சச்சின், ஜூஜூ, 1 கிலோ தங்கம்

சென்ற இரண்டு வாரங்கள் முழுக்க எந்த சேனலும் அனுமதிக்கப் படவேயில்லை. ESPN, Star Cricket, Star Sports என மூன்று சேனல்களையும் மாற்றி மாற்றி போட்டு சீரியல் பைத்தியங்களின் கோபத்திற்கு எல்லாரும் உள்ளாகியிருப்பார்கள். ஏப்ரல் வரைக்கும் இதே கதிதான். அதற்குப் பின்னர் அரசியல், தேர்தல் பரபரப்பு, வாக்கு, ஆட்சி என்று ஜூன் வரைக்கும் சேனல்கள் பிஸி.

இன்று மதியத்திற்கு மேல் எந்த வீட்டிலும் மருந்துக்குக் கூட சன் டிவியோ, கே டிவியோ ஓடாது என்று நினைக்கிறேன். உலகக் கோப்பையின் மிக முக்கியமான, எல்லாரும் எதிர்பார்க்கும் மேட்ச், இலங்கை – ஆஸ்திரேலியா மேட்ச். ப்ரடிக்‌ஷன்கள் ஒத்துவராது என்பதால் அட்லீஸ்ட் முதல் இன்னிங்ஸ் வரைக்குமாவது பொறுத்திருப்போம்.

கிரிக்கெட்டுக்கு இடையே, Best of luck Sachin எனும் விளம்பரம் போடப்படுகிறது. குழந்தைகள் எல்லாரும் சச்சினை தயார் செய்து கிரவுண்டுக்கு அனுப்புவது போல இருக்கும் அந்த விளம்பரத்தில் சிறுமி ஒருத்தி வந்து “ பெஸ்ட் ஆப் லக் சச்சின்” என்று சொல்வது செம க்யூட். அநேகமாக எல்லாரும் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்கு வீடியோ இணைத்துள்ளேன். பாருங்கள்.

சென்ற ஐபில் களில் கோலோச்சிய வோடபோன் ஜூஜூ முட்டை பொம்மை விளம்பரங்கள் மீண்டும்…. இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கமிங் சூன், கமிங் சூன் என்று இரண்டு விளம்பரங்கள் மனதைக் கவராத வண்ணத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, படாரென ஒரு மாற்றம். Vodafone 3G என்று ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. ஒரு ஜூஜூ தெருவின் ஓரத்திலிருக்கும் பெட்டிக்குள் சென்று ஜூப்பர் மேன் மாதிரி மாறி வெளியே வருகிறது. பழைய ஜேம்ஸ்பாண்ட் பேக்ரவுண்ட் ஸ்கோர் இசைக்க, ஜூப்பர் மேனாக பறக்கிறது. சாய்ந்துவிழும் கட்டிடத்திலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறது. புரியாத புதிர்களைத் தீர்த்துவைக்கிறது. துப்பாக்கியின் தோட்டாவை விடவும் வேகமாக ஓடுகிறது, பாதாளத்தில் விழுந்துவிடாமல் ரயிலை காக்கிறது.. அவ்வளவு ஏன், பூமியின் வேகத்தையே அதிகப்படுத்திவிடுகிறது!!!  3G க்கு இதைவிட மிக அருமையாக விளம்பரம் எடுக்க முடியாது! மிஸ் பண்ணிடாதீங்க… பாருங்க…

சன் டிவியில் தங்கமழை என்று ஒரு கேம் ஷோ ஓடுகிறது. அதில் குடும்பத்திலிருக்கும் நான்கு பேர் கலந்து கொள்ள, 16 கேள்விகள் கேட்கப்படுகிறது. எல்லா கேள்விகளுக்கும் சரியான விடை சொல்பவர்களுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படுகிறதாம்…. யாருகிட்ட கதை விடுறீங்க??

கேள்விகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் என்ன?, ரஜினி, இயந்திரமாக நடித்த படத்தின் பெயர் எந்திரன் என்பது சரியா தவறா? போன்ற மிகக் கடினமான கேள்விகள்.. ஒவ்வொரு ரவுண்டுக்கும் கிராம் கணக்கில் பரிசு ஏறிக் கொண்டே இருக்கிறது. அதிலும் கேள்வி கேட்கும் அந்த பெண் ஏதோ சரக்கடித்துவிட்டு வந்து பேசுவதைப் போல அழுத்தி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறாள்….

அட அறிவுகெட்ட சண்டிவி காரனுங்களா, அவனவன் நல்லா படிச்சுட்டு பொது அறிவுல புலியா இருந்தும் ஒண்ணும் பண்ணமுடியாம இருக்கானுங்க, இவுங்க முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டுட்டு 1 கிலோ தங்கம் தராங்களாம்… நம்பறமாதிரியா இருக்கு??? நல்லா படிக்கிற மாணவர்கள்கிட்ட சிக்கலான கேள்வியைக் கேட்டு பணம் கொடுத்தா அது எப்படியிருக்கும்???

இன்னிக்கு 22 காரட் தங்கம் 1 கிராம் 2000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள், 1 கிலோவுக்கு ஆயிரம் கிராம். சோ, 1000 X 2000 = 2 கோடி ரூபாய் ஆகிறது!!! சன் டிவி அள்ளிக் கொடுக்கும்னு நினைக்கிறீங்களா??? மானமுள்ள எவனும் நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கவே மாட்டான்….

