No இலக்கியம் No தமிழ்

வணக்கம் மக்களே,

நலமாயிருக்கீங்களா? ரொம்பநாளைக்கப்பறமா கடைய தொறந்து தூசு தட்டினாலும் ஒருமாதிரி ஃப்ரென்ஷ்னெஸ் மட்டும் வரதேயில்ல, கொஞ்சம் மூக்கப் புடிச்சுட்டு வந்துட்டு போயிடுங்கன்னு போர்டு போடவேண்டியிருக்கு, இருக்கட்டும்,

வேலை, குடும்பம், பொறுப்பு, லொட்டு லொசுக்குனு ஆயிரத்தெட்டு காரணம் சொல்ல விரும்பல. எழுதலை… அவ்வளவுதான். இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு கேட்கப்படாது. (ஐ ஸ்பீக்கிங் நோ கிராஸ் ஸ்பீக்கிங்.. சிட் டவுன்) ஆனா ஒரு பயம் மட்டும் இருந்துட்டே இருந்துச்சு. இப்படியே எழுதாம போயிட்டாக்கா, என்னதான் பண்றது? (ஒண்ணும் பண்ணமுடியாது, நீ எழுதாமப் போயி ஆட்சி ஒண்ணூம் மாறிடல) உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். எவன்யா உக்காந்து டைப் அடிச்சிட்டி இருக்கிறதுன்னு வேற லைனுக்குப் போயிட்டேன். ஆனா டைப்படிச்ச கையும் இலக்கியம் பேசின வாயும் சும்மா இருக்காதாம்ல… அதான்…. ஓடி வந்துட்டேன். (சரி சரி விடுறா சூனாபானா)

அதென்ன நோ இலக்கியம் நோ தமிழ்னு ஒரு போர்டு…? இந்த இலக்கியத்தக் கண்டாலே நாக்கப் புடிங்கறலாம்னு தோணுது.. இலக்கியத்தில ஏதாச்சும் எழவு படிக்கணும்னா நிறைய விசயத்தை தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு, இல்லாட்டி ஒரு எழவும் எழுத முடியாது. (நோ வொர்க் நோ கெய்ன்) அப்படியும் மீறி படிச்சுட்டா, நம்மளை என்னவோ குத்தம் செஞ்சிட்டமாதிரியேத்தான் பார்க்கிறாங்க. ஏதோ நான் உர்ருனு இருக்கிறமாதிரியும், எனக்கு ஜாலி மூடே வராத மாதிரியும்….. இதைவிட கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா, போனதடவ சேர்தளம் மீட்டிங் போட்டிருந்தப்போ போனேன். அங்க நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க…. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு புக்கப் பத்தி பேசினாங்க, அதிலயும் செல்வேந்திரன் அநியாயத்துக்கு புக் படிக்கிறாரு போல…

இந்த புத்தகத்தில இவரு என்ன சொல்லியிருக்காருன்னா…… அதேமாதிரி இந்த புத்தகத்தில அவரு சொல்வாரு பாருங்க…. இந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா…. இவரும் அவரும் இதைத்தான் சொல்றாங்க தஸ்தாவெஸ்கியோ, புஸ்தாவெஸ்கியோ யாரோ ஒருத்தரு… அவர் இதை அப்பவே எழுதிட்டாரு.. அட நீங்க சொல்ற ஆளு போர்ஹேங்க….. அவரோட ஒண்ணு விட்ட சித்தப்பா பையனும் ஒரு இலக்கியவாதிதான்…..

அட யப்பா!!! எப்படீங்க இதெல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிறீங்க? சின்ன வயசில எங்கப்பா புத்தகத்தைக் கொடுத்து, படிடான்னு சொன்னதுக்கப்பறம் கக்கூஸைத் தவிர மத்த எடங்கள்லலாம் புக்கும் கையுமா அழஞ்சேன். எங்கம்மா “இவரு பெரிய புத்தகப் புலி”ன்னு திட்டுவாங்க. ஆனா இப்பல்லாம் புத்தகப்புளி ஆகி கரைஞ்சு போயிட்டேன். எவன் உட்கார்ந்து படிக்கிறது?????

