பூச்சாண்டிகள்
இரவு துளிர்க்கும் நேரங்களில்
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்
அரூப விக்கிரகங்களாகவோ
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை
சப்தநொடிகள் அடங்கி
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்
கேட்பதற்கு யாருமில்லாமல் போகலாம்
ஆனால் அச்ச ராகதாளங்களைத் தவிர
அவர்களுக்கு வேறேதும் தெரியவாய்ப்பில்லை
பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்
அல்லது பயம் உறுத்துகிறோம்
உள்ளமுங்கி, நீண்டு நெளிந்து கிடக்கும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்..
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்
அரூப விக்கிரகங்களாகவோ
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை
சப்தநொடிகள் அடங்கி
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்
கேட்பதற்கு யாருமில்லாமல் போகலாம்
ஆனால் அச்ச ராகதாளங்களைத் தவிர
அவர்களுக்கு வேறேதும் தெரியவாய்ப்பில்லை
பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்
அல்லது பயம் உறுத்துகிறோம்
உள்ளமுங்கி, நீண்டு நெளிந்து கிடக்கும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்..
Comments
இருங்க படிச்சிட்டு வாறேன் ...
பூச்சாண்டி என்ற சொல்லுக்கு ஒரு புதிய புரிதல்
அருமை ஆதவா!
//பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை//
ஓ அப்படியா ஜொலி..
இதுவரை யாரும் எழுதியதில்லை//
உங்களுக்கிட்ட வந்து என்னைப் பற்றி எழுதுங்க ஆதவா அப்படினு சொன்னாரா? அதான் எழுதினிங்களா?
ஹி ஹி ஹி...
:)
நல்ல கற்பனை
அழகாக எழுதியுள்ளீர்.
கவிதை நல்லாருக்கு.
ஆன்னா ஆதவா
நான் இன்னும் பூச்சாண்டியை
பார்த்ததே இல்லை அவரை எங்கு பார்க்கலாம்? (சும்மா குறும்பு)
உங்கள் எழுத்து மிக அறுமையாக உள்ளது. நன்றாக எழுதுகின்றீர்கள் உங்களின் 'எலக்ட்ராவின் பிறப்பு'
படித்தேன் மிகவும் அறுமையாக எழுதியிருந்தீங்க.
வாழ்த்துக்கள்.
Highlights
//இரவு துளிர்க்கும் நேரங்களில்
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்//
//உள்ளமுங்கி, நீண்டு நெளிந்து கிடக்கும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்//
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
//
வார்த்தைச் செறிவு....
இதுவரை யாரும் எழுதியதில்லை//
நிதர்சனம்...
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்.. //
குழந்தைகளின் சிம்ம சொப்பனம்...இரவு தாய்மார்கள் தத்தம் சேய்களுக்கு சோறூட்ட
பயன்படும் கற்பனை கதாபாத்திரம்..
அழகாக பயணிக்கிறது உங்கள் கவிதை...
இருந்தாலும் சொல்லும் பொருளும் நேர்த்தியாக அமையப் பெற்றிருக்கின்றன.
வாழ்த்துக்கள் ஆதவன்.
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்
கேட்பதற்கு யாருமில்லாமல் போகலாம்
ஆனால் அச்ச ராகதாளங்களைத் தவிர
அவர்களுக்கு வேறேதும் தெரியவாய்ப்பில்லை///
அய்யோ நான் பூச்சாண்டியை பார்த்ததில்லை, மன்னிக்கனும் ஆதவா எனக்கு பயம் கொஞ்சம் இல்லை....
நல்ல கர்ப்பனை வாழ்த்துக்கள்..
//பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்//
பிரமாதம்
அருமையாய் இருக்கு.பூச்சாண்டி பார்த்தால் சந்தோஷப்படுவார்.
உங்கள் கவிதையின் கருத்தை விட வார்த்தை தெரிவுகள் என்னை வெகுவாக கவர்கிறது.
இருந்தாலும் சொல்லும் பொருளும் நேர்த்தியாக அமையப் பெற்றிருக்கின்றன.
வாழ்த்துக்கள் ஆதவன்.
\\
நானும் கூவிக்கிறேன் ...
அழகாக எழுதியுள்ளீர்.
கவிதை நல்லாருக்கு.
//யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்//
சரியாக சொன்னீர்கள்!
அருமை நண்பா...
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்
அல்லது பயம் உறுத்துகிறோம்//
உண்மைதான், அச்சம் தவிர்.
ஜெஸிக்கா... அடச் ச்சே ஜொலிக்கும் பதிவு.
(ஏனோ தெரியவில்லை உங்கள் பக்கம் வந்தால் ஜெஸிக்கா ஞாபகம்தான் வ்ருகிறது)
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்//
இப்படி பயமுறுத்திதான் நனும் உணவு உண்டேனாம்
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை///
அந்தந்த சூழ்நிலைக்குதக்க உருவம் குழந்தைகள் மனதில் வரும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்//
கடைசியில் நல்லஒரு வேண்டுகோள் & அட்வைஸ் தல
வரிகள் ஒவ்வொன்றும் கலக்க எப்போதும்போல
//சப்தநொடிகள் அடங்கி
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்//
வார்த்தைகள் அள்ளிக் கொண்டு போகின்றன ஆதவன்..
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் உறுகிறோம்
அல்லது பயம் உறுத்துகிறோம்*/
உண்மை..
/*பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்.. */
நன்கு கூறினீர்கள்
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை//
எப்படி இருப்பார்கள் என்று தெரியாத அரூபமான கற்பனைக்கு
இனி இப்படித்தான் இருப்பார்கள் என்று உருவம் கொடுக்கும் முயற்சி அருமை...
நல்லா இருக்கு ...
உங்கள் வார்த்தை பாயன்பாடு
enoda pera enai ketkama vachitinga parava ellai :-)
//பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை//
nama kanadila daily parkarom la :-)
நல்ல ஆரம்பம்.
நண்பா, வந்துட்டேன். உங்களோட நெடுங்கவிதை அருமை. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல நெடுங்கவிதையை அனுபவித்துப் படித்தேன். பிரம்மராஜன் கவிதை படிச்சது போல இருக்கு. நீங்கள் விரும்பினால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பதிவுகளை படித்து முடிக்க இன்னும் ஒரு வாரம் ஆகும். படிச்சுட்டு மறுபடி வர்றேன்.
- பொன்.வாசுதேவன்
பூச்சாண்டிகள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல.... :) சில நிஜ பூச்சாண்டிகளை விடவும்....
நல்ல கவிதை ஆதவா
வேலைப்பளு இருந்தமையால் அனைவரின் ஊக்கத்திற்கும் தனியே நன்றி சொல்ல இயலவில்லை..
உங்கள் ஊக்கங்கள் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகின்றன...
அனைவருக்கும் நன்றி!
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்.. //
கவிதை யாரையோ எச்சரிக்கிறது....
எளிமை,,,யதார்த்தம், இரக்கம். மௌனம் முதலியவற்றின் விடையாகக் கவிதை நகர்கிறது..
தொடருங்கோ......
பிந்திய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்