வெயில்


1.
ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது
சூரியபழம்
கொறிக்கமுடியாத கொதிப்பில்
மிதந்து கிடக்கிறது
முழுத் தொண்டையும் வறண்டு
இரவை மண்நாக்கால் நக்கிவிட
பாலை மின்னுகிறது
கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்
கூச்சிடும் சப்தத்தில்
கதறிக் கொண்டிருக்கின்றன
சர்ப்பங்கள் ஊறுவதாக
கொப்பளித்த பாதங்களைத் தேடி
மண் அலைகிறது ; அதனை
தன் பையில் பத்திரப்படுத்திக் கொள்கிறது
எத்தனை சேகரித்திருப்போமென
கணக்கேதுமற்று மணல் முன் செல்கிறது
அதற்குத் தெரியப் போவதில்லை
தொடர்ந்து வரும் பெரும்புழுதி
கொப்பளப்பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருவதை.

2.
பிம்பமாக அலைகிறது வெப்பம்
அது துப்பிய கோபத்தில்
கொதிக்கிறது தண்ணீர்
அவமானக் கறைகள்
ஆவியாக வெளியேறுகிறது
உனக்கு சற்றும் பிடித்திருக்கவில்லை
கோபத்தால் தண்ணீர் கலைக்கிறாய்
நீர்முழுக்க சிதறிக் கிடக்கிறது
சூரியன்

Comments

இரவை மண்நாக்கால் நக்கிவிட
பாலை மின்னுகிறது
கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்
கூச்சிடும் சப்தத்தில்
கதறிக் கொண்டிருக்கின்றன]]

எப்படி ஆதவா வரிகளூடே எங்களையும் அழைத்து செல்கின்றீர்கள்
அவமானக் கறைகள்
ஆவியாக வெளியேறுகிறது]]

வித்தியாச பார்வை
ஹேமா said…
இரண்டு கவிதைகளுமே வாசிக்க வாசிக்க ஏதோ சொல்லுது ஆதவா.ஏன் இன்னும் கட்டுரை வடிவங்கள் ,சிறுகதை எழுதல ?
ஆதவா said…
மிக்க நன்றி நட்புடன் ஜமால் மற்றும் சகோதரி ஹேமா..

இப்பொழுது எழுதியிருப்பவை எல்லாமே முன்பே எழுதப்பட்டவைதான். தற்சமயம் நேரமின்மையால் எதுவும் எழுதுவதில்லை! நிச்சயம் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி!
sakthi said…
பிம்பமாக அலைகிறது வெப்பம்
அது துப்பிய கோபத்தில்
கொதிக்கிறது தண்ணீர்
அவமானக் கறைகள்
ஆவியாக வெளியேறுகிறது
உனக்கு சற்றும் பிடித்திருக்கவில்லை
கோபத்தால் தண்ணீர் கலைக்கிறாய்
நீர்முழுக்க சிதறிக் கிடக்கிறது
சூரியன்


அருமை ஆதவா
மனதை கனக்க செய்யும் வரிகளப்பா!!!
சொல்றதுக்கு வார்த்தையில்லை.. அருமை ஆதவா