ஜெஸிகாவின் தலை

Female Head

என் வீட்டு அலமாரியில்
ஜெஸிகாவின் தலையை எப்போதும் காணலாம்
இரத்தம் இறுகி, உறைந்து போய்
நெடியடிக்காத வண்ணம் பாதுகாத்து வருகிறேன்.
சிலசமயம் கடவுள் பொம்மையைப் போல
பூஜித்தும் வருகிறேன்
எதற்காக என்று கேட்டு
நச்சரித்தாள் மனைவி
ஒரு சொல்லில் எந்த அர்த்தமும் சொல்லமுடிவதில்லை
சொல்லமுடியாத தருணங்களிலெல்லாம்
இவள் என்னைத் தழுவிக் கொள்கிறாள்
வெதுவெதுப்பான
ருசியற்ற முத்தங்களைத் தருகிறாள்
நீர்மங்களாலான உடலாக மாறி
எனது ரகசியங்களைத் தோண்டி
மெல்ல மெல்ல புசிக்கிறாள்
ஒரு காட்டு மானைப் போல
பொறுக்கமாட்டாது
முற்கள் தாங்கும் படுக்கையொன்றில்
திருகி வீசியெறிகிறேன் இவளை
தின்றுவிடும் தாபத்தோடு
தலை பொருந்தச்
சுழன்று விழுந்துகிடக்கிறாள்
ஜெஸிகா.

ஓவியம் : டாவின்ஸி

Comments

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
க(வி)தை

ஜெஸிகா - பெயரே ஒரு ஓவியக்கவிதை தான்.

(மற்றபடி அர்த்தம் விளங்கயில்லை)
Unknown said…
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு வாழ்க்கையைப் பார்க்கவே முடியவேயில்லை. ஜெஸிகா.....

வாங்க ஆதவா, ரொம்ப நாளா ஆளைக்காணாமேன்னு நினைச்சேன்
:-)
ஹேமா said…
உங்கள் பாணியில் அழகானதொரு கவிதை !

Popular Posts