான், "

இறுதியாக காதல் பற்றி கவிஞர் என்ன சொல்கிறார்.

பெரும்பாலும் பாரதி இருந்த சூழல் அவரை காதல் கவிதைகள் ஆழவிடாமல் பார்த்துக் கொண்டது. காதலை மறைமுகமாக பல கவிதைகளில் குறிப்பாக கண்ணன் பாட்டில் சொல்லியிருக்கிறார். குயில் பாட்டும் கிட்டத்தட்ட காதல் தானே! காதலை தெய்வத்தினோடு ஒப்பிடுகிறார்....

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது; ஒரே ஒரு தெய்வம் முடிவு வரை விரிந்து நிற்பது... இது காதல் என்கிறார்...

மேலும்,
காதலர் பிரிந்திருக்கும் பொழுது அவர்களை ஒருவருக்கொருவர் கடிதம் எழுதவோ பேசிக் கொள்ளவோ ஆகாதென்றால் அவர்கள் நமக்குத் தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகளைக் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள். பறவைகளின் பாட்டையும் மலர்களின் கந்தத்தையும், குழந்தையின் சிரிப்பையும், ஞாயிற்றின் ஒளியையும் காற்றின் உயிர்ப்பையும், விண்மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது? தெய்வத்தின் படைப்பு முழுவதும் காதலக்குத் தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது. உலக முழுவதையும் தூது போகச் செய்கிற திறமை காதலர்களுக்கு உண்டு.

இளவேனிற் காலமே!
நான் அவளுக்கு
எழுதுகிற ஓலை
நீ!


உயிரே!
நீ கல்லாய் பிறந்தால்
காந்தக் கல்லாய்ப் பிற,
செடியானால்
தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்


காதலர் இல்லாவிடின் ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்....

என்னே அழகிய கவிதைகள் பாரதியினுடையது........ வணங்குகிறேன் கவிஞரே!

பாரதியின் வாழ்க்கை வரலாறு


மஹா ஓவியன் வான்கா

கலை இலக்கியங்களில் கவிதை எனும் பரிணாமத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் கலை, ஓவியம்.. ஓவியக்கலையில் எத்தனையோ விற்பன்னர்கள் இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தவர் வின்செண்ட் வான்கா... எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் தனி ஆர்வம். நன்கு தேர்ச்சிபெற்ற ஓவியரான என் தந்தையின் கவனக் குறைவில் என் ஓவியத் திறம் பொலிவிழந்து போய்விட்டது. ஆனாலும் ஓவிய வரலாறுகள், அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்த பிறகு, வின்செண்ட் பற்றி தெரிந்து கொண்டேன். அவரது ஓவியங்களைக் கண்ட பிறகு என்னுள் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணரமுடிந்தது..









Vincent Willem van Gogh மார்ச் 30 1853 இல் பிறந்தவர். இவர் ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஷ ஓவியர்.

அதென்ன போஸ்ட் இம்ப்ரஷனிசம்?

ஓவியங்களுல் பல வகையுண்டு. எக்ஸ்ப்ரஷனிசம், இம்ப்ரஷனிசம், போஸ்ட் இம்ப்ரஷனிசம், பாயிண்டலிசம், ஹைப்ரலிசம், க்யூபிசம், மார்டனிசம், இப்படி பலவகையுண்டு.. அதாவது கிளாஸிக் ஓவியங்களினால் சலிப்புற்ற உலகம், பதினொன்பதாம் நூற்றாண்டில், ஓவியப்புரட்சி கண்டது. இம்ப்ரஷனிசம் என்ற ஓவிய நுட்பம் அப்போது பேசப்பட்டு வந்தது

தொடர்ந்து மாற்றமில்லாமல் சென்றுகொண்டிருந்த ஓவியப் பாதைக்கு இம்ரஷனிஷ்ட்டுகள் ஒரு புதிய அடித்தளம் அமைத்தார்கள். வர்ணக் குழைப்பிலும், தூரிகையின் வீச்சிலும் மாற்றம் காண்பித்தார்கள். ஓவியக்கூடத்தில் வரையும் பழக்கத்தை விடுத்து, வெளியே வந்து வரைய ஆரம்பித்தார்கள். இயற்கைக் காட்சிகள் இயற்கையின் சக்திகள் என்று பல விதமாக வரைந்தார்கள். இயற்கை வெளிச்சத்தில் அவரவர் தம் மனத்தை வெளியே பரப்பினார்கள். இது குறுகிய காலத்தில் அதிகம் பேசப்பட்டு சற்றேறக்குறைய மறைந்து போன ஓவிய உத்தி.

