ஞாபக நகங்கள்இன்றைய காலையில் நகவெட்டியைத் தேடிக் கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமையும் அதுவுமா நகத்தை வெட்டாதே என்று அம்மா திட்டியதை ஒரு காதில் நுழைத்து இன்னொரு காதில் உருவியெடுத்துவிட்டு நீண்டு கூர்ந்திருந்த நகத்தை வெட்டுவதற்காக ஆயத்தமாகியிருந்தேன்.. அது ஏனோ, நான் நகங்களை வெட்டும் நாட்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையாகவே அமைந்துவிடுகிறது.. என்னுடைய அன்றாட திட்டமிடுதலிலிருந்து தப்பிச் சென்று நகங்கள் நீளுகின்றன. அதற்கான பொழுதுகளை எதிர்பார்ப்பதுமில்லை. கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், வெட்டப்படும் நாட்கள் எல்லாமே வெள்ளி அல்லது சனியாக இருப்பது என்ன காரணத்தினால் என்பது தெரியவில்லை. கிழமைகள் என்றுமே உகாததாக இருப்பதில்லை. அவைகள் எந்தவொரு நோக்கத்தோடும் பிறப்பதில்லை, ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?

நகங்கள் உடலின் ஒரு பாகம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது.. அவை எங்கிருந்து முளைக்கின்றன, அதன் வேர் என்ன எனும் ஆராய்வுக்கு இதுவரையிலும் சென்றதில்லை (இளசு அண்ணா சொல்வார் என்று நினைக்கிறேன்) பலருடைய விரல்களைக் காணும் பொழுது அவர்களின் நகம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் அவதானிப்பேன். சிறு வயதில் நகங்களில் பூ பூக்கிறது என்று (வெள்ளைப் படுதல்??) ஒவ்வொரு விரலையும் எண்ணிக் களித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அது ஒரு நம்பிக்கை. அதிகம் பூ உள்ளவர்களுக்கு நல்ல மனைவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பொழுது எண்ணினால் ஓரிரண்டு தேறுகிறது.

வெகு சில நாட்களுக்கு முன்னர், இடதுகை ஆட்காட்டி விரலில் அடிபட்டு இரத்தம் நகங்களின் இடுக்கு வழியே ஒழுகிக் கொண்டிருந்த பொழுது, நகங்களின் முழுமையான பணி என்ன என்பதை முழுமையாகவே உணர்ந்து கொண்டேன். விரல்கள் கண்களாக இருக்கின்றன. நக இடுக்குகள் என்றுமே மூடிக்கொண்டிருக்கின்றன அல்லது பாதுகாப்பாக இருக்கின்றன. முட்டி ஓடும் இரத்த நீரை அது வெளியேற்றவிடாத பாதுகாவலனாக, விரல்களின் வலிமை அரணாக இருந்துவருகிறது. விரல்கள் அற்றவர்களுக்கு நகங்கள் வெட்டவேண்டும் என்ற அவசியம் நேராததை நினைக்கும் பொழுது நமக்கு ஏன் அது வளரவேண்டும், வளர்ந்து நறுக்கவேண்டும் என்று தோணுகிறது.. இது சோம்பேறித்தனத்தின் எண்ணங்களா இல்லை கையற்றவர்களைப் பற்றி நினைக்கும் கையறு நிலையா என்பது தெரியவில்லை.

