A.R. ரஹ்மானின் 127 Hours பாடல் விமர்சனம்



சலனமேயற்ற மனதெங்கும் மெல்ல ஊடுறுவி வடுவாக்கிச் சிரிக்கும் திறமை மெல்லிய இசைக்கு உண்டு. நம்மையும் அறியாமல் நம் ஆழ்மனம் அழுவதன் வெளிப்பாடு கண்களில் தெரிந்துவிடும்.. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மன்னிப்பாயா பாடலைக் கேட்டு ஒரு நிமிடம் என் கண்களில் நீர்த்திவளை கட்டி நிற்பதை அறிந்து இசை ஒரு மனம் குலைக்கும் போதை என்று மீண்டும் தெரிந்து கொண்டேன். மெல்லிய இசை எப்படி மனதை மயக்கும் கவர்ச்சிக்கன்னிகளாகிறது என்று மட்டும் புரியவேயில்லை.


மீண்டும் டானி பாய்ல், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த 127 ஹவர்ஸின் சவுண்ட்ராக்கை சமீபமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனதை இசையெனும் வஸ்துவால் மயக்கும் இந்த ட்ராக்குகள் ரஹ்மானின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று. ஆஸ்கர், கோல்டன் க்ளோப் மற்றும் கிராமி விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டாவது விருது பயணம்.. எப்படியாவது இந்த படத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் லிமிடட் ரிலீஸ் என்று சொல்லி என் தலையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டார்கள், சரி கள்ளத்தனமாகவாவது பார்த்துவிடலாம் என்று நினைத்தால் அதற்கும் வழியில்லாமல் போயிற்று.

Liberation Triplet :

இந்த ஆல்பத்தை நன்கு கேட்கும்பொழுது அதிலிருந்து மூன்று பாடல்கள் ஒன்றுகொண்டு தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக Liberation Begins. பாடலில் அக்வஸ்டிக் கிதார் இசை (Acoustic Music) மட்டுமே வழிந்தோடுகிறது. அதன் கம்பி மீட்டல் காதுகளில் அமர்ந்து இசையை கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டு நிமிடங்கள் மீட்டப்படும் இவ்விசையை இரவுகளில் கேளாதீர், தலையணை, சொட்டுச் சொட்டாய் நனைந்திருக்க நான் பொறுப்பில்லை. ஆனால் இது கொஞ்சம் சிமிலியர் டூ ஆரோமலே.. நன்கு ஆழ்ந்து கேட்டால் ஆரோமலேயின் தாக்கம் தெரியும். ஒருவேளை இரண்டுமே கிதார் என்பதால் இருக்கலாம். இந்த இசையின் தொடர்ச்சி Liberation In A Dream.. சற்றே வேகமாக கிதார் மீட்டுகிறது. லிபரேஷன் என்றால் விடுதலை... வேகமாகச் செல்லும் இந்த இசையைக் கேட்கும் பொழுது அகப்பட்டு விடுவித்துக் கொள்ளுதலை நினைவுபடுத்துகிறது. நிறைவு பெறும் பொழுது கிதாரைத் தொடர்ந்து வரும் வயலின் ஸ்ட்ரிங் மற்றும் பேஸ், போராட்டத்தில் வெற்றி பெறுதலைக் குறிப்பதாக எனக்குப் படுகிறது. இந்த ட்ராக்கையும் தொடர்ந்து மூன்றாவதாக Liberation... இவ்விரு பாடல்களிலும் கிதாருடன் வேறு பல இசைக்கருவிகளும் இசைகின்றன. என்றாலும் மூன்று பாடலிலும் ஒரேவகையிலான கிதார் இசை வேகத்தைப் பொறுத்து மாறி மாறி நமக்குக் கிடைக்கிறது. புதுப்பேட்டை படத்தின் தீம் ம்யூஸிக் ஒரு சிறந்த மெலடி அக்வஸ்டிக் கிதாருக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

Never Hear Again

Never Hear Surf Music Again பழைய கிளாஸிக் பாடல்களை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் ஆல்பத்திலேயே எனக்கு மிகவும் பிடிக்காத பாடல் இதுவே.. அழகாக ஆரம்பிக்கிற இப்பாடல் நடுவில் தேங்கி பழைய ரெக்கார்டுகளைப் போல ரிப்பிட் செய்யும் இசையால் தொந்தரவாகவும் இருக்கிறது. ஆனால் அது தவிர்த்து பாடல் ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. பாடலின் தலைப்பைப் போல திரும்ப கேட்டுவிடாதீர்கள்!!


