குழந்தைகளின் உலகம்
குழந்தைகளுக்கான உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லைகள் அற்ற பாதைகளில் முடிவில்லாத பயணம் போன்று நீண்டு கொண்டே இருக்கிறது. சிலர் அப்பயணத்தில் இறங்கிக் கொள்ளலாம், சிலர் பயணித்துக்கொண்டும் இருக்கலாம்.. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொருவிதமான உலகம் இருக்கிறது. அது நீண்டோ, குறுகியோ, எந்த விதமான வடிவங்களிலும் இருக்கலாம்.. அவர்களின் ஒவ்வொரு நொடியிலிருந்தும், அவர்களின் உலகம் நழுவிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் முடிவைக் காணும் பொழுது, பாகுபாடுகளை அறிந்து கொள்ளும் முரட்டு மனிதர்களாகிவிடுகிறார்கள்.
குழந்தை எனும் வரையறை எங்கு நீங்குகிறது? அதன் செயல்பாட்டை வைத்தா? அது பேசும் மொழியை வைத்தா?
குழந்தைகளுக்குத் தான் எந்த பாலினம் என்று எப்பொழுது தெரிய வருகிறதோ, அல்லது அந்த பாலினத்தின் உண்மையான நடவடிக்கைகள் சாராம்சங்களைப் பற்றி எப்பொழுது புரிய வருகிறதோ அன்றிலிருந்து குழந்தைகள் மாறத் துவங்குகிறார்கள். அவர்களின் மொழி மாறுகிறது. நடத்தை, பாகுபாடு, செயல்கள், பாவனை என்று ஒவ்வொரு வடிவங்களும் மாறத் துவங்குகின்றன. தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
குழந்தை மொழி ஒரு ஆரஞ்சுப் பழத் தோலைப் போன்று உரிய உரிய அது பண்பாட்டு மொழியை அடைகிறது, உரிந்து சருகாகிப் போன மொழி, எங்கே சென்றது என்ற அக்கறையின்மை, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தானாக அமர்ந்துவிடுகிறது. உரிந்து போகாத மொழியைக் கொண்டவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். உண்மையிலேயே பைத்தியக்காரர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? உருவத்தைத் தவிர..
என் மாமாவின் மகன், பேசுவதெல்லாம் ஏதோ கடவுள் பேசுவதைப் போன்று இருக்கிறது ; அவனது ஒற்றைச் சொல்லுக்காக ஏங்கி நிற்கிறோம்.. அவன் அப்படி பேசுகிறான், இப்படி பேசுகிறான் என்று பெருமைப் படுகிறோம், அங்கலாய்க்கிறோம், அவனது ரிப்பீட்டட் சொற்கள் நம்மை குதூகலிக்கச் செய்கிறது, ஒரே சொல்லையே திரும்பவும் சொல்கிறான், அவனது கேள்விகளின் விடைகளெல்லாம் அந்த ஒற்றைச் சொற்கள் தான். ஆனால் ஒரு பெற்றோராக தம் குழந்தை இப்படியே பேசுவதை யாரேனும் விரும்புகிறார்களா என்றால் இல்லை.. குழந்தை மொழி இனிது என்று நினைக்கும் அத்தனை பேரும், அம்மொழி நீடிக்கவேண்டும் என்று விரும்புவதில்லை.. மொழியிலிருந்து வெளியே வரவேண்டும் என்று மறைமுகமா நினைக்கிறார்கள். அதுவே உண்மையும் ஆகிவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் குழந்தை மொழி, கண்ணீர் கசக்கி குழந்தையை விட்டு வெளியேறுகிறது.
தாயின் கருப்பப்பையிலிருந்து குழந்தைகள் கனவு காணத் துவங்குகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நவீன ஓவியங்களின் சிதறல்களைப் போன்று வர்ணங்கள் கலைந்த கனவுகள் குழந்தைகளுக்கு வருமா? அல்லது பொம்மைகளின் உலகத்திற்குச் சென்று அகப்பட்டுக்கொண்டதைப் போன்ற கனவுகள் வருமா? இன்னும் புரியாத புதிர்தான்..
