Call of Duty : Black Ops–விமர்சனம்
Developer | Treyarch, |
Publisher | Activision |
Designers | Brandon Marino (creative director), YoungMo Byun (multiplayer design director), Geoff McCulloch (lead designer) |
Series | Call of Duty |
Platform | Microsoft Windows |
Year | 2010 |
Genre | First-person shooter |
Mode | Single Player & Multiplayer |
Media | Blu-ray Disc, DVD-DL |
Black Operation என்று சொல்லப்படும் சட்டவிரோதமான ரகசிய போர் நடவடிக்கைகளை ரஷ்யா, அமெரிக்கா பனிப்போரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் கணிணி விளையாட்டுதான் Call of Duty : Black Ops. கால் ஆஃப் ட்யூட்டி சீரியஸில் இது ஏழாவது விளையாட்டு. முந்தைய ஆறு விளையாட்டுக்களையும் ஆடி முடித்திருக்கிறேன். ப்லாக் ஆப்ஸ், World at War எனப்படும் நான்காவது விளையாட்டின் தொடர்ச்சி.
First Person Shooter வகை விளையாட்டுக்களை நீங்கள் நிறைய பார்த்திருக்கக் கூடும். சுடுபவர்களின் கன் (Gun) பார்வையிலேயே ஆட்டம் முழுக்கச் செல்லும். எல்லா வகையான சூட்டர் கேம்களிலும் எதிரியைக் கொல்வதுதான் முக்கியமான நோக்கமாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு சினிமாட்டிக்கான, நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மற்றும் திருப்பங்கள் நிறைந்த விளையாட்டினை பார்த்ததேயில்லை. ப்ளாக் ஆப்ஸ் மிகச்சிறப்பான கேம்ப்ளே மற்றும் திருப்பங்கள் நிறைந்த விளையாட்டு. இந்த கேம் ஏன் இவ்வளவு புகழ்பெற்றது என்று சொல்லுவதைக் காட்டிலும் காண்பிப்பதே சிறந்தது.
Call of Duty : Black Ops கதை என்ன?
அமெரிக்க உளவுத் துறையின் SOG ("Special Operations Group) ஐச் சேர்ந்த Mason எனும் போர்வீரனின் Flashback களிலேயே கதை செல்கிறது. பல டிவி பெட்டிகள் நிறைந்த ஒரு விசாரணை அறையில் கட்டப்பட்டு அவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முக்கியமாக, ஒரு Number Station பற்றி கேட்கப்படுகிறது. நினைவிழந்து கிடக்கும் மேசனுக்கு நம்பர் ஸ்டேஷன் குறித்து எந்த ஞாபகமும் வரவில்லை. அதனால் விசாரிப்பவர் மேசன் பங்கேற்ற மிஷன்கள் குறித்து கேள்விகள் கேட்கிறார். இது நடப்பது பிப்ரவரி 25, 1968ல். மேசன் தன் நினைவுக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லுகிறார்.
பிக்ஸ் விரிகுடா முற்றுகை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்க உளவுத் துறையான CIA யின் Operation 40 எனும் போர்நடவடிக்கைகளுள் ஒன்றுதான் Bay of Pigs invasion. க்யூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்காக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜான் F. கென்னடி படைகளை அனுப்பியிருந்தது வரலாறு. அதிலிருந்துதான் மேசனின் மிஷன்கள் ஆரம்பிக்கின்றன.
ஏப்ரல் 17, 1961 அன்று உட்ஸ், (Woods) மேசன் (Mason) மற்றும் போமன் (Bowman) ஆகிய மூவரும் க்யூபாவுக்கு வந்திறங்குகிறார்கள். மேசன் காஸ்ட்ரோவை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல, எதிர்பாராத விதமாக லெவ் க்ராவ்சென்கோவால் (Lev Kravchenko) என்பவனால் பிடிக்கப்படுகிறான். மெல்ல எழுந்து கண்ணைத் துறுத்திப் பார்த்தால், அங்கே நின்று கொண்டிருப்பது உண்மையான ஃபிடல் காஸ்ட்ரோவும் (Fidel Castro ) ரஷ்ய மேஜர் ஜெனரல் நிகிடா ட்ராகோவிச்சும் (Nikita Dragovich). மேசனை ட்ராகோவிச்சிடம் ஒப்படைக்கிறார் காஸ்ட்ரோ.