Classicals

சில கிளாஸிக் பாடல்கள் இந்த தொகுப்பில் காணக்கிடைக்கின்றன/

Nocturne No 2 In E Flat, Op 9 (என்ன தலைப்புடா இது!!?) ஒரு சின்ன பியனோ பாடம். ஒவ்வொரு கட்டையும் தனித்தனியாக இசைமீட்ட யாராவது காதலர்களாக இருந்தால் நடனம் ஆடிவிடுவார்கள். அதே காதலர்கள் ஒரு இங்கிலிஸ் முத்தம் கொடுத்து ஸ்பீடாக ஆடினால் எப்படியிருக்கும் Ca Plane Pour Moi எனும் பாடல் ஒரு நல்ல ஹம்மிங் பாடல். இது ஒரு கிளாஸிக் பாடல். வரியே புரியாவிட்டாலும் கேட்பதற்கு மிக அழகான ரொமண்டிக் இசை!! அதேபோல If You Love Me என்ற இன்னொரு கிளாஸிக் பாடலும் உண்டு. 1977ல் வெளியான இப்பாடலைப் பாடியவர் எஸ்தர் ஃபிலிப்ஸ் எனும் பெண்மணி.. இவரது குரல் மிக அருமையாக இருக்கிறது...Lovely Day அதன் தலைப்பைப் போலவே காதல் தோய்ந்த இசையில் ஆரம்பிக்கிறது. பாடலைக் கேட்கும் போதே ஒரு ரொமண்டிக் இசை நடனமாடிக் கொண்டிருப்பதை உணரலாம்...

