யார் இந்த ஆதவா?


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஆதவன் என்றால் சூரியன் என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் முதலாவது என்றும் அர்த்தப்படும். இயற்பெயரோடு இணைந்திருப்பதால் இப்பெயர் வந்தது. பெயர்களை நிறைய மாற்றுவேன். வலையுலகிற்கு வந்த பின்னர், ஆதவா மட்டுமே நிலைத்திருக்கிறது. எனது இயற்பெயர் மட்டுமல்ல, எல்லா பெயர்களையும் நான் விரும்புவேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

27-07-08. என் அண்ணன் இறந்த தினத்தன்று.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நிச்சயம் பிடிக்கும். கையெழுத்திற்கென பரிசுகளும் பெற்றிருக்கிறேன். பள்ளி காலத்தில் என் கையெழுத்து மிக அருமையாக இருந்தது. இப்பொழுது எழுதுவதைக் காட்டிலும் டைப்படிப்பதே அதிகம். அதனால் பழைய அழகான கையெழுத்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டே இருக்கிறது.

4).பிடித்த மதிய உணவு என்ன?

அசைவ உணவுகள் எல்லாமே!! எங்கள் வீட்டில் அசைவம் வித்தியாசமாக சமைப்பார்கள். அதற்கு சிந்தாமணி என்று பெயர். அது மிகவும் பிடிக்கும் இப்பொழுது கூட அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இங்கே தருகிறேன்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நட்பு என்பது இப்பொழுது எழுத்துக்கள் வடிவிலும் காணக்கிடைக்கிறது.. எனது நட்பு புத்தகங்களின் வழியாகவும் இணையங்களின் வழியாகவும் பெருகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நான் யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டையும் விட ஆற்றில் குளிக்க பிடிக்கும்... கடல், அருவி.. இரண்டிலும் குளித்ததில்லை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம். அல்லது கண்கள்.. பேசும் போது அவர்களது உதடுகள். நான் முகம் பார்க்காமல் பேசிய தருணங்கள் அதிகம்.. இவையெல்லாவற்றையும்விட, அவர் எப்படி பேசுகிறார். என்ன வார்த்தைகளை உபயோகிக்கிறார் (தமிழ் அல்லது ஆங்கிலம் கலக்கிறாரா என்பது...) உதாரணத்திற்கு யாத்ராவோடு பேசுகையில் அவர் எதார்த்தமாக ஆங்கிலத்தைத் தவிர்த்து தமிழில் பேசுவதைக் கண்டேன். அதேசமயம் கார்த்திகைப்பாண்டியனிடம் பேசும் பொழுது சிலநேரங்களுக்கு அவர் ஆங்கிலத்தை நாடுவதும் பிடித்திருந்தது..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : எதையுமே சந்தோஷப்படுத்தி, திருப்தி கொள்ளும் பண்பு... சிக்கனம்.. சமாளிஃபிகேஷன், இப்படி நிறைய உண்டு... முக்கியமாக மறதி.

பிடிக்காதது : கோபம். திடீர் முடிவுகள். நிராகரித்தலை மறுபரிசீலனை செய்யாமலிருப்பது. முக்கியமாக மறதி

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் திருமணமாகவில்லை. இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனது அண்ணன். ஈரோடு சினீவாசன்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பும் வெள்ளையும் கலந்த பின்னலாடையும் சாம்பல் நிற முழுக்கால் சட்டையும். (Gray Pant)


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கணிணி திரை... வெளியே வாகன சப்தம், சூரியன் FM இல் ஒரு விளம்பரம். அருகே எம்ராய்டரி மிஷின் ஓடும் சப்தம்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருஞ்சிவப்பு.... எனக்கு மிகவும் பிடித்த வர்ணம்.

14.பிடித்த மணம்?

மல்லிகை. அதனை முகரும் பொழுதெல்லாம் எனக்கு யாரோ ஒருத்தியின் ஞாபகம் வரும்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?


