பெண்களின் குளியலறை


பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன

வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன

நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை

இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று

தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க..

தமிழ்மணத்தில் எதிர்வாக்களிக்க

Comments

பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//



மாப்பு நீங்கள் ஏன் பெண்கள் குளியலறையை எட்டிப் பாக்கிறீங்கள்:))
நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை//


இது எனது பார்வைக்கு ஒரு பொருளில் புலப்படவில்லை.
மீண்டும் ஆதவனிடமிருந்து ஒரு வித்தியாசமான சிந்தனையில் ஒரு கவிதை...

////நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை////

ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும் ஆதவன்...
இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//



ஆதவா! கவிதை என்ன அனுபவத் தெளிவோ??? நீங்கள் கற்பனையின் உச்சத்துக்கே போயிட்டீங்கள்....


தொடருங்கோ!
//நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை//


அவங்களுடைய ரகசியங்களை யாராலும் அறிய முடியாது அப்பு...

சனிக்கிழமையானாலே ரொமான்ஸா
// அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//

இருக்காதா பின்னே ?
ஆதவா said…
நன்றி கமல்!!!

இது ஒரு பெண் குளியலறை குறித்த கவிதை என்றாலும் விளிம்பு நிலை களத்தை கவிதைப் படுத்த முயன்றதன் தோற்றம்... மேலும் இது வேறொரு கவிதையின் தொடர்ச்சி!! அல்லது நீட்சி!

--------------------

நன்றி புதியவன்... ரகசியங்கள் ரகசியமாக இருப்பதால்தான் அவை ரகசியங்கள்!!! (ரொம்ப குழப்பிட்டேனா?)

----------------

வாங்க அத்திரி!! உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். ரொமன்ஸெல்லாம் இல்லை... சும்மா எழுதியது!!!

--------------------

மிக்க நன்றி பித்தன்!!!
உள்ளேன் ஐயா...படித்து விட்டு வருகிறேன்.
Anonymous said…
வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன///

வார்த்தைகள் விளையாடுகின்றன ஆதவா...
Suresh said…
//அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன/

அருமை

//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

ஹ ஹா :-) சரியாண வித்தியாசமாண பார்வை ...

உங்களுக்கு நன்றிகள் கோடி சொல்ல சொன்னது ... இந்த சோம்பிக்கிடக்கின்ற சுவர்கள்
பெண்களின் குளியலறை என்றதும் எனக்கு எந்தவித சலனமும் இல்லை. ஏனெனில் இது ஆதவனின் வலைத்தளம் இதில் அப்படிப்பட்டவை இருக்காது என்று நினைத்தேன். அதை நிரூபித்திருக்கிறீர்கள்.கவிஞனின் மனம் எதையும் கற்பனை கண்ணோட்டத்துடன் பார்க்கும் என்பதற்கு இந்த கவிதை ஒரு நல்ல உதாரணம். நன்று நண்பா!
Anonymous said…
வித்தியாசமான சிந்தனையில் ஒரு கவிதை. தொடருங்கோ!
அட கொஞ்சம் வித்தியாசமான கவிதை...
நல்லா இருக்குங்க...
வாழ்த்துகள்...
வோட்டியாச்சுங்க...
:-)
வோட்டியாச்சுங்க...
:-)
இந்த பதிவு சர்ச்சைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
//பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்//

இந்த கவிதை எழுதுவதற்காகவே அங்க போய்ட்டு வந்தீங்களா..

இல்ல அடிக்கடி விசிட் அடிப்பதுண்டா ?? ஏன் இந்த கொல வெறி ???
//அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//

இதுக்கு பேரு தான் பின்நவீனத்துவமா ??? யாராவது சொல்லுங்கப்பா ?
//வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன///

உங்கள் ஆதங்கத்தையும் பொறாமையையும் அழகாக வெளிப் படுத்தியிருக்கிறீர்கள்.

ஆதவன் டச்...நச் !!!!!!
//நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை//

வானில் உள்ள‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை கூட‌ எண்ணி விடலாம்..

ஆறு அது ஆழ‌மில்ல‌..அது சேரும் எட‌மும் ஆழ‌ம் இல்ல‌..

ஆழ‌ம் எது ஐயா..அந்த‌ பொம்ப‌ள ம‌ன‌சு தான்யா...
////இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

விர‌சமில்லாம‌ல் முக‌ம் சுழிக்க‌ வைக்காம‌ல்,

அச்சு வெல்லமாய் வார்த்திருக்கிறீர்க‌ள் வார்த்தைக‌ளை...

க‌விதையின் க‌ரு வெகு அழ‌கு ஆத‌வ‌ன்...
kuma36 said…
//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்//

என்னாது? !!!!!

