முகவரி

இதழ் திறந்த சிசுவொன்று
இனம் தெரியாமல் சிரிக்கையில்
தொலைந்து போன புன்னகை
தேடி வந்தது

புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.

பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.

உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.

இவ்வாறு
ஒவ்வொன்றுமாய் தேடி வருகையில்
முகவரி தொலைத்திடாமல்
காத்துக் கொண்டிருந்தது
அகன்று விரிந்த என் மனம்.

சமர்ப்பணம் : முகவரி தொலைந்து போனவர்களுக்கும், முகவரி தொலைக்கப்பட்டவர்களும், முகவரி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...

Comments

\\இதழ் திறந்த சிசுவொன்று\\

துவக்கமே ...
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்\\

மிகவும் இரசித்தேன் ...
முகவரி தொலைத்திடாமல்
காத்துக் கொண்டிருந்தது
அகன்று விரிந்த என் மனம்.\\

நல்ல வரிகள்

அன்பு சொல்லிடும் வரிகள்....
வழக்கம் போல் கவிதை அருமை ஆதவா...
கலக்கல்...
புது இடுகை ஒன்று போட்டுள்ளேன்...
வருகை தரவும்...
சமர்ப்பணம் : முகவரி தொலைந்து போனவர்களுக்கும், முகவரி தொலைக்கப்பட்டவர்களும், முகவரி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...

இதுவும் அழகு

ஆதவா!
உங்கள் கவிதையை நீங்கள் சமர்ப்பண செய்த விதத்தில், சப்பணக்கால் போட்டு அமர்ந்துவி்ட்டது மனசு...
உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.//

கவிதை சந்தம் கலந்து தொடர்கிறது....
////பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.//

மேலோட்டமாக பார்க்கும் போது மற்றவர்களுக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்று தெரியாது.

எனக்கு இது மிகவும் நெருக்கமான வார்த்தைகளாக தெரிகிறது.
//உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.
//

உங்கள் கவிதை வரிகளுக்குள்ளே எந்த வரி சிறந்த வரி..என்று வார்த்தைகள் போட்டி போடுகின்றன.
//சமர்ப்பணம் : முகவரி தொலைந்து போனவர்களுக்கும், முகவரி தொலைக்கப்பட்டவர்களும், முகவரி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...//

தரமான சமர்ப்பணம் தான்...கவிதையின் மதிப்பு கூடியிருக்கிறது.
கவிதையின் உள்ளுணர்வு,ஓசை நயம்,கையாண்டிருக்கும் விதம் என்னை
வியக்க வைக்கிறது...

வாழ்த்துக்கள் ஆதவன்...கிளாஸ்...
//புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.//
இந்த வரிகை எனக்கு மிகவும் பிடித்தன நண்பா.. அருமையான கவிதை.. சமர்ப்பணமும் அம்சம்.. வாழ்த்துக்கள்..
\\பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.\\

ஒரு வாசல் மூடப்பட்ட இருள் மறுவாசல்கள் திறக்கப்படுவதின் வெளிச்சம், செம்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது
//உணர்வின் எச்சம் ஒழுகியபோது
பந்தமில்லா பறவைகள்
தொலைந்து போன கவிதையைத்
தேடித் தந்தார்கள்.//

அருமையான வரிகள் ஆதவன்...உங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வித்தியாசம் காணமுடிகிறது...
நன்றாக உள்ளது
ஹேமா said…
முகவரி தொலைத்தவர்களில் ஈழத்தவர்கள் நாங்களும் அடங்குவோம்.ஆதவா,எப்பவும்போலவே கவிதை-ரசனை அசத்தல்.
//பிரிவின் அர்த்தம் விளங்கும் காலத்தில்
பிரிவொன்று சந்தித்திருக்கையில்
முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்.//

நெகிழசெய்த வரிகள்.
கடலில் தத்தளிப்பவனுக்கு சிறு மரக்கட்டை கிடைப்பது போல.
kuma36 said…
//சமர்ப்பணம் : முகவரி தொலைந்து போனவர்களுக்கும், முகவரி தொலைக்கப்பட்டவர்களும், முகவரி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...//

தரமான சமர்ப்பணம் தான்...கவிதையின் மதிப்பு கூடியிருக்கிறது.

மறுபடியும்
நல்லாயிருக்குது.கனத்தோடு பதிவாகிறது.
Anbu said…
\\\புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.\\

மிக அழகிய வரிகள் அண்ணா..நல்ல கவிதை
அமுதா said…
ஆதவா!!
ஒவ்வொன்றும் அருமையான வரி.
மிக அருமை/. வாழ்த்துக்கள்
அமுதா said…
வேலை காரணமாக நிறைய மிஸ் செய்து விட்டேன் என்று எண்ணுகிறேன். முடியும் பொழுது மற்றவைகளை நிதானமாகப் படிக்கிறேன்.
ஆதவா said…
நண்பர்களே... பணிப்பளு அதிகம் இருப்பதால் யாவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல முடியவில்லை... மன்னிக்கவும்...

என்றும் என் பதிவு விரும்பும்

நட்புடன் ஜமால்
வேத்தியன்
அன்புமணி
கமல்
அ.மு.செய்யது
கார்த்திகப் பாண்டியன்
யாத்ரா (முதல் வருகைக்கு நன்றி )
புதியவன்
ஆ.ஞானசேகரன் (முதல் வருகைக்கு நன்றி)
ஹேமா
சொல்லரசன்
கலை-இராகலை
ச.முத்துவேல் (முதல் வருகைக்கு நன்றி)
அன்பு
அமுதா

ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி நவில்கிறேன்...
//இதழ் திறந்த சிசுவொன்று
இனம் தெரியாமல் சிரிக்கையில்
தொலைந்து போன புன்னகை
தேடி வந்தது//

குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் கண்ணதாசன்

மழலையின் மொழிதான் சிரிப்பு
//புற அழகு ரசித்திருக்கையில்
மொழி தெரியாத கடலலை
பிணமான மீனைத் தள்ள,
தொலைந்து போன வலி
தேடி வந்தது.
//

இயற்கையா நடப்பதைக்கூட வலியாக கருதும் வரிகள்
மீண்டும் அற்புதமான வரிகளில் உங்கள் கவிதை

ரொம்ப அருமை ஆதவா

வாழ்த்துக்கள்
ரெம்ப நல்லா இருக்கு, நானும் முகவரியை தொலைச்சி பிட்டேன்(D.V.D)
ஹேமா said…
ஆதவா,உப்புமடச் சந்திக்கு வாங்கோ.
//முத்தமிட்ட குழந்தை
தொலைந்து போன பாசத்தைத்
தேடித் தந்தாள்//

அருமை!
Anonymous said…
உனக்கு முகவரி தந்த கவிதை, நல்ல வார்தை பிரயோகம்//