ரஷ்யாகாரியோடு காதல்


ரஷ்யநாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் எப்பொழுதுமே ஒரு இணைப்பு உண்டு. அது நாட்டுறவைப் பொறுத்தவரை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது உண்மைதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இன்றைப் போல் வலைப்பக்கங்களோ, தமிழ் தளங்களோ எனக்குத் தெரியாத சூழ்நிலை. அப்போதெல்லாம் மெயில்.யாஹூ.காமும் அரட்டை வசதியும்தான் எனக்குப் பிரதானம். அதைவிட்டால் வேறு தளத்திற்குச் செல்லத் தெரியாது. வீட்டில் இணைப்பு இருந்ததால் கசமுசா தளங்களுக்குச் செல்ல வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பெரும்பாலும் அரட்டைகளில் பெண்கள் முகவரியாக இருந்தால் பேசுவேன். (அப்பல்லாம் கொஞ்சம் ஜொள்ளந்தான்.. இப்ப மட்டும் வாழுதான்னு கவின் கேட்கிறார்.) அல்லாவிடில் முதல் கேள்வி Asl (Age, Sex, Location) பெண்ணாக இருந்தால் மட்டுமே பேசுவது என்ற தீரமான கொள்கையுடன் அரட்டை அடித்த காலம் அது!.. எனக்கு நல்ல பெண் நண்பர்கள் பல நாடுகளில் இருந்தார்கள்.. ரொம்ப பெருமையாக இருந்தது.

அப்படி ஒரு காலசூழ்நிலையில் ஒரு பெண்ணோடு அரட்டை செய்தேன். பெரும்பாலும் எனக்கு அரட்டை அடிக்கும்பொழுது சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும், அவர்கள் ஆணா, பெண்ணா இல்லை பெண் வேஷமிட்ட ஆண்களா என்று சந்தேகத்துடந்தான் அரட்டை செய்வேன். அப்பெண் தான் ரஷ்யா நாட்டவள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவள் பெயர் நடாஷா (Natasha) தினமும் இரவில் வருவாள். என்னால் அரட்டைக்கு வரமுடியாவிடில் மின் மடல் அனுப்புவாள். எனக்கு ஆங்கிலம் தற்குறி. தக்கி முக்கி பேசினாலும் யார் பேசுவதையும் நன்கு புரிந்து கொள்வேன். அவளுக்கு சரிக்கு சமானமாக அரட்டை அடித்து அவள் நெஞ்சில் நான் இடம் பிடித்துவிட்டேன்..... இந்த நட்பு நன்கு தொடர்ந்தது. அப்பொழுது எழுதும் காதல் கவிதைகளை ஆங்கிலப்படுத்தி சொல்வேன். அவளும் ஒரு கவிஞர் என்பதால் ஆங்கிலக் கவிதைகளை அனுப்புவாள் (எங்கிருந்தாவது காப்பி அடிச்சிருப்பாளோ?) நம் மகாகவி பாரதி குறித்தெல்லாம் எழுதியிருக்கிறேன். அதில் "கவிதை எழுதுவதால் மட்டும் அவன் கவிஞன் ஆவதில்லை; அவன் எழுதிய கவிதைபோல் நடப்பவனே கவிஞன் " என பாரதியார் சொன்னதை அவளிட சொல்லியிருக்கிறேன். நானும் அதன்படிதான் நடக்கிறேனென்றும் சொன்னேன் என் கவிதைகளை ஒன்று ," இனம், மதம், மொழி, விழி ஆகியவற்றை கடந்து வருவதே காதல்" என்றும் சொல்லியிருந்தேன்.. இது பிரச்சனையாகும் என்றூ அப்பொழுதெல்லாம் எதிர்பார்க்கவேயில்லை

தமிழ்நாட்டு உணவு முறைகளை எப்படி செய்வது என்று மடல் அனுப்புவேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.. ஒருநாள் இருவரும் முகவரிகளை பரிமாறிக் கொண்டோம்.. அப்போது என்னிடம் அலைபேசி இல்லாததால் வீட்டு தொலைப்பேசி எண்ணை அவளுக்குக் கொடுத்தேன். அப்பொழுது இருவரும் பேசிக்கொள்ளவேண்டும் என்று எண்ணவில்லை (பேசினா ஓவரா உளறுவோம்... அதான் நான் முயற்சியே பண்ணலை)

கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட மின்மடல்களை அனுப்பினாள். ஒவ்வொன்றும் பெரிய பெரிய மடல்கள்.. பதில் எழுதுவதற்கே அரைமணிநேரம் ஆகிவிடும். திடீரென்று ஒருநாள் என்னை மணம் செய்யப்போவதாக ஒரு மடல் அனுப்பினாள்.. என் வீட்டாரின் அனுமதியோடு... எனக்குப் பெரிய அதிர்ச்சி என்றாலும் ஒரு பெண்ணின் மனதில் அதுவும் வெளிநாட்டுப் பெண்ணின் மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. என்றாலும் இதெல்லாம் விளையாட்டாக இருக்குமோ என்றும் எண்ணினேன். விளையாடுகிறாள் போலிருக்கிறது என்று எண்ணி, காதல் பற்றி எழுதாமல் எப்பொழுதும் போல மடல் அனுப்பினேன். அடுத்த மடலிலேயே, காதல் பற்றி கேட்டிருந்தேன் ஏன் பதில் அனுப்பவில்லை என்று எழுதினாள்.. தடாலடியாக, எனக்கும் உனக்கும் வயது பத்தாது; நீ வேற நாடு நானும் வேற நாடு ; மொழி மதம் என எல்லா வேறுபாடுகளையும் பட்டியலிட்டேன். அவள் உடனே நான் அனுப்பிய பாரதியார் தகவலையும், காதல் குறித்த வசனங்களையும் திருப்பி அனுப்பினாள். நான் அனுப்பியது எனக்கே ஆப்பு வைத்துவிட்டது!!!

அதன்பிறகு அவளுக்கு மடல் அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.. அப்பொழுதெல்லாம் வெளிநாட்டு வேலை, திருமணம் குறித்தெல்லாம் தேவையில்லாத அச்சம் எனக்குள் பரவியிருந்தது. அவள் தினமும் சலிக்காமல் மடல் அனுப்பினாள்..

திடீரென்று ஒருநாள்... வெள்ளிக்கிழமை எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு... நல்லவேளையாக வீட்டில் நான் தான் அழைப்பை எடுத்தேன்.. மறுமுனையில் நடாஷா....

எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!

மீதி அடுத்த பாகத்தில்..

சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை... :(

முத்தம்
அதிகம் விரும்பிய மாவீரன் யார்?

செங்கிஸ்கான்

Comments

\\எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!\\

உங்களுக்கு எப்படி இருந்ததோ தெரியலை

இப்படி ஸ்ஸபென்ஸ் வச்சா

எங்களுக்கு தான் ...
போன கேள்விக்கு இதுவே (என்) பதில்


நீ கொடுத்தத திருப்பி கொடுத்தா முத்தமா கொடு முத்தமா ...
ஆதவன்,
நல்ல கிளுகிளுப்பான அனுபவம்,
எனக்கும் ரஷ்யா னா... ஒரு உயர்ந்த மதிப்பு உண்டு.

ப்ளீஸ் உடனே அடுத்த பதிவ போடுங்க ...
இவ்வளவு சுவரஸ்யமா போய்கிட்டிருக்கிற விஷயத்த இப்படி நிப்பாட்டி காக்க வைக்கிறது எந்த விதத்தில் நியாயம் ?

பி கு : அடுந்தவங்க விஷயத்த, அதுவும் இந்தமாதிரி லவ் ஸ்டோரி னா ....மூக்கு ஏன் தான் இப்படி வேர்க்குதோ தெரியல ...
ஆஹா ஆரம்பிச்சிட்டேலா
ஒரு மார்க்கமாதான்யா அழஞ்சிருக்கீங்க‌
//பெரும்பாலும் எனக்கு அரட்டை அடிக்கும்பொழுது சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும், அவர்கள் ஆணா, பெண்ணா இல்லை பெண் வேஷமிட்ட ஆண்களா என்று சந்தேகத்துடந்தான் அரட்டை செய்வேன்.//

நிறைய ஏமாற்று நடக்கும், இதனாலேதான் அந்தப்பக்கமே தலவெச்சி படுக்குறது கிடையாது
//திடீரென்று ஒருநாள்... வெள்ளிக்கிழமை எனக்கு சென்னையிலிருந்து அழைப்பு... நல்லவேளையாக வீட்டில் நான் தான் அழைப்பை எடுத்தேன்.. மறுமுனையில் நடாஷா....