//பெண்கள் இல்லாத நேரங்களில்///
அதானே பார்த்தேன்
kuma36 said…
ஒவ்வொரு முறையும் நீங்க புதுசாவே தெரியுறிங்க ஆதவா,
தொடர்ந்தும் அப்படியே ஆகட்டும்
ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
தலைப்புல இருக்குற குழந்தை(படம்) யாரு ?
குமரா, நீ குழந்தை ஒவியனா? இல்லை குசும்ப கவிஞனா?
//அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//

கற்பனைக்கு இல்லை கட்டுபாடு
ஆதவா,
நானறிந்த வகையில் உங்கள் எழுத்துக்கள் நுட்பமானதான ஒரு வினோத நடையில் பயணிக்கிறது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.


வரிகளை இவ்விதமாய் அடுக்கியிருந்தால் வாசிப்பின் சுவாரசியமும், கவிதையை அர்த்தப்படுத்துதலும் இன்னமும் கூடியிருக்குமோ எனவும் தோன்றியது. அலைபேசியில் பேசுகிறேன்.

- பொன். வாசுதேவன்


//எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
பெண்களின் குளியலறை
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்

சுவற்றில் புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன
அவர்களின் அழுக்குகள்

வழுக்கி விழும் பல்லிகளுக்கு
மோட்சமும் அகப்படாமல்
ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்
பெண் குளியலின் பரிசாகக் கிடைக்கின்றன

எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை
நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை

இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//
அட நல்லாருக்குங்க ஆதவா...
நான் இன்று கொஞ்சம் தாமதம்..

கவிதையின் நவீனத்துவமான நுடப்பம் சற்று சிக்கலான பாதயில் அல்லது அதன் குறியீட்டின் வேற்று பிம்பங்களை உருவாக்குதல் என்றாலும்
உங்கள் கற்பனை மிக சிறந்ததாக உள்ளது.
இயல்பு கவிதையிலிருந்து இது போன்று நவீனத்துவ அல்லது நுட்ப கவிதை சற்று கடினமானது, அதன் குறியீடு படிப்பவர்களை பாதிக்காது
அவர்களில் நம் கருவின் பிம்பங்களை கிளைத்தெழ வைப்பதே.
அது உங்களுக்கு சாத்தியாமாகின்றது.

==================================
பொன்.வாசுதேவன் அவர்கள்
அடுக்கிய விதத்தில் இன்னும்
அழகா இருக்கின்றது ஆதவா.
Anbu said…
நான் ரொம்ப சின்னப்பையன்கோ ஒன்றும் புரியவில்லை
இதுதான் நமக்குப் பிடிச்ச ஆதவா.. பேக் டு பார்ம்.. வித்தியாசமான சிந்தனையுடன் கவிதை.. நன்றாக உள்ளது நண்பா...
//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

பெண்கள் இல்லாமல் சோம்பி போவது சுவர்கள் மட்டும் அல்ல..
VISA said…
எக்மோர் பப்ளிக் டாயிலட்ட போய் பாரும் sir பாத்ரூம் கடக்கும் போதே நல்ல மணக்குது.......பல்லி என்ன நல்ல வழுக்கி விழுந்தா நாமளும் நேரா மோட்சம் தான்.....பெண்கள் இல்லாத நேரத்தில் எதுக்கு எட்டி பாக்கணும் உள்ளயே போய் பாக்கலாமே.....
நண்பரே தங்கள் கவிதை மாதிரியே ஆண்கள் குளியலறை என்ற தலைப்பில் ஒரு கவுஜ எழுதியிருக்கிறேன்.

மன்னிக்கவும்.

அன்புடன்
குசும்பன்
//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

பெண்கள் இல்லாத பொழுது எட்டி பாருங்க சரிதான்...
//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

பெண்கள் இல்லாத பொழுது எட்டி பாருங்க சரிதான்...
பெண்களைப் பற்றிய சந்தேகம் உங்களுக்குமா ஆதவா... எல்லா கவிஞர்களை போல...
//பித்தன் said...
ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
தலைப்புல இருக்குற குழந்தை(படம்) யாரு ?///

எனக்கும்தான்...
ஆதவா அடிச்சி ஆடிருக்கீங்க போல இருக்கு

உங்களாலே மட்டும்தான் தல வித்தியாசமா சிந்திக்க முடியுது
//பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்//

இது எங்கேயோ இடிக்குதே
//அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//


என்னா சிந்தனை தல உங்களுக்கு, ஆண்களுக்கு உள்ள அழுக்கெல்லாம்?

ஹூம் ஒன்னுமே பிரியலே இந்த குளியலறையின் மாயம்
Arasi Raj said…
தலைப்பே வில்லங்கமா இருக்கே தம்பி...
//நான்கு சுவர்களுக்குள் பதுங்கியிருக்கும்
பெண்களின் ரகசியங்களை
எளிதில் எவராலும்
கவர்ந்து கொள்ள முடியவில்லை
//

அதுவும் சரிதான், உள்ளேபோனாதான் விளங்கிக்கொள்ளமுடியும் எங்கெங்கே அடிவிழுந்த தலும்பு இருக்குனு

நல்லாயிருக்கு ஆதவா உங்க சிந்தனை மற்றும் வரிகள்

வாழ்த்துக்கள்
thamizhparavai said…
வாசனையை நுகர முடிந்தது...
அழகு...
‘நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்’
Anonymous said…
ரசனையான கவி!
//பெண்களின் குளியலறை
எப்பொழுதும் வாசனை மிக்கதாக இருக்கிறது
கடந்து செல்லுகையிலும்
அறைக்குள் நுழைகையிலும்//

இந்த கவிதை எழுதுவதற்காகவே அங்க போய்ட்டு வந்தீங்களா..