இம்பரஷனிசத்தில் தூரிகையின் வீச்சு நன்றாகப் புலப்படும் வண்ணம் இருக்கும். நீளமாக அல்லாமல் குறுகிய வீச்சுக்களே அதிகமிருக்கும். ஒளியமைப்புடன் கூடிய ஓவியங்கள் இதில் அதிகமாக விரவிக் காணப்படும். பெரும்பாலும் ஓவியக்கூடத்தில் வரையப்படாத ஓவியங்களாகவே இம்ப்ரஷனிசம் காணப்படும். அடர்த்தியான வர்ணங்கள் உபயோகித்தாலும் உயர் அடர்த்தியான கருப்பு வர்ணங்களைப் பெரும்பாலும் இம்ப்ரஷனிச ஓவியத்தில் காண முடியாது. மேலும் வர்ணக் குழைப்பு இதில் அதிகம் காணப்படும், தூரிகையின் குறுகிய வீச்சு வர்ணங்களைக் கலந்து ஒருவித வடிவத்தைத் தரலாம். பொருட்களின் அசைவு நிலையை வரைவது இதன் மூலம் தொடங்கிற்று என்றாலும் இம்ப்ரஷனிஷம் அசைவு நிலையைத் தொட்டும் துலங்காமலுமே இருந்தது.. அதன் வீழ்ச்சிக்குக் காரணம் அதுதான். குறைந்த காலமே இவ்வுத்தி இருந்தாலும் ஒரு புகைப்படத்தால் செய்யவியலா போஸ்ட் இம்ப்ரஷனிசத்தை நோக்கி ஓட உதவியது என்றால் அது மிகையல்ல.

போஸ்ட் இம்ப்ரஷனிசம் :

இம்ப்ரஷனிசத்தின் நீட்சி என்று சொல்லலாம். இவ்வுத்தி பழைய முறைப்படி விவித் (Vivid) வர்ணங்களையே உபயோகித்தார்கள். பெரும்பான்மையிலும் வெளுப்பு நிற தூரிகை வீச்சுகள். மற்றபடி பெரிய வித்தியாசத்தை இவ்விரு இசங்களிடையேயும் காணமுடியவில்லை.

பார்த்தீர்களா.. இது வேற எங்கோ வந்துவிட்டது... ஓவியங்களைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம்..

வான் காவின் வாழ்க்கையில் நிறைந்திருக்காத வறுமையே இல்லை எனலாம். மேற்கூறிய ஓவிய இசங்கள் நிறைந்திருந்த சூழ்நிலையில் இவர் சோம்பர் (sombre) வர்ணங்களைக் கொண்டு ஓவியங்களை வரைந்து வந்தார். சற்று மங்கலான (Blury) ஓவியங்கள் அவை. சமகாலத்தில் வாழ்ந்த ஓவியர்களின் ஓவிய உத்தியை நன்கு கவனித்து எக்ஸ்பிரஷனிசத்திலிருந்து போஸ்ட் எக்ஸ்ப்ரஷனிசத்திற்கு தாவி அவர் உலகமே வியக்கும் ஓவியங்களை வரைந்தார்.

அவர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரைந்ததாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலும் அவரது இறுதி வாழ்நாளில் வரையப்பட்டவை. அவர் வறுமையின் காரணமாகவோ அல்லது பிறகாரணமாகவோ சற்று மனநோயாளியாக திரிந்தவர். ஒரு விபச்சாரியை மணக்க முன் வந்து அதில் தோற்று, தனது நண்பரின் நட்பை முறித்து, அதனால் அவர் காதை அறுத்து உயிர் வாழ்ந்தார்... இல்லையில்லை... அவர் வாழும் பொழுதே மரணத்துடந்தான் இருந்தார். அவரது சுய ஓவியங்களில் காது அறுந்து கட்டு போட்ட ஓவியங்களும் உண்டு!!

உலகில் மிக அதிக விலையுள்ள ஓவியங்களில் வான் காவின் ஓவியங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. வான் காவுக்கு அவரது சகோதரர் தியோ மட்டுமே உறுதுணையாக இருந்தார். இவர்கள் இருவருக்கிடையேயான கடிதப் போக்குவரத்து பிரசித்தி பெற்றது. வான் கா இறந்த சோகத்தில் சீக்கிரமே தியோவும் மறைந்தார்.

