நாய் பற்றிய கவிதை




எங்கள் வீட்டில் உயர்ரக நாய் ஒன்று உள்ளது
உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்

ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்

என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.

ஜூஜூ இல்லாமல் சாப்பிடுவதோ
உறக்கமோ, ஏன் டிவிகூட பார்ப்பதில்லை
அதன் சலனத்தைத் தாங்காமல்
விடியாது என் தினம்

எத்தனை அழகு அது?
எத்தனை மிருது அது?

இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

--------------------------------------
தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க
எதிர்வாக்களிக்க

Comments

//இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.
//
நாய் வளர்ப்பை பற்றி தெரியாது.. நாயை ஏசவும் தெரியாது நண்பா...

எந்த கருவானாலும் கவிதையாகி விடுகின்றது ஆதவாவிற்கு
என்ன சொல்ல வர்றீங்க தல ???

//
ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான் //

ரசித்தேன்... மிச்சபடி ஒண்ணும் புரியல.. (நாயை ஏசும் நடுத்தர மக்களில் நானும் ஒருவனோ ??)
Suresh said…
வந்துட்டேன் படிச்சுட்டு வரேன் மச்சான்
Unknown said…
நல்லா இருக்கு ஆதவா.

வாழ்த்துக்கள்.
//
எங்கள் வீட்டில் உயர்ரக நாய் ஒன்று உள்ளது
உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்//

வித்தியாசமான கவிதை..அதன் தொடக்கமும் அதே ரகம்...

முழுவதுமாக படித்து விட்டு வருகிறேன்.
//
ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்//

ஹா..ஹா..புன்னகைக்க வைத்தது. இந்த வரிகள்.
யதார்த்த கவிதைகள் சில சமயம் எதிற்மறையாக போய்விடும். நம் கவிதையில் சம்பவிக்கும் பொருள்
அதனை விடுத்து வேறு தளத்திற்கு இட்டு சென்று விடும்,

இக்கவிதை எனக்கு பிடித்திருக்கின்றது.
ஆனாலும் என் சின்ன கருத்தை சொல்லிவிடுகிறேன் ஆதவன்..

|இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.|

இந்த கடைசி வரிகள் தரும் பொருளை வேறுவாக கொண்டு வந்திருக்களாம்.
இது என் கருத்து மட்டுமே விமர்சனம் இல்லை ஆதவா!
Suresh said…
/ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்//

ஹா ஹா ;)

//என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.
//

நல்ல அழகாய் ஒரு குடும்ப செல்லமாய்

//எத்தனை அழகு அது?
எத்தனை மிருது அது?//

ஒரு பண்க்கார பெண்ணின் வார்த்தைகளும் அவளுக்கு ஏழமையும் காசின் அருமையும் புரியாமல சொல்லாமல் சொல்லிருக்கிங்க
//
ஜூஜூ இல்லாமல் சாப்பிடுவதோ
உறக்கமோ, ஏன் டிவிகூட பார்ப்பதில்லை
அதன் சலனத்தைத் தாங்காமல்
விடியாது என் தினம்//

ஜூஜூவோட சேர்ந்து ஐபிஎல் பார்ப்பீங்களா ??
//இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.//

இந்த வரிகள் இல்லையென்றால் இந்த கவிதை ஒருவேளை முழுமையடையாமல் போயிருந்திருக்கலாம். கவிதையின் மதிப்பை கூட்டி விட்டது இவ்வரிகள்.

தரமான ஆக்கத்திற்கு எ.கா. இக்கவிதை ஆதவன்.

குளியலறைக்கு பின் மற்றுமொரு வித்தியாசமான சிந்தனைத்துளி !!!!
//ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்//

கவிதையின் இடையே சமூக பார்வை!! ரசித்தேன்.
வித்தியாசமான சிந்தனையை வரவேற்கிறேன். ஆதவன்.
psycho said…
நாயென்றால் பயமெனக்கு
கல்லெடுத்ததுமல்ல
கட்டியணைத்ததுமல்ல இதுவரை.
sakthi said…
என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.

kuduthu vacha juju

ingey palaruku sontha appa amma madi kuda kidaikarthu illai
sakthi said…
எத்தனை அழகு அது?
எத்தனை மிருது அது?

இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

hahahaha

unmai than engaluku theriyathu pa

othukirom

aana kavithai alagu

athayum othukirom
sakthi said…
இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

intha lines mathalame aathava

oru chinna karuthu thavarai erunthal

mannikavum
//உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்//

நல்ல வர்ணனை உஙக வீட்டு நாய்க்கு
//உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்//

ஹா ஹா
எல்லா விடயத்தையும் கருவாக்கி கவிதையாக்கும் உமது திறமைக்கு ஒரு ஓஓஓஒ
அமுதா said…
//உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்//
நல்ல வர்ணனை

/*இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.*/
ம்?
//என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.//

ஆதிகாலம் தொட்டு மனிதனின் நண்பனாகவே வாழ்ந்து வரும் நாய்களை பற்றி மிக எளிமையான வரிகளில் நல்ல கவிதை ஆதவன்...
//உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்
//

உவமை அருமை...
ஜூஜூ என்று அதை அழைப்போம்//

இது "பாய்ஸ்"படத்தில் நகுலின் பேராச்சே...
:)))
கவிதை நல்லா இருக்குது..
:)))
சாதரண விஷயத்தை அசாதாரணமான இடத்தில் இருந்து பார்க்கும் கண்ணோட்டத்தில் எழுதி உள்ளதாக தெரிகிறது.. எளிமைதான் இந்தக் கவிதையின் பலம ஆதவா.. நல்லா இருக்கு
//உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான் //

ஹிஹிஹிஹி.........

ரசித்தேன்
மனதில் ஒட்டவில்லை :(
( இது என்னுடைய கருத்து அவ்வளவுதான் )
Subash said…
எல்லா மேட்டர்லயும் புகுந்து விளையாடுவீங்களா?
இந்தக்கோணத்திலேயும் யோசிச்சிருக்கீங்க.
அருமை
ஆதவா said…
நன்றிங்க ஞானசேகரன்...
------------------------
கடைக்குட்டி... உங்களுக்கு என்ன தோணுமோ அதுவே கவிதை!! நன்றிங்க.
-------------------------------
வாங்க மச்சான்... அதென்ன பொண்ணு?? இடையில பொண்ணு எப்படி வந்தா?? நன்றி மச்சான்.
--------------------------]
நன்றிங்க கே.ரவிஷங்கர்.
-------------------------
வாங்க அ.மு.செய்யது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி+நெகிழ்வும்..

நான் நாய் வளர்த்ததில்லைங்க செய்யது!! ஐபிஎல் தனியாத்தான் பார்க்கிறேன்.. மிக்க நன்றிங்க.
-------------------------
நன்றிங்க ஆ.முத்துராமலிங்கம். அந்த நிலையில் இருப்பவர் எழுதும் கவிதையாக இதை எடுத்துக் கொள்ளலாம்..நன்றிங்க தல. பின் வருகைக்கும் நன்றி.
------------------
வாருங்க சைக்கோ... முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
---------------
நன்றிங்க சக்தி.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்.. உங்கள் விமர்சனமும் எனக்குப் பிடித்தது.
-------------------------
வாங்க அபுஅஃப்ஸர். மிக்க நன்றி... ஓ வுக்கும் தான்!!!
--------------------------
மிக்க நன்றிங்க அமுதா...
--------------------
மிக்க நன்றிங்க புதியவன். உங்கள் விமர்சனம் புன்னகை தரவைக்கிறது.
--------------------------
மிக்க நன்றிங்க வழிபோக்கன்.., மண்குதிரை..
----------------------------
மிக்க நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்.. நீங்கள் சொல்வது உண்மைதான். இதை வைத்துப் பார்க்கும் கோணம்தான் நான் எழுதக் காரணமும்..
------------------------------
நன்றிங்க அத்திரி... சுபாஷ்.... முதல் வருகைக்கு நன்றிங்க சுபாஷ்.
---------------------
மிக்க நன்றிங்க பித்தன்... அடுத்தமுறை சரி செய்ய முயலுகிறேன்..
ஆதவா said…
சுபாஷ்.. உங்களுக்கு நிறைய தளங்கள் இருக்கின்றன. சில பாதியில் தொடரப்பட்டது போல இருக்கிறதே!!
Bharathiselvan said…
nantri adhava .. ennoda blog visit panniyatharikku..

Sikirama karu porulai mathikettu santhikirean..

Thanks again.
ஒவ்வொரு முறை மேம்பாலத்தைத் தாண்டும்போதும் ஆட்டோவினுள் தலை காட்டும் விற்பனைக்குக் காத்திருக்கும் நாய் கதைக்கருவை அரைகுறையாய் தருமெனக்கு.

நல்ல கவிதை தந்திருக்கிறது உங்களுக்கு!

அருமை ஆதவா.
நல்ல கவிதை ஆதவா.
மாப்ள, எப்பிடி இப்பிடில்லாம்???

கலக்கல் மாம்ஸு...
:-)

வோட்டியாச்சு...
ஆதவா கவிதை அழகு... ஆனால் கரு தான் எனக்கு புரியவில்லை:(( நடுத்தர மக்களை ஏசுவதாக உயர்தட்டு நாகரிகத்தை கிண்டல் செய்கிறது போல் புரிந்து கொண்டேன்
thamizhparavai said…
நல்ல கவிதை எனக்குப் பிடித்த கருத்தும் கூட...(ஆனால் எல்லாருக்க்கும் கருத்து ஒத்துப் போகாதே...)
இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

நன்று