அ ஆ கவிதைகள் (18+ மட்டும்)


10-02-2007, 12:12 AM

குழாயடி......

கூச்சல், கும்மாளம்.
பெண்களின் வாயினில்
கெட்ட வார்த்தைகள்
முன்னெப்போதும் கண்டிராத
குடிமிச் சண்டை.
சலசலவென நீர்ச் சத்தம்
ஆண்களின் தயக்கம்
எல்லாவற்றையும் மீறி
எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்.........

                  

11-02-2007, 08:47 PM


ரசத்தோடு இணைந்த பெருங்காமத்து
மூலையில் அயர்ந்துபோன விளக்கொளி
மீதமிருக்க, சொக்கிய கண்ணைக்
கட்டிப்போட்டு பெருந்துளியாய்
நெற்றிப்பட்டையில் வியர்க்க
ஆதிகளும் அந்தங்களும்
சுற்றும் ஆகாச நிலவில்
அந்தரங்கமாய் பறக்க நினைத்து
தோற்றுப்போய் மீண்டும்
வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்...
  



தமிழிஷில் வாக்களிக்க

தமிழ்மணத்தில் வாக்களிக்க

எதிர்வாக்களிக்க

Comments

காமத்தையும் அழகா ஆபாசமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் :)
Arasi Raj said…
பெண்களின் வாயினில்
கெட்ட வார்த்தைகள்
////
அ ஆ ஆ ஆ
This comment has been removed by the author.
18+ மட்டும்னு வேறு போட்டுட்டீங்க
படிக்க கொஞ்சம் தயக்கம் தான்... (சும்மா ஒரு பேச்சுக்கு)
படிச்சப்புறம் ஒன்னும் தயக்கமில்லை
திரும்பவும் இரண்டு முறை படித்தேன்.

//எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்.........//

ஆமாம் ஆமாம்.. அப்போது இமைப்பதை கூட நிறுத்திவிடும் மானங்கெட்ட கண்கள். இரண்டு கண்கள் மட்டுமல்ல எல்லா கண்களுமே அப்படிதான்.

இரண்டாவதில் காமத்தின் அகராதி எழுதபட்டிருக்கின்றது, ஆபாசமில்லாமல். ..ம் நாளைந்து வரிக்குள் அடக்கி விட்டீர்கள், நல்ல கற்பனை ரசித்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பும்
நல்லாதா யோசிச்சிருக்கீங்க!!!
வாழ்க வளமுடன்.
ஆதவா said…
பொன்னாத்தா,
பிரேம்குமார்
ஆ.முத்துராமலிங்கம்
அகநாழிகை

ஆகிய அனைவருக்கும் என் நன்றி!!
முதல் கவிதை யதார்த்தம் கலந்து வெளி வந்திருக்கிறது.

இரண்டாவது கவிதை என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியாது.

( ஆனால் கடைசி வரிகள் நீங்கள் கவிதையில் யாரை முன்னோடியாக பின்பற்றுகிறீர்கள் என காட்டி கொடுக்கிறது !!!!! இது ஒரு ஆரோக்கிய‌மான பின்தொட‌ர்த‌லே !!!! )
எங்கோ ப‌டித்த‌தாக ஞாப‌க‌ம்..இந்த‌ க‌விதை..

க‌ண்க‌ள் பார்த்து பேசும் போதெல்லாம்
முக‌த்தில் அறைவ‌தாய் ப‌டும்
மாறாப்பு ச‌ரிசெய்த‌ல்க‌ள்.
குழாயடி (மட்டுமல்ல) போன்ற நிகழ்வுகளின் எதார்த்தம்.
தோற்றுப்போய் மீண்டும்வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்... \\

மிக அருமை.

ஆதவா!

