கொஞ்சம் காசு, நிறைய சுகம்

மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து 
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே 
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில் 
பானம் இருந்தால் 
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில் 
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"


அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா, 
கொஞ்சம் காசு, நிறைய சுகம்

காட்டுகிறேன்.

-------------------------------------------------------------------

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால்.. இங்கே சொடுக்குங்கள்..

இந்தக் கவிதை உங்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் இங்கே சொடுக்குங்கள்

thamizmanam.com 





Comments

//கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.//

வழி தவறும் மனங்களின் குணங்கள்... கவிதையில் எப்போதும் போல் இதிலும் வித்தியாசம் காண முடிகிறது ஆதவன்...
\\மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.\\

ஆதவா என்னாச்சி!
//காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.//

போதையின் பாதையில் தடை செய்ய வேண்டியவை இவை...
//" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"//

கற்பனை அருமை...
" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"\\

டாப்புங்கோ ...
தற்கால இளசுகளின் வாழ்வியல் சீர்கேடுகளை அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்.
//கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"\\//

நீங்களும் வைரமுத்து விசிறியா...இருக்காதா பின்ன ?
//அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்
காட்டுகிறேன்.//

ம்ம்ம்...இந்த வழியில் போகாதே என்று உள்ளுக்குள் சொல்ல வருவது புரிகிறது ஆதவன்...
//
அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்

காட்டுகிறேன்.
//

இப்படி தான் வழிகெடுப்பார்கள் நண்பர்கள் பல நேரங்களில்...

ஒரு கவிதையாக படிக்கலாம்..அல்லது பாடமாக படிக்கலாம்.

அசத்தல் ஆதவன் ( வழக்கம் போல )

வலையுலகில் நான் அதிகம் ரசிக்கும் கவிஞர்கள் இரண்டு பேர்.

ஒன்று புதியவன்..

மற்றொருவர் ஆதவன்..
Karthikeyan G said…
மொக்கை பதிவா அல்லது சீரியஸ் பதிவா?
உலகம் விரிந்து கிடக்கிறது... அதில் உனக்கானதை நீதான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பாதை மாறிப்போகாதே என்று சொல்லத்தான் முடியும். சிலர் பட்டுத்தான் திருந்துவார்கள் என்றால் இக்கவிதையில் சொன்னபடி செய்யலாம்!
ஆதவா said…
புதியவன்... மிக்க நன்றி... உங்களது ஆழ்ந்த பார்வைக்கு... இந்த கவிதை, மாற்று கோணத்தில் எழுதப்பட்டது.... அதை சட்டென்று உணர்ந்து கொண்டீர்கள்.

ஏற்கனவே கழிவறை ஓவியங்கள் என்று எழுதியிருப்பேன்... அதே மாற்று கோணத்தில்..
ஹேமா said…
ஆதவா,உலகின் அத்தனை இளமைச் சுகங்களை போட்டு மிதித்திருக்கிறீர்கள்.
காசே கொடுக்காமல் இயற்கையோடு இணைந்த எத்தனை சுகங்கள் சந்தோஷங்கள்.எந்த வழி அசிங்கமோ அங்கு போவதுதான் நாகரீகமாகிப் போச்சு.
ஆதவா said…
ஜமால்.... எப்படிங்க போட்ட மறுநொடியே பார்க்கமுடிகிறது... என்னால் நிச்சயம் இப்படி செய்ய முடிவதில்லை... அப்பாடி... உங்களைக் கண்டு வியக்கிறேன் ஜமால்...

கருவை உணர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜமால்.
ஹேமா said…
இன்னும் என்னமோ சொல்ல என்று மனம் உழற்றுகிறது.சொல்ல வருகுதில்லை.
ஆதவா said…
அ.மு.செய்யது!!! மிக்க மிக்க நன்றி... உண்மையைச் சொல்லப்போனால்... கவிதை எழுதும் அத்தனை கவிஞர்களுக்கும் நான் விசிறி.... இவர்தான் என்று தனியே சுட்டமுடியாது எனக்கு.....

உங்கள மனம் கவர்ந்த இணைய கவிஞர்களில் நானுமொருவன் என்பதில் உள்ளம் மகிழ்கிறது..... மிக்க நன்றி தல.
ஆதவா said…
Karthikeyan G கூறியது...
மொக்கை பதிவா அல்லது சீரியஸ் பதிவா?

வருகைக்கு நன்றி கார்த்திகேயன்... நான் அவ்வளவாக மொக்கை போடுவது கிடையாது!! இது சீரியஸ் பதிவுதான்,.... நன்றி
நல்லா இருக்குங்க ஆதவா
ஆதவா said…
வாருங்கள் சகோதரி...

