பகலிரவு


உன் கோபத்தில் சிவந்து போகிறது
நான் அன்று முத்தமிட்ட மூக்கு
என்னை தொடுவதற்கும்
நீ அநுமதிப்பதில்லை
விழிகளின் வெப்பம்
என்னைப் பார்த்து
விளிக்கிறது ஒரு கோபக்காரனாய்
மூச்சு முட்ட பேசும் உன் அதரங்கள்
மெளனியாக நோகடிக்கிறது என்னை
அன்று அணைத்த கரங்களும்
தட்டி விடுகிறது
கோலமிட்ட கால்களும்
கோபக் கனல் வீசுகிறது

பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....
--------------------------------------------------
தமிழிஷில் வாக்களிக்க
தமிழ்மணத்தில் வாக்களிக்க,
எதிர் வாக்களிக்க

Comments

//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

நல்லா இருக்கு ஆதவன்...

//”(வயது வந்தோருக்கு மட்டும்)"//

இது தேவை இல்லைன்னு நினைக்கிறேன்...
//மூச்சு முட்ட பேசும் உன் அதரங்கள்//

மிகவும் ரசித்தேன்...
(வயது வந்தோருக்கு மட்டும்)

அதவன் ஏன் இப்படி எல்லாம் பயமுறுத்திறீங்க... இத படித்ததும்
ஒரு நிமிசம் நம்ம வயதுக்கு வந்துட்டோமா இல்லியான்னு சந்தேகப்பட வைக்குது.

கவிதைக்கு இந்த பிரிவினை சொற்கள் தேவையில்லைன்னு நினைக்கிறேன்!

//உன் கோபத்தில் சிவந்து போகிறது
நான் அன்று முத்தமிட்ட மூக்கு//

முதல் வரியிலேயே அழகு சேர்க்கிறீர்கள்.

//என்னை தொடுவதற்கும்
நீ அநுமதிப்பதில்லை
விழிகளின் வெப்பம்
என்னைப் பார்த்து
விளிக்கிறது ஒரு கோபக்காரனாய்
மூச்சு முட்ட பேசும் உன் அதரங்கள்
மெளனியாக நோகடிக்கிறது என்னை//

ஒரு கவிஞனாய் வார்த்தைக்குள் செயல்களை பிடிக்கிறீர்கள்.

//அன்று அணைத்த கரங்களும்
தட்டி விடுகிறது
கோலமிட்ட கால்களும்
கோபக் கனல் வீசுகிறது//

இனுபவ வரிகளோ..!!

//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

இங்குதான் கவிதையின் மொத்த படிமமும் குவிந்து கிடக்கின்றது.

இரசிக்க இரசிக்க நல்ல கவிதை.
ரசித்தேன் ஆதவா.
ஆதவா said…
மிக்க நன்றி புதியவன்.. அந்த வரிகளை இப்போது நீக்கிவிடுகிறேன்..

---------------------

ரசித்து ருசித்தமைக்கு நன்றிங்க ஆ.முத்துராமலிங்கம்.. வரிகளை நீக்கிவிடுகிறேன்.!!!! மிக்க நன்றிங்க,..
//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//


நல்லா இருக்கு
//”(வயது வந்தோருக்கு மட்டும்)"//

இது தேவை இல்லைன்னு நினைக்கிறேன்...


வழிமொழிகின்றேன்..


வரிகள் நன்றாக இருக்கு பாராட்டுகள் ஆதவா...
Unknown said…
உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/
Subankan said…
//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

அருமை, ரசித்தேன்.
கவிதை அருமை. ரசித்தேன் ஆதவா.
பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

சூப்பர் ஃபினிஷிங்....
கவிதை பிடித்திருந்ததால் வோட்டிவிட்டேன்....
நல்லா இருக்க ஆதவா.. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பகலின் பிரிவை சொல்லி இருக்கலாம்.. உங்களால் அது முடியும்..
//உன் கோபத்தில் சிவந்து போகிறது
நான் அன்று முத்தமிட்ட மூக்கு
என்னை தொடுவதற்கும்
நீ அநுமதிப்பதில்லை
//

வெட்கத்தால் சிவக்கும் கன்னங்களுக்கும் கோபத்தால் சிவக்கும் மூக்குக்கும் எத்தனை கிலோமீட்டர் இடைவெளி ஆதவா ??

அதனால அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பானு போயிக்கிட்டே இருக்கணும்.
//விழிகளின் வெப்பம்
என்னைப் பார்த்து
விளிக்கிறது ஒரு கோபக்காரனாய்//

உங்களையும் அந்த எதுகைமோனை பேய் பீடித்து விட்டதா ?

கவனம் தேவை.அந்த நோய் கருத்தைச் சிதைக்க வல்லவை.
//
பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

நல்ல முரண்.