Rahmania

இவையெல்லாம் தவிர்த்து ரஹ்மானுக்கு உண்மையான தீனியாக பின் வரும் பாடல்களைச் சொல்லலாம். Touch of the Sun, பியனோவும் மெளனமும் கலந்த கலவை. பாடலில் மெளனமே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருப்பதால் மிக நிசப்தமான சூழ்நிலைகளில் கேட்பதால் நமது ஆழ்மனது உணரப்படும். அதைப் போலவே The Canyon ஒரு இன்ஸ்ட்ருமெண்டல். If I Rise பாடலை மையப்படுத்தி வரும் கோரஸ் மற்றும் ஊது கருவிகள் (கருவிகள் பெயர் எனக்குத் தெரியாது என்பதால் ஏதாவது ஒரு Brass Instrument என்று வைத்துக்கொள்ளுங்கள்) கேட்கும் பொழுது நினைவுகள் மீளுவதை உணரமுடிகிறது... Harshdeep Kaur இன் ஹம்மிங்கில் தொடங்கும் R.I.P, காதுகளின் வழியே இதயத்தை ஆக்கிரமித்து அதன் துடிப்பில் உடலெங்கும் ஜிவ்வென்று ஏறுவதை உணரமுடிகிறது. ஹம்மிங்கிலேயே செல்லும் R.I.P ரஹ்மானின் ஆகச்சிறந்த மெலடிகளில் ஒன்று. மெல்ல மெல்ல ஹம்மிங்கிலிருந்து எழுந்து இசை உயர்கிறது. நிறைவடைகிறது. அடுத்ததாக Acid Darbari ஒரு மிகச்சிறந்த பாடல். (தர்பாரி ராகம்??) புல்லாங்குழல் இழைந்த ரஹ்மானியப் பாடல். ஒரு ஆன்மீக மணம் இசையெங்கும் பரவிக்கிடக்கிறது. குழல், மணி, வயலின் ஸ்ட்ரிங் என சுத்தமான இந்திய இசை! கேட்கும் போதே பறந்துவிடுவதைப் போன்ற உணர்வு.. இவற்றைக் காட்டிலும் டைடோவுடன் இணைந்து ரஹ்மான் பாடிய If I Rise ஆல்பத்தின் ஹைலைட் பாடல்!! மெல்ல மியூஸிகல் ஹம்மிங்கிலிருந்து (சரியான இசைக் கருவியின் பெயர் தெரியவில்லை) Dido வின் குரலுக்கு மாறுகிறது. டைடோவின் குரல் ஹைபிட்சில் பாடினாலும் அது மென்மையாகவே இருக்கும். ஒருமுறை நீங்கள் கேட்டுப் பார்த்தால் தெளிவாகிவிடும். எப்பொழுதும் போல டைடோ மெல்ல ஆரம்பித்த விதத்தைப் பார்க்கும் பொழுது அவளது பழைய பாடல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆல்பத்திலேயே இந்த பாடல்தான் சிறந்தது என்று தெரிந்துகொண்ட ரஹ்மான் டைடோவோடு சேர்ந்து தனது மந்திரக்குரலில் பாடியிருக்கிறார். கூடவே ரஹ்மானின் ஹைலைட் கோரஸும் சேர்ந்தால்?? அதுவும் குழந்தைகள் கோரஸ்!!.... ரஹ்மானின் பாடல்களில் ஒரே ஒரு ட்யூன் மட்டும் பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டேயிருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஓமணப்பெண்ணே ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.. If I Rise பாடலிலும் அதைப் போன்று தொடர்ந்து மியூஸிகல் ஹம்மிங் ஒலிக்கும்படி இசைத்திருக்கிறார் இசைப்புயல். ஆகமொத்தத்தில் ஒரு மிகச்சிறந்த இந்திய சாயல் உள்ள பாடல் என்பதில் சந்தேகமேயில்லை... ஆனால் டைடோவின் கேரியரில் இதைவிட Thank You, Life for Rent, Don't Believe in Love போன்ற அநேக பாடல்கள் உள்ளன. ஒருவேளை கிராமி கிடைத்தால் டைடோவுக்கு இதுதான் முதல் கிராமியாக இருக்கும்!!!

மொத்தத்தில் ரஹ்மான் இசையமைத்த அனைத்துமே மெலடி மற்றும் கிதாரை மையப்படுத்தியே இருக்கிறது. படத்தின் ஸ்கோர், மூன்று லிபரேஷன் பாடல்களும் RIP, Acid Darbari மற்றும் If I Rise ஆக இருக்கலாம்.. காதல், சோகம், வெற்றி, விடுதலை, அகப்படல், போன்ற ஒவ்வொரு உணர்வுகளுக்கும் தகுந்தமாதிரியான இசை படம் நெடுக இருக்கலாம்... ஒரு மிகச்சிறந்த பின்னணி இசை என்பதாலேயே கோல்டன் க்ளோபுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை... காட்சிகளோடு பார்க்கும் பொழுது இசையின் மடங்கு இன்னும் பெரிதாகலாம்.......... என்னைப் பொறுத்தவரையில் மேற்கத்திய+இந்திய இசைக் கலவை வழங்கியிருக்கும் ரஹ்மானின் இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கரும் கோல்டன் குளோபும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!!! ஹான்ஸ் ஜிம்மரின் இன்செப்ஷன் மட்டுமே ரஹ்மானுக்குப் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்....

Songs List

1. "Never Hear Surf Music Again"
2. "The Canyon"
3. "Liberation Begins"
4. "Touch Of The Sun"
5. "Lovely Day"
6. "Nocturne No.2 in E flat, Op.9 No.2"
7. "Ça plane pour moi"
8. "Liberation In A Dream"
9. "If You Love Me (Really Love Me)"
10. "Acid Darbari"
11. "R.I.P."
12. "Liberation"
13. "Festival"
14. "If I Rise"

To Listen:

http://www.foxsearchlight.com/127hours/

To download

Mediafire :

http://www.mediafire.com/?tmi4t4rd8gpergm

Torrent :

http://thepiratebay.org/torrent/5935264

Comments