உலகக் கோப்பை யாருக்கு? - கணிப்பு

world cup

கிரிக்கெட் உலகக் கோப்பை வேறு நெருங்கிக் கொண்டே இருக்க இருக்க, மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டே இருக்கிறது. 1996 ஆம் வருடம் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்த அன்று முதல் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தேன். அதன்பிறகு பிடித்த ஒரே அவுட்டோர் விளையாட்டு கிரிக்கெட் என்றாகிவிட்டது. படிக்கும் சமயங்களில் ஒரு சின்ன கிரவுண்ட் கிடைத்தாலும் விடாமல் போய்விடுவோம். நிறைய ஓடுகளை உடைத்தது, பாத்திரங்களை ஒடுக்கியது, அடுத்தவர் மண்டையில் இரத்தம் எட்டிப்பார்க்கச் செய்தது முதல் ஒரு பெண்ணின் வயிற்றில் அடித்தது வரை கிரிக்கெட் சாதனைகள் ஏராளமாகச் செய்திருக்கிறோம். சரி சுயபுராணத்தை நிறுத்திக் கொள்வோம்…

இந்த உலகக்கோப்பை போட்டிகளை நானும் சிறுவயதிலிருந்து விடாமல் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். (2007 விதிவிலக்கு. எவன் ராத்திரி உட்கார்ந்து பார்க்கிறது?) இந்தியா ஜெயிக்கும் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டாத குறைதான்……. இந்தமுறையாவது ஜெயிக்குமா? ஒரு சின்ன கணிப்பு… இது இரண்டு நண்பர்களுடன் இணைந்து போட்ட கணக்கு!!

முதலில் அணிகளின் நிலை.

Group A  Group B
Australia  India
Pakistan  South Africa
New Zealand England
Sri Lanka West Indies
Zimbabwe Bangladesh
Canada Ireland
Kenya Netherlands
            
இந்த இரு குழுக்களிலிருந்து நான்கு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு அணிக்கும் இன்னொரு குழு அணிக்கும் மோதல் ஏற்படும். இதில் நாம் எப்படி வரப்போகிறோம்?
114673
Group A
 
புள்ளிகளின் அடிப்படையில் முதலில் வெளியேறும் அணிகள் :
Canada
உலகக் கோப்பைக்கு மட்டுமே ஆடவேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டார்களா என்ன? இல்லை ஆள் பத்தவில்லை என்று ஐசிசி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடுகிறார்களா? ஒரு எழவும் புரியவில்லை. இந்த அணி ஜெயித்தால் அதுவே அவர்களுக்கு கோப்பை பெற்றது போலத்தான்..
Kenya
 
ஒரு காலத்தில் இந்தியாவை தோற்கடித்த அணி. இப்பொழுது எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் முழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது. யார் யார் வீரர்கள் என்றே மறந்து போய்விட்டது. வருஷத்துக்கு ஒரு மேட்சாவது ஆடுங்கப்பா என்று கெஞ்சவேண்டியிருக்கிறது. இந்த அணி, பழைய அனுபவங்களைக் கொண்டு கனடாவை வீழ்த்திவிட வாய்ப்பு இருக்கிறது. ஜிம்பாப்வேயையும் வீழ்த்தலாம்… ஆனால் மற்ற அணிகளிடம் குறைந்தபட்சம் நெருக்கடி கொடுக்குமளவுக்குக் கூட இருக்குமா என்பது சந்தேகமே…
 
Zimbabwe
 
1135882003 உலகக் கோப்பை நடத்திய நாடு. இந்தியாவுக்கு பல சமயங்களில் நெருக்கடி கொடுத்த அணி இது. கென்யாவைப் போலவே இதுவும் காணாமல் போனவர்கள் லிஸ்டில்… இந்தியா ஜிம்பாப்வே போகும்போதெல்லாம் தோற்றே வெளிவரும் சூழ்நிலைகளெல்லாம் நேர்ந்திருக்கிறது. நன்றாக ஆடும் பட்சத்தில் குழுவின் ஐந்தாமிடத்தைக் கைப்பற்றலாம்.
 
