நடுநிசி நாய்கள் (18+)

NNN_promo_poster

Direction

Gautham Vasudev Menon

Starring   

Veera Bahu, Swapna Abraham, Sameera Reddy, Deva

Cinematography

Manoj Paramahamsa

Language

Tamil

Year

2011

Genre

Psychological Thriller


எச்சரிக்கை : காமம், வன்மொழி, - குழந்தைகள் தவிர்ப்பது நல்லது

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் “விண்ணைத் தாண்டி வருவாயா” வெளிவந்தது. தமிழ்சினிமாவில் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன காதல் கதையை, இன்னும் இன்னும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று எண்ணுமளவுக்கு திரைக்கதை அமைத்து தந்திருந்தார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இசையும் திரையமைப்பும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும்தான். அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ இந்த இயக்குனரின் படங்கள் என்றால் தனித்திருக்கும் என்று எல்லா ரசிகர்களுக்கும் எழுதப்பட்டிருந்தது. அந்த அதீத எதிர்பார்ப்பு, தவிர, சாருவின் தளத்தில் கூட  இப்படம் குறித்து போடப்பட்டிருந்ததும் ஆர்வத்தை கொஞ்சம் அதிகமாகவே தூண்டிவிட்டது.

சமர் எனும் மாணவன், தனது தந்தையின் காம இச்சைகளால் பாதிக்கப்பட்டு அருகில் குடியிருக்கும் மீனாட்சி என்பவரால் காப்பாற்றப்படுகிறான். தந்தையின் கொடுமைகளுக்குப் பின்னர் மீனாட்சியிடமே வளரும் சமர், அதீத கனவுகளாலும், மனப்பிணக்கினாலும் பாதிப்புக்குள்ளாகி தன்னை விட வயதில் மூத்தவரான மீனாட்சியிடம் கட்டாய உறவு வைத்துக் கொள்கிறான். சமயம் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் மீனாட்சியின் கணவனை தீவைத்து கொளுத்திவிடுகிறான். இந்த விபத்தில் சிக்கி மீனாட்சி தீக்காயங்களோடு வீரா (சமர்) காப்பாற்றிவிடுகிறான். இருவரும் சென்னையிலுள்ள வீட்டில் தங்குகிறார்கள். தனது காம இச்சையினை சமர் தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு பெண்ணையும் வீட்டுக்கு அழைத்து வருகிறான். மீனாட்சி அவர்களைக் கொல்லுமாறு பணிக்கிறாள். இந்நிலையில் சுகன்யாவை சந்திக்கிறான் சமர். அவளை எப்படியோ கடத்தி வீட்டுக்குள் அடைத்து வைக்கிறான். மோப்பம் பிடிக்கும் காவல்துறையினர் அவளைக் காப்பாற்றுவதோடு படம் நிறைவடைகிறது.

மீனாட்சியும், வீரா எனப்படும் சமரும் இறுதியில் என்னவானார்கள் என்பது (சற்றே) திடுக்கிடும் திருப்பங்களோடு முடித்திருக்கிறார்கள்.

படத்தின் நாயகி என்று சொல்லப்படும் சமீரா ரெடி (சுகன்யா) வருவது மிகச்சில காட்சிகளே swapna7என்றாலும் பரவாயில்லை என்று சொல்லலாம். ஓரளவு நல்ல நடிப்புதான். அதிக வசனங்கள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் ஹால் பெர்ரியின் கோதிகா (Gothika) நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல சைக்காலாஜிகல் திரில்லர் படத்தின் நடிப்பு. ஆனால் உண்மையில் படத்தின் கதாநாயகி மீனாட்சியாக வரும்  ஸ்வப்னா ஆப்ரஹாம்தான். மிக அருமையான நடிப்பு. க்ளோசப் காட்சிகளிலேயே நடக்கும் புணர்ச்சி காட்சிகளில் இவரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. தவிர, தீக்காயங்களோடு வரும் காட்சிகளும் திடுக்கிடச் செய்யும் காட்சிகள்தான். மற்றபடி குறைந்த பாத்திரங்களே படத்தில் உள்ளதால் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. வீராவாக வரும் வீரபாஹு நன்றாகவே நடித்திருக்கிறார். எந்தளவு என்றால், திரையரங்கில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ”அவனைக் கொல்லணும்டா” என்று சொல்லுமளவு.

