என்றாள் ஜெஸிகா



மாயத்திரைக்குள் சினைமுட்டைகளை
அடைகாத்தபடி இருந்த
கடல்குதிரையின் வால்
யானையின் முதுகில்
படர்ந்தபடி இருந்தது
கொப்பளங்கள் குவிந்து
வெடித்து சீர்த்து
வெண்மையாக ஒழுகிக் கொண்டிருந்தது
முதுகின் ஒரு புறம்
காணவியலா பிம்பத்தை
மறுபுறத்தில் ஒளித்துக் கொண்டு
யாரோ ஒருத்தியின் கெண்டைக் கால்கள்
சொறுகி வைக்கப்பட்டிருந்தது
அறுவறுப்பு ஏதுமில்லை,
அங்கே
உறுப்புகளிழந்தவன்
நின்றுகொண்டிருந்தான்.
அவன் ஒரு கோடும் வரைந்திருந்தான்
மாண்டரின் அறிந்த எகிப்தியன்
இதை எகிப்தின் எல்லைக் கோடென்றான்
இன்னொருவன் மயனின் ஓவியமென்றான்
வர்ணங்கள் ஏதுமில்லை
மேலே எழுதிய யாவும்
ஒரு அணு எழுப்பிய
புகை மேகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது
இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்
இக்கவிதை எழுதிய பிறகு
என்ன தலைப்பிடவேண்டுமெனத்
தெரியவில்லை
சகாராவுக்கு மேல் மேகம்
என்றாள் ஜெஸிகா.

Comments

ஆதவா, உனக்கு அந்த நேசமித்ரனே பரவாயில்லை போல..... :-)

தயவு செய்து விளக்கவும்,

இது கிண்டல் அல்ல புரிந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதல்தான் என்பதை சரியாக புரிந்துகொண்டமைக்கு நன்றி.
ஹேமா said…
நேசன்....ச்ச...ஆதவா...வரிகளும் தலைப்பும் நல்லாருக்கு !
rvelkannan said…
//ஒரு அணு எழுப்பிய
புகை மேகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது
இதனிடையே
மலையிடுக்கிலிருந்து நீண்டிருந்தன
பல கோட்டோவியங்கள்// இங்கிருந்து வெளிப்படும் நுண்வாசம் கவிதையெங்கும் ஒளிர்கிறது ஆதவா ..
வாழ்த்துகள். (எதன் தாக்கத்தில் விளைந்த கவிதை இது ... ? )
ஆதவா said…
மிக்க நன்றி முரளிகுமார் பத்மநாபன்!!

நன்றி ஹேமா

நன்றிங்க வேல்கண்ணன். மொட்டைமாடியில் படுத்து வானவிட்டத்தைப் பார்ப்பது அன்றாட வழக்கம். அதன் தாக்கத்தில் இருக்கலாம்!!
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, மனம் என்ன சொல்லுமோ, அதனை ஒரு எழுத்தாகவேனும் எழுதுங்க

இன்னும் கொஞ்சம் எளிமையாக தரலாமே?

படைப்பு பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கு கொடுங்கள்..

போட்டாச்சு

தயவு செய்து தவறான/ஆபாசமான கருத்துக்களைத் தரவேண்டாம்.

அதற்கு இங்கு வாய்ப்பு இல்லை
ஆதவா said…
வாங்க ஜோதிஜி....
நிச்சயம் அடுத்தடுத்த கவிதைகளில் எளிமை இருக்கும்....