முத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..


முத்தம்..... குழந்தைகளிடமிருந்து தொடங்கி, முதியவர் வரை, முத்தத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு!!!! தம்பதிகள் முத்தமிடும் பொழுது தன் 

ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.... எத்தனை சக்தி அதற்கு!!!!!

முத்தங்களில் பலவகை உண்டு.. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஒரே நோக்கம்... அன்பு... 

அதனால..... முத்தம் கொடுங்க.....  

கல்யாணம் ஆனவங்க மனைவிக்கும், குழந்தை பெத்துகிட்டவங்க குழந்தைக்கும்... பொதுவா எல்லோரும் முதியவர்களுக்கும்.....

இது என் பதினைந்தாவது வயதில் நான் எழுதிய கவிதை :

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.


இப்போ.... சுடச்சுட....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான் 
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான 
இளஞ்சூட்டு முத்தத்தில்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ நாணத்தை 
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

: கையிலிட்ட முத்தம் :

ஒரு சர்ப்பம் போல் மெல்ல 
விரல் படர்ந்து

செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து

நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்

இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்

உன்
உதட்டு வேர்களில் முளைத்த
முத்தக் கனிகள்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இப்போ எல்லோருக்கும் ஒரு கேள்வி,.

முத்தம் விரும்பிய மாவீரன் யார்?

Comments

Anonymous said…
நாந்தான் முதல் ஊக்கியா??
Anbu said…
நான் இரண்டாவது!!
Anbu said…
படித்துவிட்டு வருகிறேன் அண்ணா
Anbu said…
15 வயசிலே ஆரம்பிச்சிட்டீங்க போல
Anonymous said…
கல்யாணம் ஆனவங்க மனைவிக்கும், குழந்தை பெத்துகிட்டவங்க குழந்தைக்கும்... பொதுவா எல்லோரும் முதியவர்களுக்கும்.....
///////////
சரிங்க பிரதர்....
Anbu said…
\\கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.\\


வெடிக்கட்டும்
வெடிக்கட்டும்
Anbu said…
அனைத்தும் நன்றாக இருந்தது அண்ணா!!
Anonymous said…
கலக்கல் கவிதைகள்
Anonymous said…
முத்தம் கவிதைகள் எல்லாமே சொக்கவைக்குது....

அதிக அனுபவமோ?! :)

நான் ப்ளாகில் இதுவரை இடாத கவிதையிது ஆதவா...

நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டுக்கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்ற....
எனைப்பார்த்து,

புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன அவை
நாளிதழ்கள் தானே!!!
//முத்தங்களில் பலவகை உண்டு.. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஒரே நோக்கம்... அன்பு... //

உண்மைதான்.

கேள்வி கேக்கறது சுலபம்.பதில் சொல்வது கடினம்.
மொ(மு)த்ததில் அருமையான பதிவு.
வந்தேன்...
படிச்சுட்டு மீதி...
ஆதவா said…
முதல் முத்தம் கொடுத்த கவினுக்கும் அடுத்த முத்தம் கொடுத்த அன்புவுக்கு...

அன்பு முத்தங்கள்!!!!!
ஆதவா,
இப்போ எப்பிடியோ, அப்பிடி தான் 15 வயசிலயும்...
ச்சீ ச்சீ...
15 வயசில எப்பிடியோ, அப்பிடி தான் இப்போவும்...
:-)
ஒவ்வொன்றும் சூப்பர்...
உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி//

இதுக்கு ஒரு சபாஷ்...
ஆதவா said…
Anbu கூறியது...
15 வயசிலே ஆரம்பிச்சிட்டீங்க போல

ஹிஹி நமக்கு வேற வேல.....
மொத்தக் கவிதைகளுக்குமா சேர்த்து ஒரு "ஓ"ப் போடுறேன்...
இன்னொரு விசயம்...
என்னோட பதிவு ஒன்று யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ்ல வந்துள்ளது...
முடிந்தால் பாருங்கள்...
ஆதவா said…
ஷீ!!!! இந்த கவிதையை உங்கள் ப்ளாக்கில் கொடுக்க என் அன்பு வேண்டுகோள்... (எனக்கு போனில் சொன்ன அதே கவிதைதானே!!!!) கலக்கல்...
முத்தத்துக்கு இவ்வளவு அர்த்தம் இருக்குன்னு இன்னைக்குதான் தெரியும்
பதின்பருவ பதியன்கள் அருமையா பூத்து இருக்கு

முத்தம் சத்தம் பித்தம் தம் ததம் த்ம் த்தம் யுத்தம் விரும்பிய மாவீரன் யார்
ஆதவா said…
வேத்தியன் கூறியது...
வந்தேன்...
படிச்சுட்டு மீதி...