அ.மு.செய்யது. தனக்காக எழுதுவதைக் காட்டிலும் மற்றவருக்காக எழுதுகிறார். அவரது ஊக்கமும் அவரது ஆழ்ந்த பின்னூட்டமும் எனக்குப் பிடித்தமானது. நன்கு படித்து விட்டு கருத்து சொல்லும் பலரில் இவரும் ஒருவர். (ஒருசிலர் படிக்கிறார்களா என்பதே தெரியாது... :( )

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

கார்த்திகைப் பாண்டியன்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா பதிவுகளுமே எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் பேருந்து கவிதையொன்று கொடுத்திருந்தார். மிகவும் அருமையாக இருந்தது... நல்ல எழுத்தாளர். எஸ்ராவின் ரசிகர். இலக்கிய உலகில் நல்ல இடம் அவருக்குக் காத்திருக்கிறது.

17. பிடித்த விளையாட்டு?

Call of Duty 1, 2,
Soldier of fortune II
GTA 3
Warcraft III
Doom 3
இவையெல்லாம் விரும்பி ஆடிய வீடியோ கேம்ஸ்,

கிரிக்கெட், செஸ்.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.. கடந்த எட்டு ஆண்டுகளாக அணிந்து வருகிறேன்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதில் அமர்ந்து கொஞ்சநேரம் அசைபோடவேண்டும். சமீபத்தில் அப்படியான தமிழ்படம் காதல், தவமாய் தவமிருந்து.. அஞ்சாதே
ஆங்கிலப்படங்கள் நிறைய உண்டு..

20.கடைசியாகப் பார்த்த படம்?

திரையரங்கில் : அயன், (தமன்னாவுக்காக)
சின்னத்திரையில் : Monsters Inc தமிழில் (சன் டி.வி)

21.பிடித்த பருவ காலம் எது?

வெயிலும் பிடிக்கும்.. மழையும் பிடிக்கும்... பருவகாலத்தை என்றுமே நான் நொந்து கொண்டதில்லை.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

உறுபசி முடித்தபின்னர் வேறேதும் கைவசமில்லை. ஆனந்த விகடன் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஏழு வருடங்களாக கணிணியில் பணிசெய்கிறேன். XP புதியதாக வந்த பொழுதிலிருந்து தற்சமயம் வரை டெஸ்க்டாப் படத்தை சுமார் ஐம்பது முறை கூட மாற்றியிருக்கமாட்டேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

எனக்கு நிசப்தம் ரொம்ப பிடிக்கும்.
பிடித்த சப்தம் : குழந்தையின் சிரிப்பு
பிடிக்காதது : குழந்தையின் அழுகை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

திருப்பதி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எல்லோருக்கும் தனித்திறமைகள் உண்டு. அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவை வெளியாகின்றன.

எழுத்து ஈடுபாட்டைப் போன்றே ஓவியங்களில் சற்று திறமையுண்டு. ஆனால் இப்பொழுது அதைச் செய்வதில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தேகம். என்னை யாராவது அநாவசியமாக சந்தேகப்பட்டால் அவர்களோடு நான் வாழ்நாளும் பேசுவதில்லை..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பலகோணம்.. ஒருவரைச் சந்தித்த பிறகு அவர் என்னென்னலாம் நினைப்பார் என்று யோசிப்பேன். அவரது இடத்தில் நானிருந்தால் என்றும் நிதானிப்பேன். சிலசமயங்களில் அதுவே அவர்மீதுள்ள அபிப்பிராயத்தின் ஏற்ற இறக்கத்தை மாற்றிவிடுகிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியா என்றால் பழங்கால கலைமிகுந்த கோவில்கள் பிடிக்கும்...
வெளிநாடு என்றால் வறுமை மிகுந்த ஆப்பிரிக்க நாடுகள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லா அனுபவிக்கணும்... சந்தோஷமா இருக்கணும்.. ஞாயிறு அன்று நான் எங்கேயும் செல்லுவதில்லை. கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். வீட்டில் அமர்ந்து கொண்டு, டி.வி, புத்தகம், இணையம், திரைப்படம், கணிணி விளையாட்டு, அரட்டை, தூக்கம் என்று பலவும் செய்வேன்... இந்த வாழ்க்கை எனக்கு வரம் போன்றது. அது வாழும் வரை நான் நன்கு அனுபவிப்பேன்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

