பிடித்த பதிவுகள் - மார்ச் 2009

வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.

சரி, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு காரியம் செய்யலாமே என்று இதைச் செய்கிறேன். மார்ச் மாதத்தில் எனக்குப் பிடித்த பதிவுகள் எவை எவை என்று பட்டியலிடப்போகிறேன்... இது சிறந்த பதிவுகள் பற்றியதல்ல. எனக்கு மட்டும் பிடித்த பதிவுகள். நான் யாரையெல்லாம் பின் தொடருகிறேனோ அவர்களின் பதிவுகளை மட்டும் சேகரிக்கிறேன். பதிவு கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுத்துப் படித்துக் கொள்ளவும்!!

ஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்!!!! சரி... பட்டியலுக்குப் போவோம்..

மார்ச் 1 முதல் மார்ச்

பிடித்த கவிதைகள்




  1. நட்புடன் ஜமாலின் கருப்பு சூரியன்.. கருப்பான பெண்ணைக் காதலிக்கும் காதலன் தன் காதலியை உயர்வாக எண்ணும் இக்கவிதை சுருக்கமாக அதேசமயம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. தாழ்வுணர்ச்சி கொண்டவர்களுக்கு இக்கவிதை ஒரு ஆறுதல்.

  2. நான்கு பதிவுகளை மட்டுமே கொடுத்திருக்கிறார் புதியவன். நான்கும் கவிதையாக... ஒவ்வொன்றும் பிரமாதமாக வடிக்கிறார்.
    எனக்கானதொரு தேவதை சொற்களை வைத்துக் கடையப்பட்ட பயிறு. மிக நேர்த்தியான தேடல். தேவதைகளுக்கென கனவுலகம் செல்லும் கவிஞனின் யாத்திரை. நீ இல்லாத பொழுதுகளை வெறுமையாக நிரப்பாமல் காதலையே நிரப்புகிறார் கவிஞர். சற்று வித்தியாசமான சிந்தனை.

  3. சிக்கல், வாழ்வியல் நிகழ்வுகளைப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கும் கவிதை. அநாயசமாக கவிதையை எடுத்துச் செல்லுகிறார் அகநாழிகை

  4. குறைந்த பதிவுகளே நிறைந்த பதிவுகளாக எழுதி வரும் அபுஅஃப்ஸரின் உன் வெற்றிடம், வெறுமையைப் போக்குவது குறித்த மனோதத்துவக் கவிதை.

  5. இரு கவிதைகளை மட்டுமே ரிஷான் மார்ச்சில் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ஆட்சிகள் உனதாக கவிதை அழகாக இருக்கிறது. அங்கங்களை வர்ணித்தது போதும் சக மனிதராக பெண்ணைப் பாருங்கள் என்கிறார்.

  6. குடந்தை அன்புமணி கவிதை எழுதுவார் என்பதே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் தெரியும். குறும்பாக்கள் சில எழுதியிருக்கிறார். அருமையான குறுங்கவிதைகள்... குறும்பாக்கள் 2

  7. காதல், திருமணம் குறித்த கவினது கவிதை செறிவான சொற்களை வைத்து கட்டப்பட்ட பூமாலை!

  8. மருத்துவரின் பதிவுகள் பல பயனுள்ளவை. பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தேநீர் கவிதைகள் ரொம்ப சுவாரசியமான காதல் கவிதைகள்..

  9. விட்டு விடுதலையாகாமல்... கவிதை மாதவராஜின் சிறந்த கவிதைக்குச் சான்று.

  10. சித்தி கவிதையில் நம் உணர்வுகளைக் கிளறுகிறார் ச.முத்துவேல். இவர் கவனிக்கப்படவேண்டிய எழுத்தாளர்

  11. அன்பெழும் பொழுதில் அழகான காதல் கவிதை... கணவன் மனைவி உறவை மிக அருமையாக முடிக்கிறார் ஆ.முத்துராமலிங்கம். இவரது கனவுகளை வெளியெறிதலும் அருமையான கவிதை. கவனிக்கப்படவேண்டிய கவிஞர்.

  12. கடையம் ஆனந்தின் நீயும் குழந்தை நானும் எனும் கவிதை யதார்த்தமான கவிதை.