காலிறுதிக்குச் செல்லும் அணிகள்
 
4. அடிமேல் அடி வாங்கும் வடிவேலு இப்பொழுது யாரெனில் அது நியூஸிலாந்துதான். 123695வங்கதேசத்தில் அடி, இந்தியாவில் அடி, அதெல்லாவற்றையும்விட சொந்த நாட்டில் பாகிஸ்தானிடமும் அடி வாங்குகிறது. இந்த அணி மற்ற மூன்று அணிகளிடமும் தோற்றாலும் ஜிம்பாப்வே, கென்யா, கனடா அணிகளை வென்று நான்காமிடத்தில் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம். இம்முறை இவர்கள் உலகக்கோப்பை???????  திரும்ப ஒரு 1983 ???
 
3. ரொம்ப நாட்களாக முடங்கிக் கிடந்தாற்போல் இருந்தாலும் சட்டென எழுச்சி பெற்றது பாகிஸ்தான் மட்டுமே.. நியூஸிலாந்துக்குச் சென்று அவர்கள் முதுகில் இந்த சாத்து சாத்தப்படுவதைக் கவனிக்கும் போது பாகிஸ்தான் இன்னும் மதிப்பு குறையாத அணி என்றே தோணுகிறது. என்றாலும் பழைய பாகிஸ்தானின் உக்கிரம் இல்லை. ஆசிய மண்ணில் போட்டிகள் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளைக் காட்டிலும் சிறப்பாக விளையாடும் என்று நம்பலாம்.
 
2. இவர்களைத்தான் எப்படி மதிப்பிடுவதென்றே தெரியவில்லை…. சொந்த மண்ணில் ஆடுவதால் இலங்கைக்கு பலம் கொஞ்சம் அதிகம். நிச்சயம் நியூஸிலாந்து பாகிஸ்தான் அணிகளை வெல்லும் என்று நம்பலாம். ஆஸ்திரேலியாவையும் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். சிறப்பான ஆட்டத்தால் இவர்கள் இரண்டாமிடத்திற்குச் செல்ல வாய்ப்பு மிக அதிகம்.
 
1. இந்த குழுவைப் பொறுத்தவரையில் சந்தேகமேயில்லாமல் முதலிடத்தில் வரப்போவது ஆஸ்திரேலியாதான். என்னதான் மெக்ரா, வார்னே, கில்கிறிஸ்ட் போன்ற பெரியவர்கள் இல்லாமல் சமீபத்தில் தள்ளாடினாலும் இன்றைக்கும் சிங்கம் சிங்கமாகத்தான் இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்வினாலும் ஒருநாள் தொடரில் தன்னை இன்னும் பலமான அணி என்றே நிரூபித்திருக்கிறதைப் பார்க்க முடிகிறது. இன்னும் வீரியம் குறையாத அணி இது.
 

Group B
 
புள்ளிகளின் அடிப்படையில் முதலில் வெளியேறும் அணிகள் :

Ireland

116742இந்த அணியெல்லாம் இருக்கிறது என்பதே உலகக் கோப்பையின் போதுதான் தெரிகிறது. போனமுறை இந்தியா போட்டு புரட்டியெடுத்ததிலிருந்து பெர்முடா கிரிக்கெட்டையே முழுக்கு போட்டுவிட்டதால் பெருமுடாவின் இடத்தை ஐயர்லாந்து பிடிக்கும் என்று நம்பலாம். நிறைய சாதனைகளைத் தரவிருக்கும் இந்த அணி ஒரு போட்டியிலாவது வெல்லவேண்டும் என்பது எனது ஆசையும் கூட.

Netherlands

இந்த அணியும் அயர்லாந்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கிரிக்கெட் அனுபவம் அதிகமில்லாத இவ்விரு அணிகளும் தலா ஒன்று ஜெயித்தாலே மிகப்பெரும் விடயம்.
 

  Bangladesh

2007 உலகக்கோப்பையில் இந்தியாவின் கனவுக்கு ஆப்பு வைத்த அணி. சிறிது நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்தைப் போட்டு புரட்டி எடுத்த அணி. நிறைய போட்டிகள், நல்ல பயிற்சியாளர், தேர்ந்த அணி என சிறப்பு காட்டினால் பங்களாதேஷ் சிறப்பான ஆசிய அணிகளின் பட்டியலில் இடம் பெறும். இவர்கள் என்னதான் தாய்நாட்டில் தொடரை நடத்தினாலும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளைக் கையாளுவது மிகச்சிரமம். ஒரு சில வெற்றிகளோடு வெளியேறும்.