எப்படியிருக்கும் எனக்கு!!!!!!!

மீதி அடுத்த பாகத்தில்..
//

ஒஹ்ஹ் தொடரும் போட்டுடேலா...
சென்னை ஏர்போர்ட்லே பொட்டியோடு வந்திருக்கேன், வந்து கூட்டிட்டுபோங்கனு சொன்னாங்களா????
ஹேமா said…
ஆதவா,நீங்களே பாரதி கவிதையெல்லாம் குடுத்து மாட்டிக்கிட்டீங்களா!சில காதல் பதிவுகள் வரும்போது நான் நினைச்சிருக்கேன்.ஓ...இதுதான் காரணமோ.
ஹேமா said…
இதுக்குத்தான் சொல்லியிருக்கேன் கவின்,கமலோட
சேரவேணாம்...சேரவேணம்ன்னு.
விளையாட்டுப் பிள்ளைதான் நீங்கள்.
//முத்தம்
அதிகம் விரும்பிய மாவீரன் யார்?

செங்கிஸ்கான்//
அப்படியென்றால் அதிகம் முத்தம் கொடுப்பவர்கள் இருக்கும் நாடு பாகிஸ்தானா? கிர்கிஸ்தானா?
kuma36 said…
ஆஹா ஒரே ஜாலி முத்தம் காதலுனு பதிவு தொடருது... வாசித்து விட்டு வாரேன்.
kuma36 said…
என்ன ஆதவா மெகா சீரியல் மாதிரி சீன் சீரியஸா போகும் போது தொடரும் என போட்டுவிட்டிங்க...waiting
kuma36 said…
//முத்தம்
அதிகம் விரும்பிய மாவீரன் யார்?

செங்கிஸ்கான்//

:) :) :)
ஆதவா said…
ஹா... வாங்க ஜமால்... முதல் பின்னூட்டத்திற்கு நன்றீ!!!

சஸ்பென்ஸ் எதற்குன்னா... அப்பத்தான் எல்லாரரம் முடிய பிச்சிகிட்டு இருப்பாங்க...ஹி ஹி///
ஆதவா said…
நட்புடன் ஜமால் கூறியது...
போன கேள்விக்கு இதுவே (என்) பதில்
நீ கொடுத்தத திருப்பி கொடுத்தா முத்தமா கொடு முத்தமா .

ஜெஸீகா சொன்ன வார்த்தைகளா... ஹிஹ் இஹி.... அது என்னன்ன்னு எனக்கே தெரியாதுங்க.... ஜெஸிகாகிட்டத்தான் கேக்கணும்
ஆதவா said…
Ravee (இரவீ ) கூறியது...
ஆதவன்,
நல்ல கிளுகிளுப்பான அனுபவம்,
எனக்கும் ரஷ்யா னா... ஒரு உயர்ந்த மதிப்பு உண்டு.
ப்ளீஸ் உடனே அடுத்த பதிவ போடுங்க ...

ஹி ஹி... நன்றிங்க ரவீ!!! ரஷ்யா மேல எனக்கும் உயர்ந்த மதிப்பு உண்டு.... இந்த சம்பவத்தால் அந்த மதிப்புடன் காதலும் கலந்திடுச்சு.