  13. நண்பர் ஆதியின் கவிதைகள் தரமானவை. மழைக்காலத்தில் அவர் புலம்பிய புலம்பல்கள் நல்ல சொற்கட்டுகளால் வைத்து தைக்கப்பட்ட மரபிலக்கியம்.

  14. அ.மு.செய்யது பதிவு எழுதுவதைக் காட்டிலும் அதிக ஊக்கங்களைத்தான் எழுதுகிறார். அவரது கண்டினியுட்டி இல்லா கவிதை...... அருமையான கவிதை. நல்ல சொல்வீச்சு. நிறைய எழுதுங்கள் அ.மு.செய்யது.....

  15. யாத்ராவின் அனைத்து கவிதைகளும் பிரமாதமானவை.. இருந்தாலும் பிடித்த பலவற்றுள் ஒன்றைத்தருகிறேன். எதுவும் நிகழவில்லையென

  16. ஆதங்கத்தோடு மடிசுமந்த மரணம் என்று கவிதை எழுதியிருக்கிறார் ரீனா இக்கவிதையின் முடிவு ஒருவகையில் சிந்திக்கவும் தோணுகிறது. நிறைய எழுதுங்க ரீனா.

  17. புதுமையான சொல்வீச்சோடு கவிதைகள் எழுதுவதில் ஹேமாவை (பாட்டி?) அடித்துக் கொள்ள யாருமில்லை. அவரது கவிதைகள் எல்லாமே நல்ல சொல்வளத்தோடு இருக்கும். சிவப்பு விளக்குப் பெண்ணான 'அவளை' குறித்து எழுதியிருக்கும் இக்கவிதை டாப்; மற்றொன்று ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்... மிதமான ஆவேசக் கவி..

  18. கண்ணாடி இதயம் என்று தலைப்பே வித்தியாசமாக எழுதியிருக்கும் வேத்தியனுக்கு இக்கவிதை முதல் கவிதையாம்....

  19. ஷீ-நிசியின் கவிதைகளை ஒரு வட்டத்திற்குள் அடக்கமுடியாது. அவரது அப்பா கவிதையும் போர்க்களமா வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க கவிதைகள்.. இந்த மார்ச் மாதத்தில்

பிடித்த அலசல்கள்



  1. அகநாழிகையின் பகவான் ஸ்ரி கிருஷ்ணரையும், தேவர் ஸ்ரி ஏசுபிரானையும் சம்பந்தப்படுத்தி அவர்களின் ஒற்றுமையை அலசும் அருமையான பதிவு ஏசுநாதரும் வாசுதேவனும்.

  2. ஆ.ஞானசேகரன் எழுதும் பதிவுகளெல்லாம் எளியமுறையிலான அலசல்கள்.. எல்லா பதிவுகளும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இவரது சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?எனும் பதிவு ஒரு எடுத்துக்காட்டுமொழிப்பற்றைக் குறித்த சிறந்த கட்டுரை. அவரவர் மொழியில் பேசி.. படித்துப் பாருங்கள்.

  3. அத்திரியின் தேர்தல் அலசலான தேர்தல் லவ்வுகளும் ,மேரேஜ்களும், டைவர்ஸ்களும்... கட்சி தாவும் அரசியல்வாதிகளின் முகத்தில் அறையும் பதிவு

  4. எனக்கு புள்ளிவிபரங்கள் எப்பொழுதுமே பிடித்தமானது. சொல்லரசனின் இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில் பதிவு நன்கு அலசி எடுத்த புதுப்பணம் போன்றது.. கருப்பு பணம் கொண்டவர்கள் இப்பதிவை படிக்கவேண்டாம்.

  5. ஈழப்பதிவுகளை நல்ல அலசல்களோடு அள்ளித்தரும் கமலின் பதிவுகள் எதை எடுப்பது எதை விடுப்பது... புலிகள் அழிந்து விட்டார்களாம் எனும் இவரது அலசல் பதிவு அருமையானது!


பிடித்த சிறுகதைகள்



  1. யமுனாவின் மனநோய் சிறந்த எழுத்துக்களால் உருவான உணர்வுள்ள சிறுகதை. யமுனாவின் மனநோய்க்கு அவரது கணவரே மருந்தாக வரும் இப்படைப்பு அகநாழிகையின் கைவண்ணத்தில்...