பாரதியைப் போலவே சிறு வயதில் வறுமையால் இறந்த மஹா கலைஞர் வின்செண்ட் வான் கா. அவருக்குப் பின் வந்த எக்ஸ்ப்ரஷனிச ஓவியர்களுக்கு வான் காவே வழிகாட்டியாக அமைந்தார்...

மேலும் அவரைப் பற்றி....
வின்செண்டின் படைப்புகள்
அவரது சுய ஓவியங்கள்

நான் வரைந்த பென்ஸில் ஸ்கெட்ச்... உங்கள் பார்வைக்காக.... (சுமாராத்தான் இருக்கும்..... இதையெல்லாம் வெச்சு என்னை கிரேட் ஓவியன்னு நினைக்காதீங்க!!!! ஹிஹிஹி)








சரி... கஷ்டப்பட்டு இவ்வளவும் எழுதியிருக்கிறேன்.... பாவம்னு நினைச்சு ஓட்டு போட்டுடுங்க....!!! :D

சரி.... இப்போ கோர்த்து விட இரண்டு பேரு!!


ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்...

எங்கிருந்தாலும் வரவும்

Comments

மீ த பர்ஷ்ட்டு...
அட கலக்கீட்டீங்க ஆதவா...
பாரதியைப் பற்றி தமிழிலேயே படிக்கலாமே...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF
தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சுங்க...
பாரதி, வான்கா இருவர் பற்றியும் அருமையான பதிவு.
வான்கா பற்றி எப்படி எழுத்த் தோன்றியது?

வாழ்த்துகிறேன்.
வரைந்த பென்சில் ஸ்கெட்ச் அருமை...
அது சரி ஆதவா,
ரெண்டு பேரை மாட்டிவிடனுமே...
எங்க காணோம் ???
இப்படி ஒரு தொடர் பதிவு ஆரம்பித்தது வைத்ததும் நல்லதாதான் போச்சு. பதிவு நீளமாக இருந்தாலும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்ததே!ஆதவா, சூப்பருப்பா! அந்த ஓவியமும்தான்! பேசாம உங்க கவிதைக்கு நீங்களே வரையலாமே!
தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சு.
மிகச் சிறப்பான எழுத்து நடையும், அருமையான ஓவியத்திறனையும் பதிவு செய்துவிட்டு... சாதாரண அரசியல்வாதியைப் போல் ஓட்டு கேட்பதுதான் நெருடலாக உள்ளது. உங்கள் பதிவு தரமானதாக இருந்தால் ஓட்டுகள் குவியும் என்பது உறுதியே.

தங்கள் பதிவை விரும்பிய,
-குளோபன்
நான் வரைந்த பென்ஸில் ஸ்கெட்ச்... உங்கள் பார்வைக்காக.... (சுமாராத்தான் இருக்கும்..... இதையெல்லாம் வெச்சு என்னை கிரேட் ஓவியன்னு நினைக்காதீங்க!!!! ஹிஹிஹி)
//

ஆதவா!
அருமை!
ஓவியர் ஒளிந்து
வாழலாமா?
நான் வெளியூர்
சென்று
இப்போதுதான் வந்தேன்!
தேவா.
தூங்குகையிலே வாங்குகிற மூச்சு - அது
சுழி மாறி போனாலும் போச்சு.//


ம்...அருமையான கவி வரிகள்.
காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்;
எப்போ எப்போ கலியாணம்?
காடு விளைய விட்டுக்
கண்டாங்கி நெய்ய விட்டுக்
கொக்குச் சமைய விட்டுக்
குழைய லிட்டே தாலிகட்டிக்
காக்கைக் குஞ்சுக்குக் கலியாணம்;
கொக்குப் பெட்டைக்கு மஞ்சாணம்.//

ஆதவா சந்தக் கவி சிந்தி வரப் பாடல் எழுதும் தன்மை பாரதிக்கும் கைவரப் பெற்றது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு
Anonymous said…
konsam work so appurama varan
என்னா ஆதவா எங்கேயோ போய்ட்டீங்க போங்க‌
நல்ல பதிவு
படிச்சிட்டு வாறேன்
Arasi Raj said…
அருமையா இருக்கு நண்பரே.....பாரதி பற்றி எவ்ளோ படிச்சாலும் தீராது.....படிக்க படிக்க உடம்பு புல்லரிக்க தான் செய்யுது...

