பாகிஸ்தானை வி(மி)ரட்டிய இந்தியா

130802

எந்த போட்டியானாலும் சரி, எப்படிப்பட்ட வலிமை வாய்ந்த அணியாக இருந்தாலும் சரி, இத்தனை கூட்டமோ, போட்டி அழுத்தமோ, உற்சாகமோ, ஏன் கோபமோ கூட ஏற்படாது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா போட்டியில் இவை ஒருசேரக் காணப்படுவது எழுதப்படாத விதியாக இருக்கிறது. நேற்றிரவு கோடைமாத தீபாவளி போல ஊரெங்கும் வெடிச்சத்தங்கள், கேளிக்கைகள், கூச்சல்கள்…. நாடு முழுக்க உற்சாக கொண்டாட்டங்கள், இந்தியா மேல் பெட் கட்டியவர்களின் வெறித்தனமான வெற்றிகள் என இந்திய நாட்டின் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டுவிட்டது. விளையாட்டு எனும் உணர்வுடன் இன உணர்வையும் பகையுணர்வையும் சேர்த்தே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். பாகிஸ்தான் எனும் நாட்டு வீரர்கள் நமது சகோதர்கள் எனும் உணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை… பாகிஸ்தானிலும் இதே நிலைமைதான்.

தோனியின் அதிர்ஷ்டம்தான் வெற்றிக்குக் காரணம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மை என்ன? தோனியின் மதியூகமும் வீரர்களின் ஒருங்கிணைந்த சிறப்பான ஆட்டமும்தான் காரணம்!

சேவக் எப்பொழுதும்போல அதிரடியான துவக்கம் கொடுத்தார். கடந்த 2003 ல் சச்சினும் சேவாக்கும் மிரட்டிய ஊபர் கட்டுகள் தேஜா வூ போல திரும்ப வந்தன. சேவாக் இருந்தாலே ஸ்கோரிங் ரேட் மளமளவென எப்பொழுதும் ஏறும். அதனால்தான் நட்சத்திர வீரரான டெண்டுல்கரை விடவும் சேவக்கை அவுட் செய்ய எல்லா அணிகளும் துடிக்கின்றன. அதற்குத் தோதாக இவரும் நடையைக் கட்டுவார் என்பது வேறு விஷயம். மூன்றாவது ஓவரில் குல்லின் பாலில் நான்கு பவுண்டரிகள் அடித்த பொழுதே அப்ரிடிக்குத் தெரிந்துவிட்டது சீமிங் ஆகாது என்று. இருப்பினும் வாஹாப் நேற்று அபாரமான பவ்லிங் செய்தார். அவரது ரிவர்ஸ் ஸ்விங்கை யாராலும் தொடமுடியவில்லை என்பதுதான் ஹைலைட். சேவக் எதற்காக UDRS ஐ வீணாக்கினார்? அது ஒரு க்ளீன் அவுட். எதிரே நின்றுகொண்டிருந்த சச்சினிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். 18000 ரன்களைக் குவித்த சச்சினே ஒரு ஆட்டத்தில் கோலியிடம் கேட்டுச் செல்லும்பொழுது சேவக் கேட்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது?

சச்சினின் இன்னிங்ஸ் எதிர்பார்த்தது போலில்லை. நேற்று சச்சின் ரன் எடுக்க ரொம்பவும் சிரமப்பட்டார்… இன்னும் சொல்லப் போனால் திணறினார். அப்ரிடி, வஹாப், அஜ்மல், ஹஃபீஸ் என ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி திணறடித்துக் கொண்டிருந்தார்கள்…. நேற்று ஒருவேளை சச்சின் சதமடித்திருந்தாலும் அதை நிச்சயம் நான் பெரியளவில் பாராட்டியிருக்க மாட்டேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பவுலிங்கைப் பாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக வாஹாப்… மிகச்சிறப்பான பவுலிங்.. யுவ்ராஜைத் தூக்கிய யார்க்கர் ஒன்றே போதும்.. ஒரு லீடிங் எட்ஜில் கோலியும் சென்றுவிட தோனியின் திணறல் ஆட்டத்தைக் கண்டாலே எரிச்சலாக வந்தது. ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க வேண்டாம் பாஸ், குறைந்தபட்சம் “எலி”காப்டர் ஷாட்டாவது அடித்து பவுண்டரிக்கு விரட்டலாம்… இந்த லட்சணத்தில் நான் சிறப்பாகத்தான் விளையாடுகிறேன் என்று பெரிமிதம் வேறு. காம்பிர் இறங்கிக் கொண்டேயிருந்தவர் ஒரு கட்டத்தில் இறங்கியதற்கு ஃபீல் பண்ணியிருப்பார்..