  2. மருமகள் சம்பாத்தியம் பற்றிய குடும்பநல பதிவு கொடுத்து சூடான இடுகையில் இடம்பெற்றார் நசரேயன். நல்ல நடையில்
    எழுதப்பட்ட சிறுகதை

  3. இன்றைய வலைப்பதிவர் சூழ்நிலை அல்லது இணைய உலாவிகளின் சூழ்நிலையை அழகான மொழிநடையில் சவலை பாஞ்சிடுச்சு
    என்று சொல்லுகிறார் பொன்னாத்தா... ஓ சாரி நிலாவும் அம்மாவும்

  4. ரசனைக்காரி டீச்சர் ராஜேஸ்வரியின் சிறுகதையான முரண்பாடு அவரது இரண்டாவது கதை. பிரமாதமான வடிவமைப்பு


பிடித்த சிரிப்புகள்



  1. சர்க்கரை சுரேஷின் அரசு மருத்துவமனையில் கலைஞர், நல்ல காமெடி. தமிழிஷில் 42 ஓட்டுக்களை அள்ளியிருக்கிறது. காமெடியாக இருந்தாலும் அதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. சிரிக்க, சிந்திக்க...

  2. கவிதையும் சிரிப்புமாக, தத்துவமும் கித்துவமுமாக வாய்விட்டு சிரிக்க வைக்கிறார் அன்பு

  3. நேர்முகத் தேர்வு சிரிப்புகள்... எழுதியவர் ச.முத்துவேல்.

  4. டொக்டர்.எம்.கே.முருகானந்தன் சிரிப்புகளை இம்மார்ச்சில் எழுதியிருக்கிறார். அம்மாவுக்கு கவிதையும் எழுதுகிறார். இவரது சமீபத்திய சிரிப்பு என்னைக் கவர்ந்தது.

பிடித்த பயனுள்ள பதிவுகள்


  1. பணம் குறித்த வரலாறைப் பதிவு செய்யும் அபுஅஃப்ஸர் பதிவின் இறுதியில் மிக அழகான கவிதையொன்றையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

  2. Will to Live ரம்யா அவர்கள் எழுதிய என்னைக் கவர்ந்தவர்கள் பதிவில் சிந்தனைகளை தெளித்து எழுதியிருக்கிறார்.. விவேகானந்தரின் வரவேற்புரை அது.

  3. கஜல் குறித்த சிறு அறிமுகத்தோடு சில கவிதைகளை நம்மோடு பகிர்ந்திருக்கிறார் குடந்தைஅன்புமணி

  4. ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவன், மற்றும் அன்னைத் தெரசா குறித்த சிறுசிறு அறிமுகத்தோடு பிடித்தவர்கள் பதிவில் பதித்திருக்கிறார் அமுதா இவரது கவிதைகளும் நன்றாக இருக்கும்.

  5. கலை-இராகலை நல்ல எழுத்தாளர். அவரது தியானம் குறித்த பதிவு ஒவ்வொரு வாசகருக்கும் பயனுள்ள பதிவாகும். அதை என்னைப்போன்றோரின் வேண்டுகோளின் பெயரில் தொடராக்கி நுணுக்கமாக எழுதிவருகிறார். இலங்கையின் செங்கோல் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை

  6. பொன்னியின் செல்வன் நம்ம கார்த்திகைப் பாண்டியன் நல்ல நடையில் எழுதும் எழுத்தாளர். இவரது விளம்பரங்களை சென்ஸார் செய்யுங்கள் திரி ஹாட். துப்பட்டா அணிவதை நன்கு விளக்குகிறார். ரசனையான மதுரைக்காரர்.

  7. பழமொழிகளில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார் ராம் C.M

  8. பல பயனுள்ள பதிவுகள் வேத்தியன் எழுதியிருந்தாலும் தமிழ்பற்றின் காரணமோ என்னவோ இசைக்கருவிகள் குறித்த பதிவின் மீது அதீத ஈடுபாடு இம்மாதத்தில்.. NatGeo வின் சிறந்த புகைப்படங்களைப் பார்த்தாலே என் மனமெல்லாம் துள்ளும்.
  9. புதுமணத் தம்பதிக்கு அருமையான டிப்ஸ்... பட்டியல் மன்னர் சுரேஷ் கைவண்ணத்தில்..