சிலசமயம் யோசனைகளை மீறும் பொழுதோ அல்லது யோசனைகளை கயிறு கட்டி இழுக்கும் பொழுதோ, நகங்கள் உணவாவதை நிதானித்திருக்கிறேன். இரவு மொட்டை மாடியில் நகங்களைக் கடித்துத் துப்பாமல் விழுங்கும் பொழுது அது குடலைக் கிழித்து செல்லுவதைப் போன்றும் தொண்டையில் அடைத்து சிறுநாக்கைச் சுரண்டுவது போலவும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதே உணர்வோடு உணர்வாக மீண்டும் நகங்களைக் கடிப்பது எதற்காக என்று எனக்கும் தெரியவில்லை. நகம் தின்னுவதில் பெரும்பாலும் எனது கட்டை விரல்கள் முன்னுக்கு வருவதில்லை, ஏனைய நான்கும், குறிப்பாக சுண்டுவிரல் நகம் என் பசிக்கு இரையாவதை எல்லா நாட்களிலும் தவிர்க்க முடியவில்லை. கடித்து அப்படியே விழுங்காமல், அதை சிறுசிறு துகள்களாக செதுக்கி, நாக்கால் குழைத்து பின்னரே விழுங்க நேரிடுகிறது. நகங்களின் வளர்ச்சி எப்படி தெரியாமல் இருக்கிறதோ அதைப் போன்றே விழுங்குவதும் எனக்குத் தெரியாமல் நடக்கிறது. எல்லா நாட்களிலும் நகங்களை வெட்டிய பின்னரும், கடிப்பதற்குத் தோதாக நகங்கள் முட்டி நிற்கின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் கடிப்பதற்கு இல்லை என்று வெசனப்பட்டதில்லை.

சென்ற ஞாயிறில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கினேன். என்னை அறியாமல் என் கைவிரல் நகம் பட்டு அக்குழந்தையின் இடுப்பில் சிறு கீற்று படிந்து இரத்தம் மெல்ல எட்டிப் பார்த்தது. அக்குழந்தையின் கதறலையும் மீறி எனக்குள் நகம் குறித்த வெறுப்புகள் அழுந்தின. நகங்களை வெட்டுவதில் நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஆயுதமாக என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல் இருப்பது போன்று நகங்கள் இருக்கின்றன. பல சமயங்களில் ஆயுதங்களைப் பற்றிய வரையறையிலிருந்து நகங்கள் மட்டும் தப்பித்துச் செல்ல நேர்ந்ததை நினைவுகூர்ந்தேன். அறுதியிட்டு சொல்லமுடியாத தொலைவில் நகங்கள் இருக்கலாம் என்று எனக்கு நானே சமாதானமும் சொல்லிக்கொள்ள வேண்டியதாயிற்று. என்றாலும் யார்மீதோ பட்டு கிழிக்கும் ஒரு ஆயுதமாக எண்ணிப் பார்க்கும் வெறுப்பிலிருந்து நகங்களைக் குறித்த என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை.பொதுவாக, பெண்களுக்கு நகங்கள் வளர்ப்பதில் சிறிது விருப்பம் இருக்கின்றது,. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆயுதமாக விளங்கியிருக்கலாம். எனக்கு பெண்களின் நக அழகு மிகவும் பிடித்த விஷயம். அவர்கள் அதைப் பாதுகாப்பதும் நகப்பூச்சு பூசி அழகுபடுத்துவதும் சொல்லமுடியாத உணர்வுகள்... ஒரு சில பெண்களின் நகங்களில் சிறு சிறு பூக்கள் வரைந்து அழகுபடுத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நகங்கள் வளர்ப்பது சிலருக்குப் பொழுது போக்காகக் கூட இருக்கிறது. எங்கள் பழைய வீட்டில் ஒரு மாமா இருந்தார். அவரது இடது கட்டை விரலிலும் ஆட்காட்டி விரலிலும் ஒரு செ.மீட்டர் அளவிற்கு நகங்களை வளர்த்து வைத்திருப்பார். அவர் ஒரு தையல்காரர் என்பதால் துணிகளை மடித்து தேய்க்க அந்நகங்கள் உதவுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். கத்தியின்றி வெங்காயம் நறுக்கும் பொழுது, ஏதாவது ஒரு பொருளை சுரண்டும் பொழுது, சிலசமயம் உடலைச் சொறியவும் கூட நகங்களுக்கு வேலைகள் இருக்கின்றன.

ஆயுதங்கள் நீண்டால், ஒடுக்கப்படவேண்டும் என்ற நியதிப்படிதான் நகங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய நகத்தினைக் குப்பையில் கொட்டும்பொழுது புன்னகை இதழோரம் முளைத்துவிடுகிறது. படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன. ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?