பாரதி மேல கொண்ட பைதியதுநல, கல்யாணம் நிச்சயம் ஆனா புதிசுல, என் கணவருக்கு எழுதின ஒவ்வொரு கடிதத்துளையும் பாரதி கவிதைகளை போடுவேன்.....
பிராமண குடும்பத்தில் பிறந்து ஏற்ற தாழ்வு இருக்க கூடாதுன்னு அவர் செய்த போராட்டங்கும் பாராட்டப்பட வேண்டியவை....ஹ்ம்ம்..பாரட்டுரதுக்க் நமக்கு தகுதி ஏது....தலை வணங்க கூடியவை...

அம்மாடியோவ்...ஓவியங்கள்ல இவ்ளோ வகைய...கலக்கிட்டேன் அபோங்க..என்ன மாதிரி சிலர் ௧0 ஓவியம் வரைந்தாலே தன்னை பெரிய ஓவியர்னு பீத்திக்குட்டு அலையுறோம்..ஹ்ம்ம்..என்னத்த சொல்றது...
கற்றது கை மண்ணளவு..கல்லாதது கடலளவு ...
Arasi Raj said…
பென்சில் ஸ்கெட்ச் ரொம்ப அருமை......
இங்கு"பாரதியார் பற்றி எழுதியது அற்புதம்" என்றால் :"வான்கா பற்றி எழுதியது "மஹா அற்புதம்"...."மஹாகவி சுப்ரமணிய பாரதி" , ஒரு சுதந்திர போராட்ட கவிங்கர்....காலத்தால் அழியாத அற்புதமான கவிதைகளை நமக்கு தந்தவர்...பெண்கள் முன்னேற்றத்திற்கு...தனது கவிதைகள் மூலம்....எழுச்சியை உருவாக்கியவர். உதாரண்மாக, பெண்கள் விடுதலை பற்றி பல கவிதைகள்..."நிமிர்ந்த நடயும்...நேர்கொண்ட பார்வயும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,"திமிர்ந்த ஞானச்செருக்கும்"...கொண்ட...செம்மை மாதர், திற்ம்புவதில்லையாம்"....ஒவ்வொரு வரியிலும் மிகவும் ஆழ்ந்த அர்த்தங்கள்..."மஹகவி" பாரதியைப்பர்றி சொல்லிக்கொண்டெ போகலாம்... ஒவியர் "வான்கா"....as mentioned by the author, is a great artist of 20 th century...I am not well versed about his paintings, but still. I understand THE "GREAT VANGHA"...HAS BEEN SERVICING POOR PEOPLE, EVEN IN HIS POOR LIFE...iF POSSIBLE, I WILL GET BACK WITH THE DETAILS OF 'VANHAS"...SERVICES TO MANKIND...GREAT ARTICLE..KEEP WRITING SIR...
பின் தடமறிதல் கருத்துக்களை எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மகாகவியை அறிந்து இருந்தாலும் உங்கள் பார்வையில் பாரதி புதிதாய் தெரிந்தார்.வான்காவை அறிந்து கொள்ள இது அற்புத பதிவு.ஒவியத்தில் இத்தனை வகையா!இது போல் தொடர்ந்து எமுதுங்கள் பல தகவல்களை
அறிந்துகொள்கிறோம்.
ஆதவா said…
நன்றி வேத்தியன்... ஓட்டுக்கு நன்றி தல.
ஆதவா said…
மாதவராஜ் கூறியது...
பாரதி, வான்கா இருவர் பற்றியும் அருமையான பதிவு.
வான்கா பற்றி எப்படி எழுத்த் தோன்றியது? வாழ்த்துகிறேன்.

வான்கா என் ஆஸ்தான நாயகர்... எனக்குப் பிடித்தவர்களெல்லாம் நாற்பது வயதிற்குள்ளாகவே இருக்கிறார்கள் பாருங்களேன்!!!

நன்றி மாதவராஜ் அவர்களே
ஆதவா said…
வேத்தியன்.....

வாழ்த்துக்கு நன்றிப்பா...

அன்புமணி

நான் சுமாராகத்தான் வரைவேன்.. என் தந்தை ஒரு ஓவியர். நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.  என் கவிதைகளூக்கு அவரை வரையச் சொல்லியிருக்கிறேன்.. கோட்டோவியங்களாக..!!!
ஆதவா said…
சரவணன்... (aka) குளோபன்

மிக்க நன்றி... முதல் வருகைக்கு!!!  ஓட்டு கேட்டது சும்மா..... நம் நண்பர்களுக்காக... நான் எதிர்பாராமலே எனது முந்தைய பதிவுகளுக்கு நண்பர்கள் ஓட்டளித்திருந்தார்கள்... இது ஜாலிக்காக கேட்டேன்.... மற்றபடி வேறேதுமில்லை....