தான் கண்டது கனவுதான் என்று அந்த குழந்தைக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அல்லது குழந்தைகள் ஏன் தன் கனவைப் பற்றி பேசுவதில்லை? விடை தெரியாத கேள்விகள் இவை.
தெரிந்த குழந்தை ஒன்று தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறது. அது கனவைப் போன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு பொய்கள் தெரிவதில்லை, ஏனெனில் அது கற்பனை செய்வதில்லை. நேர்ந்ததை மட்டும் கூறுகிறது. நான் அதனிடம் கேட்டேன், உனக்கு கனவு வருமா என்று.. அதற்கு அக்குழந்தை 'அப்படின்னா என்ன' என்கிறது.. மேலும் சொல்கிறேன். 'நீ தூங்கிட்டதுக்கு அப்பறம் உனக்கு என்ன ஆகும் ? ' அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.. ஒருவேளை நான் கேட்டது தவறாக இருந்திருக்கலாம். ' நல்லா தூங்கிடுவேன்' என்று சொல்லிச் சிரிக்கிறது. நன்கு ஞாபக சக்தியுடைய மனிதர்களே கனவுகளை மறந்துவிடும்பொழுது, மழலை மொழி பேசும் குழந்தையிடம் இதை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? குழந்தைகளிடம் அதட்டிக் கேட்கமுடியாது, மேலும் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது, தனக்குத் தெரிந்த பதில்களையே சொல்லி வருகின்றன குழந்தைகள். அவை, முன்பு சொன்னதற்கு ஒத்து இருக்கலாம், அல்லது சற்று மாறியிருக்கலாம்.
சில சமயங்கள் நான் ஆச்சரியப்படுவேன், இந்த குழந்தை என்னைப் பார்த்து என்ன நினைக்கும்? இவன் நல்லவன் என்றா? கெட்டவன் என்றா? அவர்களுக்கு எப்படி அந்த பாகுபாடு தெரிந்திருக்கிறது? குழந்தைகளின் சுபாவம் தாயிடமிருந்து நிர்ணயிக்கப்படுகிறது, தன்னை யார் சுமக்கவேண்டும், யார் சுமக்கக் கூடாது என்பதை அக்குழந்தை முடிவு செய்துகொள்கிறது.. இன்னும் சில குழந்தைகள், தன்னை மாறி மாறி யாரேனும் தூக்க மாட்டார்களா என்று ஏங்குகிறது.
என்னைக் காணும் சில குழந்தைகள் காரணமே இல்லாமல் சிரிக்கும்.. ஏன் சிரிக்கிறது என்று நான் யோசிப்பேன். நான் ஏதோ ஒரு வடிவத்தில் அக்குழந்தையைக் கவருவதாக உள்ளேன். இதைப் போன்றே நான் இன்னொருவரைப் பார்த்து அப்படி சிரிக்க முடியுமா? அந்த சிரிப்பில் என்ன அடங்கியிருக்கிறது, கேலி பண்ணுகிறதா, என்னை கோமாளியாக நினைக்கிறதா என்றெல்லாம் மனம் விரிந்து கொண்டு கேள்விகளை அடுக்கிச் செல்லும். அக்குழந்தை அந்த நொடியில் நினைப்பதெல்லாம், அது கவர்ந்த என் உருவத்தை மட்டுமே..
வெகு நாட்களுக்கு முன்னர், பந்து விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,, அக்குழந்தைகளுக்கு தன்னைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை, அதன் குறிக்கோள் எல்லாம், அடுத்த குழந்தையிடமிருந்து எதிர்வரும் பந்தை தன் வசமாக்குவது மட்டுமேதான். பந்து அதன் ஆடையில் பட்டு அழுக்காகிறது. தன் ஆடை அழுக்காகி வருகிறதென்பதை அவர்களால் உணரமுடியவில்லை..