அடுத்த பதிவு..... விரைவில்ல்//
ஆதவா said…
அபுஅஃப்ஸர் கூறியது...
ஆஹா ஆரம்பிச்சிட்டேலா
ஒரு மார்க்கமாதான்யா அழஞ்சிருக்கீங்க‌


ஹிஹிஹி... நாங்க எங்க அலைஞ்சோம்... அடுத்த பதிவு பாருங்க இன்னும் அதிர்ச்சியா இருக்கும்.
ஆதவா said…
Iyarkai கூறியது...
:-)))

:))))) நன்றிங்க இயற்கை..
ஆதவா said…
அபுஅஃப்ஸர் கூறியது...
சென்னை ஏர்போர்ட்லே பொட்டியோடு வந்திருக்கேன், வந்து கூட்டிட்டுபோங்கனு சொன்னாங்களா????


ஹி ஹி... கிட்டத்தட்ட அப்படித்தாங்க...
ஆதவா said…
ஹேமா கூறியது...
ஆதவா,நீங்களே பாரதி கவிதையெல்லாம் குடுத்து மாட்டிக்கிட்டீங்களா!சில காதல் பதிவுகள் வரும்போது நான் நினைச்சிருக்கேன்.ஓ...இதுதான் காரணமோ.

நிச்சயம் இது இல்லை...... ஆனா வேற காரணம் இருக்குங்க... அது மெல்ல மெல்ல சொல்கிறேன்...
ஆதவா said…
மாதவராஜ் கூறியது...
அப்படியென்றால் அதிகம் முத்தம் கொடுப்பவர்கள் இருக்கும் நாடு பாகிஸ்தானா? கிர்கிஸ்தானா?

ஹி ஹி ஹி.....
ஆதவா said…
கலை - இராகலை கூறியது...
என்ன ஆதவா மெகா சீரியல் மாதிரி சீன் சீரியஸா போகும் போது தொடரும் என போட்டுவிட்டிங்க...waiting

வெயிட் பண்ணுங்க..... வந்துட்டே இருக்கேன்.... நன்றிங்க கலை...
Suresh Kumar said…
அப்புறம் ..................?
VERY interesting.சீக்கிரம் முழுசையும் சொல்லுங்க.
எனக்கு ரஷ்யான்னாலே ரென் டிவி தான் ஞாபகம் வரும்
Anonymous said…
வலைபதிவு அறிமுகமாக முன்னம் எனக்கும் இதே கதிதான்... ம்ஹூம் இந்தளவுக்கு டீப்பா இறங்கலை??
Anonymous said…
அப்படி என்ன தாங்க சொன்னாங்க ரஸ்யாகாரி????
என்னை பத்தி ஏதாவது கேட்டாங்களா????
ஆதவா said…
அப்பறம் கேட்ட சுரேஷ்குமார்

முழுசையும் கேட்கும் முத்துவேல்

ரென் டிவி ஞாபக அத்திரி

கவினைப் பற்றி விசாரிக்கும் கவின்...

எல்லோருக்கும் நன்றி..

புது வருகையாளர்கள் சுரேஷ்குமாருக்கும் அத்திரிக்கும் சிறப்பு நன்றிகள்..
Anonymous said…
ரொம்ப ரொம்ப சுவராசியமான பதிவு. சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். மீண்டும் வருவேன் நண்பா.
காதல் கதைக்கு சஸ்பென்ஸா?
சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்
நல்ல சுவாரஸ்யமான பதிவு மிகவும் ரசித்துப் படித்தேன்...ஆதவன் இது உண்மையான அனுபவம் தானா...?
Suresh said…
அத்திரி கூறியது...//எனக்கு ரஷ்யான்னாலே ரென் டிவி தான் ஞாபகம் வரும்//

ha ha அத்திரி neengalum parthacha run tv :-) eppo varathu ellai enna seiya

//அப்பல்லாம் கொஞ்சம் ஜொள்ளந்தான்.. இப்ப மட்டும் வாழுதான்னு கவின் கேட்கிறார்.) அல்லாவிடில் முதல் கேள்வி Asl (Age, Sex, Location) //

correct he he

ASL nanum keta kalam aramba kalam asl avanga f nu sollati bye than

nanga poduvom nanga female nu soli pasanga ellam kalacha kalangal iruku athu ellam sirithu kalam :-)

//ஆங்கிலம் தற்குறி. தக்கி முக்கி பேசினாலும் யார் பேசுவதையும் நன்கு புரிந்து கொள்வேன்//