வாங்க......
ஆதவா said…
வேத்தியன் கூறியது...
ஆதவா,
இப்போ எப்பிடியோ, அப்பிடி தான் 15 வயசிலயும்...
ச்சீ ச்சீ...
15 வயசில எப்பிடியோ, அப்பிடி தான் இப்போவும்...
:-)


இப்படித்தாங்க எப்பவும்....
ஆதவா said…
வேத்தியன் கூறியது...
இன்னொரு விசயம்...
என்னோட பதிவு ஒன்று யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸ்ல வந்துள்ளது...
முடிந்தால் பாருங்கள்...



பார்க்கிறேன் வேத்தியரே!!!! நிச்சயம் தவறவிடமாட்டேன்....
ஆதவா said…
நன்றி நசரேயன்...

நன்றி யாத்ரா... அந்த மாவீரன் யாரென்று நீங்கதான் கண்டுபிடியுங்களேன்....
ஜில் பதிவா இது

ஜொள் பதிவு
ஆதவா said…
சொல்லரசன் கூறியது...
கேள்வி கேக்கறது சுலபம்.பதில் சொல்வது கடினம்.
மொ(மு)த்ததில் அருமையான பதிவு.


நன்றி சொல்லரசன்......
kuma36 said…
முத்தம் கொடுங்க என்ற தலைப்பை பார்த்ததுமே ஓடி வந்தேன். ஆனால் ஆனால் முத்தம் குடுக்க குடுக்க தான் தான் யாருமே யாருமே?????
kuma36 said…
//நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.//

ஆஹா ஹா ஆகட்டும் ஆகட்டும்
kuma36 said…
//கல்யாணம் ஆனவங்க மனைவிக்கும், குழந்தை பெத்துகிட்டவங்க குழந்தைக்கும்...//

அப்ப குழந்தை பெத்துக்கிட்ட பிறகு மனைவிக்கு..??

அய்யோ நான் இன்னும் கல்யாணமெல்லாம் ஆகலிங்கோ
ஆதவா said…
வாங்க கலை.... முத்தக் குளியலில் நனைந்தமைக்கு நன்றீ!!!!

கல்யாணம் ஆகலையா... என்னங்க சொல்றீங்க ஏங்க.... சீக்கிரமே ப்ராப்தி ரப்து!!
தலைவா..

அப்பவே வா !!!!!

நீங்கள் ஒரு பிராடிஜி என்று நினைக்கிறேன்...வேறொன்றும் சொல்வதற்கில்லை.
//கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.
//

வார்த்தைகளிலே உணர்வுகளை கொட்டுகிறீர்கள்.
//நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.//

உங்க டச்....நச்......
"ஒரு சர்ப்பம் போல் மெல்ல
விரல் படர்ந்து

செறிவில்லா
கைக் காடுகளில்
கால் புதைத்து

நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்"

சுவைத்து எழுதியது போல நன்றாக வந்திருக்கின்றன வரிகள்.
முத்தங்களை பிரிச்சி மேஞ்சிருக்கீங்க

அதுவும் 15 வயசிலேயேவா!

கொடுத்து வச்சவங்கன்னு இதத்தான் சொல்றாங்களோ ...
ஹேமா said…
//கவின் கூறியது...
கல்யாணம் ஆனவங்க மனைவிக்கும், குழந்தை பெத்துகிட்டவங்க குழந்தைக்கும்... பொதுவா எல்லோரும் முதியவர்களுக்கும்.....
///////////
சரிங்க பிரதர்....//

ஆதவா, பாருங்க...என்னமா தம்பி சொல்லுப் பேச்சுக் கேக்கிறான்.
ஹேமா said…
இரவு முத்தத்தின்
சத்தத்தோடேயே
இருளுதலும் விடிதலுமாய்.
மேல் எழும்பிய வெப்பமே
முகில் முத்தமிட
காலைப் பனியாய்.
ஆதவன்...தளம் முழுதும் முத்தத்தின் ஈரத்தில் நனைந்திருக்கிறது...