பிடித்த அனுபவப் பகிர்வு


  1. காதலுக்கு உதவி செய்து அடிவாங்கிய நசரேயன், நம்ம மாணவர்களையெல்லாம் எச்சரிக்கிறார்... அனுபவம் பேசுது.

  2. இரவீ தமது கேள்வி பதில் பகுதியில் உள்ளத்தைத் திறக்கிறார்... இவரது எழுத்து நடை படிக்க அலாதியானது ஆனால் அதிகம் எழுதுவதில்லை. இவரது புளிப்புமிட்டாய் பகிர்வும் அருமை!!

  3. நம்ம கவின்... போலீஸில் மாட்டிய கதையைப் படித்தால் சிரிப்பு வரும்... சம வயதுக்காரர் நல்ல ரசனையாளர்..

  4. கமலின் ஈழ அனுபவம் அலாதியானது. அவருடைய அம்மம்மா பதிவில் இளமைகாலத்தையும் தான் எவ்வாறெல்லாம் உருப்பெற்று
    வந்தேன் என்பதையும் நல்ல மொழிநடையில் பகிர்கிறார்.

  5. மாதவராஜின் ஒவ்வொரு பதிவும் வாசிக்கவேண்டியவை. நல்ல எழுத்துக்கள், கவிதைகள், அலசல்கள்.... நிறைய எழுதுகிறார்... இவரது கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை பதிவு நல்ல அனுபவப் பகிர்வு (பாகம் 2)

  6. ராம்.CM இன் ஹீ இஸ் கிரேட் பதிவு வெகுவாக கவர்ந்த பதிவுகளில் ஒன்று. நல்ல அனுபவப் பகிர்வு.

கொஞ்சம் பெரியபதிவா போச்சு... அடுத்த முறை ஒரு பதிவருக்கு ஒன்று மட்டுமே கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன். (அதுவும் நேரம் கிடைத்தால்தான்) இது ஒரு புது முயற்சி. யாரும் மனம் கோணமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் அதிக ஓட்டு போட்டு இப்பதிவை பல வாசகர்களுக்குக் கொண்டு செல்லவேண்டியது உங்கள் கடமை!!

Comments

Anbu said…
me the firsttuuu
Anbu said…
படித்து விட்டு வருகிறேன் அண்ணா
Anbu said…
பதிவில் எனது பெயரும் போட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா..
Anbu said…
அண்ணா வோட் போடனும் ..submit pannunga..
Anonymous said…
நல்ல அலசல் பதிவு. மார்ச் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவில் என் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா. உங்களின் மேலான அன்புக்கு நன்றி.
ஆஹா தல இதெல்லாம் ஓவர்...
என்னோடதெல்லாம் கவிதன்னு ஒத்துக்க பெரிய மனசு வேணுங்க உங்களுக்கு...
:-)
மிக்க நன்றி...
தமிழர் இசைக்கருவிகள் தெரிந்த விசயமாதலால் எழுதியது...
மிக்க நன்றி...
நண்பா தமிழிஷ்ல ஓட்டு போடனும்..
நீங்க வெளியிடுங்க...
நான் அப்புறமா வந்து போடுறேன்...
என்னோட‌ க‌விதையையும் ம‌திச்சி அத‌ற்கு சுட்டு கொடுத்திருக்கீங்களே !!!

ஆயிர‌ம் ந‌ன்றிக‌ள் ஆத‌வ‌ன்.

ந‌ல்ல‌ முய‌ற்சி !!!!!!!
இவ்வ‌ள‌வு சிர‌த்தையெடுத்து எல்லா சுட்டிக‌ளையும் திர‌ட்டி,ப‌திவு போடுவ‌த‌ற்குள்
தாவு தீர்ந்திருக்குமே !
ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் எள்ளளவு அங்கீகாரமும் மகிழ்வையே தரும்.ஒரே பதிவில் பலபேரை மகிழ்வித்த உங்க‌ள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!