அதனால நோ இலக்கியம்…… (பக்கத்தில ஒரு ஸ்டார் போட்டு வைப்போம்… கண்டிஷன்ஸ் அப்லைன்னு பிற்காலத்தில அவதிப்படவேண்டாம் பாருங்க!@!@)

திடீர்னு ஞானோதயம் வந்தமாதிரி எழுதலாம்னு ஒருநாள் உட்கார்ந்தா, கீபோர்ட்ல விரல் அடிச்சுட்டு இருக்கு, ஆனா எழுத்து ஒண்ணும் வந்தமாதிரி இல்ல. என்னமோ புதுசா எழுதப் பழகறாப்ல ஒரு ஃபீலிங்கு…. அப்பறமா ரொம்ப யோசிச்சுட்டு சினிவர்சல் நு ஒரு ப்லாக் ஆரம்பிச்சேன். படத்தோட விமர்சனங்கற பேர்ல குத்துமதிப்பா எழுதப் பழகிட்டு இருக்கேன். திடீர்னு ஒருத்தர் வந்து, எதுக்கு ரெண்டு ப்லாக் ஆரம்பிச்சேன்னு கேட்டாரு, எனக்கும் அப்படித்தான் தோணுச்சு, உண்மையிலயே அந்த ப்லாக் பெரிசா போணியாவாதுன்னுதான் ஆரம்பிச்சேன். ஆனா பரவாயில்ல ஏதோ பொழப்பு ஓடிச்சு. இப்ப இந்த முக்கியமான தருணத்தில ரெண்டையும் ஒண்ணாக்கி, உறுப்படியா இல்லாட்டியும் ஏதாவது ஒண்ணு எழுதுன்னு மிரட்டல் வந்ததால அதையும் செஞ்சிடலாம்னு தோணுது. (ஆமா… பெரிசா கோக்கும் பெப்ஸியும் இணையறமாதிரி நெனப்பு??)…

மக்களே…. வெட்டியா ஒரு பதிவு எழுதலாம்னு இந்த பதிவு மூலமா நிரூபிச்சுட்டேன் இதுக்குப் பின்னால் வரும் பதிவுகளைப் படிச்சு உங்க பாவத்தைக் கூட்டிக்கோங்க……………

அன்புடன்
ஆதவா..

சும்மா போகக்கூடாது…. ஒரு சூடான படத்தோட முடிச்சிக்கலாம்.

hottie

Comments

ஆதவா said…
கொடுமைங்கங்ணா...
இப்பத்தான் வந்திருக்கேன், அதுக்குள்ள விளம்பரமா?
ஹேமா said…
வாங்கோ வாங்கோ ஆதவா.
சந்தோஷமாயிருக்கு.இணையத்தில இல்லாட்டியும் உங்க இலக்கிய வாசனை மணத்தபடிதானே இருக்கு.நிறைய எழுதுங்க.
அன்பு வாழ்த்துகள் !
Boss start the music and play the movie, also could you please make some noise? This is so....... So funny of the day. keep it up your great Tamil Literature slang aadava.
ஆதவா said…
வாங்க ஹேமா... நலம்தானே?

நிரூபன்... வாங்க. வரவேற்கிறேன்.
முடிந்தவரையில் எல்லாருடைய மனதிற்கும் உகந்த பதிவுகளை எழுதமுயற்சிப்பேன்.
என்னமோ சொல்ல வறீங்கன்னு படிச்ச்க்கிட்டே போனா கடைசியில பிகரு.
அதை மொதல்லையே போட்டிருக்கக் கூடாதா ?
( வணக்கமுங்க ...நான் புதுசு உங்க வீட்டுக்கு. குடிக்க கொஞ்சம் தண்ணி கெடக்குமா ?)
யோவ் மொதோ உம்ம வலைப்பக்கத்துல இருக்கிற இலக்கியம்ங்கிற டேபை தூக்குமையா... நோ இலக்கியமுன்னுட்டு இலக்கியம் சிறுகதைன்னு ஆயிரம் டேப்ஸ் வேற....

:-)
ஆதவா said…
@சிவகுமாரன்.
வாங்க வாங்க... இங்க ”தண்ணி” நிச்சயம் கிடைக்கும். முந்தைய போஸ்ட் பாத்திங்கள்ல? கோவா!!!

@ முரளி,

அந்த டேப் எல்லாம் பழங்கதை பேசறதுக்கு வெச்சிருக்கோம்.... :)