நீங்கள் சொல்வது போல, எம் நண்பர்களும், தரமாக இருந்தால்தான் ஓட்டளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை....
ஆதவா said…
நன்றி தேவா..

இந்தப் பதிவு என் தளத்தில் அரங்கேறியமைக்கு நீங்கள் முழுக்காரணமல்லவா!!! நன்றி நவில்கிறேன்...

நன்றி கமல்

எனக்கு கவிதை சொல்லிக் கொடுத்த குரு... மஹாகவி பாரதியார்.
ஆதவா said…
கவின் கூறியது...
konsam work so appurama varan

ஓகே கவின்... பொறுமையா வாங்க... காத்திருக்கிறேன்..


அபுஅஃப்ஸர்  கூறியது...
என்னா ஆதவா எங்கேயோ போய்ட்டீங்க போங்க‌
நல்ல பதிவு
படிச்சிட்டு வாறேன்

ஓகே அஃப்ஸர்... மெல்ல படிச்சு பின்னூட்டம் கொடுங்க...
ஆதவா said…
முதல் வருகைக்கு நன்றி நிலாவும் அம்மாவும். (அழகான பெயர்.)



உங்களைப் போலவே நானும்.. பாரதி என்றாலே பதிவுகள் நீளும்.. அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கத் தோணும்...



வான்காவும் அப்படித்தான்.. ஓவியங்களைப் பற்றி சொல்லவேண்டுமானால் தனி புத்தகமே போடவேண்டும்.....
ஆதவா said…
மிக்க நன்றி ராமசுப்ரமணிய சர்மா

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்... தங்கள் வாழ்த்துக்கும்!!!

நன்றி சொல்லரசன்..

வான்காவவப் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.. பதிவு நீண்டுவிடும் என்பதால் விடுத்தேன்... மிக்க நன்றி

Anonymous said…
என்ன சகலை இப்டி அசத்திபுட்டிங்க... எங்கையோ போய்ட்டிங்க....
Anonymous said…
பாரதியாரை பத்தி ஒரு.. ஆய்வே செஞ்சிட்டிங்க... தமிழரின் அடயாளாமல்லவா பாரதி
Anonymous said…
//எந்த ஒரு மனைவியும் கணவனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது //
பொண்னுங்க இப்ப கணவனுக்கு அடிமையா இருக்கிறாங்களா என்ன??
அடிமையா வச்சிருக்கதான் முடியுமா??
Anonymous said…
வன்காவின் வரலாறு... ஆ.விகடனிலையும் படிச்சிருக்கன்.. அற்புதமான ஓவியன் தான்.. புதுமையை புகுத்தியவன்
Anonymous said…
//வான்கா என் ஆஸ்தான நாயகர்... எனக்குப் பிடித்தவர்களெல்லாம் நாற்பது வயதிற்குள்ளாகவே இருக்கிறார்கள் பாருங்களேன்!!! //
நான் உங்களுக்கு பிடிகாதவனாவே இருக்கக விரும்புறனுங்க
ஹி....ஹி....ஹி....ஹி
Anonymous said…
ஒவியம் சூப்பரு... வரஞ்ச கைக்கு எங்க நமிதா தி.க சார்பக ஒரு... கைக்குடடை அனுப்பி வைக்கிறனுங்க (அப்புறம் ஓவியத்தை உங்க கையாலை வரையலை தானே??? பென்சிலாலை தானே வரஞ்சிங்க?? )
ஹா... ஹா..
கலக்கல் கட்டுரை, படங்களும் விளக்கமும் அருமை.
பட்டைய கிளப்பீட்டீங்க
ஹேமா said…
ஆதவா,ரொம்ப நாள் ஆசையாக்கும் உங்களுக்கு,என்னை எங்கயாச்சும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கணும்ன்னு!

ஐயோ....நான் என்ன பண்ணுவேன்.இப்பிடித் தனியா புலம்ப வேண்டியதாப் போச்சே!
ஹேமா said…
ஆதவா,உங்க பென்சில் ஓவியம் அழகாயிருக்கு.அது நீங்களா?சின்னவயசில.எத்தனை திறமைகளை இன்னும் ஒளிச்சு வச்சிருக்கீங்க!