//முத்தங்களில் பலவகை உண்டு.. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஒரே நோக்கம்... அன்பு...//

அன்பை வெளிப்படுத்த முத்தத்தை விட ஒரு சிறந்த பரிசு இல்லை தான்...
//இது என் பதினைந்தாவது வயதில் நான் எழுதிய கவிதை :

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.
//

நானெழுத்துக் கவிதை...?
//நீ நாணத்தை
நழுவிக் கொண்டே போகிறாய்
முத்தங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
//

மிகவும் ரசித்தேன்...
//நீண்ட பெருவான வீதியில்
தெறித்து விழும் விண்கல் போல்

இதயம் முளைத்த இடத்தில்
சிதறிக் கிடக்கும்//

இந்த வரிகள் மிக அழகு...
/உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி/

ஆதவா.. எல்லாக் கவிதையுமே அருமை.. முத்தம்.. காதலி தரும் முத்தம்.. நமக்கு என்னைக்கு அதுக்கு ப்ராப்தம் கொடுத்து வச்சிருக்கோ.. ஹ்ம்ம்..
//முத்தம் விரும்பிய மாவீரன் யார்?//

வர வர ரொம்ப கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. யாருப்பா அது?
இன்னும் ஜெசிக்கா என்ன சொன்னான்னே நீங்க சொல்லல.. இன்னைக்கு உங்கள கண்டிப்பாக அலைபேசியில பிடிச்சே ஆகணும்..
//இது என் பதினைந்தாவது வயதில் நான் எழுதிய கவிதை :

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.//

பதினைந்திலேயேவா..... பிஞ்சிலயே பழுத்ததுன்னு சொல்வாங்களே அது நீ்ஙகதானா?
//நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.//

எத்தனை முறை?
//இப்போ எல்லோருக்கும் ஒரு கேள்வி,.

முத்தம் விரும்பிய மாவீரன் யார்?//

யார்?
//நட்புடன் ஜமால் கூறியது...
ஜில் பதிவா இது

ஜொள் பதிவு//

இதுதான் சரி!
இதழ்களைப் பிரிக்க
அவசரப்படுகின்றன நொடிகள்
அவைகளுக்குத் தெரியப்போவதில்லை
பரிமாற்றத்தின் தடைபாடுகள்//

அப்பாடா...பதினைந்தாவது வயதிலேயே என்ன அனுபவ முதிர்வு???
நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.//

அது சரி பதினைஞ்சு வயசிலை சொல்லிக் குடுத்தால் எப்பிடித்தான் புரியுமோ????
ஆதவா...கவிதையில் அனுபவ முதிர்வு தெரிகிறது...
சிறு வயதிலேயே கவிஞனுக்கு எதனைப் பாடுவதற்கும் எல்லை இல்லை என்பதற்கு இந்தக் கவிதை நல்ல ஓர் எடுத்துக் காட்டு...
ஆதவா said…
அ.மு.செய்யது கூறியது...
தலைவா..
அப்பவே வா !!!!!

ஹி ஹிஹி.... எல்லாம் கவிதையா போச்சுது!!! வாய்ப்பே கிடைக்கல..  அப்பவே மெய்நிகர் போலி முத்தம் அதாங்க.. விர்சுவல் முத்தம் கிடைக்குமான்னு யோசிச்சிட்டு இருப்பன்...
ஆதவா said…
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
சுவைத்து எழுதியது போல நன்றாக வந்திருக்கின்றன வரிகள்.

அய்யய்யோ... சுவைக்கவெல்லாம் இல்லீங்க.... நன்றிங்க டாக்டர்....

நட்புடன் ஜமால் கூறியது...
முத்தங்களை பிரிச்சி மேஞ்சிருக்கீங்க
அதுவும் 15 வயசிலேயேவா!
கொடுத்து வச்சவங்கன்னு இதத்தான் சொல்றாங்களோ ...

ஹி ஹி..... நன்றிங்க ஜமால்...  இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.. வேலை ஜாஸ்தியா இருக்கு.... எழுத வாய்ப்பு கிடைக்கல..
ஆதவா said…
ஹேமா கூறியது...
இரவு முத்தத்தின்
சத்தத்தோடேயே
இருளுதலும் விடிதலுமாய்.
மேல் எழும்பிய வெப்பமே
முகில் முத்தமிட
காலைப் பனியாய்.


நன்றிங்க சகோதரி.. இதுவே ஒரு கவிதையாக இருக்கிறதே!!!!
ஆதவா said…
புதியவன் கூறியது...
ஆதவன்...தளம் முழுதும் முத்தத்தின் ஈரத்தில் நனைந்திருக்கிறது...
அன்பை வெளிப்படுத்த முத்தத்தை விட ஒரு சிறந்த பரிசு இல்லை தான்...

மிக்க நன்றி புதியவன்... முத்தங்கள் அன்புக்காக மட்டுமல்ல, அமைதிக்காவும் பகிரப்படுகிறது!!!! நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்தது சகோதர முத்தம்.. நட்பு முத்தம்...
ஆதவா said…
கார்த்திகைப் பாண்டியன் கூறியது...