நேற்றைய அபார ஆட்டத்தில் ஒருவருடைய பங்கு மிக முக்கியமானது. அது ரெய்னா.. இந்த இளம் வீரர் ஏழாவது இடத்திற்குத் தன்னை எடுத்தது சரிதான் என்று ”அடித்துச்” சொல்லுகிறார்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் தவிர வேறஎவரும் சிறப்பாக பந்து வீசாததும், மிக மோசமான ஃபீல்டிங்கும்தான் அவர்களது தோல்விக்கு மிக முக்கிய காரணம். சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தாலே இந்தியாவை 200 க்குள் சுருட்டியிருக்கலாம். 45 ரன் இருக்கும்பொழுது சச்சின் கொடுத்த சுலபமாக கேட்சை மிஸ் செய்ததால் அவர்களது தோல்விக்கு முதலடி அங்கேயே விழுந்திருக்கிறது. தொடர்ந்து நான்கு முறை பிழைத்துக் கொண்ட சச்சின் ஐந்தாம் முறை அப்ரிடியின் அபார கேட்சில் வெளியேறியபின்னர்தான் பாகிஸ்தான் மூச்சு விட ஆரம்பித்தது. மிக சுலபமாகத் தடுக்கவேண்டிய பந்துகளெல்லாம் பவுண்டரிகளானது. மற்றபடி பவுலிங் மற்றூம் பேட்டிங் இரண்டிலுமே பாகிஸ்தான் சரியாகத்தான் செய்தது.

இந்தியாவின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்கதொன்று. மொஹாலி பிட்ச், சுழலுக்கு ஆகாது என்பதால் அஸ்வினைத் தூக்கிவிட்டு நெஹ்ராவை உள்ளிழுத்தார். இதுவொரு நல்ல உத்தி. ஆனால் இந்திய பேட்டிங்கின் போதே பிட்ச் நன்கு மாறிவிட்டது. கிட்டத்தட்ட பவுலிங்குக்கு ஏற்றதாக மாறியதால் ரிவர்ஸ் ஸ்விங்குகளையும் லெக்/ஆஃப் கட்டர்களையும் ஸ்பின்னர்களையும் தாக்குபிடிக்க முடியவில்லை. என்னதான் ஜாஹீரின் பந்தை அடித்தாலும் அவர் திறமையாக பந்துவீசியதாகவே நினைக்கிறேன். அதேசமயம் முனாபும் நெஹ்ராவும் ”கட்டர்களை” மிக மிக அருமையாக வீசினார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பந்தைத் தொடக்கூட முடியவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்லோ பால்தான் அதிகமாக வீசினார்கள். பேட்ஸ்மென்களுக்கு பாலைக் காட்டி பூச்சாண்டி காண்பித்தார்கள்! தென்னாப்பிரிக்காவுக்கெதிரான பந்துவீச்சில் நெஹ்ராவைப் பழித்த எல்லாருமே இன்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மோசமான செயல்!!

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன… 100 க்குள் மூன்று விக்கெட்டுகள் விழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக அதன்படியே சென்றது. பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. கூடவே தேவையான ரன்ரேட்டும்…. முனாப், நெஹ்ரா பந்துகளை வேறு தொட முடியவில்லை. ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்லாருமாக கலக்குகிறார்கள்…. அதைவிட ஃபீல்டிங்கும் படுபிரமாதம். ஆஸ்திரேலியாவுக்கெதிராக செய்த அபாரமான ஃபீல்டிங் இங்கேயும் தொடர்ந்தது. பவுலர்கள் 36 ஓவர் வரையிலும் உதிரிகளே கொடுக்காமலிருந்தது சிறப்பான ஆச்சரியம். உதிரிகள் கொஞ்சம் அதிகம் போயிருந்தாலும் நமக்கு சங்குதான்.