எல்லாத்துக்கும் மேல முன்னாலயும் ஒரு தடவை சொன்னதுதான்.
தாய்மொழி தமிழ் அல்லாமல்,இப்போ படித்து இப்படித் தமிழையே அலசி ஆரய்ந்து வைக்கிறீர்களே.
உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஹேமா said…
ஆதவா,பாரதி பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும்,வான்கா என்கிற ஓவியர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.உங்கள் பதிவில்தான் அறிந்துகொண்டேன்.நிறைவான பதிவு.வாழ்த்துக்கள் ஆதவா.
ஆதவா said…
கவின் கூறியது...
பாரதியாரை பத்தி ஒரு.. ஆய்வே செஞ்சிட்டிங்க... தமிழரின் அடயாளாமல்லவா பாரதி

நிச்சயமாக கவின்..  என் தமிழுக்கு அவரே வாத்தியார்னுகூட சொல்லலாம்.... அவரைப் பற்றி நான் எழுதியது உண்மையிலேயே ரொம்பவும் குறைவுதான்...

பொண்னுங்க இப்ப கணவனுக்கு அடிமையா இருக்கிறாங்களா என்ன??
அடிமையா வச்சிருக்கதான் முடியுமா??


அய்யய்யோஒ!!! நானில்லை..... (அனுபவம் பேசுதுங்களா?? :D)

நான் உங்களுக்கு பிடிகாதவனாவே இருக்கக விரும்புறனுங்க

ஆமாங்க.. அப்படி இருந்த்துகொள்ளுங்க... உண்மையைத்தாங்க சொல்றேன். என் அண்ணன்கள் இருவர் எனக்கு மிகவும் பிடித்த சொந்தம்.. அதிலும் இரண்டாம் அண்ணன் (கஸின்) என் உயிர்...... 27 வயதில் இறந்துவிட்டான்... இன்னொருவன் 29 ல்....

எனக்குப் பிடிக்காதவர்களாக இருங்கள்!!!!!

ஒவியம் சூப்பரு... வரஞ்ச கைக்கு எங்க நமிதா தி.க சார்பக ஒரு... கைக்குடடை அனுப்பி வைக்கிறனுங்க

கைக்குட்டை வந்து சேர்ந்திச்சு!!!அதென்ன தி.க? திருட்டுக் கழகமா?? திருஷ்டிக் கழகமா? ரொம்ப நன்றி கவின்!!!!
ஆதவா said…
நசரேயன் கூறியது...
கலக்கல் கட்டுரை, படங்களும் விளக்கமும் அருமை.
பட்டைய கிளப்பீட்டீங்க


மிக்க நன்றி நசரேயன்.
ஆதவா said…
ஹேமா கூறியது...
ஆதவா,ரொம்ப நாள் ஆசையாக்கும் உங்களுக்கு,என்னை எங்கயாச்சும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கணும்ன்னு!
ஐயோ....நான் என்ன பண்ணுவேன்.இப்பிடித் தனியா புலம்ப வேண்டியதாப் போச்சே!

ஹா ஹா ஹா... மாட்டிக் கிட்டீங்களா,,, மாட்டிக்கிட்டீங்களா!!!!!
ஆதவா said…
ஹேமா கூறியது...
ஆதவா,உங்க பென்சில் ஓவியம் அழகாயிருக்கு.அது நீங்களா?சின்னவயசில.எத்தனை திறமைகளை இன்னும் ஒளிச்சு வச்சிருக்கீங்க!
எல்லாத்துக்கும் மேல முன்னாலயும் ஒரு தடவை சொன்னதுதான்.
தாய்மொழி தமிழ் அல்லாமல்,இப்போ படித்து இப்படித் தமிழையே அலசி ஆரய்ந்து வைக்கிறீர்களே.
உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


நன்றீ சகோதரி.. அந்த ஓவியம் என் அக்கா பையன்.. திறமையெல்லாம் இல்லைங்க. அப்பா ஓவியர்ங்கிறதால கொஞ்சம் மிச்சம் ஒட்டியிருக்கு!

என் தமிழ்!!!!

அது என் இதயத்துடிப்போடு கலந்தது!!!... என் தாய்மொழியில் ஒருகாலத்தில் தமிழ்மொழியின் கருவறையில் வளர்ந்ததுதானே!!!!