காலிறுதிக்குச் செல்லும் அணிகள் 126482
 
4. நட்சத்தர வீரர் ஒருவர் இல்லாவிட்டாலே அணி சப்பையாகவே கண்ணுக்குத் தெரிகிறது. நான் லாராவைச் சொல்லுகிறேன். தற்போது நடந்து வரும் இலங்கை மேற்கிந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. என்றாலும் ஓரளவு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். கெய்ல், சர்வான் ப்ராவோ போன்ற அனுபவ வீரர்கள் கைகொடுத்தாலும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது கடினமே…

3. இந்த குழுவில் சமபலம் வாய்ந்த அணிகள் இருப்பதால் முதல் மூன்று இடங்களைப் பெறப்போகும் அணிகளைக் கணிப்பது சிரமமே, உள்ளூரில் சிறப்பாக ஆடிவரும் இந்தியாவா? ஆஸ்திரேலிய மண்ணில் நிலைத்தாடும் இங்கிலாந்தா? பேட்டிங் பவுலிங் பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவா?

127891இந்திய மண்ணில் ஆடப்போகும் போட்டிகள் என்பதால் மற்ற இரு அணிகளைக் காட்டிலும் இந்தியா கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதால் மற்ற இரு அணிகளில் ஒன்றான இங்கிலாந்தை மூன்றாமிடத்திற்குக் கணிக்கலாம். பழைய இங்கிலாந்தைப் போல இல்லாமல் பலம் குன்றியிருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லலாம். இந்தியாவை இவர்கள் வீழ்த்துவது கடினமாக இருக்கும்.

2 . இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா இடம் பெற வாய்ப்புகள் அதிகம். இந்தியாவுக்கு சம நெருக்கடி கொடுக்கக் கூடிய அணி தென்னாப்பிரிக்கா. சமீபத்தில் நடந்த போட்டிகளில் இவ்விரு அணிகளின் பலம் தெரிந்ததே என்றாலும் தென்னாப்பிரிக்க மண்ணிலேயே சிறப்பாக செயல்பட்டது இந்திய அணி. தவிர, தென்னாப்பிரிக்க அணி, இந்திய மண்ணில் சற்றே தடுமாறும் என்று நம்பலாம். இங்கிலாந்து போன்ற பிற அணிகளைத் தோற்கடிக்கும் பட்சத்தில் இரண்டாமிடம் தென்னாப்பிரிக்காவுக்கு… ஒருவேளை இந்தியாவையும் தோற்கடித்தால் முதலிடம் பெறலாம்.

1. மற்ற உலகக்கோப்பைகளைக் காட்டிலும் இம்முறை கொஞ்ஞ்ன்சம் பலம் வாய்ந்ததாகக் 116752கருதப்படுகிற்து இந்தியா. சமீபத்திய இந்தியாவில் நடந்த தொடர்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதை மனதில் கொள்ளலாம். என்றாலும் இந்த அணியை நம்பமுடியாது. திடீர்ன்று சறுக்கிவிடுவார்கள். தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா முதலிடம் பெறும் வாய்ப்பு அதிகம். அல்லது இரண்டாமிடம்.

காலிறுதிப் பட்டியல்

Group A Group B
ஆஸ்திரேலியா இந்தியா *
இலங்கை தென்னாப்பிரிக்கா *
பாகிஸ்தான் இங்கிலாந்து
நியூஸிலாந்து மேற்கிந்தியத் தீவுகள்

* இவ்விரு அணிகளும் இடம் மாற வாய்ப்பு உண்டு

காலிறுதியில் இவ்வாறாக அணிகள் இடம்பெற்றால், ஐசிசி பட்டியலின் படி கீழ்கண்டவாறு அணிகள் மோதும்

ஆஸ்திரேலியா Vs மேற்கிந்தியத்தீவுகள்
இலங்கை Vs இங்கிலாந்து
பாகிஸ்தான்  Vs தென்னாப்பிரிக்கா
நியூஸிலாந்து Vs

இந்தியா

இதில் சற்றே இடம் மாறும் பட்சத்தில் பாகிஸ்தானுடன் இந்தியாவும், நியூஸிலாந்துடன் தென்னாப்பிரிக்காவும் மோத வாய்ப்பு இருக்கிறது.