நீங்க‌ள் குறிப்பிட்ட‌ ப‌திவுக‌ளில் 75 ச‌த‌வீத‌ம் ப‌டித்து விட்டேன்.புதிய‌ ப‌திவுக‌ளை ப‌டிக்கிறேன்.
// ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.
//

இன்னும் நிறைய‌ பேர் ப‌டிப்பார்க‌ள்.
இந்த தொகுப்புகள் நல் விடயம் தான் ஆதவன்.

வேறு ஒரு திட்டம் இருக்கின்றது

எனக்கு மின்மடலிடுங்களேன்.
gayathri said…
ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.

inei naanum ungal pathivai padikeren
gayathri said…
ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.

inei naanum ungal pathivai padikeren
Anbu said…
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா...
எல்லாரும் அன்புக்கு ஏங்குபவர்கள்தாம்.. ஆனா இந்த பதிவர் வட்ட ஏக்கம் கொஞ்சம் புதுசு.. ஒருமாதிரி யூகிக்க முடியாதது... நம்ம சூப்பரா எழுதி இருக்கோம்னு நெனக்குற ஒரு விஷயம் சில சமயம் யாராலும் கவனிக்க படாமபோய்டும் and vice versa (vice versa வின் தமிழாக்கம் யாராவது சொல்லவும்..)

உங்களின் அடுத்த மாத சிறந்த பதிவுகளில் என் பெயரும் இடம்பெறும்.. :-) கரெக்ட்தானே??
அன்பின் ஆதவா,

உங்கள் பதிவில் நானிருப்பது கண்டு மகிழ்ந்தேன்.
நன்றி நண்பரே !
அருமை ஆதவா.. புதுசா ஒரு முயற்சி.. உங்களுக்கு பிடிச்ச.. நீங்க தொடரக் கூடிய மக்களோட பதிவுகள்.. நல்லா இருக்கு.. இதுல நெறைய பதிவுகள் நான் படிக்காதவை.. பார்த்துடறேன்..
Tech Shankar said…
பதிவில் இடம்பெற்ற எழுத்தோவியர்களுக்கு வாழ்த்துகள்
Rajeswari said…
பூந்தோட்டத்துக்குள் புகுந்த மாதிரி இருந்தது,உங்களது இந்த பதிவை படிக்கும்போது..

ஆஹா ..எத்தனை மலர்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

எனது சிறுகதையும் அதில் ஒரு பூவாய் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது..நன்றி ஆதவா...
நன்றி ஆதவன்.
சற்று சிரமபட்டிருப்பீர்கள்
படித்தில் பிடித்து மற்றும் முக்கியமானவைகளை தேர்ந்தெடுத்து
அதற்கு தொடுப்பு கொடுத்து கொஞ்சம் மெனக்கெடுர வேலைதைன்.
உங்கள் இப்பதிவை முழுதும் படிக்க வேண்டும் படித்து விட்டு வருகின்றேன்.
என் கவிதையையும் உங்கள் இப்பதிவில் தேர்ந்தெடுத்திருப்பதில்
எனக்கு பெரும் மகிழ்ச்சி
மிகவும் நன்றி ஆதவன்.
Unknown said…
நண்பரே உங்கள் பதிவு நல்லாஇருக்கு.
இரண்டரை மாதத்தில் நல்ல
முன்னேற்றம்.

நம்மள எப்படி மிஸ் பண்ணீங்க?

நம்ம வலைக்கு வாங்க.கதை/க்விதை/கதை/கட்டுரை.

ஒரு திகில் கத படிங்க:-

http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை

ஹைக்கூ படிங்க

http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்

நன்றி
Anonymous said…
Rajeswari said...
பூந்தோட்டத்துக்குள் புகுந்த மாதிரி இருந்தது,உங்களது இந்த பதிவை படிக்கும்போது..
//
எனக்கும் அப்படி தான் நண்பா. இந்த பதிவுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கீட்டீங்க. பூந்தோட்ட காவல்காரனாக மாறி விட்டீர்கள்.
நன்றி. நல்ல முயற்சி.இதில் யாரும் தப்பாக நினைக்கமாட்டாங்க.
Arasi Raj said…
ஆதவா, இதெஉ நிஜமாலுமே சூப்பர்

இவ்வளவு போரையும் ஒரே நேரத்துல கட்டிக் குடுத்த உங்களுக்கு தலை சிறந்த எட்டப்பன்னு பட்டம் தர்றேன்...

