தொடர்பு


எனக்கும் கவிதைக்குமான தொடர்பு
அவள் ஒற்றை விழியசைவிலிருந்து
தொடங்கியது

அது ரோஜா இதழாக நீண்டு
எழுத்துக்களின் சுகந்தத்தைச்
சிறைபிடித்துக் கொண்டது.

எனக்கும் கவிதைக்குமான பிணைப்பு
அவள் எச்சிலிட்ட என்னுதட்டிலிருந்து
தொடங்கியது

அது எழுத்துக்களின் புணர்ச்சியாக நீண்டு
கவிதைக்கான படிமங்களாக
நிலை நிறுத்திக் கொண்டது.

எனக்கும் கவிதைக்குமான சலிப்பு
அவளுக்கு மறதி பிறந்த தினத்திலிருந்து
தொடங்கியது

அது முடிவற்று நீண்டு
காகிதங்களைத் தீயிட்டுத்
தானும் இறந்தது

எனக்கும் கவிதைக்குமான வெறுப்பு
அவள் இறுதி வாயெழுத்திலிருந்து
தொடங்கியது

அது எரிந்து கிடந்த காகிதச்சுவடுகளை
காலத்தோடு அழித்துவிட்டு
தானும் மறைந்தது.
--------------------------------------------
தமிழிஷில் வாக்களியுங்கள்
தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்
எதிர்வாக்கு

Comments

எங்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு அந்தக்கவிதையால் வந்தது! நன்றாக இருக்கிறது நண்பரே!
Unknown said…
நல்லா இருக்கு.

அடுத்து .முத்துலிங்கத்தின்(http://thooralkavithai.blogspot.com/)

கவிதை ”மீனின் முதுகு”இந்த வாரம் குங்குமத்தில்7-5-09 பக்கம் 116இல் (ஸ்ரேயா அட்டைப் படம்) பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அவர் பதிவிலும் போட்டுருக்கிறேன்.ஆனால் no response.
//எனக்கும் கவிதைக்குமான பிணைப்பு
அவள் எச்சிலிட்ட என்னுதட்டிலிருந்து
தொடங்கியது//
ஏழு எட்டு ஆண்டுக்கு முன்பே கவிதைஎழுத ஆரம்பித்தது இதனால்தானா?
தொடர்புக் கவிதையில்
தொடர்பான வார்த்தை பிரயோகம் நன்றாக அமைத்திருக்கீங்க. கவிதையின் ஒவ்வொரு வரியுடனும்
படிக்கையில் என்னோடு தொடர்பு உண்டானது போலவே இருந்தது.

இக் கவிதையில்
எனக்கு மிகவும் பிடித்தது வரிகளை நீங்கள் அமைத்த விதம் தான்.
நல்லா இருக்கு ஆதவா.
எனக்கும் உனக்குமான தொடர்பு
உன்னுடைய எழுத்து நளினத்தில் மயங்கி ரசித்து வந்ததய்யா....
sakthi said…
அது ரோஜா இதழாக நீண்டு
எழுத்துக்களின் சுகந்தத்தைச்
சிறைபிடித்துக் கொண்டது.

hey nice aadhava
ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை அழகான கவித்துவாம சொல்லிருக்கீர்

ஆரம்பித்து தொடர்பு ஏற்பட்டு சுகம் கண்டு பிணைப்பாகி சலிப்பாகி வெறுப்பாகி தீயிட்டு கொழுத்திக்கொண்டு சாம்பலாகி இறந்துப்போனதை அருமையா நாலே வரிகளி சொல்லப்பட்ட விதம் கண்டு வியப்புற்றேன்...

வாழ்த்துக்கள் ஆதவா, ரொம்ப ரசித்தேன்....
sakthi said…
எனக்கும் கவிதைக்குமான வெறுப்பு
அவள் இறுதி வாயெழுத்திலிருந்து
தொடங்கியது

அது எரிந்து கிடந்த காகிதச்சுவடுகளை
காலத்தோடு அழித்துவிட்டு
தானும் மறைந்தது.

superb vithyasamana sinthanai pa unnodathu

valthukkal
sakthi said…
அபுஅஃப்ஸர் said...