திருமணமாகவில்லை... அப்படி ஆகியிருந்தாலும் சொல்லுவதற்கில்லை.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முகத்தில் எப்போதும் சந்தோஷம் பெருகியிருக்க வேண்டும்... யாரையும் குத்தாத சந்தோஷ வாழ்வு நிறைவைத் தரும்.. நிச்சயம்... வாழ்வு என்பது அனுபவிக்க.... அதேசமயம் அர்த்தப்படுத்திக் கொள்ள...

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

அ.மு.செய்யது.

Comments

\\யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை.
\\

நல்ல விடயம்.
\\14.பிடித்த மணம்?

மல்லிகை. அதனை முகரும் பொழுதெல்லாம் எனக்கு யாரோ ஒருத்தியின் ஞாபகம் வரும்.\\

உங்களிடம் மிகவும் பிடித்ததே

இப்படி வெளிப்படையான பதில்கள் தாம்.
அ.மு. செய்யது நல்ல தெரிவு

காத்திருப்போம் ...
அப்புறம் நண்பரே

ஆதவரை காணவில்லை

முடிந்தால் கண்டுபிடித்து தாருங்களேன்
இன்னும் ஒரு வரி கூட படிக்கல...
வர்ரேன் பின்னாடி எனக்கொரு இடம் வச்சிருங்க!!!
தமிழ் said…
சில விடைகள்
மகிழ்வைக் கொடுத்தாலும்
இன்னும் ஒரு சில பதில்கள்
மனத்திற்கு இரணத்தைக் கொடுத்தது

நண்பரே
உமா said…
ஆதவா உங்களைப் பற்றி அறிய தந்திருக்கிறீர்கள். சுவாரஸ்யமானவர்.சீக்கிரமாக திருமணமாகி மல்லிகைப்பூவோடு ஒருவர் உங்களுக்குச் சொந்தமாகட்டும் வாழ்த்துகள்.

நட்புடன் உமா.
உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லையா?
முகப்பு பக்கத்தில் இருப்பது உங்கள் குழந்தை என்று நினைத்தேன்:pp
// reena said...

உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லையா?
முகப்பு பக்கத்தில் இருப்பது உங்கள் குழந்தை என்று நினைத்தேன்:pp//

வழி மொழிகிறேன் :))
எல்லாமே வெளிப்படையான பதில்கள் ஆதவா.. கொஞ்சம் விலகிய சிந்தனையும் கூட.. உங்களுக்குள் இருக்கும் சாத்தான் பற்றிய நேர்மையான பதிலுக்கு ஒரு சல்யூட்.. வாழ்த்துக்கள்...
தெளிவான சிந்தித்து சொல்லிருக்கீங்க ஆதவா

தாங்களை அறியத்தந்தமைக்கு மகிழ்ச்சி
//யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை/

நல்ல பாலிசி
//பிடித்த விளையாட்டு?

Call of Duty 1, 2,
Soldier of fortune II
GTA 3
Warcraft III
Doom 3
இவையெல்லாம் விரும்பி ஆடிய வீடியோ கேம்ஸ்,
//

அதிகமா கம்யூட்டர் கேம்ஸ் விளையாடும் நபர் என்ரு தெரிகிறது
sakthi said…
ஆதவன் என்றால் சூரியன் என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் முதலாவது என்றும் அர்த்தப்படும்.

நல்ல பெயர்


அசைவ உணவுகள் எல்லாமே!! எங்கள் வீட்டில் அசைவம் வித்தியாசமாக சமைப்பார்கள். அதற்கு சிந்தாமணி என்று பெயர்.

அப்படின்னா என்ன???

பெரும்பாலும் நான் யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை.

