கற்பனையற்ற சினிமாக்காரர்கள்

இந்தியாவின் ஒரே மனுஷி

Sharmila

மணிப்பூர் மக்களின் உரிமைக்காகப் போராடி வரும் ஐரோம் சர்மிளா குறித்த நாடகம் மதுரை காந்தி ம்யூசியத்தில் நடைபெற்றது. மணிப்பூரின் வன்னரசு நிகழ்த்தும் வரலாறு, பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் உள்ளிட்ட மணிப்பூர் மற்றும் ஐரோம் சர்மிளா பற்றிய ஏனைய செய்திகளோடு சிறப்பாக நடைபெற்ற இந்நாடகத்தை பொன்னியின் செல்வன் கார்த்திகைப் பாண்டியன் சிறப்பான முறையில் தொகுத்திருக்கிறார். ஒரு துண்டிக்கப்பட்ட மாநிலத்தைப் போலவே உணரும்படியான நாடக செய்திகளைப் படிக்கும் பொழுதெல்லாம் இந்திய அரசின் வடகிழக்கு மாநிலங்கள் மீதான மெத்தனப் பார்வையையும் கொடுமையையும் உணரமுடிகிறது. அந்நாடகம் குறித்த கார்த்திகைப் பாண்டியனின் பார்வையை இங்கே படிக்கவும்.

சாப்பாட்டுப் பிரியர்

my photo

திருப்பூரிலிருந்து எழுதும் புதிய பதிவர் சரவணக்குமார், வலைப்பதிவுகள் மற்றும் எழுத்துக்களுக்கு மிகப்புதியவர். தற்சமயம் ஒன்றிரண்டு பதிவுகளே தந்திருந்தாலும் நிறைவாகத் தரவேண்டும் என்ற ஆர்வம் அவரது பதிவுகளில் தெரிகிறது. சமீபத்தில் சாப்பிடுவதற்காகவே திருப்பூரிலிருந்து மதுரை சென்று வந்த செய்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதைவிட தமிழகம் முழுக்க எங்கெங்கே என்னன்ன கடைகளில் எதெது சிறப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார்.. சாப்பாட்டுப் பிரியரான இவர் புத்தகப் பிரியரும் கூட, நிறைய நாவல்களையும் சிறுகதைகளையும்  தொடர்ந்து வாசித்து வருகிறார். தமிழில் எழுத சிரமப்பட்டாலும் நிறைவாக எழுதவேண்டும் என்று நம்பிக்கையுடன் எழுதுவது ஆரோக்கியமான விஷயம். தொடர்ந்து அவருக்கு ஆதரவளியுங்கள்..

கற்பனையற்ற சினிமாக்காரன்

சினிமா கதைகளைத்தான் எழுதுவதற்கு ஆட்கள் இல்லை என்கிறார்கள்; அட்லீஸ்ட் போஸ்டர் டிசைன் செய்யக் கூடவா ஆட்கள் இல்லை?? வந்தான் வென்றான் திரைப்படத்தின் போஸ்டர் டிசைன், Going the distance  எனும் திரைப்படத்திலிருந்து அப்படியே சுடப்பட்டிருக்கிறது. கீழே அதற்கு ஆதாரம்… நன்றாக கவனியுங்கள், சுவறில் அதே வர்ணங்கள், கட்டிடம் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது; கதாநாயகனும் அதே வர்ணத்தில் ஆடை அணிந்திருக்கிறார்…. தமிழகத்தில் கற்பனைத் திறன் வாய்ந்த டிசைனர்களே இல்லை என்பது போல இருக்கிறது இவர்களின் கேவலமான நடவடிக்கை… அய்யா சினிமாக்காரர்களே… நானும் ஒரு டிசைனர்தான், என்னிடம் கொடுத்திருந்தால் நூறு புதிய போஸ்டர் டிசைன்களைச் செய்து தந்திருப்பேன்…

going   vandan 

I-Hate-Luv-Storys1Vandhan-Vendran-wallpapers-1

Yuvan_Yuvathi_Movie_Posters_wallpapers_02 lovers23

 

கவித.. கவித

வாசல்கள் அடைக்கப்பட்டே இருக்கிறது

ஒன்றேனும் திறந்திருக்கக்கூடுமென்ற
நம்பிக்கையில்
தடித்த வெயிலில் முனைப்புடன்
சென்று கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்

இதயத்தைச் சுருட்டுகிறது
ஆதியிலருந்திய பால் வாசம்

உங்களுக்கு முன்பாக
பீடத்திலிருந்து எழுந்த கடவுளும்
விரைந்து கொண்டிருக்கிறார் வாசலைத் தேடி

திறப்புக்கான வாடை நாசிகளை நிறைக்கிறது

மூடிக்கிடந்த கண்கள் திறந்து
நடை விரைகிறது

விரல் நுனிகளில் குருதி கொப்பளித்து அழுந்த
கடவுளை முன்னேறிச்சென்று
வாசலைத் திறக்கின்ற உங்கள் முன்பாக
ஓய்ந்தடங்கா அலைகளோடு
வியாபித்திருக்கிறது கடல்.