வார்த்தைகளை விலை பேச தெரிந்திருந்தால்
அவை இலவசமாக கூட
ஓடி வரும் போல ...
ரெண்டு கவிதையுமே காமத்தின் வெவ்வேறு தளைகளைக் காட்டுகின்றன.. முதல் கவிதை நேரடியாக பொட்டில் அடித்தார்போல் விளங்குகிறது.. இரண்டாவதில் நயமாகச் சொல்லி உள்ளீர்கள்.. இன்னும் சில கவிதைகள் சேர்த்துப் போட்டிருக்கலாமே..
இதை பார்க்கும் போது ஒரு பழைய ! கவிதை நினைவில் வருகிறது :" வேலைக்காரி குனிந்து கூட்டினாள் , அறை சுத்தம் ஆனது ,மனம் அழுக்கு ஆனது "
ரசித்தேன்.
இ, ஈயும் உண்டா...
ஆதவா said…
அய்யய்யோ செய்யது!! அந்த மாராப்பு கவிதையை நீங்கள் எப்படி படித்தீர்கள்.. நான் பதிவிட்டதும் பிறகு அழித்துவிட்டேனே அடுத்த முறை தரலாம் என்று!!!

நன்றி தல...
------------------------

நன்றிங்க ஜமால் உங்கள் கவிதை அருமை! வார்த்தைகள் அப்படிச் செய்யத் துணிந்தனதான்!!

-------------------

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.. முதலில் நான்கு கவிதைகள் கொடுத்தேன்.. நீளமாக இருக்குமோ என்று எண்ணி இரு கவிதைகளை எடுத்துவிட்டேன்.
--------------------
முதல் வருகைக்கு நன்றி வெங்கடேசன். பழைய கவிதைகள் இதைப் போன்று இருப்பது என் துர்ப்பாக்கியம்... :(
-----------------------
நன்றிங்க மாதவராஜ்... எல்லா எழுத்துக்களையும் அடக்கியது காமம்... எல்லா எழுத்துக்களும் உண்டு!
இரு மானங்கெட்ட கண்களை எங்கள் கண் முன்னும்...
இரு மாடப்புறாக்களை எங்கள்
மனக்கண்ணும்....
ஆத்மார்த்தமாய் ரசிக்க வைத்த...
ஆதவா நீ வாழ்க!!!!

(நீங்க எழுதுறது கவிதை.. அதைப் பார்த்து நாங்க இப்பிடி சூடு போட்டுக்கிட்டா.. இது பேரு கழுதை..:-)
Suresh said…
மச்சான் டைடில் சூப்பர் படிச்சிட்டு வரேன்
Suresh said…
//குழாயடி......கூச்சல், கும்மாளம்.
பெண்களின் வாயினில்
கெட்ட வார்த்தைகள்
முன்னெப்போதும் கண்டிராத
குடிமிச் சண்டை.
சலசலவென நீர்ச் சத்தம்
ஆண்களின் தயக்கம்
எல்லாவற்றையும் மீறி
எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்......./

ஹாஅ ஹா :-) சிரித்தேன் ;0
எங்க எரியால குழா எல்லம் இல்லை ;)
Suresh said…
//பறக்க நினைத்து
தோற்றுப்போய் மீண்டும்வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்../

அருமை :-) அபாசமில்லாமல் அழகாய் சொல்லிருக்கிங்க
Suresh said…
ரெண்டு வருஷத்துக்கு முண்ணாடி இவ்வளவு அழகான கவிதைகள்

சரி ஒரு புத்தகம் விரைவில் போடுங்க
Suresh said…
//இரண்டாவது கவிதை என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியாது.//

மீ டூ :-)
Suresh said…
//தோற்றுப்போய் மீண்டும்வீழ்ந்து கிடக்கிறது/

தோல்வியில் தான் வாழ்கை ஆரம்பம் என்று க்ற்றுக்கொடுக்கும் இடம் அது தலை
Suresh said…
//வார்த்தைகளை விலை பேச தெரிந்திருந்தால்
அவை இலவசமாக கூட
ஓடி வரும் போல .../
கவிக்கு கவி :-) பரிசா
இரண்டு கவிதைகளும் காமம் பற்றி பேசினாலும், நயமாகவே இருக்கிறது. வாழ்த்துகள் நண்பா!
//Venkatesan said...
இதை பார்க்கும் போது ஒரு பழைய ! கவிதை நினைவில் வருகிறது :" வேலைக்காரி குனிந்து கூட்டினாள் , அறை சுத்தம் ஆனது ,மனம் அழுக்கு ஆனது "//


அவள் குனிந்து பெருக்கினாள்
குப்பையானது
மனசு

இதுதான் நான் படித்தது. யார் எழுதியது என்று ஞாபகம் இல்லை.
Unknown said…
ஆதவா!