ஒவ்வொரு பதிவோட தலைப்புமே நல்லா இருக்கு....நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பா படிக்குறேன்...இந்த வாரம் அலுவலகத்தில அதிகமான ஆணி இல்ல இல்ல கடப்பாரை புடுங்கும் வாரம்

தேங்ஸ்பா
Arasi Raj said…
என் பதிவும் இடம் பெற்றது மகிழ்ச்சி
தங்களின் பெருமுயற்சிக்கு முதலில் என் பாராட்டுக்கள். இந்த முயற்சியை நீங்கள் அவசியம் தொடரவேண்டும். யாரும் இதை தவறாக நினைக்க மாட்டார்கள். இதன்மூலம் பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது திண்ணம்.
எனது பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு என் தனிப்பட்ட வணக்கங்கள், வாழ்த்துகள்!
Arasi Raj said…
கடைக்குட்டி said...
எல்லாரும் அன்புக்கு ஏங்குபவர்கள்தாம்.. ஆனா இந்த பதிவர் வட்ட ஏக்கம் கொஞ்சம் புதுசு.. ஒருமாதிரி யூகிக்க முடியாதது... நம்ம சூப்பரா எழுதி இருக்கோம்னு நெனக்குற ஒரு விஷயம் சில சமயம் யாராலும் கவனிக்க படாமபோய்டும் and vice versa (vice versa வின் தமிழாக்கம்
/////////

ரிப்பீட்டே
நன்றி நண்பரே!!
நல்ல முயற்சி!!!!
என்னையும் கவனித்ததற்கு நன்றி!!
இன்னும் நிறைய அருமையான வெளியில் தெரியாத பதிவர்களை வெளிக்கொணரவும்!!
நல்ல முயற்சி ஆதவா பல‌பதிவுகள் அறிய வைத்தமைக்கு நன்றி.
தொடரட்டும்.
Suresh said…
//ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். இன்று எழுதினால் வந்து படிக்க மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது புல்லரிக்கிறது.//

உஙகள் எழுத்துக்கள் அவ்வள்வு அருமை அதனால் தான் மக்கள் வருகிறார்கள்

:-)

உங்களின் இந்த முயற்ச்சி மிக அருமை... இனி மாத மாதம் உங்க்ள் டாப் பதிவுகளில் இடம் பிடிக்க நிறைய கஷ்ட்டப்பட்டு நல்லா எழுதனும்

அப்பறம் :-) என்னொட பதிவு வருமா இந்த பெஸ்ட் பதிவுகளில் என்று பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி :-)

என்னொட பதிவும் அதுவும் நகைச்சுவை பகுதில் வந்தது :-) மிக பெருமையாக உள்ளது இது அடுத்த மாதமும் தொடர நான் நிறையா உழைக்கனும் :-)

இன்று என்னொட ஒரு பதிவு

பதிவு யூதஃபுல் விகடனில் :-) வந்த சந்தோசம் :-)
மென்மேலும் நிங்க என்னொட ரெண்டு பதிவுகளை போட்ட சசந்தோசம்
நன்றி ஆதவா என்று சொல்லி நம் நட்பை கொச்ச படுத்த விரும்பவில்லை :-)

ஒரு சின்ன திருத்தம் ஒரு வேளை நான் தப்பாக எழுதுவதால் :-) என்னொட ப்லொக் பெயர் சக்கரை என்பதற்க்கு பதிலாக :-) சர்க்கரை
என்று சொல்லிடிங்க :-) இருந்தாலும் நன்றிகள் கோடி ...