நடுநிசி நாய்கள். வழக்கமான கெளதம் ஸ்டைல் நரேட்டிவ் மற்றும் நான் லீனியர் முறையிலான மனோரீதி திகில் (Psychological Thriller) திரைப்படம். பெரும்பாலான கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் பிரதானமே அவரின் பாடல்கள்தான். அவரது முதல் படத்திலிருந்து வி.தா.வ வரை எல்லா படங்களின் பாடல்களும் சாதாரண ஹிட் இல்லை. சூப்பர் ஹிட். ஆனால் இந்த படத்தில் பாடல்களுமில்லை,பிண்ணனி இசையுமில்லை. அதைவிட, அப்படியொரு குறை (?) இருப்பதாக படத்தில் தெரியவேயில்லை. இது தமிழ் சினிமாவுக்கும் புதுமுயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் சிறப்பு சப்தங்களோடே பயணிக்கிறது. உதாரணத்திற்கு கதவு திறப்பது, காலடி ஓசை போன்றவற்றிலிருந்து மழை வீழும் சப்தம் வரை கவனித்திருக்கிறார்கள். சமீபத்தில் யுத்தம் செய் சிறப்பான ஒலியமைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சமீபகால படங்களில் பாடல்களைக் குறைத்தும், காட்சிகளோடு ஓவர்லேப் செய்தும் (ஆடுகளம், யுத்தம் செய், பயணம்) வரும் படங்களில் பாடல்கள் இல்லாமலோ அல்லது தனித்தில்லாமலே இருத்தல் ஒரு குறையாகவே தெரியவில்லை. மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகி வருகிறது. எனக்குத் தெரிந்து பிண்ணனி இசையில்லாமல் வெளி வந்த ஒரே தமிழ் திரைப்படம் இது மட்டுமே. அதைவிட, ஒரு திரில்லர் படத்தில் இசை மிக மிக முக்கியம் என்றபோதும் இசையின்றி வெளிவந்தது கெளதமின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டலாம் என்று தோணுகிறது. மனோஜின் ஒளிப்பதிவு வித்தியாசமான தளத்தில் பயணிக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சப்ஜெக்டின் கண்கள்தான்.. இதை விசுவல் நரேட்டிவ் என்று சொல்லலாம். குறிப்பாக “மீனாட்சியாக” வரும் ஸ்வப்னா, தீக்காயத்துடன் சிகிச்சை பெறும் காட்சியில் அவரின் கண்களின் வழியே காட்சிகள் நகருவது போன்றவை வித்தியாசமாக இருக்கின்றன.
“மீனாட்சி”யை ரேப் செய்யும் பொழுது அவரின் முகத்தை மட்டுமே காண்பித்திருப்பதும் கூட “ரேப்பிங்” காட்சிகளைப் பொறுத்தவரை புதுமைதான். மிக நெருக்கமான க்ளோசப்கள். படத்தின் தொண்ணூறு சதம் இரவுநேர காட்சிகள் என்று தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவு இலக்கணத்தை மாற்றியிருக்கும் சில படங்களுள் ஒன்றாகிறது. (ஒருசில படங்களில் பகல் காட்சிகளையே இரவாக காண்பிப்பார்கள்!!) Nadunisi-Naaygal-05சில ஷார்ப்பான வசனங்கள், படத்திற்கு ப்ளஸ்தான்.

ஆனால்….. Multiple Personality Disorder வகையிலான படங்களை மக்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அதை சரியான நடிப்பிலும் திரைக்கதையமைப்பிலும் மக்களுக்கு யாராலும் கொண்டு செல்லமுடியவில்லை என்பதுதான். தவிர, தமிழில் நடந்த இந்த “வியாதி” படங்கள், மக்களுக்கு அதிக சலிப்பைத் தந்திருக்கின்றன. தவிர, வேற Plot களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு Paranoid schizophrenia, (A Beautiful Mind), hypopituitarism (Orphan), Antisocial Personality போன்ற தமிழுக்கு வித்தியாசமான தளத்தைத் தேர்தெடுத்திருக்கலாம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் பார்க்கும் பொழுது இன்னும் இரண்டு பாடல்களோடு ஒருமணிநேரம் அதிகம் எடுத்திருக்கக் கூடாதோ என்று நினைத்தவர்கள் எல்லாருமே, “நடுநிசி நாய்கள்” திரைப்பட நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம் என்று நினைக்குமளவுக்கு சலிப்பான திரைக்கதையை கெளதம் தந்திருக்கத் தேவையில்லை.

இப்படத்தில் வரும் Incest வகை காமம் ஊருக்குள் நிகழாமல் இல்லை. எனக்குத் தெரிந்தே எங்கள் ஏரியாவில் தந்தை தன் மகளை காம இச்சைக்கு உட்படுத்திய சம்பவத்தைப் பார்த்திருக்கிறேன். தவிர நிறைய பத்திரிக்கைகளிலும் படிக்கிறோம். அதனால் இந்த படத்தின் அடிநாதம் அப்படியொன்றும் ஊருக்குள் நிகழாத கதை என்று சொல்ல முடியாது. நமக்கு அருகிலேயே நடக்கும் கதைதான். ஒருசில லாஜிக் ஓட்டைகள், திரையைக் கிழித்து பார்வையாளனின் கண்ணில் குத்துகின்றன. “யுத்தம் செய், ஆடுகளம்” போன்ற படங்களில் இருக்கும் நுணுக்கம் இப்படத்தில் துளிகூட இல்லாதிருப்பது ”இயக்கம் கெளதமா?” என்று விழிவிரியச் செய்கிறது.