கவிதையை (U) ஆக்கிவிட்டேன்.

படிக்க:-

குழாயடி......

கூச்சல், கும்மாளம்.
பெண்களின் வாயினில்
கெட்ட வார்த்தைகள்
முன்னெப்போதும் கண்டிராத
குடிமிச் சண்டை.
சலசலவென நீர்ச் சத்தம்
ஆண்களின் தயக்கம்
குனியும்போது மறக்காமல்
மார்பைப் பொத்தித்தான்
தண்ணீர் பிடிக்கிறார்கள்
ஹவுஸ்கோட் அணிந்த
அந்தக் கெட்ட வார்த்தைப்
பெண்கள்
Anonymous said…
18+ போடதேவையில்லைன்னு நினைக்கிறேன்!
ராம்.CM said…
அழகு கவிதை.... ஆபாசமில்லாமல்....
முதல் கவிதை யாதார்த்தம்...இதற்கு விளக்கம் தேவை இல்லை...

இரண்டாவது கவிதை அருமை...இது மனித உணர்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது...வார்த்தைகளில் விரசம் எதுவும் தெரியவில்லை ஆதவன்...
SASee said…
வரிக்குள் ஒழிக்கப்பட்டகாமம்,
மனித காமத்தின் அகராதி!
அற்புதம் ஆதவா.....
அழுத்தமான வரிகள்.

நீங்கள் சொல்வது சரிதான் ஆதவா. எல்லா இமைகளுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு கள்ளம் ஒளிந்திருக்கிறது. திறந்த விழிகளின் பிரகாசத்துக்குள் அது மறைந்திருந்து சலனமுற்ற பார்வைகளோடு பயணிக்கும்.
//எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்.........
//

ம்ம்ஹூம் என்னத்தை சொல்றது

18+ போட்டலும் அந்தளவிற்கு எந்த எஃப்பெக்ட்ம் இல்லே
//அந்தரங்கமாய் பறக்க நினைத்து
தோற்றுப்போய் மீண்டும்வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்... //

ஆதவா கலக்கல் வரிகள்

நிறைய இலைமறை இருக்கு, கூர்ந்து கவனித்தால் அவரவர் ரசனைக்கேற்ப பொருள் புரிந்துகொள்வர்...

வித்தியாசமான சிந்தனை

வித்தியாசமான் வரிகள் உங்களின் க்கூக்குரலுக்கு ஓடிவருகின்றது போல்

ம்ம் கலக்குங்க‌

வாழ்த்துக்கள்
அருமை ஆதவா!அப்போதிலிருந்தே கலக்குறீங்க போல.
Rajeswari said…
ரசித்தேன்...
அ ஆ கவிதைகள் ( 18 குறைவானவர்களுக்கு )

பேனா
கிடைக்காமல்
இடுப்பில் கைவைத்து
உடம்பை அசைத்து
தரையில் எழுதிய
முதல் அ ஆ...

உடல்
அசைவின் எழுத்துக்களை
ரசித்த அன்னையின்
முத்தமழையில் நினைந்து
கத்திய அ ஆ...

இதனிடையே
தந்தை
இருவரையும் அணைத்ததில்
அம்மா எழுப்பிய அ
நான் எழுப்பிய ஆ...

திடிக்கிட்டு
எழுந்து
ஈர விழியோடு
என்மனதில்
நான் சொல்லிகொண்ட
அ ஆ...

-கவிஞர் பித்தன் :)
கொஞ்சம் சீரியஸா எழுதியது

பேனா
கிடைக்காமல்
இடுப்பில் கைவைத்து
உடம்பை அசைத்து
தரையில் எழுதிய
முதல் அ ஆ...

உடல்
அசைவின் எழுத்துக்களை
ரசித்த அன்னையின்
முத்தமழையில் நினைந்து
நான் எழுப்பிய அ ஆ...

தந்தை
இருவரையும்
அணைத்ததில்
அம்மா எழுப்பிய அ
நான் எழுப்பிய ஆ...

குண்டு சத்தத்தில்
புகை மண்டலங்களுக்கு
நடுவே
நாங்கள் மூவரும்
எழுப்பிய அ ஆ...

திடிக்கிட்டு
எழுந்து
ஈர விழியோடு
என்மனதில்
நான் சொல்லிக்கொண்ட
அ ஆ...

-பித்தன்
இரண்டும்.. இரண்டு கரு, கலம்... நல்லா இருக்கு ஆதவா
ரசிக்க வைத்த கவிதை,இரு கண்கள் நீங்கள் என்பது தெரியும்,
இரண்டு..........?
அ.உ.த.ர.மன்ற தலைவருக்கு அன்பான வேண்டுகோள்,
தங்கள் குழந்தைஒவியன் தலைப்பை பார்த்து வரும் குழந்தைகள்
நீதிகதையும்,காமிக்ஸ்ம் இல்லாதது கண்டு வருத்தபடுவதாகவும்.
இதனால் குழந்தை ஒவியன் தலைப்பை மாற்றி குசும்பஒவியன் பெயர் மாற்றம் செய்ய கோரி போராட்டம் நடத்த திருவிழா பாண்டியரும்,மதுராந்தகத்து அழகுமணியும்பேசிகொண்டு
இருப்பதால்,தாங்கள் விரைவில் பெயர் மாற்றம் செய்ய பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
ஹேமா said…
ஆதவா,ஆபாசம் ஏதும் இல்லை.
யதார்த்தம்தானே.

தான் பால் குடித்த தாயின் மார்பை ஆபாசம் இல்லாமல் பார்க்கும் ஒரு ஆண்,தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் தன் மனைவியின் மார்பை ஆபாசம் இல்லாமல் பார்க்கும் ஒரு ஆண் ஏன் அடுத்த பெண்களை அசிங்கமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
எங்கும் இயல்பாய் இருக்கிறது இது.
நல்லா இருக்குங்க கவிதைகள், குழாயடி கவிதை மிக அருமை
Joe said…
//
அவள் குனிந்து பெருக்கினாள்
குப்பையானது
மனசு
//
சிநேகன் என்று நினைக்கிறேன்.

ஆதவா!
கவிதைகள் பிரமாதம்!

பார்க்கிறது / பார்க்கின்றன ?
(டேய் ஜோ, உனக்கு இதே வேலையா போச்சு!)
ஆதவா said…
கடைக்குட்டி.. கவிதை எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. கவிதை என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்.. நன்றி!!!
-----------------------------
வா மச்சான்... உங்க ஏரியால ஒரு குழாய வெச்சுடுவோமா?
நன்றி மச்சான்.. புத்தகம் போட்டுடலாம்... ஹாஹா..
கவிதை புரியலைன்னு அழகா விமர்சனம் போட்ரிக்கியே தல...
-----------------------------
குடந்தை அன்புமணி!!! நன்றிங்க. நீங்கள் படித்ததை பகிர்ந்ததற்கு நன்றிங்க..
-------------------------
கே.ரவிஷங்கர்.. நன்றிங்க.. இந்தமாதிரி கவிதைகளை மாற்றி எழுதுவதும் ஒரு திறமைதான்.. அதை நன்றாக செய்திருக்கீங்க.
-------------------------------
என்னங்க அன்பு!!! என்ன mmmm?? நன்றிப்பா.
-----------------------------
மிக்க நன்றி கவின்!!!
ஆதவா said…
நன்றிங்க ராம்.
-------------------
மிக்க நன்றிங்க புதியவன்...
----------------
வணக்கம் சசீ! மிக்க நன்றி
-------------------
வாங்க ரிஷான்.. உங்கள் வரிகளுக்கு நன்றி
---------------
வாங்க அபுஅஃப்ஸர்..

மக்கள் ஏதாவது நினைச்சுடுவாங்களோன்னு போட்டதுதான் 18+
மிக்க நன்றிங்க
-------------------------
நன்றிங்க ச.முத்துவேல். அதற்கு முன்பிருந்தே எழுதி வருகிறேன்.
--------------------------
வாங்க பித்தன்... உங்கள் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. உங்கள் தளத்தில் பின்னூட்டம் போட்டிருக்கேன்.. நன்றிங்க
--------------------
மிக்க நன்றி ஞானசேகரன்..
----------------------------------
சொல்லரசன்... அகில உலக தமன்னா ரசிகர் மன்ற தலைவர் சார்பில் உங்களுக்கு ஒரு கண்டனப் பேரணி வைக்கப் போகிறொம்.... ஹாஹா..
---------------------
மிக்க நன்றிங்க ஹேமா. உங்கள் வரிகள் சிந்திக்க வேண்டியவை.
------------------------
நன்றிங்க யாத்ரா...
ஆதவா said…
நன்றிங்க ஜோ... உண்மைதான்... அது பார்க்கின்றன என்று வரவேண்டும்!!! வரவுக்கு நன்றி!!!
//ஆகாச நிலவில்
அந்தரங்கமாய் பறக்க நினைத்து
தோற்றுப்போய் மீண்டும்வீழ்ந்து கிடக்கிறது
இரண்டு புறாக்கள்//




ரசித்தேன் நண்பா.
dharshini said…
முதல் கவிதை அருமை அண்ணா.. இரன்டாவது அவ்வளவாக புரியவில்லை...
அருமயான கவிதைகள் ஆதவா
Suresh said…
@ //வா மச்சான்... உங்க ஏரியால ஒரு குழாய வெச்சுடுவோமா?
நன்றி மச்சான்.. புத்தகம் போட்டுடலாம்... ஹாஹா..
கவிதை புரியலைன்னு அழகா விமர்சனம் போட்ரிக்கியே தல... //

மச்சான் புரியாமல் இல்லை அவர மாதிரி மக்கு நான் :-) 3 வாட்டி படிச்சு தான் புரிஞ்சுது ஹ ஹா :-)

நல்ல வாத்தைகள் புதுமையான வரிகள் அதான் லேட் அரியர்ஸ் வச்சு பாஸ் ஆன பசங்க த்ல

வச்சிடுவோம் பம்பு
sakthi said…
ஹேமா said...
ஆதவா,ஆபாசம் ஏதும் இல்லை.
யதார்த்தம்தானே.

தான் பால் குடித்த தாயின் மார்பை ஆபாசம் இல்லாமல் பார்க்கும் ஒரு ஆண்,தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் தன் மனைவியின் மார்பை ஆபாசம் இல்லாமல் பார்க்கும் ஒரு ஆண் ஏன் அடுத்த பெண்களை அசிங்கமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
எங்கும் இயல்பாய் இருக்கிறது இது.

repeatuuuuuuuuuuu
ஆதவா....கவிதையில் உங்கள் ரசனை அப்படியே தெரிகிறது...


ஒரு சில நெருக்கமானவர்களின் இழப்புக்கள், மறைவுகள் காரணமாகக் கொஞ்ச நாள் பதிவுலகப் பக்கமே வர முடியவில்லை...

மனதை ஒருமுகப்படுத்திச் சரியான விமர்சனங்களையும் வழங்க முடியவில்லை..மன்னிக்கவும்!
kuma36 said…
நான் வந்தேன் ஆனா வாசிக்களையே! நான் தான் இன்னும் 14‍ - ஆச்சே
kuma36 said…
///எல்லாவற்றையும் மீறி
எங்காவது குனிவார்களா என்று
பார்க்கிறது இரு கண்கள்...///

ம்ம்ம்ம் அதால தான் குழாயடிக்கு போறதே இல்லை!
thamizhparavai said…
முதல் கவிதை நெத்தியடி...
இரண்டாவது கவிதை -புரிஞ்சதுக்கப்புறம் சொல்றேன்..