உலகக்கோப்பை 2011 : Updates (03-03-11)

129298இம்முறை கனடா ஜிம்பாப்வே பற்றியோ, இலங்கை – கென்யா பற்றியோ, நெதர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் பற்றியோ எழுதப்போவதில்லை. ஏனெனில் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதும், எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதும் முன்பே கணித்த விஷயம்தான். ஆனால் போன பதிவில் சொன்னது போல கணிப்பில் தவறிய, இந்த உலகக் கோப்பையின் மிக முக்கிய திருப்பங்களான போட்டிகளில் ஒன்றாக இங்கிலாந்து – அயர்லாந்து போட்டி உண்டாகுமென்று நினைக்கவேயில்லை.

இங்கிலாந்து – அயர்லாந்து

இங்கிலாந்து – 327/8
அயர்லாந்து  - 329/7

3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி

துரதிர்ஷ்ட வசமாக இந்த போட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்துதான் வெற்றி பெறும் எனும் நம்பிக்கையோடு வெளியூர் கிளம்பி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தால் Ireland won by 3 wickets என்று டிவியில் ஃப்லாஷ் செய்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நஞ்சமல்ல, ரொம்பவே ஏமாற்றம்தான். ஹைலைட்ஸ் மட்டும்தன் பார்க்க முடிந்தது. அயர்லாந்தின் பேட்டிங் பலம் என்று சொன்னால் அது ப்ரயன் சகோதர்கள் தான். 2007 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் முதல்சுற்றுடன் வெளியேற முழு முதற்காரணம் இவர்கள் இருவரின் ஆட்டம் நிலையான ஆட்டமும் ஃபார்ம் இல்லாத பாகிஸ்தான் வீரர்களும்தான். அந்த போட்டியில் நீல் ஓ ப்ரயன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேன் ஆப் த மேட்ச் விருதும் பெற்றிருந்தார். இம்முறை சகோதரர் கெவின் ஓ ப்ரயன் அந்த பெருமையைத் தேடிக் கொண்டுள்ளார். 6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள்…  ஐம்பதே பந்துகளில் சதமடித்து உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த சாதனையும் வேறு. இங்கிலாந்தின் ஒருவர் பந்தையும் விட்டு வைக்கவில்லை. அவருடன் Cusack நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தார். 129292

ஆனால் இந்த போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற அவர்களின் திறமை மட்டுமல்ல, இங்கிலாந்தின் மோசமான ஃபீல்டிங்கும் பவுலிங்கும்தான் காரணம். அநாயசமாகப் பிடிக்கவேண்டிய கேட்சுகளை தவறவிட்டார்கள். மிஸ் ஃபீல்டிங், கவனக்குறைவு, மோசமான பந்துவீச்சு போன்றவை இங்கிலாந்து வேணுமென்றே செய்வதைப் போல இருந்தது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ப்ரயர், ஒருசில எட்ஜ் களையும், அழகான கேட்சுகளையும் தனது மோசமான திறமையால் விட்டுக் கொடுத்து அயர்லாந்தை வாழவைத்துக் கொண்டிருந்தது, ஹைலைட்ஸ் பார்க்கும் பொழுதே எரிச்சலாக இருந்தது… பாவம் ஆங்கிலேய மக்கள்!!  இந்தியாவிடம் ஆடியபோதிருந்த effort இங்கிலாந்திடம் நேற்று சுத்தமாக இல்லை, (கடைசியாக அயர்லாந்து அடித்த பவுண்டரியை தடுக்க இங்கிலாந்து வீரர் ஓடி வருவார் பாருங்கள்.. எவ்வளவு மந்தமாக!!)

சரி, இதற்கும் மேல் எழுத ஒன்றுமில்லை. ஆங்கிலேயனை இந்தியன் அடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஐரிஸ், காறி உமிழ்ந்துவிட்டது…

இந்த உலகக் கோப்பையில் ஒருசில அதிர்ச்சிகள் நாடகத்தனமாகவே தெரிகின்றன. இதனை பத்திரிக்கைகளும் நேற்று உறுதிபடுத்திருக்கின்றன. மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்குமோ என ஐசிசிக்கு சந்தேகமும் எழுந்திருக்கிறது என்றாலும் ஐசிசி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றுதான் தோணுகிறது. என்னதான் பெங்களூரு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகம் என்றாலும் இப்படியா என்று பலரும் உச்”சாதாபப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இனிவரும் போட்டிகளை கணிப்பதாக இல்லை!!! தவிர நாக் அவுட் மேட்ச் வேறு இருக்கிறது…. பார்ப்போம்!!


புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Sri Lanka 3 2 1 0 4
Pakistan 2 2 0 0 4
Australia     2 2 0 0 4
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     2 1 1 0 2
Canada     2 0 2 0 0
Kenya 3 0 3 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         2 1 0 1 3
England     3 1 1 1 3
West Indies    2 1 1 0 2
South Africa 1 1 0 0 2
Ireland 2 1 1 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 2 0 2 0 0


Comments

என்னடா... நேத்து சூப்பரான மேட்ச் நடந்துதே இன்னும் இவர் வரலியேன்னு பார்த்தேன்.
Super match.. good review..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html
Unknown said…
கடைசி இரண்டு ஓவருக்கு நான் வீட்ல இல்லை, ஆக்ட்சுவலா நான் உங்களுக்குத்தான் கூப்பிடலாம்ன்னு நினைச்சேன். ஆனா அப்பா ஒவ்வொரு பாலுக்கும் போன் பண்ணி அப்டேட் பண்ணிகிட்டே இருந்தாரு. நல்ல மேட்ச்.
ஆதவா said…
@ கருன்!!

கொஞ்சம் பிஸி & கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன்.

@ முரளி, நீங்க கூப்பிட்டிருந்தீங்கன்னா நாட் ரீச்சபில்ல இருந்திருக்கும். போட்டி முடிஞ்சதுக்கப்பறமாத்தான் பார்த்தேன்..
ஐயர்லாந்து, என்னவொரு உத்வேகம், எதிர்பாராத நான்காவது விக்கற்றின் பின்னரான அதிரடி. செமையாக ஆடியிருக்கிறார்கள் ஐரிஸ் வீரர்கள். அதுவும் குறைந்த பந்துகளில் சதம். ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது இதனைத் தானோ?

Popular Posts