என்னைப் பொறுத்த மட்டில் உங்க ரேஞ்சுக்கு இது ஒரு ஆவ்ரெஜ் படைப்பு தான் என்று சொல்லுவேன்.

தவறாக நினைக்க வேண்டாம்.

வேறு வேறு தளமாக இருந்தாலும் உங்கள் கடைசி பதிவான மனத்தட்டின் பதிப்பு இதில் எனக்கு ஏற்படவில்லை.
கடைசி இரண்டு வரிகளில் கவிதையில் ஒரு திருப்பம்.
ரசிக்கவைத்த கவிதை
//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//


அருமை அருமை அருமை
Rajeswari said…
மிகவும் ரசித்தேன்..கவிதையை முடித்த விதம் அழகு..
நல்லாருக்கு ஆதவா.முடிவில் ரசித்துச் சிரிக்க முடிகிறது. இரவிலாவது சரியானால் சரி.
கலக்கல் ஆதவா...

ரொம்ப நாளைக்குப்பிறகு அருமையான கவிதை
Unknown said…
நல்லா இருக்கு.

வார்த்தை ஜாலத்தை தவிர்க்கலாமோ?

//விழிகளின் ...விளிக்கிறது//

//கோலமிட்ட ...கோபக் கனல் //

/மூச்சு முட்ட ....மெளனியாக//
thamizhparavai said…
நல்லா இருக்குங்க கவிதை.
ஐயய்யோ.. இது வயது வந்தோருக்கானதா..? தெரியாமப் படிச்சிட்டேன்..
வலைப்பூவின் அமைப்பு, முகப்பு அருமை.
‘குழந்தை ஓவியம்’ பெயரே சூப்பர். குழந்தை கொள்ளை அழகு...
Suresh said…
மச்சான் இன்று எரகுடி என்ற கிரமத்துக்கும் சென்று சிறிது நேரம் முன்பு தான் வந்தேன்..

படித்தேன் ,. முதலில் என் நன்றிகள் உன் பதிவுக்காய் ஏங்கி கிடந்த வாசகர்களில் நானும் ஒருவன்

//நான் அன்று முத்தமிட்ட மூக்கு//

அட வித்தியாசமா இருக்கு நண்பா ;)
பொதுவா நான் கொடுத்த முத்ததில் செவந்தது உன் உதடு என்று அல்லவா முடியும்
சூப்பர்

//என்னை தொடுவதற்கும்
நீ அநுமதிப்பதில்லை//

அது பெண்மையின் அழகு

அந்த கெப்புல காதலிக்கு முத்தம் கொடுத்தது ஆணின் அழகு, அதை திட்டுவது போல் ரசிக்கும் பெண்ணின் அழகு எதை சொல்ல

//மூச்சு முட்ட பேசும் உன் அதரங்கள்
மெளனியாக நோகடிக்கிறது என்னை//

;) ஹ ஹா அருமை மச்சான் ரசித்தேன்

//அன்று அணைத்த கரங்களும்
தட்டி விடுகிறது
கோலமிட்ட கால்களும்
கோபக் கனல் வீசுகிறது//

அட இதுவும் காதல் தான் அழகு தான் மச்சான்

//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

ஹா ஹா நேற்றி அடி ... ஹ்ம் நம்க்கு கற்பனை குதிரை ரொம்ப வேகமா ஒடும் .. அழகாய் முடித்தாய் மச்சான்

வோட்டு போட்டாச்சு
Suresh said…
//(வயது வந்தோருக்கு மட்டும்)

அதவன் ஏன் இப்படி எல்லாம் பயமுறுத்திறீங்க... இத படித்ததும்
ஒரு நிமிசம் நம்ம வயதுக்கு வந்துட்டோமா இல்லியான்னு சந்தேகப்பட வைக்குது.//

ஹ ஹா ;0

//கவிதைக்கு இந்த பிரிவினை சொற்கள் தேவையில்லைன்னு நினைக்கிறேன்!//

நானும் அதே நினைக்கிறேன் உன் கவிதையில் அழகு தான் இருக்கு ஆபாசம் இல்லை
ஆதவா, கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
நல்ல கவிதை, மூக்கு மேட்டர் சூப்பர்.
ராம்.CM said…
இரசிக்க நல்ல கவிதை.


ரசித்தேன் ஆதவா.
குகன் said…
//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

good one :)
பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....


;))))
ஆதவன்..

கவிதையை ரசித்தேன்.. :))

ரொம்பவும் நல்லா இருக்குங்க.. !!
//உன் கோபத்தில் சிவந்து போகிறது
நான் அன்று முத்தமிட்ட மூக்கு//

ரசித்தேன் ஆதவா... அழகான கவிதை...
//பகல் பொழுது இப்படியே செல்ல
நேர்மாறாய் இரவு....//

காதலை (அல்லது/மற்றும்) காமத்தை அழகாக உரைக்கும் கடைசி வரிகள் அருமை ஆதவா

Popular Posts