ஒரு கவிதை ஆட்டிப்படைப்பதை அழகான கவித்துவாம சொல்லிருக்கீர்

ஆரம்பித்து தொடர்பு ஏற்பட்டு சுகம் கண்டு பிணைப்பாகி சலிப்பாகி வெறுப்பாகி தீயிட்டு கொழுத்திக்கொண்டு சாம்பலாகி இறந்துப்போனதை அருமையா நாலே வரிகளி சொல்லப்பட்ட விதம் கண்டு வியப்புற்றேன்...

வாழ்த்துக்கள் ஆதவா, ரொம்ப ரசித்தேன்....

nanum valthikiren pa
Suresh said…
machan super i ll come back and comment in detail, busy with sarath campaign ..
Anonymous said…
அறுந்திடாத் தொடர்பு..
உங்களுக்கும் கவிதைக்குமான தொடர்பு முற்றிலும் வித்தியாசமான ஆக்கமென்பதை
முதல் மூன்று வரிகளே அடையாளம் காட்டிவிட்டன.

படிப்படியாக கவிதையின் பரிணாம வளர்ச்சியை அழகுற சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் "மறைவு" என்ற கருத்து எனக்கு புரியவில்லை.காரணம் எனக்கு மண்டையில் அந்த அளவு மசாலா இல்லை.

//"எழுத்துக்களின் புணர்ச்சியாக" //

இதில் எந்த புணர்ச்சியை குறிப்பிடிகிறீர்கள்.

நிலைமொழி+வருமொழி= இந்த புணர்ச்சியா ??

இல்லை காம புணர்ச்சியா ? புதசெவி !!!
Anonymous said…
ரொம்ப ரசித்தேன் ஆதவா.
வழக்கம் போல்...

உங்கள் ஒரு ஒரு படைப்பும் உங்களின் எழுத்தின் உயரம் உயர்வதை உணர்த்துகிறது...
எப்பிடி சொல்றதுன்னே தெர்ல...

வைரஸ்ன்னு காமிச்சும் நீங்க வந்து என்னை ஊக்கப்படுத்தியதற்க்கும் அதை தெரிவித்ததற்க்கும் நன்றி...

பிரச்சனை செரி செய்யப் பட்டுவிட்டது.. பார்த்து விட்டு சொல்லவும்...

ஆதவா.. நீங்க படிச்சதும் இந்தப் பின்னூட்டத்தை அழிச்சுறுங்க... (படைப்புக்கு சம்பந்தமில்லாதது இது..) :-)
ம்ம்ம்ம்ம்ம்.....ரசித்தேன் கவிதையை.
காகிதங்களை நீங்கள் எரித்து விடலாம்.
நினைவுகள் உங்களை எரித்து விடுமே!
உமா said…
மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள்
அழகான வரிகள்...

சிறந்த நடை...

நல்ல உணர்வு...

அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...
இப்படியிருக்கிறது ஆதவா,என்ன செய்ய,,,,,,

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது ஆதவா.
அருமையான காதல் கவிதை ஆதவா.. வாழ்த்துக்கள்
ஆதவா,
வழக்கம்போலவே கவிதை அதன் போக்கில் ஈர்த்துச் செல்கிறது.
நல்ல கவிதை.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
பின் நவீன எழுத்துக்களில் பிணக்கப்பட்ட
இந்த தொடர்பு நல்லா இருக்கு ஆதவன்...
//அது ரோஜா இதழாக நீண்டு
எழுத்துக்களின் சுகந்தத்தைச்
சிறைபிடித்துக் கொண்டது.//

மிகவும் ரசித்த வரிகள்...அழகு...
அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...
உணர்வு செறிந்த வரிகள். நன்றாக இருக்கிறது.
இம்புட்டு இருக்கா கவிதையிலே
//எனக்கும் கவிதைக்குமான தொடர்பு
அவள் ஒற்றை விழியசைவிலிருந்து
தொடங்கியது//

ஆரம்பமே அசத்தல்
Rajeswari said…
எனக்கும் கவிதைக்குமான சலிப்பு
அவளுக்கு மறதி பிறந்த தினத்திலிருந்து
தொடங்கியது//

அழகான வரிகள்