நன்றி சகோதரி!
//பிடித்தவர்கள் என்று ஒருவர் இருவரை வகைப்படுத்த இயலாது.. ஒருவேளை அப்படி செய்யவேண்டுமெனில் என் பெற்றோரைக் கைகாட்டிவிட்டு சென்றுவிடலாம்.//

உண்மை தான் ஆதவன், நமக்கு பிடித்தவர்கள் என்ற வட்டம் மிகவும் பெரியதாகத் தான் இருக்கும். அதில் முதலில் இடம் பிடிப்பவர்கள் நமது பெற்றோராகத் தான் இருப்பர்...
//எத்தனையோ கவிகளுக்கு ரோல் மாடலாகத் தெரிந்தவர், புதுக் கவிதைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர், புரட்சிக் கவிதைகளுக்குச் சொந்தக் காரர், //

தமிழ் நாட்டில் மகாகவியை பிடிக்காதவர் யாருமில்லை அவருடைய “ தேடிச் சோறுநிதந் தின்று...” பாடல் வரிகளை நான் பள்ளியில் படிக்கும் போது மனதிற்குள் சொல்லாத நாட்கள் குறைவு...
//கலை இலக்கியங்களில் கவிதை எனும் பரிணாமத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் கலை, ஓவியம்.. ஓவியக்கலையில் எத்தனையோ விற்பன்னர்கள் இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தவர் வின்செண்ட் வான்கா...//

இது உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை...வான்கா ஒரு மாஹா கலைஞன் தான்...
இரு மாபெரும் கலைஞர்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
நீங்கள் வரைந்த பென்ஸில் ஒவியம் அழகு...உங்களுக்குள் ஒரு அற்புதமான கலைஞன் இருக்கிறார் என்பதை சொல்கிறது...வாழ்த்துக்கள் ஆதவன்...
Rajeswari said…
உங்கள் ஓவியம் நன்றாக உள்ளது...பதிவும் அருமை
ஆதவா said…
உங்கள் வாழ்த்துக்கு நன்றி புதியவன்..

பாரதி வான் கா வைப் பற்றி எழுதியதற்குப் பெருமைப் படுகிறேன்..
ஆதவா said…
மிக்க நன்றி ராஜேஸ்வரி!!
வேலை காரணமாக திருச்சி வரை சென்று இருந்தேன் ஆதவா.. அதனால்தான் நேற்று வர முடியவில்லை..
அருமையான பதிவு ஆதவா. .. நிறைய தேடிப் பிடிச்சு எழுதி இருக்கீங்க.. எல்லாம் சரி.. கடைசில என்னையும் கோர்த்து விட்டு இருக்கீங்களே.. பார்க்கலாம்.. என்னால முடிஞ்ச வரைக்கும் சீக்ரமா எழுதிடுறேன்..
அந்த படம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் ஆதவா.. இந்தப் பதிவு விகடன் குட் ப்லாக்ஸ்ல செலக்ட் ஆகி இருக்கு.. என்னோட கவிதையும்..
ஆதவா.. உண்மையில் நான் இப்போ வேலை பார்த்து கொண்டு இருப்பது பெருந்துறையில்தான்.. உங்களுடைய போன் நம்பர் கொடுத்தால் பேசலாம்.. (உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின்.. )
ஆதவா said…
கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
அருமையான பதிவு ஆதவா. .. நிறைய தேடிப் பிடிச்சு எழுதி இருக்கீங்க.. எல்லாம் சரி.. கடைசில என்னையும் கோர்த்து விட்டு இருக்கீங்களே.. பார்க்கலாம்.. என்னால முடிஞ்ச வரைக்கும் சீக்ரமா எழுதிடுறேன்..


எழுதுங்க எழுதுங்க. ஏதோ நம்மளால முடிஞ்சது!!! அதான் கோர்த்துவிட்டேன்!!!  ஹி ஹி..

அந்த படம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. வாழ்த்துக்கள்..

நன்றி நண்பரே!

இந்தப் பதிவு விகடன் குட் ப்லாக்ஸ்ல செலக்ட் ஆகி இருக்கு

அட... ஆமாம்..

வேலை பார்த்து கொண்டு இருப்பது பெருந்துறையில்தான்

ஆஹா.. இப்ப வரைஞ்ச படத்தில் இருக்கும் என் அக்கா பையன் பெருந்துறையில்தான் இருக்கிறான்... நான் மாதம் ஒருமுறை அங்கே வருவேனே!!!! ரொம்ப நல்லா நெருங்கி வந்துட்டோம்!!!!