முன்பே சொன்னது போல பாகீஸ்தான் பவுலிங்கில்தான் திறமையானவர்களே தவிர, பேட்டிங்கில் அல்ல. Mediocre பேட்ஸ்மென்களாக இருந்ததாலேயே தோல்வியைத் தழுவினார்கள். அதேசமயம் மிக மட்டமான, மோசமான ஃபீல்டிங்கினால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டனர். தவிர, அப்ரிடி இறங்கிய போதே பேட்டிங் பவர்பிளே எடுத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் ப்ரஷர் கொடுத்திருக்க முடியும். எப்பொழுதும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கடைசி நுனி வரை இழுக்கும்… இப்போட்டி அப்படியல்ல. 

தோனி இத் தொடர்முழுக்க ஆடவேயில்லை. எனினும் எப்படி கொண்டாடப்படுகிறார்?? அவரது யூகம், கேப்டன்ஸி, அரவணைப்பு… தேவையான இடத்தில் பவுலிங்கை மாற்றியது, அதற்குபகாரமாக விக்கெட் விழுந்தது. எல்லாமே தோனியின் ஆட்டவியூகம்தான்!! அதனால் தப்பிக்கிறார்!! ஒருவேளை தோற்றிருந்தால் நேற்று கேப்டன் பதவியிலிருந்தே அவரைத் தூக்கவேண்டியிருக்கும்!!

மேன் ஆஃப் த மேட்ச் வஹாபுக்குக் கொடுத்திருக்கலாம்… டீம் தோற்றுவிட்டதால் சம்பிரதாயப்படி ஜெயித்த டீமுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இதற்கு முந்திய ஆட்டங்களில் சச்சின் சிறப்பாக ஆடியதற்குத் தரப்படவில்லை. இப்பொழுது தரவேண்டியதாகிவிட்டது!!!

வெல்டன் ப்ரதர்ஸ்… இன்னும் ஒரேயொரு போட்டி…. பாகிஸ்தானைக் காட்டிலும் இலங்கையிடம் இன்னும் நன்கு உழைக்கவேண்டும்!!!

நாளை மீண்டும் இன்னொரு வியூகத்தில் சந்திப்போம்!!

Comments

Unknown said…
பய புள்ளைங்க வளரணும்னு சொல்றீங்க ஹிஹி!
ஆதவா!
தோத்தா நேத்தே தோத்திருக்கனும், இலங்கைகிட்ட தோத்தானுக, அப்புறம் இருக்கு.

எப்டி பார்த்தாலும் பாகிஸ்தான்காரன் நம்ம பய.. ஆனா இந்த இவனுங்க இருக்கானுகளே, ஸ்ரீலங்காக்காரனுக....

பங்காளிகிட்ட தோக்கலாம், பகையாளிகிட்ட கூடாது.

சனிக்கிழமை இரவு கடைசி ஐந்து ஓவர்களில் சச்சினைக் கேப்டனாக்கி, கையில கப்பைக் கொடுத்து கிரவுண்டு முழுக்க சுத்திவரதைப் பார்க்கனும்.. வெயிட்டிங் ஃபார் ச்னி இரவு. :-)
ஆதவா said…
கவலைபப்டாதீங்க... இலங்கைகிட்ட ஒரு வீக்னெஸ் இருக்கு... அது இந்தியாவுக்கு சாதகம்தான்... ஜெயிச்சுப்புடலாம்
Unknown said…
இது எனக்கு வந்த மடல்

Whenever MS Dhoni has lifted a major Cup, it was preceeded by a 'tie' - T20 WC Vs

Pakistan, IPL 2010 Vs Kings XI Punjab, Champions League 2010 Vs Victoria and now

World Cup 2011 Vs England. So ...............................??????????????