வாக்களிப்பதன் மூலம் படைப்பை பலருக்குக் கொண்டு சேர உதவி புரிகிறீர்கள்

தமிழிஷில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் வாக்களிக்க

எதிர்வாக்கு

Comments

sakthi said…
ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?


இருக்கலாம் ஆதவா சில நேரங்களில் நம் ஆழ்மனம் நமை அறியாது இது போன்ற குட்டி குட்டி புரட்சி செய்யும்
நமக்கே தெரியாமல்
Rajeswari said…
அது ஏனோ, நான் நகங்களை வெட்டும் நாட்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையாகவே அமைந்துவிடுகிறது.. //

உங்களுக்குமா?

//ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?//

இருக்கலாம்...இருக்கவேண்டும்!


//ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா//

சில நேரங்களில்..அதாவது அழகுப்படுத்திய நகங்கள் கீழே வெட்டி எறியப்படும்போது...
sakthi said…
ஆயுதங்கள் நீண்டால், ஒடுக்கப்படவேண்டும் என்ற நியதிப்படிதான் நகங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய நகத்தினைக் குப்பையில் கொட்டும்பொழுது புன்னகை இதழோரம் முளைத்துவிடுகிறது. படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன. ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?

இது வரை தோன்றியிருக்கலாம் ஆனால் மனதில் நின்றதில்லை ஆனால் இனி நிற்கும் ஆதவா உங்கள் படைப்பை பார்த்த பின்பு
Anonymous said…
kuppai...
Anonymous said…
//இலக்கியம்//

????

ithukku peyarthaan ilakkiyamaa?
பொதுவிலிருந்து விலகிச் செல்லும் வித்தியாசமான சிந்தனை..

//நகங்களை வெட்டுவதில் நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஆயுதமாக என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல் இருப்பது போன்று நகங்கள் இருக்கின்றன. பல சமயங்களில் ஆயுதங்களைப் பற்றிய வரையறையிலிருந்து நகங்கள் மட்டும் தப்பித்துச் செல்ல நேர்ந்ததை நினைவுகூர்ந்தேன். //

நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களில் சில எனக்குத் தோன்றியவைதான்.. ஆனால் நகங்களைப் பற்றி இப்படி எல்லாம் கூட சிந்திக்க முடியுமா என வியக்க வைக்கிறீர்கள். நண்பா
ஆதவா said…
நன்றிங்க சக்தி, ராஜேஷ்வரி, கார்த்திகைப் பாண்டியன்....

நன்றிங்க அநாநி. இலக்கியம் எனும் டேக் ஐ மாற்றிக் கொள்ளுகிறேன்.
ஆதவா..கொஞ்சம் வேலை பின்னாடி வர்ரேன்!!!!
\\ஒரு காதில் நுழைத்து இன்னொரு காதில் உருவியெடுத்துவிட்டு\\

நல்ல இரசணை ஆதவா
gayathri said…
பொதுவாக, பெண்களுக்கு நகங்கள் வளர்ப்பதில் சிறிது விருப்பம் இருக்கின்றது,.


ama pa

naanum ippa than konja konjama valathutu varen
gayathri said…
ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?


mmmmmmmmmmm thoni iruku pa

asai asaiya valatha negam thuni thoikkum pothu odanji pokum appadi irukum pothu enaku thoni iruku
நகம் பற்றி எழுத இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா என்ன? ஆதவா ஆதவாதான்! உடல்நிலை தேவலையா?
எனக்கு நகம் கடிப்பவர்களை பார்த்தால் ஒருமாதிரி சிலிர்க்கும். அவர்கள் அருகில் இருக்க மாட்டேன். நம் சந்திப்பின்போது ஜாக்கிரதை!
நகம் வெட்டுவதில் கூட இத்தனை யோசிக்கலாம், இவ்வளவு எழுதலாமா? ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ஆதவா!!!
ஆதவா said…
நன்றி முத்துராமலிங்கம், (பிறகு வாங்க)
ஜமால்,
காயத்ரி,
குடந்தை அன்புமணி (தேறிட்டேன்...:))
ரீனா...