இல்ல அடிக்கடி விசிட் அடிப்பதுண்டா ?? ஏன் இந்த கொல வெறி ???///

ரிப்பீட்டே!
//இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்
பெண்கள் இல்லாத நேரங்களில்
சுவர்கள் எவ்வளவு சோம்பிக்கிடக்கின்றன என்று//

அட சுவர்களுமா?
ராம்.CM said…
வழுக்கி விழும் பல்லிகளுக்கு மோட்சமும்
அகப்படாமல் ஒளிந்து கொள்ளும்
பூச்சிகளுக்கு வேட்கையும்///

பெண்களை கண்டு மோட்சமடைவதும்,வேட்கையடைவதும் பல்லிகள்,பூச்சிகள் மட்டுமல்ல ஆண்களும்தான்.
sakthi said…
/இப்பொழுதும்
நீங்கள் எட்டிப் பார்க்கலாம்//

என்னாது? !!!!!

//பெண்கள் இல்லாத நேரங்களில்///
அதானே பார்த்தேன்

hahahahaah
sakthi said…
அவர்களின் அழுக்குகள்
சுவற்றில்
புலப்படாத ஓவியங்களை
நவீன தத்துவங்களாக வரைகின்றன//

vithyasamana sinthanai aadhavare
Unknown said…
நல்லா இருக்கு.
Arasi Raj said…
www.nilakaduthasi.blogspot.com
ஆதவா said…
கமல், புதியவன், அத்திரி, பித்தன், அ.மு.செய்யது, ஷீ-நிசி, சுரேஷ், குடந்தைஅன்புமணி, கடையம் ஆனந்த், வேத்தியன், கலை-இராகலை, சொல்லரசன், அகநாழிகை, ரீனா, ஆ.முத்துராமலிங்கம், அன்பு, கார்த்திகைப் பாண்டியன், மங்களூர் சிவா, விசா, குசும்பன், ஆ.ஞானசேகரன், அபுஅஃப்ஸர், நிலாவும் அம்மாவும், தமிழ்ப்பறவை, தேவா, ராம்.C.M, சக்தி, கே.ரவிஷங்கர்

ஆகிய அத்தனை பேரும் என்னை மன்னிக்கவும்.. வேலைப்பளு காரணத்தினால் அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல முடியவில்லை!! இங்கெ சொல்லும் நன்றிக்கான நேரத்தை மற்ற பதிவுகள் படிக்க பின்னூட்டமிட உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..

நன்றீ நன்றி!! நன்றீ!!!
ஆதவா said…
எனக்கு கேட்ட கேள்விகள் ;
அ.மு.செய்யது said...
இதுக்கு பேரு தான் பின்நவீனத்துவமா ??? யாராவது சொல்லுங்கப்பா ?

இருக்கலாம் செய்யது!! பின் நவீனத்துவம் என்பதையே நாமதான சொல்ல ஆரம்பிச்சோம்!!!!

பித்தன் said...
ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.
தலைப்புல இருக்குற குழந்தை(படம்) யாரு ?

அந்த குழந்தை யாருன்னு தெரியாதுங்க பித்தன்.. இணையத்தில் கிடைத்தது!!

அகநாழிகை said...
ஆதவா,
வரிகளை இவ்விதமாய் அடுக்கியிருந்தால் வாசிப்பின் சுவாரசியமும், கவிதையை அர்த்தப்படுத்துதலும் இன்னமும் கூடியிருக்குமோ எனவும் தோன்றியது. அலைபேசியில் பேசுகிறேன்.

உங்கள் பின்னூட்டம் மிகவும் பயனளிக்கிறது!! அடுத்தடுத்த கவிதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்த முயல்கிறேன்!!!

குசும்பன் said...

மன்னிக்கவும்.

மன்னிப்பெல்லாம் வேண்டாம்ங்க. உங்களுக்கு ஒரு கவிதை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்கு பெருமைப்படுகிறேன்..!!
நான் எட்டிப்பாற்க்கலை
ஆதவன்,

என் மின்னஞ்சல் முகவரி - veyilaan.ramesh@gmail.com

உங்களைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரியோ, தொடர்பு எண்ணோ அனுப்புங்கள்.

திருப்பூரில் இருந்து கொண்டு உங்களைச் சந்திக்கா விட்டால், தமிழ்ப்பதிவெழுதும் பதிவுலகம் எங்களை மன்னிக்காது :)
ஹேமா said…
பெண்களின் குளியல் அறையைப் படம் பிடித்துப் பாராட்டிக் கவிதை எழுதிய முதல் ஆள் நீங்கதான் ஆதவா.