ஒரு ஒரு மாதமும் போடுங்க :-) இந்த லிஸ்ட்ட
Suresh said…
//பட்டியல் மன்னர் சுரேஷ் //

ஹ ஹ இது வேறயா ஹ ஹ சக்கரை சுரேஷ் :-) சொன்னங்க இப்போ இதுவுமா

அப்புறம் இப்போ நிறையா பதிவு நம்மல மாதிரி பட்டியல் போட அரம்ப்ச்சிட்டாங்க
Suresh said…
பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் இந்த சிறு குழந்தை பெயருமா :-)
kuma36 said…
ரொம்ப லேட் பன்னீட்டனோ? அட நான் எழுதுனது உங்களுக்கு பிடித்ததா? நன்றி ஆதவா? உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுப்பா!
வாழ்த்துக்களுடன்.
kuma36 said…
உண்மையாகவே தியானம் என்ற பதிவில் தான் எனக்கு அதிக ஹிட் கிடைத்தது, அப்பதிவே ஆதாவா உங்களின் தூண்டலிலே தான். மறுபடியும் நன்றி நண்பரே!
எல்லாவற்றையும் ஓரளவுக்க படித்து விட்டேன். நல்ல முயற்சியாக தோன்றுகின்றது.

//ஒவ்வொரு மாதமும் நேரம் அமைந்தால் மட்டுமே இப்பணியைச் செய்வேன்!!!! சரி... பட்டியலுக்குப் போவோம்..//

நிச்சயம் செய்யுங்கள் இன்னும் நிறைய நன்பர்கள் அறிமுகமாவார்கள்
நல்ல அறிமுகம்
ஆதவா? ரொம்ப மகிழ்ச்சி
மற்றுமொறு வலைச்சரம் ஆதவா பதிவில
பதிவுகள் அதுவும் சிறந்த பதிவுகளின் (கவிதை, அலசல், சிறுகதை, அனுபவம், சிரிப்புகள்) தொகுப்புகள், இங்கே வந்தால் எல்லாம் கலந்த கலவை கிடைக்கும்
மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்னுடைய எழுத்துக்களை கவிதையிலும் பயனுள்ள பதிவுகளிலும் சிறந்ததாக தேர்ந்தெடுத்து வெளியிட்டதுக்கு
//வலைப்பதிவுகளுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கு இந்தளவுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒருகாலத்தில் பதிவுகள் எழுதிவைத்து விட்டு பின்னூட்டங்களுக்காக நாள் முழுக்க காத்திருந்ததை இன்று உணர்கிறேன். //

இன்று எழுதினால் பின்னூட்டத்திற்கு பதில் சொல்வதற்கு நேரமில்லை.....சரியா ஆதவா
அருமையான முயற்சி, எந்தளவிற்கு கஷ்டப்பட்டிருப்பீங்க என்பது எனக்கும் தெரியும் (பதிவர்களின் பெயரில் கவிதை எழுதியவன்)

இனிமேல் நல்லா நல்லதா எழுதவேண்டும் என்ற எண்ண எழ வைத்துவிட்டீர்கள் ஆதவா

வாழ்த்துக்கள்

ஒவ்வொரு மாதமும் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்
நான் மிகவும் ரசிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர்

வித்தியாசமான வார்த்தைகளை கோர்த்து வித்தியாசமான படைப்புகள் தாங்களது

என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு
Suresh said…
நான் தவறியவற்றை இங்கே பிடித்து படித்தேன் .... தொடர்ந்து ஒரு ஒரு மாதமும் பதியுங்கள்
ஆதவா said…
அனைத்து நண்பர்களுக்கும்......

ஊக்கம் என்பதற்கு முழுமுதல் அர்த்தத்தை இணையத்தில் கண்டுகொண்டேன். யாரும் கண்டுகொள்ளாத பொழுது ஏற்படும் மனநோதலுக்கும், எல்லோரும் கண்டு கொள்ளப் பெற்று ஏற்படும் மனக்கிளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்தேன்...

நான் இங்கே எழுதும் பொழுது சரி, வேறூ தளங்களில் எழுதும் பொழுதும் சரி, ஊக்கங்கள் கொடுப்பதில் என்றுமே சலிக்கமாட்டேன்.... ஏனெனில் ஒவ்வொருவரின் மனநிலையில் இருந்தும் பழக்கப்படவேண்டும் என்று நினைப்பவன் நான்.