பொன்.வாசுதேவனின் இக்கவிதை, இறைவனின் இருப்பையும், அவனது வியாபித்தலையும், சமூகத்தை எதிர்கொள்ளலையும்  அற்புதமாகக் கூறுகிறது. இறைவன் என்பது இறைவன் மட்டுமேயல்ல, நமக்குள்ளும் நிறைந்திருக்கும் மனத்தின் கனம் பற்றியதும் கூட. எல்லையில்லாத வெளியில் நிறைந்திருக்கும் மனதிற்குப் பின்னே நடை மூடி காத்திருக்கிறோம். இறைவன் உங்களோடே உள்ளான்… திறந்து செல்ல வழிகளுண்டு… கற்பனை என்பது வெறும் கையில் அடங்கிவிடக்கூடிய லட்டு அல்ல. ஓய்ந்தடங்கா அலைகளடங்கிய மாபெரும் கடல்!! வாசல்கள் அடைக்கப்பட்டே இருக்கிறது. இறைவனுக்கும்…..

ஆங்கிலத் தேனும் அழகுப் பாலும்

Beyoncé Knowles ன் Halo எனும் இப்பாடலை நிறைய பேர் கேட்டிருப்பீர்கள். R&B வகைப் பாடலான இது I Am... Sasha Fierce எனும் ஆல்பத்திலிருந்து பாடப்பட்டிருக்கும் சிங்கில்ஸ். பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் பியானோவும் பியான்ஸியின் குரலும், தேனுடன் பால் கலந்ததைப் போன்ற சுவையைத் தந்தது என்பது மறுப்பதற்கில்லை. குறைந்த saturate ல் படமாக்கப்பட்டிருக்கும் இப்பாடல் எனது ஒன் அஃப் த ஃபேவரைட்…. கேட்டுப்பாருங்களேன்….

 

Comments

பாஸ்! மூன்று படங்களைப் போட்டு தமிழ் சினிமாவையே ஆட்டம் காண வச்சுட்டீங்களே! சூப்பர்! எங்கிருந்து இதெல்லாம் புடிச்சீங்க?
ஆதவா said…
எனது நண்பனின் Facebook ல் இருந்து எடுத்தேன்... யுவன் யுவதி தற்செயலாகக் கிடைத்தது...
Unknown said…
சரவணக்குமார் வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.
Unknown said…
சினிமா போஸ்டர் பற்றிய விஷயம் அசத்தல்.
Unknown said…
ம்ம் நல்ல தொகுப்பு...வாழ்த்துக்கள்..
கவிதை பகிர்வுக்கு நன்றி ஆதவா.
சகோதரா, உங்களின் பதிவு இம் முறை சற்று வித்தியாசமாக இருக்கிறது. பல துறைகளையும் அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். துப்பறிதல்.. முதலிடம்.
போஸ்ட்டர் மேட்டர் அருமை நண்பா...
இந்த இடுகைக்காக நல்லா பீல்ட் வொர்க் செஞ்சுருக்கீங்க...
நல்ல இருக்கு...தொடர்ந்து இது போல நிறைய இடுகைகளை எழுதுங்கள்...
அய்யா சினிமாக்காரர்களே… நானும் ஒரு டிசைனர்தான், என்னிடம் கொடுத்திருந்தால் நூறு புதிய போஸ்டர் டிசைன்களைச் செய்து தந்திருப்பேன்…///

என்ன விளம்பரம். ஹாஹா சூப்பர்
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
arunkumar said…
"cinema poster" post is good...thanks
balasundar said…
ஹிந்தியில் இது அடிக்கடி நடக்கும் விசயம். தமிழில் முதல் முறை பார்க்கிறேன். இதுபோல் போஸ்ட்டர் டிசைன் காப்பி நாலைந்து உதாரணம் கொடுக்கமுடியுமா? (என்னுடைய பதிவில் போட ஆசை..
ஐரோம் சர்மிளா சரவணக்குமார் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி