ஊஞ்சல் பெண்ஞ்சல்கள் வானத்துக்கும் பூமிக்கும் உண்டான தூரத்தை அளந்து கொண்டிருக்கின்றன. அளவிட முடியாத தூரத்தில் வானம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் ஊஞ்சல் அளவைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. வானம் பரப்பியிருக்கும் பகல் சுருண்டு, கீழே விழுகின்ற போதிலும் ஊஞ்சலில் அளப்பது மட்டும் நிறுத்தப்படுவதே இல்லை.

ஊஞ்சலுக்கும் எனக்குமான தொடர்பு ஒரு குறியீடைப் போன்றது. எந்த கேள்வி பதிலுக்கும் அடங்காமல் தனித்து நிற்பது. ஆடி மாதம் ஊஞ்சல் மாதம் எனும் பெயரெடுக்கும் வகையில் பெரிய மரம் உள்ள எல்லோருடைய வீட்டிலும் ஊஞ்சல் தொங்கவிடப்பட்டிருக்கும். என் பழையவீட்டின் முன்னே தனித்து பெருத்து இருக்கும் அந்த பெயர் தெரியா மரத்தின் கிளைகளின் விளிம்பு வரை சென்று ஊஞ்சல் கயிறைக் கட்டியிருக்கிறேன். மரம் ஏறத் தெரிந்தவனுக்கு, ஊஞ்சல் ஆடுவது மட்டும் ஏனோ பயம் இருந்தது. ஊஞ்சலாடும் எல்லைக்கு அப்பால் சென்று வானில் கலந்துவிடுவேனோ என்ற இனம்புரியாத அச்சம் கலந்திருந்தது.
வானுக்குச் சென்றவர்கள் மீளுவதில்லை என்று என் தந்தை சொல்லியிருக்கிறார். வானுக்குச் செல்லும் முன் நம்மை யாவரும் வணங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் விளைவுகளாக விளைந்த அவ்வார்த்தை என் மனதின் எல்லா துளைகளிலும் அமர்ந்து கொண்டு பயமுறுத்தியது.

எந்த ஆடிப் பொழுதுகளிலும் ஊஞ்சல் கயிற்றில் அமர்ந்ததே இல்லை. ஒருவேளை ஞாபகம் அறியாத வயதில் யாரோ ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே சமயம் அவர்களை உந்தி விடுவது எனக்குப் பிடித்திருந்தது. பெண்கள் இருபுறமும் கயிறைப் பிடித்து தலை சாய்த்து ஆடும் பொழுது குற்றம் செய்யவந்தவனும் கும்பிட்டுச் செல்வான். ஆடி முடிந்ததும் ஆடலும் முடிகிறது. ஊஞ்சல் கயிறுகள் கிணற்றில் தண்ணீர் இறைக்கவும், பரணில் படுத்துறங்கவும் பழகிக் கொண்டன. ஆனால் என்னுடைய நெடுநாள் கேள்விகளும் உள்நிறைந்த மாற்றங்களும் ஊஞ்சல் கயிறினுள்ளும் ஒளிந்திருப்பது அவைகளுக்கு மட்டும்ந்தான் தெரியுமோ என்னவோ?

அந்த பூங்காவினுள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊஞ்சல்கள் தொங்கிக் கொண்டிருந்தன.அவை நன்கு உறுதியான கம்பிகளால் பிணைக்கப்பட்டு மரப்பலகை பொருத்தப்பட்டு இருந்தன. அவைகளின் இருபுறமும் சாயம் வெளுத்த இரும்புத் தூணை நட்ட வைத்திருந்தார்கள். ஊஞ்சலில் ஆடுபவர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க, மணலைப் பரப்பியிருந்தார்கள். ஊஞ்சல் நிலையாக இருக்கும் இடத்திற்கு நேர்கீழே மட்டும் உந்துவதால் ஏற்படும் குழி இருந்தது. எங்கள் வீட்டு ஊஞ்சல்களுக்கு அடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாதது குறித்து நினைத்துக் கொள்வேன்.

ஊஞ்சல்களில் ஆடும் சிறுமிகளையும், அதைத் தள்ளிவிடும் தோழிகளையும் பார்க்கும் பொழுது, அவர்களின் கவலைகள், தொல்லைகள் எல்லாம் எங்கே சென்றன என்று வியப்பு ஏற்படும். ஊஞ்சலாடும் ஆசை என் மனதின் துளையில் எங்கேனும் மிச்சமிருந்ததோ என்னவோ, நானும் ஆடவேண்டும் என்ற ஆசை கொண்டேன். ஊஞ்சலாடும் சிறுமிகளை ரசிப்பது எவ்வளவு இனிமையோ அதனைக் காட்டிலும் இருமடங்கு நாம் ஊஞ்சலாடுவதில் இருக்கும் என்று என் சகோதரிகள் கூறியது நினைவுக்கு வந்தது. நான் மெல்ல அருகே சென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் நாமும் அமரலாம் என்ற நப்பாசை அதனுள் கலந்திருந்தது.

ஊஞ்சல்கள் எப்படி மனிதனின் மனதைக் கரைத்து இன்பத்தைக் கொண்டு வருகின்றன? சட்டெனும் நாழிகைகளில் குழந்தையாவதற்குண்டான தருணத்தை அதனால் எப்படி ஏற்படுத்தித் தரமுடிகிறது? பருவ மங்கைகளின் வாழ்வில் இடையிறாது கலந்துவிட்ட ஊஞ்சல்கள் வானம் தொடும் பொழுதெல்லாம் வசப்படுத்துகிறதா என்ன?

அன்று அந்த ஊஞ்சல் பெண்ணைப் பார்த்திருக்கவில்லையெனில் நான் இன்று எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவள் எப்படி இருந்தாள் என்கிற ஞாபகம் ஏதும் தற்சமயம் என்னிடமில்லை. என் வயதை ஒத்து இருந்தாள். மெல்லிய நிறத்தில் சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். பார்வை குறைபாட்டினால் கண்ணாடி ஒன்றை அணிந்திருக்கவேண்டும்.. அவளது கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆடியின் கால் அழுந்திய தழும்பு இருந்தது. நன்கு சிவந்த முகத்தைக் கொண்ட பேரழகியாக விளங்கினாள். பூங்காக்களில் தேவதைகள் நுழைவது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல. ஆனால் பூங்காவினுள் நுழையும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அது மிக முக்கிய செய்தி.. பருவ வயதினுள் நுழைந்திருந்த என்னை இனக்கவர்ச்சி எனும் மாயை துரத்தியது. அவளை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அவளின் புற அழகு என்னை என்னிடமிருந்து பிரித்திருந்தது. வைத்த விழி அவளிடமே இருக்க, அவள் என்னைத் துளியும் பார்க்காதது என் துர்பாக்கியமாகக் கருதினேன்..

எனக்கான ஊஞ்சலாடும் தருணம் வந்தது. ஊஞ்சல் பலகை தேய்ந்து விரிசலுற்றிருந்தது. சிறுமிகளே அதில் அமர்ந்தாடும் பொழுது நாம் வாலிபம் நிறைந்தவன் தானே ஆடுவோமே என்று மெல்ல மெல்ல உந்தி இருபக்கமும் பறந்தேன். கைகள் ஆரம்பத்தில் நடுங்கினாலும் செல்லச் செல்ல அதன் தீவிரம் குறைந்து சகஜமானது. ஊஞ்சல் தரும் இன்பத்தை இத்தனை நாள் நான் ஏன் அனுபவிக்காமலேயே போய்விட்டேன்? காலம் திரும்பிச் சுற்றி, வயதைக் குறைக்காதா என்று முதல்முறையாக பேராசை கொண்டேன்..அந்த பெண்ணின் அழகை விட, ஊஞ்சல் தந்த இன்பம் என்னைக் குதூகலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட அதுதான் எனது முதல் அனுபவம் என்றும் கூறிவிட முடியாது. அந்த ஊஞ்சல் பெண் நான் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலை நோக்கி வந்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியும் என் பருவ தாகமும் இணைந்து கொண்டன. ஊஞ்சல் கயிறின் அலைவேகம் குறைந்து கொண்டே போனது. என்னருகே வந்தவள், சட்டென்று என்னை இழுத்து மணலுக்குள் தள்ளினாள்.. பரப்பியிருந்த மணலுக்குள் விழுந்தபடியால் எனக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.. எந்த வித கட்டுப்பாடுமில்லாமல் பறக்கும் பறவையைப் போன்று அவள் ஊஞ்சலில் ஆடத் துவங்கினாள்.

அவளது செய்கை எனக்கு வியப்பைத் தந்தாலும் என்னால் வேறேதும் யோசிக்க முடியவில்லை,... ஒருவேளை வாலிபர்கள் ஊஞ்சலாடக்கூடாதோ என்ற எண்ணம் சட்டென்று வந்தது.. என் வயதொத்த அவள் ஆடும் பொழுது ஏன் அந்த உரிமை ஆணுக்கு இருக்கக் கூடாது? என்றாலும் அவள் ஆடும் அழகை ரசித்துக் கொண்டு அருகே உள்ள மரத்தினில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். அவளது ஆட்டத்தினில் என் கண்கள் அவளது கிழிந்த சட்டையின்மேல் தன் பார்வையை செலுத்தியது.

அவளது கையும் மார்பும் இணையும் இடத்தில் மார்பருகே சட்டை கிழிந்திருந்தது. அவள் எப்படி அதை கவனிக்காமல் அணிந்து வந்தாள்.. பெண்களின் முன்னெச்சரிக்கைகளைக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. அதிலும் மானம் என்பது பெண்களுக்கு மட்டுமே உயிருக்கும் மேலானதாக கருதி வந்தேன். அவள் ஏன் தெரியாமல் அதை அணிந்திருக்கவேண்டும்?/

அந்த பெண்ணின் தந்தை ஊஞ்சல் மரத்தினருகே வந்தார். இத்தனை நேரம் எங்கிருந்தாரோ தெரியவில்லை ; தன் பெண்ணின் நிலையைக் கண்டவரைப் போன்று அவளை ஊஞ்சலாடுவதிலிருந்து நிறுத்தி விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். அவர் தன் மகளின் கிழிந்த ஆடையை கவனித்திருக்கலாம்... ஆனால் அதை சரிசெய்ய அவரால் ஏனோ எதையும் செய்யமுடியவில்லை. தந்தை மகள் போராட்டத்தினிடையே எனக்கு உரைத்தது, அப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லாமல் இருக்கிறது என்பது. அதுகூட யூகம் தான் என்றாலும் அவளின் நடத்தை, வயது, அலட்சியம் ஆகியவற்றைக் கவனிக்கும் பொழுது அந்த முடிவுக்கு வந்தேன்..

மெதுவாக என் பாதங்கள் ஊஞ்சல் மரம் விட்டு விலகத் தொடங்கின. எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா.. அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.
தூரத்தில் அப்பெண் அழுதுகொண்டே அவள் தந்தையின் பின்னால் செல்வது தெரிந்தது நான் யாருடைய முகத்திலும் விழிப்பதற்கில்லை என்று வேகமாக பூங்காவை விட்டு வெளியேறினேன்.. அதன் பிறகு அப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை. அப்பெண் தற்போது குணமாகியிருப்பாளா.. அல்லது என்னைப் போன்றே யாரையும் தள்ளிவிடுவாளா... யாருக்கேனும் கிழிந்த ஆடையைக் காட்டி காமத்தை உமிழச் செய்வாளா..
பூங்காவை விட்டு வெளியே வந்தபின்னர் ஊஞ்சல்மரத்தைத் திரும்பிப் பார்த்தேன்.. அப்பொழுது சிறுமிகள் ஆடிக் கொண்டிருந்தார்கள் வானுக்கும் மண்ணுக்குமாய்...

பிகு : இந்நிகழ்ச்சி நடந்து சுமார் ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.. அதன் விளைவை எனது பூலோகக் காவியர்கள் எனும் கவிதையில் அப்பெண்ணின் நிலையிலிருந்து எழுதியிருந்தது நம் வலை நண்பர்களுக்கு நினைவுக்கு வரலாம்..

Comments

7 8 வருடங்களா

ஆடும் ஊஞ்சலா
//பூங்காக்களில் தேவதைகள் நுழைவது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல. ஆனால் பூங்காவினுள் நுழையும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அது மிக முக்கிய செய்தி..//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
//அவளின் புற அழகு என்னை என்னிடமிருந்து பிரித்திருந்தது. வைத்த விழி அவளிடமே இருக்க, அவள் என்னைத் துளியும் பார்க்காதது என் துர்பாக்கியமாகக் கருதினேன்..//

யதார்த்தமான விசயங்கள்...உங்களிடம் எனக்குப் பிடித்தது உள்ளதை உள்ள படியே நீங்கள் எழுதுவது தான் ஆதவன்...
ஊஞ்சலின் துவக்கமே அழகு ஆதவா!
//மெதுவாக என் பாதங்கள் ஊஞ்சல் மரம் விட்டு விலகத் தொடங்கின. எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. //

உணர்வுகளை வார்த்தைகளில் உணர்ந்து கொள்ள முடிகிறது ஆதவன்...உங்கள் அனுபவங்களின் அருமையான வெளிப்பாடு இந்தப் பதிவு...வாழ்த்துக்கள் ஆதவன்...
யதார்த்தமான விசயங்கள்...உங்களிடம் எனக்குப் பிடித்தது உள்ளதை உள்ள படியே நீங்கள் எழுதுவது தான் ஆதவன்...\\

இத நானும் கூவிக்கிறேன்
3வது நபராக வந்திருக்கின்றேன். எனக்கு பிடித்த எண்
//மெதுவாக என் பாதங்கள் ஊஞ்சல் மரம் விட்டு விலகத் தொடங்கின. எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா.. அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.//

ஆதவா.. நான் மிகைபடுத்தி சொல்ல வில்லை உண்மையிலே அருமையான எழுத்து நடை என்ன மிகவும் வசப்படுத்தியது.
இவ்வரிகளில் நம் எல்லோருடைய ஏதாவதொரு தருண குற்ற உணர்ச்சியை அது கேட்பதாக உள்ளது.
உண்மையிலே மிகவும் நன்றாக எழுதியுள்ளீங்கள்
ஆதவா said…
மிக்க நன்றி ஜமால்.. எத்தனை வருடங்களுக்கு முன்னர் என்பது தெரியவில்லை... மிக்க நன்றி

புதியவன்... உண்மையை மறைத்து எந்த பிரயோசனமும் இல்லை. அதான்... மிக்க நன்றி!!!

கலை!!! நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே??

நன்றி ஆ.முத்துராமலிங்கம் அவர்களே../. உங்களது பின்னூக்கம் எனக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது.
//ஊஞ்சலாடும் எல்லைக்கு அப்பால் சென்று வானில் கலந்துவிடுவேனோ என்ற இனம்புரியாத அச்சம் கலந்திருந்தது.
//

அடங்கப்பா....தாங்கலயே !!!!
//ஒருவேளை ஞாபகம் அறியாத வயதில் யாரோ ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து ஆடிக் கொண்டிருக்கலாம்//

புரியலியே !!!!!!! அப்பயேவா ?
வழமைபோலவே வித்தியாசமான் யாரு எதிர்பார்க்காத தலைப்பு ஆதவா.கலக்கல்
இந்த விஷயம் ஜெசிக்காவிற்கு தெரியுமா?
////கலை!!! நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே??///////

::::::::::::::::::::::::::::::::
அட அதுக்குள்ள பாத்து விட்டிங்களா. பின்னுட்டம் போட ஆரம்பித்தே ஒரு வேளை வந்துவிட்டது, முடித்துவிட்டு போடலம்னு இருந்தேன், அதுக்குள்ள நீங்க வந்துவிட்டிங்க.ம்ம்ம்
//அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.//

::::::::::::::::::::::::::::::::
பலருக்கு புரிவதில்லை. எல்லாமே பட்ட பின் ஞானம் தான் ஆதவா, அதுவும் சிலரில் அரிது.
Anonymous said…
கலக்கல்
விடுபட முடியாமல் தொந்தரவு செய்கிற பதிவாக இருக்கிறது.
ஆதவா, மிக அருமையான பதிவு. சரளமான நடை, சரியான வார்த்தை கோர்ப்பு. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பா.

- பொன்.வாசுதேவன்
//ஊஞ்சல்கள் எப்படி மனிதனின் மனதைக் கரைத்து இன்பத்தைக் கொண்டு வருகின்றன? சட்டெனும் நாழிகைகளில் குழந்தையாவதற்குண்டான தருணத்தை அதனால் எப்படி ஏற்படுத்தித் தரமுடிகிறது? பருவ மங்கைகளின் வாழ்வில் இடையிறாது கலந்துவிட்ட ஊஞ்சல்கள் வானம் தொடும் பொழுதெல்லாம் வசப்படுத்துகிறதா என்ன?//

அழகான எழுத்தோவியம்.
//மாதவராஜ் said...
விடுபட முடியாமல் தொந்தரவு செய்கிற பதிவாக இருக்கிறது.
//

ரிப்பிட்டுகிறேன்.
யதார்தமான நடையில் உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள். பருவ வயதில் அலைபாயும் மனதில் நடந்த சில நிகழ்வுகளை இப்போது நினைத்தால் சில சிரிப்பையும், சில வெட்கப்படக்கூடியதாகவும்தான் இருக்கும். இது எல்லாருக்கும் நிகழ்வதுதான். பலரும் அதை வெளியே சொல்வதில்லை. அவ்வளவுதான்.
ஆதவா said…
வாங்க அ.மு.செய்யது!

அப்பயேன்னா.... அப்பத்தாங்க.. ச்ச்சின்ன வயசிலங்க.......

----------------

ஜெஸிகா இதுவரைக்கும் தெரிஞ்சுக்காத மேட்டர் கலை!!! நான் கொஞ்சம் அவரசப்பட்டுட்டேன்.... நன்றி கலை!!!

---------------

மிக்க நன்றி கடையம் ஆனந்த் ..
ஆதவா said…
மிக்க நன்றி மாதவராஜ் அவர்களே. மனம் மகிழும் பின்னூக்கம்...

நன்றி வாசு சார். ரொம்ப நிறைவா இருக்கு..

திரும்பவும் வந்து நிறைவான ஊக்கம் தந்த செய்யது சாருக்கு நன்றிகள்...

---------------

நீங்கள் சொல்வது உண்மைதான் அன்புமணி.. எனக்கு எதைப்பற்றியும் சொல்லுவதில் தயக்கமில்லை!!!

அனைவருக்கும் மீண்டுமொரு நன்றீ!
//எனது குற்ற உணர்ச்சி முற்களாக அலங்கரிக்கப்பட்டு என்னைச் சுற்றிலும் குத்திக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா..//

இதுபோல் அனுபவம் ஒவ்வொருவர்க்கும் ஏற்பட்டு இருக்கும்,வெளியே சொல்லமுடியாது. நெஞ்சில் நிழலாடிகொண்டு இருக்கும் குற்ற உனர்வை
வெளியிட்டதற்கு பாராட்டுகள்.
ஆமாம் அது அனை பூங்காதானே..
ஊஞ்சலைவிட ஒரு நல்ல பொழுதுபோக்கு இருந்ததாக கேள்விப்பட்டதில்லை

இப்பொழுதெல்லாம் மரங்கள் குறைவால் பார்க்களிலே இரும்பினால் செய்யப்பட்ட ஊஞ்சலே (சிக்காட்டா இது என் மகன் சொல்லும் வார்த்தை) இப்போதுல்ல சந்ததினருக்கு தெரிந்தது

நல்லா சொல்லிருக்கீங்க ஆதவா வாழ்த்துக்க்கள்
நாம் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில், இப்படி ஒரு தருணத்தில்... இருந்திருப்போம்.. மனதின் குற்ற உணர்வை மறைக்காமல் பதிவு செய்து இருக்கிறீர்கள் ஆதவா.. நல்லா இருக்கு..
இப்போதெல்லாம் பூங்காக்களை தவிர வேறு எங்கேனும் ஊஞ்சல்கள் உள்ளதா என்ன..

//பிகு : இந்நிகழ்ச்சி நடந்து சுமார் ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.. அதன் விளைவை எனது பூலோகக் காவியர்கள் எனும் கவிதையில் அப்பெண்ணின் நிலையிலிருந்து எழுதியிருந்தது நம் வலை நண்பர்களுக்கு நினைவுக்கு வரலாம்//

உங்களுடைய அந்த கவிதை இந்த நிகழ்வின் தாக்கம் தானா..
Rajeswari said…
”ரசனையான படைப்பு” என்று சொல்லி மட்டும் பின்னூட்டத்தை முடிக்க முடியவில்லை.

தங்களிடம்,வளமான வார்த்தை செறிவுகளும்,நல்ல எழுத்துக்களும் இருக்கின்றன...

கண்டிப்பாக அதை உலகுக்கு கொண்டு செல்லுங்கள்...வாழ்த்துக்கள்
Anonymous said…
வார்த்தைகளினை நல்லாவே வசப்படுத்துகிறாய்..!
ரசனைமிகு பதிவு!
//அப்பெண் தற்போது குணமாகியிருப்பாளா.. அல்லது என்னைப் போன்றே யாரையும் தள்ளிவிடுவாளா... யாருக்கேனும் கிழிந்த ஆடையைக் காட்டி காமத்தை உமிழச் செய்வாளா..//

எத்தனை அழகான வரிகள்... பாரட்டுகள் ஆதவா,... நானும் ஊஞ்சல் பக்கம் வந்துவிட்டது போல இருந்தது உங்களின் எழுத்து...
//நான் ஏன் அவளிடம் போய் உன் ஆடை கிழிந்திருக்கிறது என்று சொல்லவில்லை.... அல்லது நான் சொல்ல விரும்பாமல் ரசிக்கத் தூண்டப்பட்டேனா.. அறியாமை உண்டாக்குவதைக் காட்டிலும் அறியாமையை அறிந்தும் உதாசீனப்படுத்துவதே தவறு என்பது எனக்கு ஏனோ புரியவில்லை.//

நடைமுறையில் சொல்வது எழிதான காரியம் இல்லை ஆதவா...
ஹேமா said…
ஆதவா,என் ஊஞ்சல் ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள்.எங்கள் வீட்டின் பின் வளவுக்குள் பெரிய 100- 200 வருடத்துப் புளியமரம்.அங்கு ஆடிமாதம் என்றில்லை.எப்போதுமே ஊஞ்சல் கட்டியிருப்போம்.பொழுதுபட்டால் புளியமரத்தில பேய் வரும் என்று வெருட்டி வைப்பா அம்மா.நான் நேரம் போவதே தெரியாமல் வாணுக்கும் மண்ணுக்குமாய் பறந்துகொண்டிருபேன்.உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.
தேவதைகளையும் சந்தித்திருபேனோ நானும்.
ஹேமா said…
ஆதவா,உங்கள் வரிகளை எடுத்துத் திரும்பவும் தர இன்று எனக்குப் பிடிகவில்லை.எப்படி...இப்பிடி வரிகள் கோர்த்து அழகாக எழுத முடிகிறது உங்களால்.சிலாகித்து வர்ணித்து அலட்சியமாய் எழுதி முடிக்கிறீர்கள்.சொல்ல வந்த விஷயம் நுண்ணியமாக வாசகன் காதில் இரகசியம் சொலவது போல வந்தடைகிறது.அருமை அருமை.

குற்ற உணர்வோடு மனதை ஆற்றிக்கொள்ளவுமான பதிவு இது.யோசிக்க வேணாம்.அந்தந்தப் பருவங்கள் எங்களைச் சிலசமயங்களில் முந்திக்கொள்கிறது.பின்னர்தான் எங்களை யோசிக்க விடுகிறது.
ஆதவா said…
சொல்லரசன்,

நம்ம ஊர்ல இருக்கிறதே ஒரு பூங்காதானே!! அங்கேதான்...

அந்த பூங்காவிற்கு அதற்குப் பிறகு நான் செல்லவேயில்லை....

நன்றிங்க..
ஆதவா said…
நன்றி அஃப்ஸர்... சிக்காட்டா.... எந்த மொழி? நன்றி தல..
-------------------
நன்றி கார்த்திகைப் பாண்டியன். நிகழ்வின் தாக்கங்களாலான கவிதைகள் ஏராளம்.. அதை பின்வரும் பதிவுகளில் விளக்கமாகச் சொல்லுவேன்....
------------------
ஆதவா said…
மிக்க நன்றி ராஜேஸ்வரி மேடம்.

உங்கள் வாழ்த்து என்னை மேன்மேலும் உயர்த்தும்...

------------------
மிக்க நன்றி கவின்..

----------------

நன்றி ஞானசேகரன்.. நடைமுறையில் எளிதான காரியமில்லைதான்... ஆனால் சிலசமயங்களில் அதைச் சொல்லத் தூண்டுகிறேன்..

----------

வாங்க சகோதரி... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.. ஊஞ்சலாடியிருக்கிறீர்கள்.. ஆமாம்... நீங்கள் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்....

உங்கள் வாழ்த்துக்களால் நெகிழ்கிறேன்.. நன்றி சகோதரி!!
கமல் said…
என் பழையவீட்டின் முன்னே தனித்து பெருத்து இருக்கும் அந்த பெயர் தெரியா மரத்தின் கிளைகளின் விளிம்பு வரை சென்று ஊஞ்சல் கயிறைக் கட்டியிருக்கிறேன். மரம் ஏறத் தெரிந்தவனுக்கு, ஊஞ்சல் ஆடுவது மட்டும் ஏனோ பயம் இருந்தது.//அடடே நீங்கள் என்னைப் போல இருக்கிறீங்களே???
எனக்கும் பயம் தான்???
கமல் said…
நான் மெல்ல அருகே சென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் நாமும் அமரலாம் என்ற நப்பாசை அதனுள் கலந்திருந்தது.//


என்னப்பா சின்னப் பிள்ளை மாதிரி எல்லா விசயத்தையும் வெளியை போட்டு உடைக்கிறீர்??

நீங்கள் இப்பவும் சின்னப் பிள்ளையோ???
கமல் said…
பருவ மங்கைகளின் வாழ்வில் இடையிறாது கலந்துவிட்ட ஊஞ்சல்கள் வானம் தொடும் பொழுதெல்லாம் வசப்படுத்துகிறதா என்ன?//


இந்த இடத்திலை கம்பன் கூட உங்களிடம் தோற்றுவிடுவான்???
கமல் said…
பூங்காக்களில் தேவதைகள் நுழைவது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல. ஆனால் பூங்காவினுள் நுழையும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் அது மிக முக்கிய செய்தி.. பருவ வயதினுள் நுழைந்திருந்த என்னை இனக்கவர்ச்சி எனும் மாயை துரத்தியது. அவளை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அவளின் புற அழகு என்னை என்னிடமிருந்து பிரித்திருந்தது. வைத்த விழி அவளிடமே இருக்க, அவள் என்னைத் துளியும் பார்க்காதது என் துர்பாக்கியமாகக் கருதினேன்..//


இப்பதிவிலும் உங்களது வழமையான சொல்லாடால்கள் தெறித்து விழுந்துள்ளன ஆதவா...

உணர்வினைத் தூண்டி விட்டு இறுதியில் உள்ளத்தைக் கலங்க வைத்து விட்டீர்கள்...

உங்கள் எழுத்தின் வீரியமும் அது தானே?

தொடருங்கள்...! பதிவு சோகமும் காமமும் நிறைந்த இளவயதின் குழந்தைத் தனம்...!
கமல் said…
ஹேமா said...
ஆதவா,என் ஊஞ்சல் ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள்.எங்கள் வீட்டின் பின் வளவுக்குள் பெரிய 100- 200 வருடத்துப் புளியமரம்.அங்கு ஆடிமாதம் என்றில்லை.எப்போதுமே ஊஞ்சல் கட்டியிருப்போம்.பொழுதுபட்டால் புளியமரத்தில பேய் வரும் என்று வெருட்டி வைப்பா அம்மா.நான் நேரம் போவதே தெரியாமல் வாணுக்கும் மண்ணுக்குமாய் பறந்துகொண்டிருபேன்.உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.
தேவதைகளையும் சந்தித்திருபேனோ நானும்.//இப்ப மட்டும் ஊஞ்சால் ஆடாத மாதிரிக் கதை விடுறா ஹேமா...


யோ யாரோ சொல்லிச்சீனம்?? சுவிஸ் குளிருக்கையும் சூரிச்சிலை உள்ள பூங்காவிலை ஊஞ்சல் கட்டி ஆடுறீங்களாம் என்று?? மெய்யாமோ???
ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ஆதவா..
அழகான மொழிநடை..அருமையான பதிவு !
ஆதவா...பதிவு பெரிசா இருந்ததுனால நேரம் கிடைக்கும் பொது படிக்கலாம்னு விட்டு வச்சுருந்தேன்
இப்போ படிச்சுட்டு தாமதமா வந்து தப்பு செஞ்சுட்டேநேன்னு தோனுது..

ஒவ்வொரு வரியும் அருமை, உள்ளுக்குள்ள இருந்து உண்மையை சொல்லி இருப்பது அழகு ....

திரும்ப திரும்ப படிக்க சொல்லுது உங்கள் பதிவு... ..எழுத்து நடை அருமை...தொடருங்கள்
ஆதவா said…
கமல்... கம்பன் தோற்பான் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம்தான்.. ஏனெனில் அவர் மாமலை!!! நான் கடுகு. உங்களது நீண்ட பின்னூட்டம் இப்பதிவு எழுதியதன் நிறைவைத் தருகிறது!!! நன்றி நண்பா!!
---------------
மிக்க நன்றி ரிஷான்!!!
-------------

வாங்க பொன்னாத்தா... பொறுமையா படிச்சு பின்னூட்டமிடுங்கள் தவறில்லை!!! உங்கள் பின்னூட்டம் நிறைவு!!! நன்றி அம்மா!!
Suresh said…
//ஊஞ்சல்களில் ஆடும் சிறுமிகளையும், அதைத் தள்ளிவிடும் தோழிகளையும் பார்க்கும் பொழுது, அவர்களின் கவலைகள், தொல்லைகள் எல்லாம் எங்கே சென்றன என்று வியப்பு ஏற்படும்.//

அருமை .. உங்கள் பதிவுக்கு ஏற்ற புகை படங்கள் எப்படி தேர்வு செய்யுரிங்க ?
நண்பா உங்கள் எழுத்தக்கள் முன் நாங்க எல்லாம் சிறு பிள்ளைகள்
ஆதவா said…
நன்றி சுரேஷ்... அது தானாக அமைந்துவிடுவதுண்டு!!

உங்கள் பதிவில் என்னால் பின்னூட்டம் போடமுடியவில்லை... பின்னூட்ட முறையை மாற்றலாமே!!!
ஆதவா நேற்று இணையம் சரியாக வேலை செய்யவில்லை..
அதனால் வரமுடியவில்லை..
இன்று சரியாக உள்ளது..
இப்போ சிறிது வேலை, அப்புறமாக வந்து பின்னூட்டுகிறேன்...
:-)
Anonymous said…
நன்றாக எழுதியுள்ளீங்கள்
Anonymous said…
srart ready
Anonymous said…
me the 50
ராம்.CM said…
துவக்கமே நல்லாயிருந்தது. அழகாக எழுதியுள்ளீர்கள்.ஜெசிக்கா தன் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மிஸ் பண்ணியது தங்களாகதான் இருக்கும்.
Suresh said…
athava ungal blogai nan youthful vikatanil nettru good blogsil parthaen .. ennoda pathivum vanthu ullathu romba latta than nane parthaen.. ennaikkku ungaloda blog blogs cornerkku move ayuduchu...

kanippa pinnotta muraiyai mattrugiraen ...nanba
ஆதவா said…
விகடனில் வந்ததா..... நினைவூட்டியமைக்கு நன்றி நண்பா!!!

இப்போதுள்ள முறையே சரியானது!! மாற்றவேண்டாம்!!!
நல்லா இருக்கு ஊஞ்சல்
Anbu said…
[தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் அண்ணா]

மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா..
Anbu said…
வேலை அதிகமாக இருப்பதால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை..மன்னிக்கவும்

Popular Posts