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்களேன்
Jayadev Das said…
\\ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க வேண்டாம் பாஸ், குறைந்தபட்சம் “எலி”காப்டர் ஷாட்டாவது அடித்து பவுண்டரிக்கு விரட்டலாம்… \\ ஹா ..ஹா ..ஹா .. நல்ல தமாஷ். \\இந்த லட்சணத்தில் நான் சிறப்பாகத்தான் விளையாடுகிறேன் என்று பெரிமிதம் வேறு.\\ கள்ளச் சாமியார், நடிகையுடன் இருந்தது நான்தான் என்றோ, 1.76 கோடி ஊழல் பண்ணியவன் நான்தான் செய்தேன் என்றோ எப்போதாவது ஒப்புக்க போகிறார்களா?
// சேவக் எதற்காக UDRS ஐ வீணாக்கினார்? அது ஒரு க்ளீன் அவுட். எதிரே நின்றுகொண்டிருந்த சச்சினிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். //

பிரபு இடுகையில் இட்ட அதே பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்கிறேன்... அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தவறாக சொல்லிவிட்டார்... ஆனார் ஆலோசித்து தான் ரிவியூ கேட்டனர்... மேட்ச் வீடியோ இருந்தால் மறுபடி பாருங்கள்...
// பேட்ஸ்மென்களுக்கு பாலைக் காட்டி பூச்சாண்டி காண்பித்தார்கள்! //

நைஸ்...
// தென்னாப்பிரிக்காவுக்கெதிரான பந்துவீச்சில் நெஹ்ராவைப் பழித்த எல்லாருமே இன்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மோசமான செயல்!! //

அதற்காக இறுதிப்போட்டியில் நெஹ்ராவை சேர்த்து அஷ்வினை கழட்டிவிட்டால் முட்டாள்த்தனம்...
விளையாட்டு எனும் உணர்வுடன் இன உணர்வையும் பகையுணர்வையும் சேர்த்தே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். பாகிஸ்தான் எனும் நாட்டு வீரர்கள் நமது சகோதர்கள் எனும் உணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை… பாகிஸ்தானிலும் இதே நிலைமைதான்.//

வணக்கம் சகோ, உங்களின் நேர்மையினை இவ் இடத்தில் ரசிக்கிறேன்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன… 100 க்குள் மூன்று விக்கெட்டுகள் விழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக அதன்படியே சென்றது.//

ஆஹா.. நினைக்கிறதெல்லாம் நடந்திருக்கில்ல.

சகோ, வருகின்ற சனிக்கிழமையுடன் கிறிக்கற் முடிகிறது. இனி நாங்கள் மீண்டும் பழைய ஆதாவாவின் பதிவுகளைப் படிக்கலாம் என்று சொல்லுறீங்க.
தோனி இத் தொடர்முழுக்க ஆடவேயில்லை. எனினும் எப்படி கொண்டாடப்படுகிறார்?? அவரது யூகம், கேப்டன்ஸி, அரவணைப்பு… தேவையான இடத்தில் பவுலிங்கை மாற்றியது, அதற்குபகாரமாக விக்கெட் விழுந்தது. எல்லாமே தோனியின் ஆட்டவியூகம்தான்!! அதனால் தப்பிக்கிறார்!! ஒருவேளை தோற்றிருந்தால் நேற்று கேப்டன் பதவியிலிருந்தே அவரைத் தூக்கவேண்டியிருக்கும்!!//

ஆங்... ஆங்...இது வேண்டாம். தோனியின் தலமைத்துவம், முடிவுகள் எடுக்கும் திறமை, சம்யோசிதமாக வீரர்களை மாற்றி, பவுலிங்கை மாற்றும் திறமையினை ரசிக்கிறேன். அவர் ஒரு நல்ல வீரர்..

உங்களின் அலசல் மச்சை அப்படியே பார்த்தது போன்ற பிரமிப்பை தருகிறது. நன்றிகள் சகோதரம்.