1961 லிருந்து 1963 வரை இரண்டு வருடங்கள் மேசனோடு செல்மேட்டாக விக்டர் ரெZனோவ் (Viktor Reznov) எனும் ரஷ்யனும் சில ரஷ்யபடை சிறைக் கைதிகளும் இருந்தனர். ரெஸ்னோவும் மேசனும் ரஷ்யாவின் வொர்குடா (Vorkuta) சிறையிலிருந்து தப்பி ரஷ்ய படையினரை சுட்டு வீழ்த்தி மேசன் மட்டும் ஒரு இரயிலிலேறி தப்பிச் சென்றுவிடுகிறான். ரெஸ்னோவ் மேசனோடு வராமல் ரஷ்ய வீரர்களைக் கொன்று கொண்டே செல்கிறார்.
தப்பித்த மேசன், அமெரிக்க அதிபரான கென்னடியை பெண்டகனில் சந்தித்து ட்ராகோவிச்சை கொல்லும் ஆணையை பெற்றுக் கொள்கிறான்.
November 17, 1963. சோவியத் ரஷ்யாவில் காலையில் மேசனும் உட்ஸும் போமனும் ட்ராகோவிச்சைக் கொல்வதற்காகச் செல்கிறார்கள். Baikonur எனும் இடத்தில் டேரா போட்டிருந்த ரஷ்யன் படையில் புகுந்து தாக்குகின்றனர். அங்கே CIA உளவாளி வீவரைக் காப்பாற்றிவிட்டு சோவியத் ரஷ்யாவின் விண்வெளி மையத்தையும் ராக்கெட்டையும் அழித்துவிடுகிறார்கள். ஆனால் ட்ராகோவிச் தப்பியோடிவிடுகிறான்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 1968 ல் வியட்நாமில் ட்ராகோவிச் இருப்பதாக தகவல்கள் வரவே, மேசன், உட்ஸ், போமன் ஆகியோர் அங்கே சென்று தாக்குகின்றனர். அங்கே விக்டர் ரெஸ்னோவை மீண்டும் பார்க்கும் மேசன், அங்கிருந்து தப்பிக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக க்ராவ்சென்கோவைக் கொல்லும் பொழுது போமனும் உட்ஸும் இறந்துவிடுகிறார்கள்.
இதே நேரத்தில் பிப்ரவரி 9 1968, ஹாங்காங்கில் டாக்டர் டேனியல் க்ளார்கை துன்புறுத்தி Nove 6 குறித்து விசாரிக்கின்றனர் ஹட்சனும் வீவரும். Nove 6 என்பது ரஷ்யா தயாரிக்கும் ஒரு ரசாயன வெடிமருந்து புகை. Friedrich Steiner தான் இதில் முக்கியமானவர் என்று தெரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிக்கிறார்கள். டாக்டர் க்ளார்க் தப்பிக்கும் வழியில் தவறி விழ, அவரிடம் ஹட்சன், நம்பர்கள் குறித்து விசாரிக்கிறார். ஆனால் அதற்குள் சோவியத் வீரர்கள் க்ளார்கின் மண்டையில் சுட்டுவிட ”நம்பர்” பற்றி சொல்லாமலேயே இறந்துவிடுகிறார் க்ளார்க். இருப்பினும் ஹட்சனுக்கு ஸ்டீய்னரிடமிருந்து அழைப்பு வருகிறது. நம்பர் ஸ்டேஷன் குறித்தும் அமெரிக்க நகரங்களில் ரசாயன வாயுவை பரப்பாமல் தடுப்பது குறித்தும் சொல்லிவிடுவதாக சொல்கிறார். அதே நேரத்தில் மேசனும் ரெஸ்னோவும் ஸ்டீய்னர் இருக்கும் ரீபர்த் ஐலண்டுக்கு (Rebirth Island) ஸ்டீய்னரைக் கொல்லப் புறப்படுகிறார்கள். ரெஸ்னோவ் ஸ்டீய்னரின் தலையில் சுட்டு கொன்றுவிடுகிறான்.