உங்கள் அனைவரின் அன்புக்கும் தலைவணங்கும்
ஆதவா
உமா said…
எனக்கு வெள்ளிக்கிழமைதான் அலுவலகத்தில் வார விடுமுறை,அன்றுதான் [ஷிஃப்ட் வேலை] எனக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும். அம்மாவிடமிருந்து வாங்கிகட்டிக்கொள்ளாத நாளே இல்லை.

சின்ன விஷயத்தைக்கூட சுவரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

உடல் நலம் சரியாகிவிட்டதா? சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
நகங்களை வெட்டி எறிவதோடு சரி அதற்குமேல் அதனிடம் அகபட்டதில்லை நான். மேலும் நகம் வெட்டுவது கொஞ்சம் எரிச்சலான வேலையாகவே இருந்து வருகின்றது எனக்கு.

உங்களுக்கு நகம் பற்றி எப்படி எழுதத் தொன்றியது!! வியப்புதான். சற்று வித்தியாசமா முயற்சித்து எழுதியிருக்கீங்க அது நல்லாவே வந்திருக்கின்றது.

|சிறு வயதில் நகங்களில் பூ பூக்கிறது என்று (வெள்ளைப் படுதல்??) ஒவ்வொரு விரலையும் எண்ணிக்|

நான் கூட சிறு வயதில் நகங்களில் 'பூ' வாங்க பறந்து செல்லும் கொக்குகளிடம் கையசைத்து கேட்டுக்கின்றேன்.


நல்ல ரசனையுடன் எழுதியிருக்கீங்க ஆதவா.. இன்னும் இது போன்று வித்தியாசமான பொருளிலிருந்து எழுத்தை தாருங்கள். நன்றே!!

::சின்ன பின் குறிப்பு. ஆதவா,
ஓரிரு இடங்களில் சிறு துணுக்கை விளக்க அதிக வரிகள் கொண்டிருக்கின்றீர்கள் அதை தவிருங்கள் ஆதவா இன்னும் செம்மைபடும்:: (இது என் கருத்தே)
"மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு .." அவ்வாறு நீங்கள் செய்வதாயிருந்தால் அது நிச்சயம் மற்றவர்களுக்கு ஒரு பாடம். மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டும். அதன் ஊடுதான் எமது சமூகம் முன்னேற முடியும்.
நகங்களை வைத்து சில நோய்களை கண்டுபிடிக்கலாம் என்பது நான்
கேள்விப்பட்டிருக்கிறேன்...

இங்கு வெளி நாடுகளில் நகங்களை மட்டுமே அழகு படுத்தும் அழகு நிலையங்கள் இருக்கின்றன...

ஆனால்,நகங்களைப் பற்றி வேறு கண்ணோட்டத்தில் உங்கள் அனுபவங்களையும் இணைத்து எழுதியிருப்பது நல்லாயிருக்கு ஆதவன்...
அட எனக்கும் நகம் வெட்டுறதுல இந்தமாதிரி பிரச்சினைல்லாம் வரும்..

வளராமலே இருந்தா பிரச்சினையேயில்லையே...
:-)

மீசை, தாடி கூட இப்பிடித் தான்..
சில சமயங்களில் வளராமலே இருந்தா நல்லதுன்னு தோனும்ல...
:-)
என்னங்க.. நகத்துல இவ்வளவு ஆராய்ச்சியா???