நீங்கள் சொல்வதைப் போன்றுதான் ஆகிவிட்டது..  நாகரீகம் என்பதே நாலு சிகரெட் பிடித்தால்தான் என்பது போன்று,......

உங்கள் உணர்வுகள் புரிகிறேன்.... ஏனெனில் என்னைப் பொறுத்தவரையில் மெளனத்தை விடவும் உயர்ந்த மொழி வேறேதுமில்லை...
ஆதவா said…
அன்புமணி.... வாங்க... ஊர் பேரை சேர்த்துட்டதால சட்டுனு பார்த்துட்டு வேற யாரோன்னு நினைச்சேன்...

நன்றிங்க உங்கள் கருத்துக்கு.... உடனடி பின்னூட்டங்களிடும் என் நண்பர்களை நினைத்தால் பெருமைதான் எனக்கு........
கலக்கல் ஆதவா, வழமைபோல...
ஐ கவிதை எனக்குப் புரியுது...
(அப்பாடா...)
:-)
ஆதவா said…
யாத்ரா... மிக்க நன்றி!!!
நல்ல பதிவு ஆதவா.. தவறு செய்பவர்களின் கோணத்தில் எழுதப்பட்டு உள்ளது வித்தியாசம்.. இன்றைய இளைஞர்களின் நிலை இதுதானே..
ஆதவா said…
வாங்க வேத்தியன்....... மிக்க நன்றி....
ஆதவா said…
கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
நல்ல பதிவு ஆதவா.. தவறு செய்பவர்களின் கோணத்தில் எழுதப்பட்டு உள்ளது வித்தியாசம்.. இன்றைய இளைஞர்களின் நிலை இதுதானே..

அதே அதே!!!! என்னங்க தல.... பதிவு போட்டாச்சு போல இருக்கு.... படிச்சுட்டு இருக்கேன்...
//" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"//

நல்லதை யார் கேட்கிறார்கள்,அவர்கள் பாதையில் போய்தான் திருந்தவேண்டும்.
எதிர்மறையாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்
//வாஞ்சி நாதன் வீரமரணம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், அவரது ஆதி நோக்கம் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் இருந்தமையால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்..//

ஆதவா.. வாஞ்சியின் மரணம் பற்றிய சர்ச்சைகள் உள்ளனவா..? முடிந்தால் அவற்றை பற்றி எழுதுங்கள்.. தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..
Anbu said…
நன்றாக இருக்கிறது அண்ணா உங்களது பதிவு

கற்பனையில மிகப் பெரிய மனிதர் ம்ம்ம்..
Anbu said…
\\\" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"\\\

அருமையான வரிகள் அண்ணா
kuma36 said…
ம்ம்ம் மறுபடியும் லேட்டா தான் வந்திருக்கிறேன்.
kuma36 said…
//கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை//

புன் பட்ட நெஞ்ஜை புகை விட்டு ஆற்றுவதாக கூறி பொற்றோரின் நெஞ்சை புன்னாக்கும் புன்னாக்கு மனிதர்களுக்கு பொருத்தமான வரிகள் ஆதவா!!
kuma36 said…
Highlights போட முடிய வில்லை கவிதையே highlight தான்
Anonymous said…
ம்.. இந்த கவிதையை கொஞ்சகாலம் முந்தி படிச்சிருந்தா திருந்த முயற்சித்திருப்பேன்.. ரூலேட்
வித்தியாசமான கவிதை.!
பட்டு தெழிஞ்ச அனுபவம் எனங்கிறதாலை நல்ல கவிதையாக வந்திருக்கிறதுன்னு சொன்ன மறுக்கவா போறாய்..????
//அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்//
ஆதவா... கர்ப்பனைகள் நன்றாக வருகின்றது... இன்னும் கொஞ்சம் மேலே சென்று முற்போக்கு சிந்தனைகளும்.. அறிவியிலையும் சேர்த்துக்கொள்ளவும்... காதலையும் வறுமையும் கலையாக சொல்லும் வித்தைகளை தவித்துவிடுங்கள்.. மக்களைப் பற்றியும் வாழ்வியலை பற்றியும் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்....
பசியும் சுண்டல் ருசியும் போனால், பக்தியில்லை பசனையில்லை,
சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே..... என்ற பட்டுக்கோட்டை வரிகளை ஞாபம் வைத்துக்கொள்ளுங்கள்..
ஆதவா said…
கவின், ஞானசேகர் இருவருக்கும் நன்றிகள்..

ஞானசேகரன் அவர்களே... உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.
தலைப்பே சொல்லுதே.....? ஏதோ ராங்
//கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.
//

சரியான வரிகள் ஆதவா
//அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்காட்டுகிறேன்.---------------------------------------------------------------‍‍‍‍//


எப்போதும் போல் கலக்கல் வரிகள் புரட்டிப்போடும் சொற்கள் உங்கள் கவிதையில்
ஆதவா said…
வாங்க.. அபுஅஃப்ஸர்...