இது உண்மைக்கதைச் சார்ந்தது என்று கூறியிருப்பதால், எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராயவேண்டியிருக்கிறது. முழுவதுமே உண்மையான கதையா, இல்லை வெறும் ப்லாட் மட்டும் வைத்துக் கொண்டு ஜோடிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. காமம், வன்மம், பழிவாங்கல், மெண்டல் ரேப் (நன்றி சாரு), ரேப், கொடூரம், மனநோய் போன்ற பல தளங்களில் பயணித்தாலும் அதற்கான அழுத்தம் படத்தில் துளிகூட இல்லை என்பதுதான் உண்மை… காமம் சார்ந்த காட்சிகள் அறுவறுப்பைத் தரவில்லை என்றாலும் நுணுக்கமில்லாத திரைக்கதையினால் அது சலிப்பாகிவிடுகிறது. ஒரு சைக்காலாஜிகல் திரில்லர் படத்தில் திரில்லிங் துளியும் இல்லாதிருப்பது மிகப்பெரிய பலவீனம். கெளதம் தனது டெம்ப்ளேட் கதைத்தளத்திலிருந்து தள்ளி வந்திருந்தாலும்….. “சிகப்பு ரோஜாவின்” இதழைக் கூட எட்டமுடியவில்லை என்பது வருத்தம்தான்!!!

இசையில்லா புதுமுயற்சிக்கென ஒருமுறை மட்டும் பார்க்கலாம்.


Trailer

Comments

Unknown said…
//தவிர, தமிழில் நடந்த இந்த “வியாதி” படங்கள், மக்களுக்கு அதிக சலிப்பைத் தந்திருக்கின்றன. தவிர, வேற Plot களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு Paranoid schizophrenia, (A Beautiful Mind), hypopituitarism (Orphan), Antisocial Personality போன்ற தமிழுக்கு வித்தியாசமான தளத்தைத் தேர்தெடுத்திருக்கலாம்//
உண்மை தான் பாஸ்..சலித்து விட்டது!!
Unknown said…
விமர்சனம் அருமை..வாழ்த்துக்கள்
இதுபோன்ற கதையம்சம் கொண்ட எத்தனையோ படங்கள் தமிழ் தவிர நிறையவே வந்திருக்கின்றன. தமிழுக்கு இது புது முயற்சி என்பதால் வரவேற்கலாம். ஆனால் எருமை எரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னாலும் நம்புற மாதிரி ஒரு லாஜிக்கை வைத்து சொல்லனும். அது மிஸ்ஸிங்.

எல்லா ஜெனர்லயும் படமெடுக்க முயற்ச்சிக்கும் கெளதமிற்கு வாழ்த்துகள். ஆனால் இதுபோன்ற ஒரு முயற்சி தயவு செய்து வேண்டாம்.
ஹேமா said…
ஆதவா...இந்தவார முழுதும் “நடந்தது என்ன”நிகழ்வில் இந்தப்படம் எடுப்பதற்காக தான் எடுத்துக்கொண்ட தேடல் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்
கௌதம் மேனன்.
இந்த வகையான தமிழ் படங்களை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது.
அவர்தான் தமிழ்ல இங்கிலீஷ் படம் எடுக்கறவராச்சே
மிகவும் அழுத்தமான படம் ஒன்றல்லவா

அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
வயது வந்தவர்களுக்கான படமா? அப்போ நமக்கு இல்லையா. படம் பார்க்கவில்லை. இனித் தான் பார்க்க வேண்டும். விமர்சனமும், அலசிய விதமும் அருமை.
JACK and JILLU said…
”இப்படி எல்லாரும் அலசி காயப்போடற அளவுக்கு என்னதான் இருக்கோ படத்துல”ன்னு ஒரு ஆர்வம் வரத்தான் செய்யுது
அன்பு ஆதவன் ந.நி.நாய்கள் திரைக்கதை அமைப்பில் மிகவும் மோசமான படம்.மிகவும் மோசமான,வக்கிரமான உறவுகளை சித்தரிக்கும் போது ஒரு படைப்பாளியின் பொறுப்பு மிக மிக முக்கியம்.பொறுப்பற்று இந்த சப்ஜக்டை கையாண்டு இருக்கிறார் மேனன்.இப்படத்தை சாமி இயக்கியிருந்தால் நான்
எதிர்வினையாற்றியிருக்கமாட்டேன்