நான் ரசித்துவிட்டேன்... அதை சொல்லவேண்டும்!! அவ்வளவே... இப்பதிவிற்கான தோற்றம்.

பொறுமையாக படித்த விபரங்களையெல்லாம் சேகரித்து அனைத்து வலையினரையும் கொடுக்க முடியாதென்பதால் குறைந்தபட்சம் பின் தொடர்பவர்களை மாத்திரம் தருவோம் என்றுதான் இப்பதிவு ஆரம்பித்தேன்.. இதற்கு பல வழிகள் வைத்திருக்கிறேன். வரும் மாதங்களில் பின்பற்ற முனைகிறேன்..

----------
அப்ஸர்.. நீங்க சொல்வது போல

எனது பதிவுகளுக்கு மறு பின்னூட்டம் இட நேரம் கிடைப்பதில்லை.. ஏனைய நண்பர்களுக்குதான் முன்னுரிமை தந்து பின்னூக்கம் தருகிரேன். எப்படி மாறிவிட்டது பாருங்கள்!!!!
நன்றிபா ஆதவா.. என் அலசல்கள் பிடித்துவிட்டதா!!!!!! எனக்கு மகிழ்ச்சியை விட பயம்தான் வந்தது.. இன்னும் நல்ல அலசல்கள் கொடுக்கனுமே.... முயற்சி செய்கின்றேன்...

மீண்டும் நன்றி ஆதவா....
உங்களின் தமிழார்வ பதிவுகள் அனைத்துமே நன்றாகதான் உள்ளது தொடர்ந்து எழுதவும்...
நல்ல முயற்சியா இருக்கே... வாழ்த்துகள் நண்பரே....
Anonymous said…
புது முயற்சி...! நல்லா இருக்கு..!
மாசாமாசம் கலக்கு!
ஹேமா said…
ஆதவா....நீங்களுமா..! ஹீரோ கவினுக்குத்தான் இருக்கு வாரேன்.

நினைவூட்டல் பதிவு.இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை.கடந்ததைப் புரட்டிப் பார்க்கையில் ஒரு சந்தோஷம் ஆதவா.நன்றி.

10 நாட்கள் கொஞ்சம் என் பதிவுகளும் பின்னூட்டங்களும் அப்படி இப்படித்தான்.என் வீட்டில ஆளுங்க.(புரியுதா?)
Suresh said…
சரி நண்பா :-) உங்க அருமையாண பதிவுகளை எங்களுக்கு பிடித்த பதிவுகளை
இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

உங்களுக்கு பிடித்து தானே :-) எழுதிருப்பிங்க ....
நல்ல் முயற்சி. சிந்தனை
பதிவுகளின் தொகுப்பு...வித்தியாசமான முயற்சி ஆதவன்...நந்தவனத்தில் காற்று வாங்க வந்து பல மலர்களின் வாசம் நுகர்ந்த அனுபவத்தை உணர முடிகிறது...மேலும் அறிமுக மில்லாத நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதற்கும் ஒரு வாய்ப்பு...நன்றி ஆதவன்...
ஆதவா, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பொன். வாசுதேவன்
Anonymous said…
மிகப் பிரமாதமான முயற்சி! இந்த முயற்சி நிச்சயம் அனைத்து பதிவர்களுக்கும் ஊக்கம் தரும் ஒன்று!

வாழ்த்துக்கள் ஆதவா!
அமுதா said…
நல்ல முயற்சி. தனியா ஒரு சரம் தொடுத்து விட்டீர்கள். சிலவற்றைப் படித்துள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது மற்றவற்றையும் படிக்க முயற்சிக்கிறேன். எனது பெயரும் இடம் பெற்றதில் மகிழ்ச்சி மற்றும் நன்றி.
என் பதிவுமா.............................. நன்றி நண்பா
ஆதவா?? நான் கொஞ்ச நாளாக பிசி...


அதுக்குள்ளை பின்னி எடுத்திட்டீங்கள்??


நாம எல்லாம் பதிவரா??
சும்மா கிண்டல் பண்ண வேண்டாம்??

என்னோடை பதிவையும் சேர்த்தமைக்கு நன்றிகள் நண்பா...

நாங்கள் எல்லாம் சின்னப் புல்லுகள் தலை....???