நல்ல பழக்கம்
sakthi said…
பிடித்தது : எதையுமே சந்தோஷப்படுத்தி, திருப்தி கொள்ளும் பண்பு... சிக்கனம்.. சமாளிஃபிகேஷன், இப்படி நிறைய உண்டு... முக்கியமாக மறதி.


மறதி பிடிக்குமா வித்தியாசமான மனிதரப்பா நீங்கள்

நன்கு படித்து விட்டு கருத்து சொல்லும் பலரில் இவரும் ஒருவர். (ஒருசிலர் படிக்கிறார்களா என்பதே தெரியாது... :( )

உண்மை
சிந்தாமணியா.... உங்க வீட்டுக்கு எப்ப வரலாம்?
ஆற்றில் குளிக்கும் சுகமே தனிதான். ஆற்றில் எதிர்நீச்சல் போட்டு குளிப்பது அடடா!
//இன்னும் திருமணமாகவில்லை. இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!//

கார்த்திகைப்பாண்டி நீங்க சொல்லுங்க... நிஜமா?
அ.மு. செய்யது... உங்க பதிவிற்காக காத்திருக்கிறோம்.
//குடந்தைஅன்புமணி said...
கார்த்திகைப்பாண்டி நீங்க சொல்லுங்க... நிஜமா?//

உண்மையிலேயே ஆதவா பால்குடி மாறாத பச்சப்புள்ள தான் நண்பா.. ஆனா அது என்னென்ன சேட்டை பண்ணி இருக்குன்னு நான் சொல்ல மாட்டேன்ப்பா.. :-)
ஆதவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு உதவுகிறது...

//பெரும்பாலும் நான் யாரையும் உடனே நட்பு பாராட்டுவதில்லை. வந்த நட்பை கைவிடுவதுமில்லை.//

மனம் திறந்த பதில்...இது தான் ஆதவனிடம் எனக்குப் பிடித்தது...
//அ.மு.செய்யது. தனக்காக எழுதுவதைக் காட்டிலும் மற்றவருக்காக எழுதுகிறார்.//

அ.மு.செய்யது- நல்ல தேர்வு ஆதவன்...
விரைவில் மல்லிகை பூவை மணந்து பார்க்க வாழ்த்துக்கள்.
Rajeswari said…
பெயர்க்காரணம் நன்று.

நட்பை பற்றிய வரிகள் தெளிவானவை.

தங்களுக்கும்,செய்யது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
//வெயிலும் பிடிக்கும்.. மழையும் பிடிக்கும்... பருவகாலத்தை என்றுமே நான் நொந்து கொண்டதில்லை.//

ஒரு கவிஞனுக்குரிய குறைந்த பட்ச தகுதிகள் இவை.அது உங்களுக்கு நிரம்பவே இருக்கிறது.

ஆதவன் என்ற ஒரு மனிதனைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

//
அ.மு.செய்யது. தனக்காக எழுதுவதைக் காட்டிலும் மற்றவருக்காக எழுதுகிறார். அவரது ஊக்கமும் அவரது ஆழ்ந்த பின்னூட்டமும் எனக்குப் பிடித்தமானது. நன்கு படித்து விட்டு கருத்து சொல்லும் பலரில் இவரும் ஒருவர்.//

உங்கள் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஜமால் காக்கா,குடந்தை அன்புமணி,புதியவன் நெகிழ வைத்து விட்டீர்கள்.

மற்ற படி வார்கிராஃப்ட் என்ற கேமுக்கு நானும் அடிமை.
நல்ல பதில்கள் ஆதவா.
ஆதவா என்ற நண்பர் பற்றி
நன்கு தெரிந்துகொண்டேன்
//இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!//


இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!

இது தோற்றத்தில் ஆனால் அனுபவத்தில் பெரிய்யயயய ஆளுங்கோ.
வந்துட்டேன்....!!