இப்போட்டிகளிலிருந்து நான்கு அணிகள் அறையிறுதிக்கு முன்னேறும். இவற்றை கணிப்பது மிகச்சிரமமே… என்றாலும்

C. ஆஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகள் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சமீபத்திய புள்ளிவிபரங்கள் ஆஸ்திரேலியாவுக்கு மிக அதிகமான சாதகங்களைக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து மேற்கிந்தியத்தீவுகள் இந்தியாவில் ஆடுவதாலும் பலம் குறைந்திருப்பதாலும் தோல்வியுற வாய்ப்பு அதிகம்.

D. இலங்கை இங்கிலாந்து போட்டியைக் கணிப்பது மிகக் கடினம். எனினும் பழைய ரெக்கார்ட்களைப் புரட்டிப் பார்த்ததிலும் சொந்த மண்ணில் இலங்கையின் பலம் அறிந்து கொண்டதிலும் இலங்கையே வெல்லும் என எதிர்பார்க்கிறேன். ஆனாலும் இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்பது என் ஆசை. பயபுள்ளைங்க ஒருவாட்டி கூட கப்பு வாங்கலைல்ல அதான்.

E. பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா அல்லது இந்தியா பாகிஸ்தானின் சமீப ஃபார்மை விட தென்னாப்பிரிக்கா பலமானது. ஆனால் ஆசிய மண்ணில் அதன் பலம் குறைவு என்பதால் பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் சமபலமாகிறது. சிறப்பாக ஆடும் பட்சத்தில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் இதுவரை துரதிர்ஷ்டத்தோடே உலகக்கோப்பையை விட்டு வெளியேறும் அணியான தென்னாப்பிரிக்கா இம்முறை வெல்வதற்காகப் போராடும். ஒருவேளை இந்தியா பாகிஸ்தானாக அமைந்துவிட்டால் போட்டி விறுவிறுப்பாக அமைந்துவிடும், எந்த அணி வெல்லும் என்று சொல்லமுடியாது. இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தான் பலமாக இருந்தாலும் இந்தியாவை அவ்வப்போது நம்பவியலாது என்பதால் இவ்விரு அணிகளும் சமபலமாகவே கருதுவேன்.

F. நியூஸிலாந்து இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா நியூஸிலாந்து பேருக்குத்தான் காலிறுதிக்கு வருமே தவிர, இந்திய தென்னாப்பிரிக்க அணிகளை அது சமாளிப்பது மிக மிக கடினம். சமீபத்தில் அவர்களது ஆட்டம் ஆசிய மண்ணில் சரியில்லை… பழைய நியூஸிலாந்து இப்போது இல்லை. ஒருவேளை திடீரென எழுச்சி பெற்று ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அது மிகவும் குறைவுதான்.

மேற்கண்ட கணிப்புகளின்படி அறையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புள்ள அணிகள் 114836

ஆஸ்திரேலியா
இலங்கை
தென்னாப்பிரிக்கா
இந்தியா


மேலும் வாய்ப்புள்ள அணிகள் பாகிஸ்தான், இங்கிலாந்து

ஐசிசி முறைப்படி எனது கணிப்பின் படி அறையிறுதியில் மோதவிருக்கும் அணிகள்

ஆஸ்திரேலியா Vs பாக், தென், இந்தியா
இலங்கை, இங்கிலாந்து Vs இந்தியா, தென்னாப்பிரிக்கா


அறையிறுதியின் முதல் போட்டியே வலுவான அணிகளுக்கிடையேதான் நடக்கும். ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவையோ அல்லது இந்தியாவையோ எதிர்கொள்ளும். பாகிஸ்தான் அறையிறுதியில் இடம்பெறாவிட்டால் ஆஸி,தென், இந்திய அணிகளில் ஒன்றுதான் இறுதிக்கு முன்னேறும். ஆஸியைப் பொறுத்தவரை 96 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது, தவிர அதன் பலமும் கூட… இந்தியாவுக்கு சொந்த மண் என்பது மட்டுமின்றி சற்று பேட்டிங் பலமான அணியும் கூட, தென்னாப்பிரிக்காவும் சளைத்ததல்ல. அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா இறுதிக்கு முன்னேறலாம். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது சிரமமாகத்தான் உள்ளது.