Comments

ஆமா அந்த விளம்பரம் அருமை..
ஹேமா said…
ஆதவா....கிரிக்கெட் பைத்தியமாவே ஆயிட்டீங்கபோல !
வணக்கம் நம்ம கிறிக்கற் ஆடுகள அதிரடி வர்ணணையாளர் ஆதவா அவர்களே! சும்மா ஒரு Flow இலை சொல்லுறேன்.

இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் வோர்ம் அப் ஆட்டங்கள் எல்லாம் ஒரு சில மணி நேரத்தினுள் முடிவடைந்து விடுகின்றன. விறு விறுப்பு, சுவாரசியம் எல்லாம் வெறும் சொதப்பல். உலகத்திலை உள்ள லோக்கல் அணிகளின் மச்சை விட இந்த உலகக் கிண்ண ஆட்டங்கள் மோசம். அதுவும் நீண்ட நேரம் பார்வையாளர்களை கவர்ந்த ஆட்டங்கள் இந்தியா இங்கிலாந்து, தெ.ஆபிரிக்கா- மேற் இந்திய தீவுகள், இங்கிலாந்து அயர்லாந்து ஆட்டம்.

இன்றைய ஆட்டத்தில் இலங்கையின் ஆரம்பம் கொஞ்சம் அசதியாக தான் இருக்கிறது, இலங்கை மண் கவ்வுமோ தெரியவில்லை. ஆனால் நேற்றைய பங்களாதேஷ் போட்டி மாதிரி இல்லாமல் நீண்ட நேரம் நடை பெறும் என நம்புறேன். நீங்கள் விளம்பரங்களையே விமர்சித்து விட்டீர்கள். நானெல்லாம் விளம்பர நேரத்திற்கு அடுத்த சணல் மாத்துற ஆளப்பா. அதாலை நோ more விமர்சனம் for விளம்பரம்.
இன்னிக்கு 22 காரட் தங்கம் 1 கிராம் 2000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள், 1 கிலோவுக்கு ஆயிரம் கிராம். சோ, 1000 X 2000 = 2 கோடி ரூபாய் ஆகிறது!!! சன் டிவி அள்ளிக் கொடுக்கும்னு நினைக்கிறீங்களா??? மானமுள்ள எவனும் நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கவே மாட்டான்….//

ஏற்கனவே நீங்கள் ராஜ் ரீவி பற்றி எழுதிய பதிவில் இந்தப் போட்டி நிகழ்ச்சி பற்றி ஒரு கருத்து சொன்னேன். ‘ஏமாற்றுவோர் இருக்கும் வரை..............

இதை இன்னொரு வாட்டி முழுமையாக சொல்ல முடியலை. கண்ணீர் தான் வருது, காரணம் நம்ம தொலைக்காட்சிகளால் General knowledge ஐ வளர்க்க முடிவதில்லை. சும்மா உட்டாலக்கடி டப்பா பீசு கேள்விகளை தான் கேட்கிறார்கள். மூளைக்கு வேலை கொடுப்பது போல நல்ல தத்ரூபமான, கேள்விகளை கேட்க மாட்டார்கள். பொது அறிவு இவர்களின் போட்டிகளில் பெரிதாக இருக்காது.

இந்த மாதிரி நிகழ்ச்சி வரும் போது ரீவியை National geographic channel அல்லது Animal planet பக்கம் மாத்தலாம் என்று தோன்றுது.
நம்ம குஷ்பூ மேடத்தின் பெரிய வீட்டு ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டினை ரசிப்பதற்காக பெரும்பாலான ரசிகர்கள் ஜெயா டீவியின் தங்க வேட்டையை பார்ப்பதாக கேள்வி.
ஆதவா said…
நன்றிங்க கருன்.

@ஹேமா.... இப்போதைக்கு கிரிக்கெட்தானுங்க கடவுள்!!

@ நிரூபன், உங்க நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. குட்டி குட்டி மேட்சுகளாகவே இருப்பதற்கு அந்தந்த அணிகளை ஐசிசி வளர்த்துவிடவில்லை என்பதுதான் காரணம். பெரிய அணிகளோடு கத்துக்குட்டிகள் அதிகம் மோத மோத சிறப்பான அணியாக உருவெடுக்கும். அப்பறம்.... விளம்பரம் பார்த்தீங்கன்னா, சொல்லிவெச்சமாதிரி எல்லா சேனல்கள்லயும் ஒரேமாதிரி போட ஆரம்பிச்சுட்டாங்க...

இன்னிக்கு மேட்ச் இலங்கை ஆரம்பத்தில தடுமாறீனாலும், கொஞ்சம் ஸ்டடி ஆயிடுச்சு. தொடர்ந்து சங்ககரா சிறப்பாக ஆடறார்.. ஆனா மழை வந்திடுச்சு........ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...
நன்றி நண்பா
Anonymous said…
1000*2000= 20 இலட்சம்
விஜி said…
துப்பாக்கியின் தோட்டாவை விடவும் வேகமாக ஓடுகிறது, பாதாளத்தில் விழுந்துவிடாமல் ரயிலை காக்கிறது..//

இதெல்லாம் நம்ம கேப்டன் படத்தில நீங்க பார்த்ததில்லையா? :)
நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறேன்..படிச்சுட்டு வரேன் இருங்க...எப்படி இருந்தாலும் நல்லாவே எழுதி இருப்பீங்க
சன் டி.வி நிகழ்ச்சி மேட்டர் சூப்பரு...
சச்சின் சிறுமி விளம்பரம் பார்த்திருக்கிறேன்...மறுபடியும் பார்த்தேன்..பார்ப்பேன்...