கவிதை படித்து உணர்ந்தமைக்கு நன்றிங்க...
Anonymous said…
சூடான இடுகையில் இடம் பிடித்தற்கு வாழ்த்துக்கள் நண்பா. இப்போம் ரொம்ப சூடாகியிருக்குமே?
எதிர் கவிதைகள் எனப்படுவது இவைகளைப் போன்ற பாணியில் எழுதப்படுவதுதான் என்று நம்புகிறேன்.
வீணர்களை சாடும் அதே வேளையில், இலக்கியவாதிகளை கை தூக்கி பெருமைப்படுத்துகிறீர்கள்.
brown sugar- காக்கிச் சீனி.இப்போதுதான் படிக்கிறேன். தமிழ்ப்படுத்தலுக்கும், மொழிப்பற்றுக்கும்
சிறப்பு நன்றிகள்.
ராம்.CM said…
கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.


நல்லவரிகள்!
ஆதவா வழி தவறும் வாலிப வர்க்கத்தைப் புடம் போட்டுக் காட்டுகிறது கவிதை...


ஆனாலும் வாங்கடா போவோம் என்று கேட்பது சமூக சீர்கேட்டிற்கு மற்றவர்களையும் அழைப்பது போல் தோன்றுகிறது...
இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்

காட்டுகிறேன்.//


நண்பா...கவிதையை இரண்டாவது முறை படிக்கும் போது தான் இன்னும் நிறைய விடயங்கள் புரிந்தது....

//மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்//


கவிதை இரு பொருளைத் தருகிறது...நீங்கள் சிலேடை பாவிக்காமலே சிலேடையாகக் கவிதையை நகர்த்தியுள்ளீர்கள்...

ஒரு பொருளில் இயற்கை அழகாகவும் மறு பொருளில் ஒரு பெண்ணின் அழகாகவும் வர்ணித்துள்ளீர்கள்.....

கவிதைக்குள் இரு முறை மூழ்கினால் தான் பொருள் புரியுமோ என்று எண்ணுமளவிற்கு ஆழமான சிந்தனையின் தேடலாய்க் கவிதை நகர்கிறது.
காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.//


ஆதவா இது உயர்வு நவிற்சி தானே??


நீங்கள் தமிழ் இலக்கணத்தில் சிறப்புத் தேர்ச்சியா??

கவிதை கற்பனையின் எல்லையினூடு இயற்கையின் எல்லையைத் தொடுகிறது என்று சொல்லலாம்,
இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்//


பாரதி பாடினார்.....

இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்பது போல ஆதவாவும் இங்கே இணையற்ற சொல்லாடலைப் புகுத்தியுள்ளார்....

ஆதவா உணர்வற்றவர்களினை உரக்கக் கூவி அழைப்பது போல் கவிதை நகர்கிறது....


தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்...


நான் கொஞ்சம் பிசி....


கவிதை இயற்கையின் ஊடு, இனிமையைத் தருவதும், வேண்டத்தகாதன வேசமாய் இருப்பதும் போன்ற ஒரு உணர்வு வெளிப்பாட்டின் யதார்த்தம்....


தொடருக,.....புதுமைக் கவிஞரே..!
ஆதவா said…
கடையம் ஆனந்த்.. எனக்கும் மகிழ்ச்சிதான்...

ச.முத்துவேல்... மிக்க நன்றி சார். உங்கள் பாராட்டுக்கு...

ராம்... மிக்க நன்றி நண்பரே!

கமல்...

வியக்க வைத்துவிட்டீர்கள்... கவிதையை ஆராய்ந்து நல்ல விமர்சனம் கொடுத்துவிட்டீர்கள்.. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பெரும்பாலும் நேரடி கவிதைகள் நிறைய காணலாம்.. இது ஒரு வில்லன் பார்வையில்... பலர் இக்கவிதையைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நம் மக்கள் அனைவருமே புரிந்து கொண்டது எனக்கு மிக மகிழ்ச்சி...

உங்கள் தேடலுக்கு ஏற்றவகையில் எனது அடுத்தடுத்த கவிதைகள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!!!

தமிழ் எனக்குப் பிடித்த மொழி கமல்... அதனால்தான் என்னவோ, மொழி விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

புதுமைக் கவிஞர்...... ஆஹா... இந்த பட்டமெல்லாம் எனக்குப் பொருந்தாதுங்க... அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை...

அன்புடன்
ஆதவா
machamullavanai thottu pichai poduvaalam,
kayil oorithilaikkirathu petrvanin viyarvaigal

Arumai
:-))

பாதி புரிந்தது, பின்னூட்டங்களில் மீதி புரிந்தது..

தொடர்ந்து உதிருங்கள் உங்கள் எண்ணங்களை!!