யார் இந்த ஆதவா?"..!!
கேள்வியோடு எங்களுக்கு விடையும் சிறப்பா கொடுத்துட்டீங்க!

|கடல், அருவி.. இரண்டிலும் குளித்ததில்லை.|

இரண்டிலுமே குளித்தில்லையா?
ஆச்சரியமா இருக்கு ஆதவா

உங்களை பற்றி நிரையவே தெரிந்துக் கொள்ள முடிந்தது.
அருமையான பதிவு ஆதவா.

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
அ.மு.செய்யது.
அடுத்து அவரையும் தெரிந்துக் கொள்வோம்.
தனித்துவமாய் இருந்தது ஆதவா,
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ஆதவா said…
மிக்க நன்றீங்க ஜமால்.... ஆதவரைக் காணவில்லை என்று சொல்லியிருப்பதன் அர்த்தம் புரிகிறது. விரைவில் வெளிவருவார்!!
--------------------------
என்னங்க திகழ் இப்படிச் சொல்லிட்டீங்க... எந்த பதில் ரணத்தைக் கொடுத்தது???
நன்றிங்க..
--------------------------
மிக்க நன்றிங்க உமா. சீக்கிரமே ஆகாது.. கொஞ்சம் லேட் ஆவும்...
----------------------------
ரீனா.. விளையாடாதீங்க... அந்த பொண்ணு யாரோ!!
சென்ஷி சார்... நீங்களுமா???
நன்றிங்க.
------------------------------
நன்றிங்க கார்த்திகை.. சொல்லணும்னு வந்தாச்சு... அப்பறம் அதில் மறைச்சு என்ன பிரயோசனம்??
-----------------------------
அஃப்ஸர்.. இணையத்திற்கு வராததற்கு முன்பு விளையாடிய கேம்கள் அவை... குறிப்பிட்ட கேம்களின் வெளியீட்டுத் தேதியைக் கொண்டு அந்த காலத்தையே நிர்ணயிக்கலாம்..
-----------------------------
சக்தி.. சிந்தாமணி குறித்து பிறிதொருநாள் விரிவாகச் சொல்லுகிறேன்.. நன்றிங்க..
-------------------------
வாங்க அன்புமணி... எப்ப வந்தாலும் சரிதான்.. வெள்ளி சனி தவிர...
பல்லவ நாட்டுக்காரரான நீங்க பாண்டியர்கிட்ட கேட்டு சேரநாட்டானை பழி வாங்கிட்டாரு பாருங்க..
-------------------
நன்றிங்க புதியவன்.. அ.மு செய்யது பதில்களை எதிர்பார்க்கிறேன்
------------------------
வாருங்கள் தேனீ-சுந்தர். உங்கள் வாழ்த்துக்கு நன்றி (சீக்கிரமே நடக்கட்டும்!! ஹிஹிஹி)
------------------------
மிக்க நன்றிங்க டீச்சர்... உங்கள் வாழ்த்துக்கும்..
------------------------------
வாங்க செய்யது.... உண்மையைத்தானே நான் சொன்னேன்.. வார்கிராஃப்ட் முடிச்சிட்டீங்களா?? நாலு கம்பெய்னையும் நான் முடிச்சிட்டேன்..
------------------------------
நன்றிங்க மண்குதிரை
--------------------------
நன்றிங்க குமரை நிலாவன்...

சொல்லரசன் சார்... நீங்களுமா??? நன்றிங்க..
--------------------------
நன்றிங்க ஆ.முத்துராமலிங்கம். கடல், அருவி, இரண்டடயும் பார்த்திருக்கேன்... ஆனா குளிச்சதில்லை... சொல்லியபடி மறுபடியும் வந்தமைக்கு நன்றி
-------------------
நன்றிங்க அகநாழிகை!!
thamizhparavai said…
நல்ல பகிர்வு ஆதவன்...
4,5,6,14,19ல் பாதி,20ல் பாதி,21,26,30,31 பதில்கள் என் முன்னே கண்ணாடியை நிறுத்தி என்னைக் காட்டியது..
//இன்னும் திருமணமாகவில்லை. இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!//