இரண்டாவது அறையிறுதியில் இலங்கையோ இங்கிலாந்தோ, இந்தியா அல்லது தென்னாப்பிரிக்க அணிகளோடு மோதும். இதில் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு சமமான அணிதான். என்றாலும் இந்திய தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்துவது அதற்கு கடினமாகத் தெரியலாம். இங்கிலாந்தின் சமீப எழுச்சி மற்ற அணிகளுக்கு போட்டியை வெல்ல சிரமத்தைக் கொடுக்கலாம்.114660

உத்தேசப் படி,

ஆஸ்திரேலியா
இந்தியா
தென்னாப்பிரிக்கா
இலங்கை
இங்கிலாந்து

ஆகிய அணிகளில் இரண்டு இறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் பாண்டிங் மூன்றாம் முறையாக இறுதிக்கு அழைத்துச்செல்லுவார், மாறாக தென்னாப்பிரிக்காவும் முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் செல்ல போராடும்,

இந்தியாவைப் பொறுத்தவரை மதில்மேல் பூனைதான். அறையிறுதியிலேயே வெளியே வந்தாலும் வரலாம் அல்லது இறுதிக்கும் போகலாம். இலங்கை மற்றும் இங்கிலாந்து இரண்டும் சமபலம் கொண்டவை. மற்ற மூன்று அணிகள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இவ்விரண்டும் இறுதிக்குப் போவது கடினமே…

எதிர்பார்க்கப்படும் இறுதிப் போட்டி (உத்தேசமா)

ஆஸ்திரேலியா Vs தென்னாப்பிரிக்கா
இலங்கை Vs தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா Vs இந்தியா

இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும் அதன் சமபல அணிகளான ஆஸிக்கும் தென்னாப்பிரிக்காவும் அதிகம் உண்டு!!

ஒருமுறை கூட வெல்லாத தென்னாப்பிரிக்காவோ, டெண்டுல்கருக்காக இந்தியாவோ வெல்லவேண்டும் என்பது என் விருப்பம்.

icc-cricket-world-cup-2011

இந்த கணிப்புக்கு உதவியாக இருந்த நண்பர் கார்த்திக்கு நன்றி.
படங்கள் உதவி espncricinfo.com

இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு டைப்பியிருக்கேன், ஓட்டு போடுங்க மக்கா

Comments

Unknown said…
அருமையான அலசல் பாஸ்...நடுநிலமையாக அலசியுள்ளீர்கள்..நான் இதைப் போல கணிப்பு போடுவமேன்று இருந்தேன்...ம்ம்
ஆதவா said…
அதானலென்னங்க பாஸ், நீங்களும் ஒரு பதிவு போடுங்க, படிச்சுடுவோம்!!
முதல் சுற்று ஆட்டங்களில் உங்களது கணிப்பு பெரிம்பாலும் சரியாக இருக்குமென்பது என் எண்ணம்,


ஆனால் காலிறுதிப் போட்டிகளில் one man show ஒன்றை பலம்மிக்க நியூசிலாந்து, மேற்கிந்திய அணி வீரரொருவர் நிகழ்த்தினால் அவுஸ்திரேலியாவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆதவா said…
@ எப்பூடி,

அப்படியேதும் அதிசயம் நிகழ்ந்தால் தலைகீழாகிவிடும். நீங்கள் உங்கள் பதிவில் சொன்னது போல, நாக் அவுட் என்பது வயிற்றில் புளியைக் கரைக்கும் மேட்ச்தான்.
Ponchandar said…
நல்லதொரு அலசல்.
ஆதவா said…
நன்றி பொன்சந்தர்
நண்பர் எப்பூடியின் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். மிகுதியைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், அலசல்... கிறிக்கற்றில் முத்து முத்துக் குளித்திருக்கிறீர்கள் என்றே சொல்ல வேண்டும்.
Unknown said…
காலிறுதிக்கு ஏன் பங்களாதேஷோ ஜிம்பாப்வேயோ வராது என்று அவ்வளவு தீர்க்கமாக சொல்லிவிட்டீர்கள்...
உங்களின் கணக்கு...
தி.மு.க காங். கூட்டணி கணக்கு மாதிரித் தான் தெரியுது !
Thanglish Payan said…
அருமையான அலசல் பாஸ்...
idroos said…
Ungalin kanippukalodu udanpadukiren
idroos said…
Ungalin kanippukalodu udanpadukiren
நல்லதொரு அலசலுங்க... டென்சனுடன் காத்திருப்போம்..