Nanga ellam english kathukitathe eppadi than

//திடீரென்று ஒருநாள் என்னை மணம் செய்யப்போவதாக ஒரு மடல் அனுப்பினாள்.. என் வீட்டாரின் அனுமதியோடு... எனக்குப் பெரிய அதிர்ச்சி //

pickup drop escape nu nenachiganala ha ha anga ellam nalla payan kedaika matangaranga athanga oruvannu oruthi principala solran ...

seri seri natasha phone pani yenna sonnanga nu solunga boss, mostly nammakku sorry ungaluku language theriyathu so oru periya comedy a nadanthu irukum, hmmmm seikiram agattum kolangal mathiri thaiyavu seithu oru varudam ithae story a thodarum potu post panlam nu mattum nenaikathinga solitan ama :-)
ஆதவா said…
ஆனந்த்.... மிக்க நன்றி நண்பா..

நசரேயன்... எங்கே ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்... இன்றைக்கே தரலாமா இல்லை, நாளைக்குத் த்ரலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

புதியவன்... இது முற்றிலும் உண்மையான, வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்... புகைப்படத்தில் இருப்பவளும் நடாஷா தான்..
ஆதவா said…
ஹாஹா.. வாங்க சுரேஷ்... நம்ம வட்டத்திற்குள் வந்துட்டீங்க (ஜொள்ளர்கள் சங்கம்)

நிச்சயமா ஓட்டமாட்டேன்... அப்படி இழுக்கிற அளவுக்கு விஷயங்கள் இல்லை. அடுத்த பாகத்திலேயே முடிஞ்சிடும்.
மிக்க நன்றி சுரேஷ்
ஆதவா.. பதிவு முக்கியமான இடத்துல நிக்குது.. சீக்கிரமா அடுத்த பாகத்த வெளியிடுங்க..
விறுவிறுப்பா போயிகிட்டிருக்கும்போது, சடாரென்று பிரேக் போட்ட பேருந்துபோலாகிவிட்டது... அப்புறம் ... அப்புறம் எப்ப அடுத்த பதிவு? (என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்கத்தான்...) அட... இதுகூட புது டெக்னீக்கா இருக்கே!)
படு இண்ட்ரஸ்டிங்..

அப்புறம் என்னாச்சி !!!!!!!! சீக்கிரம் போடுங்க தலைவா !!!!!
ஆதவா said…
கார்த்திகைப் பாண்டியன்
அன்புமணி
செய்யது......

மூவருக்கும்... நன்றி.... அடுத்த பதிவு சீக்கிரமே போட்டுடுவேன்!!!! அதுவரைக்கும்..... வெய்ட் அண்ட் சீ!!
kuma36 said…
ஆமா கேக்க மறந்துட்டேன் அந்த படத்தில் உள்ளது தான் அந்த ரஷ்யகாரியா?
Anonymous said…
அப்புறம் என்னாச்சு! சீக்கிரம் சொல்லுங்கப்பு! ஆவல கிளப்பி வுட்டுட்டு :)
ராம்.CM said…
நல்ல ஸான்ஸ்சு! என்னாச்சு.. தெரியலையே... என்ன தொடரும் கேட்கு... உடனடியாக பதிவை போடவும். சொல்லிபுட்டேன்...
ராம்.CM said…
நல்ல ஸான்ஸ்சு! என்னாச்சு.. தெரியலையே... என்ன தொடரும் கேட்கு...
உடனடியாக பதிவை போடவும்.


சொல்லிபுட்டேன்...
Rajeswari said…
// மறுமுனையில் நடாஷா....

எப்படியிருக்கும் எனக்கு!!!!!//

என்ன ஆச்சு ? ஓடுகிறேன் இரண்டாம் பதிவிற்கு ..
யோ என்னய்யா நடக்குது?

நான் கொஞ்சக் காலம் இந்தப் பக்கம் இல்லை என்றதும் ரஷ்யா வரைக்கும் போயிட்டீங்கள்?
ம்..நடக்கட்டும் நடக்கட்டும்
பாவம் பாரதி/?

இப்ப அழுதிருப்பார்??

Popular Posts