வித்தியாசமான அனுபவம்.. ஒவ்வொரு முறையும்
//முட்டி ஓடும் இரத்த நீரை அது வெளியேற்றவிடாத பாதுகாவலனாக, விரல்களின் வலிமை அரணாக இருந்துவருகிறது. //

நகம் வெட்டும் போது இவ்ளோ யோசிப்பீங்களா ??
////நகங்களை வெட்டுவதில் நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஆயுதமாக என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல் இருப்பது போன்று நகங்கள் இருக்கின்றன. பல சமயங்களில் ஆயுதங்களைப் பற்றிய வரையறையிலிருந்து நகங்கள் மட்டும் தப்பித்துச் செல்ல நேர்ந்ததை நினைவுகூர்ந்தேன். //

உங்களின் சிந்தனை என்னை பிரமிக்க வைக்கிறது.
நல்லாயிருக்கு பாஸ்..
thamizhparavai said…
நண்பரே...
நல்ல வாசிப்பனுபவம் கொடுத்தது பதிவு...
//ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?//
அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் அது எனது சோம்பலின் வெளிப்பாடு எனப் பின்பு புரிந்தது.
உங்களுக்கெப்படியோ...?
//படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன.//
நல்ல பார்வை. வித்தியாசமா இருக்கு.
நல்ல கவித்துவ உரைநடை. இது எனக்குள்ளும் நகங்கள் பற்றிய பல எண்ணங்களைக் கீறிவிட்டது.
வெட்டப்பட்ட நகங்களை வைத்து சூனியம் செய்து விடுவார்களென்பதால், அதனை யார் கண்ணிலும் படுவதற்குள் குப்பையில் போட்டுவிடச்சொல்வார்கள். (யார் காலிலும் குத்திக் கிழித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணமும் உண்டு).
பத்து வருடங்களுக்கு முன் மதுரை டவுண் பஸ்ஸில் ஒரு நடத்துனரைப் பார்த்தேன். சுண்டுவிரலோ, நடுவிரலோ ஞாபகமில்லை.. ஒன்றரை இஞ்ச் நீளத்திற்கு வளர்த்திருந்தார் நகத்தை. நெயில் பாலிஷ் போட்டுப் பளபள வென வைத்திருந்தார்.
இப்போதும் நகம் வெட்டும்போதும், கடிக்கும் போதும் என்னால் அது போல் வளர்க்க இயலவில்லை என்பது தொலைதூரத் தூரலாய் மனதில் வந்து போகும்.
இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள் ஆதவா...

அது சரி.. இப்பதிவுக்கு ஏன் இவ்வளவு நெகடிவ் ஓட்டு..? :-(
நேரமிருந்தால் இங்கு(http://thamizhparavai.blogspot.com/2009/05/blog-post_14.html) வந்து போகவும். கவிதை மாதிரி போட்டிருக்கிறேன். வளரும் நிலையில் தங்களைப் போன்றவர்களின் கருத்தும், திருத்தமும் தேவை என எண்ணி அழைக்கிறேன்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆதவா.
Suresh said…
எங்க அம்மாவும் திட்டயது நியாபகத்திற்க்கு வந்தது... என்ன மாதிரி எங்க தப்பா டைடில் டைப் பண்ணிட்டியோனு ;) நினைத்தேன்...

கதைக்கு ஏத்த தலைப்பு மச்சான்

அருமை... பார்த்து வெட்டிவிடு பாப்பாகள் தப்பிக்கும்
Suresh said…
நகங்கள் உடலின் ஒரு பாகம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது..
Suresh said…
/நகங்கள் உடலின் ஒரு பாகம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது../

நானும் தான் சின்ன வயதில் நினைத்தேன்
Suresh said…
//படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன. ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?//

இது தான் கவிதை ;)
// அது ஏனோ, நான் நகங்களை வெட்டும் நாட்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையாகவே அமைந்துவிடுகிறது..//

எனக்கும் இதுதான் ஏன்னா வீக்கெண்ட்

மொத்தத்தில் இரவில்தான் நகம் வெட்டாதே என்று கூறுவார்கள்

கிழமைகள் என்பது ஒரு பொருட்டேயில்லை.. நேரம் கிடைக்கயில் எந்தவேளையையும் செய்யலாம்
அழகு குறிப்பு கொடுக்க இங்கு நிறைய அழகுநிலையம் முளைத்துவிட்டது, அதை வைத்து வித்தியாசமான சிந்தனையில் அழகான குறிப்பு எழுதிய உமது திறமையை பாராட்டுகின்றேன் ஆதவா

Popular Posts