இதுவரையிலும் நிகழ்ந்த மிஷன்கள் குறித்து மேசன் தன் நினைவுக்குத் தெரிந்தது வரையிலும் கூறினாலும் நம்பர் குறித்து எதுவும் கூறாததால் விசாரணை அறையிலிருந்து ஒருவர் இறங்கிவருகிறார். அவர் மேசனுக்கு மிகவும் பழக்கப்பட்டவர்.
மேசனை யார் விசாரிக்கிறார்கள்?, நம்பர் ஸ்டேசனைக் கண்டுபிடித்து நோவா 6 ஐ அழித்தார்களா? ரெஸ்னோவ் அதன் பின் என்னானார்? போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் கூடிய கேம்ப்ளேயின் இறுதியில் விடை கிடைக்கிறது!!
ஒரு பர்ஃபெக்ட் கேம்ப்ளே சிறப்பான கேம் இன்ஜின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. மிகத் துல்லியமான விவரங்கள், பாத்திரங்களின் டீட்டேய்ல் வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் பின்புல காட்சிகள் இவற்றோடு ஒளி மற்றும் ஒலியில் ஒரு சிறந்த போர் திரைப்படத்தைக் காணும் உணர்வை கொண்டு வந்திருக்கின்றனர். இன் கேம் சினிமாடிக் என்று சொல்லப்படும் விளையாட்டுணர்வு, அதாவது வெறும் சுடுதல் மட்டுமே முக்கிய பணியல்ல, தப்பித்தல், பதுங்குதல், மறைந்து நின்று தாக்குதல், நீந்துதல், மலையிறங்குதல் போர்விமானத்தைச் செலுத்துதல், ஆணை பிறப்பித்தல் என பல வேலைகளும் விளையாட்டில் இருக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் WMD லெவலில் போர்விமானம் ஒன்றிலிருந்து கமாண்ட் சொல்லுவதும் அதன் கீழ்படியும் வேலையும் நாமே செய்வதும் சிறப்பான கேம்ப்ளேக்கு உதாரணம்.
பின்புல இசை அப்படியொன்றும் பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது. கால் ஆஃப் ட்யூட்டி முதல் பாகத்தில் பிண்ணனி இசை நம்மை மிரட்டும் வண்ணம் இருக்கும். இதில் சுமார்தான். பாத்திர வடிவமைப்பு அசல் மனிதர்களைக் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு போமனாக வருபவர் பிரபல நடிகர் ஐஸ் க்யூப் (Ice Cube) போல, மேசனாக வருபவர் சாம் ஒர்திங்டன்.. அவதார் படத்தின் நாயகன். அவரே குரலும் கொடுத்திருக்கிறார். கேம் சிலசமயங்களில் crash ஆகிவிடுகிறது. இதற்கு முந்தைய கேம்களில் இந்த பிரச்சனை நிகழவில்லை.
ஆக மொத்தத்தில் கணிணி விளையாட்டு விரும்புபவர்கள், குறிப்பாக First Person Shooter வகை கேம்களை விரும்புபவர்கள் நிச்சயம் விளையாட வேண்டிய விளையாட்டு இது.
System Requirements
Operating system | Windows Vista / XP / 7 |
CPU | Intel Core 2 Duo E6600 or AMD Phenom X3 8750 or better |
Memory | 2GB |
Hard drive space | 12GB |
Graphics | Shader 3.0 or better 256MB NVIDIA GeForce 8600GT / ATI (AMD) Radeon Radeon X1950Pro or better |
பாத்திரங்கள் :
மேசன் | உட்ஸ் | போமன் | ஹட்சன் |
ஃபிடல் காஸ்ட்ரோ | ட்ராகோவிச் | ஸ்டீய்னர் | லெவ் க்ராவ்சென்கோ |
வீவர் | ரெZனோவ் | ஜான் F கென்னடி |
முந்தைய பதிவான “கிரிக்கெட் அப்டேட்” இண்ட்லியின் புதுவரவில் காண முடியவில்லை. என்ன காரணமோ எடுத்துவிட்டார்கள். நண்பர்கள் அதற்கும் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Comments
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html
பாஸ்க்கு ரொம்பவே இண்டரெஸ்ட் எண்டு தெரியுது..
நல்லம்