உலகக்கோப்பை 2011–Updates
கென்யாவைப் பற்றி எழுதவே வேண்டாம். ஆளாளுக்கு அதை பந்தாடுகிறார்கள். ஏற்கனவே நியூலிலாந்து போட்டு புரட்டி எடுத்ததில் ஏகப்பட்ட காயம் அந்த அணிக்கு. பற்றாக்குறைக்கு பாகிஸ்தானும் கடித்து விட்டது. 205 ரன்கள் வித்தியாச வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. கென்யாவில் யாராவது கிரிக்கெட் பார்ப்பார்களா?? சந்தேகம்தான்.
நேற்றைய இன்னொரு மேட்ச் விண்டீஸ் க்கும் தென்னாப்பிரிக்காவுக்கும்…
வெஸ்ட் இண்டீஸ் 222
தென்னாப்பிரிக்கா 223/3 (42.5 ov)
ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா..
அதிர்ச்சியான துவக்கத்தை இரு அணிகளுமே தந்தன. தென்னாப்பிரிக்கா தரப்பில் முதல் ஓவரே ஸ்பின் போடப்பட்டது. ஸ்பின்னர் போத்தா, கேப்டனின் நம்பிக்கையை தகர்க்காமல் அலேக்காக கெயிலின் விக்கெட்டை எடுத்தார். விண்டீஸின் கெயில், இந்தியாவின் ஷேவாக்கைக் காட்டிலும் மோசமானவர். நிலைத்து நின்றாடினால் தென்னாப்பிர்க்காவாவது ஆஸ்திரேலியாவாவது, சும்மா பிய்த்து காயப்போட்டுவிடுவார். இருநூறு ரன்கள் அடிப்பேன் என்று சவடால் விட்டவர் இரண்டே ரன்களுக்கு அவுட்டானது பெருத்த ஏமாற்றம். எனினும் ப்ராவோ சகோதர்கள் நன்றாக ஆடினார்கள். குறிப்பாக டேரன் ப்ராவோ. அடுத்த லாரா என்று சொல்கிறார்களாம். ஆவ்ரேஜும் 40 க்கு மேல் இருக்கிறது. என்றாலும் எதிர்த்தாடுவது பலம் பொருந்திய தென்னாப்பிரிக்காவாயிற்றே.
புதிதாக களம் இறங்கிய இம்ரான் டாஹீர் முதல் மேட்சிலேயே 4 விக்கெட் எடுத்ததுதான் ரொம்பவும் ஆச்சரியம். தென்னாப்பிரிக்காவின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இம்ரான் டாஹிரின் முதல் ஒருநாள் போட்டி இதுதான். உள்ளூர் மற்றும் ட்வெண்டி 20 மேட்சுகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். கொடுமை… புதுமுகமே 4 விக்கெட் ரொம்ப எதிர்பார்த்த ஸ்டெய்ன் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. மோர்கலுக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா, மிகவும் எதிர்பார்த்த ஆம்லாவை இழந்தது ஆச்சரியம். ஏனெனில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்ல ஆம்லாவும் காலிஸும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடலாம்.. விண்டீஸ் அணி பவுலர்கள் அணி என்றே முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழ். ஸ்மித்தை அவுட்டாக்கவே சிரமப்பட்டார்கள். டி வில்லியர்ஸை அவுட் ஆக்கவே முடியவில்லை. மொத்தம் மூன்றே விக்கெட்டுகள்தான் கிடைத்தது. பாவம்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்டன்ஷி கொடுத்த விண்டீஸின் மிடில் ஆர்டர் பப்படம் ஆனதுதான் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அடுத்த 100 ரன்களுக்கு 9 விக்கெட்டும் போய்விட்டது. தென்னாப்பிரிக்காவின் ஓபனிங் வலுவாகவே இன்னும் இருக்கிறது. பார்ப்போம்… நம்மோடு ஆடுவார்கள் அல்லவா?
நேற்றைய டிவிலியர்ஸ் சதத்துடன் இதுவரை மொத்தம் ஐந்து சதங்கள் இந்த உலகக் கோப்பையில்…. இன்று ஆஸ்திரேலியாவில் யாரும் சதம் அடிக்க முடியாது போலத் தெரிகிறது.!! மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் நாளை மறுநாள் சந்திப்போம்!!
பிகு : இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்டேட்ஸ் தொடரும்…
Comments
வளர்ந்து வரும் நாடுகளின் இமேஜ்'ஐ கெடுக்கும் நாடு !
மேற்கிந்திய தீவு பற்றி கதைக்காதீங்க பாஸ்...வளர்ந்த நாடுகளின் தரத்தை கெடுக்கும் நாடு!!
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html