அப்படியா நம்பிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.........
//அத்திரி said...
//இன்னும் திருமணமாகவில்லை. இப்பத்தாங்க டீன் ஏஜ் முடிஞ்சிருக்கு!!!!//

அப்படியா நம்பிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.........
//


அட உண்மையிலே தாங்க...எனக்கும் ஆதவனுக்கும் ஒரே வயது என்று நினைக்கிறேன்.
நண்பா பதில்களை மிகவும் ரசித்தேன்,

அண்ணன்.......என்னை மிகவும் பாதித்தது,

மல்லிகை,,,,,,, பல நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க ஆதவா

எல்லாம் நிறைவான பதில்கள் ஆதவா.
4).பிடித்த மதிய உணவு என்ன?

அசைவ உணவுகள் எல்லாமே!! எங்கள் வீட்டில் அசைவம் வித்தியாசமாக சமைப்பார்கள். அதற்கு சிந்தாமணி என்று பெயர். அது மிகவும் பிடிக்கும் இப்பொழுது கூட அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இங்கே தருகிறேன்.//

நான் வெஜி...
நீங்க நான்வெஜி...
:-)
14.பிடித்த மணம்?

மல்லிகை. அதனை முகரும் பொழுதெல்லாம் எனக்கு யாரோ ஒருத்தியின் ஞாபகம் வரும்.
//

அப்போ இது அதே தாங்க...
திரையரங்கில் : அயன், (தமன்னாவுக்காக)//

பெரிய ஆள் தாங்க நீங்க...
:-)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சந்தேகம். என்னை யாராவது அநாவசியமாக சந்தேகப்பட்டால் அவர்களோடு நான் வாழ்நாளும் பேசுவதில்லை..//

எனக்கும் இந்தக் குணம் உண்டு...
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பலகோணம்.. ஒருவரைச் சந்தித்த பிறகு அவர் என்னென்னலாம் நினைப்பார் என்று யோசிப்பேன். அவரது இடத்தில் நானிருந்தால் என்றும் நிதானிப்பேன். சிலசமயங்களில் அதுவே அவர்மீதுள்ள அபிப்பிராயத்தின் ஏற்ற இறக்கத்தை மாற்றிவிடுகிறது.//

மறைக்காமல் கூறியதற்கு ஒரு சபாஷ்...
அருமை ஆதவா...

உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
உங்களைப்பற்றி நிறைய அரிந்து கொண்டோம்...
நன்றி(தகவலுக்கு...)
:)))
Suresh said…
மச்சான் அன்றே படித்து விட்டேன் ஆனால் பின்னூட்டம் போட முடியவில்லை, உனக்கு கால் பண்ணி பேசலாம்னு தான் போடல..

இந்த பதிவு இன்னும் உன் மேல உள்ள மதிப்பும் மரியாதையும் அதிகம் ஆகிடுச்சு...

உன்னை பற்றி தெரிந்துகொள்ளவும் உதவியது மச்சான்...

போனுல மீதிய பேசுறேன்.. சரியா

அ.மு.செய்யது நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...

ஆதவனின் மனதை தொட்டவர் என்பதே என்னை பொருந்த வரை நல்ல விருது..
Joe said…
//
எங்கள் வீட்டில் அசைவம் வித்தியாசமாக சமைப்பார்கள்.
//
ஆஹா, இதற்காகவே ஆதவன் வீட்டுக்கு ஒரு நாள் போகலாம் போலேருக்கே?
சாரிங்க கடைசியா படிப்பதற்க்கு :-)

எல்லா பதிலும் உங்களின் கண்ணாடி போட்ட பார்வையை தெளிவாகக் காட்டுகிறது.


குழந்தையின் அழுகை புடிக்காதா??? என்னங்க??? அதுவும் அழகுதானே???
ஆதவா said…
தமிழ்பறவை, அத்திரி, அ.மு.செய்யது, யாத்ரா, வேத்தியன், வழிபோக்கன், சுரேஷ், ஜோ, கடைக்குட்டி ஆகிய அனைவருக்கும் என் நன்றி!!!