ஆதவா.. எல்லாக் கவிதையுமே அருமை.. முத்தம்.. காதலி தரும் முத்தம்.. நமக்கு என்னைக்கு அதுக்கு ப்ராப்தம் கொடுத்து வச்சிருக்கோ.. ஹ்ம்ம்..

அப்ப நீங்களும் நம்மள மாதிரிதானா.....ஹி ஹி.... நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்...
ஆதவா said…
வர வர ரொம்ப கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. யாருப்பா அது?
இன்னும் ஜெசிக்கா என்ன சொன்னான்னே நீங்க சொல்லல.. இன்னைக்கு உங்கள கண்டிப்பாக அலைபேசியில பிடிச்சே ஆகணும்..


எல்லாமே நீங்க கெஸ் பண்றதுக்காக சொல்றதுதான்.. கூப்பிடுங்க கூப்பிடுங்க.... நான் இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீ.....
ஆதவா said…
அன்புமணி கூறியது...

பதினைந்திலேயேவா..... பிஞ்சிலயே பழுத்ததுன்னு சொல்வாங்களே அது நீ்ஙகதானா?

இதென்னங்க பிரமாதம்... இன்னும் பல சரக்கு உண்டு!!! அதிர்ந்திடுவீங்க....நன்றி அன்பு!!
ஆதவா said…
கமல் கூறியது...
ஆதவா...கவிதையில் அனுபவ முதிர்வு தெரிகிறது...
சிறு வயதிலேயே கவிஞனுக்கு எதனைப் பாடுவதற்கும் எல்லை இல்லை என்பதற்கு இந்தக் கவிதை நல்ல ஓர் எடுத்துக் காட்டு...


மிக்க நன்றி கமல்.... இணையம் இல்லாவிடில் கவிதை எழுதுவதையே நிறுத்தியிருப்பேன்... வரப்பிரசாதம் எனக்கு!!!!!

அன்பு..... அந்த முத்த விரும்பி வீரன் யார்னு கண்டுபிடியுங்கோ!!!!! பதில் அடுத்த பதிவில்...
சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.///

கவிதை கலக்கல்!!
ஆதவா said…
வாங்க தேவன் சார்... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.... நலமா?

நன்றி சார்....
ராம்.CM said…
நீ ஒரு முட்டாளடி..
உனக்கு எத்தனை முறைதான்
சொல்லித்தருவது
முத்தமிடுவது எப்படி என்று.


அருமையாக உள்ளது! அது உண்மைதான்.......
இவ்வளவு சத்தமாகவா முத்தம்!

ஜாலியாக இருந்தது.
//இது என் பதினைந்தாவது வயதில் நான் எழுதிய கவிதை :

சத்தமொன்று மில்லாமல்
நித்தம் நின்றன் நாவிலே
நானெழுதும் கவிதை
முத்தம்.
/

15 வயசுலேயா? டீன் ஏஜ் குசும்பு
//உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி
//

நச் இச் வரிகள் ஆதவா
//என் உதட்டு எச்சில்
மொத்தமும் காய்ந்துவிடுகின்றன
உன் வெதுவெதுப்பான
இளஞ்சூட்டு முத்தத்தில்...
//

தல உடம்புக்குள் ஒரு இது.... இந்த வரிகளை படிக்கும்போது, கலக்கல்
//கண்கள் மின்னுகின்றன
வாய் இடி இடிக்கிறது
முகம் கறுக்கிறது
அய்யகோ,
முத்தமழை வெடிக்கப்போகிறது!.//

பார்த்து புயல் சின்னம் அறிவிச்சிடப்போறீங்க‌
எப்பவும்போல...
முத்தத்தை இச் இச் இச் இச் இச்சாக வர்ணிச்சி......?

என்னத்தை சொல்றது ம்ம்ஹூம்
ஆதவா said…
ராம், மாதவராஜ், அபு ஆகிய அனைவருக்கும் என் நன்றி!!!!
Anonymous said…
நீங்கள் 15-வது வயதிலேயே எழுதிய கவிதை, நன்றாக இருந்தது..

நிஜமாவே 15-வது வயதிலேயே எழுதியதா?? :-))

- பழூர் கார்த்தி
தமிழ் said…
அருமையான கவிதைகள்
நண்பரே

வாழ்த்துகள்
ஆதவா said…
பழூர் கார்த்தி, திகழ்.... இருவருக்கும் நன்றீ!!!

கார்த்தி... உண்மைதாங்க.....
Arasi Raj said…
உதடுகள் வேர்க்குமாம்
கைக்குட்டை என் நாக்கு
துடைத்துக் கொள்ளடி
-----------

அருமை அருமை அருமை

Popular Posts