எனது போன் : +91 98940 94141 (அவசியம் அழைக்கவும்!!! :))


kuma36 said…
மஹா ஓவியன் வான்கா
அப்பாட அவரைப்பற்றி தெரியாதா பல விடயங்களை தெரிந்துக்கொண்டேன். நன்றி ஆதாவா!!
Anonymous said…
அடிக்கடி நீங்க யூத் எங்கிறதை காட்டிக்கிறீங்க.... மறுபடியும் யூத்புல் விகடனிலை வந்திட்டீங்க வாழ்த்துக்கள் (அது நமீத நற்பணி கழகமாக்கும்)
ஆதவா said…
நன்றி கலை!

நன்றி கவின்!!! நமீதா சார்பில் உங்களுக்கு நன்றீ!!!
சூப்பர் ஆதவா. இனிமே உங்க ப்ளாக் அடிக்கடி வருவேன். இத்தன நாள் எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல
பழங்கால இலக்கியங்கள் பெண்ணிற்கு மட்டுமே பாடிய பாட்டுக்கள் ஏராளம். குறிப்பாக, எம்பாவை, அம்மானை, தூது, தெள்ளேணம், சாழல், உந்தி, பூவல்லி, ஊசல், காலைத் துயில் எழுப்பும் பாட்டு, கும்மி, தாலாட்டு, என பல வகைகள் உண்டு...//

தமிழை நன்றாகக் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்.இவ் இலக்கிய வடிவங்களை நினைவூட்டியமைக்கு நன்றிகள் நண்பா.
ஓவியங்களுல் பல வகையுண்டு. எக்ஸ்ப்ரஷனிசம், இம்ப்ரஷனிசம், போஸ்ட் இம்ப்ரஷனிசம், பாயிண்டலிசம், ஹைப்ரலிசம், க்யூபிசம், மார்டனிசம், இப்படி பலவகையுண்டு.. அதாவது கிளாஸிக் ஓவியங்களினால் சலிப்புற்ற உலகம், பதினொன்பதாம் நூற்றாண்டில், ஓவியப்புரட்சி கண்டது. இம்ப்ரஷனிசம் என்ற ஓவிய நுட்பம் அப்போது பேசப்பட்டு வந்தது//

ஓவியங்களுக்குள் இத்தனை வகைகளா?? அறியவைத்தமைக்கு நன்றிகள்.

நீங்களும் ஒரு கை தேர்ந்த ஓவியர் என்பதைக் குறிப்பாலே காட்டி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்.
ஆதவா said…
மிக்க நன்றி மணிகண்டன்... நிச்சயம் வாருங்கள்!
ஆதவா said…
கமல், இதெல்லாம் நம்ம இலக்கண புத்தகத்திலேயே இருக்குமே!! அதிலும் பாரதி சொன்னதை நான் திருப்பிச் சொன்னேன். அவ்வளவே!!!

மிக்க நன்றி நண்பா!!
அமுதா said…
அருமையான பதிவு.
வரைந்த பென்சில் ஸ்கெட்ச் அருமை...
அமுதா said…
/*மக்களுக்குப் புரியும்படியே கவிதைகள் எழுதி வந்தார்... கவிஞர்களுக்கு மட்டும் புரியும்படியல்ல...*/
உண்மை. அதனால் தானே குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து இரசிக்க முடிகிறது.

/*கிட்டத்தட்ட அவர் நினைத்தது எல்லாமே மாறிவிட்டாலும்........*/
மாற்றம் சில இடங்களில் மட்டுமே... நன்கு படித்து ந்ல்ல வேலையில் இருக்கும் பெண்கள் கூட வீட்டில் இன்னும் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை என்று நான் காணும் பொழுது இன்னும் உலகில் நாம் பார்த்த்து குறைவு என்று தோன்றுகிறது.
Senthil said…
pretty interesting article..
--Senthil
Suresh said…
/*மக்களுக்குப் புரியும்படியே கவிதைகள் எழுதி வந்தார்... கவிஞர்களுக்கு மட்டும் புரியும்படியல்ல...*/
உண்மை. அதனால் தானே குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து இரசிக்க முடிகிறது.

arumai thalaiva
Suresh said…
பாரதி, வான்கா இருவர் பற்றியும் அருமையான பதிவு.
Suresh said…
ஆதவா
வரைந்த பென்சில் ஸ்கெட்ச் அருமை...
எல்லாமே அருமையாக இருக்கு