இதே போன்று எங்கோ ஒரு இடத்தில் நானும் விளையாடிக் கொண்டிருந்திருப்பேன்.. என் ஆடையும் அழுக்காகியிருக்கலாம், ஏன், கிழிந்துகூட போயிருக்கலாம்.. அது எனக்கோ, அல்லது நான் எதிர்கொண்டு ஆடிய இன்னொரு குழந்தைக்கோ மறந்து போயிருக்கின்றன. நாங்கள் விளையாடிய மண் இன்று எங்கோ ஆழத்தில் புதைந்திருக்கலாம்.. எந்தச் சுவடும் இன்றி அந்நிகழ்வு காணாமல் போயிருக்கிறது.. அதைப் போன்று எத்தனையோ!!
யாரென்றே தெரியாத குழந்தைகளோடும் விளையாட வேண்டும் என்று நினைப்பேன். அதன் தாய் அதற்கு வழி கொடுக்கிறாள், குழந்தை குறித்து பேசுகிறாள், அவள் யார் என்று எனக்கும் தெரியாது. அக்குழந்தை என்னிடம் விளையாடுகிறது.. சிறிது நேரத்தில் அம்மாவைத் தேடுகிறது.. என்னை விட்டு நீங்கியதும், என்னோடு விளையாடிய நிமிடங்களையும், என்னையும் அது மறந்துவிடுகிறது.. இன்னும் சிறிது காலம் கழித்து அதே குழந்தையை விளையாட்டுக்கு அழைக்க முனையும் பொழுது, அந்த தாய் அவளை மறைக்கிறாள்.. தயங்குகிறாள், ஏனெனில் குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்றுதவறாகப் புரிந்து கொள்கிறேன்.
சிலருக்கு பொம்மைகள்தான் உலகம்.. அதனோடு பேசும், பழகும்.. சிரிக்கும்.. கோவித்துக் கொள்ளும்.. பொம்மைகளுக்காக அழும்... முறிந்து கிடக்கும் பொம்மையின் முண்டம், அதற்கு என்ன விதமான எண்ணங்களையும் தோன்ற வைக்கலாம்.. குழந்தைகள் முடிவு செய்து கொள்கிறார்கள், பொம்மையின் இறப்பை அசாதாரணமாக எடுத்துக் கொள்ள சிலரால் முடிவதில்லை.. அழுகிறார்கள்... மேலும் மேலும்..
என் வீட்டுக்கு எதிர்வீட்டில் உத்திரத்தில் கயிறு கட்டி, கழுத்து நெறிக்கத் தொங்கிய அப்பாவைக் கண்ட அந்த குழந்தைக்கு அது என்ன செயல் என்று தெரியவில்லை, அப்பா தொங்குகிறார் என்று சொல்லத் தெரியாமல் சிரிக்கிறது. அம்மா அழுகிறாள்... எதற்காகவோ அழுகிறாள் என்பது மட்டும் அக்குழந்தை தெரிந்து கொள்கிறது.. தானும் அழுகிறது... மிகச் சில நேரங்கள் கழித்து, அது பொம்மையைத் தேடிக் கொண்டிருக்கிறது. அழுகைகள் என்பது வலியின் பிரதிபலிப்பு, குழந்தைகளைப் பொறுத்தவரை அது தன்னைக் காட்டிக் கொள்ளும் அங்கீகாரம்.
குழந்தைகளுக்கான கேள்விகள் இன்னும் நீண்டுகொண்டேதான் இருக்கின்றன. அதற்கான விடையை இதுவரையிலும் யாரும் சொன்னதாகத் தெரியவில்லை, ஏனெனில் ஒவ்வொரு முறையும் விடை கண்டறியும் பொழுது, ஒரு குழந்தை அவ்விடையை உடைத்தெறிகிறது. குழந்தைகளைப் போல நம்மால் கேட்கவும் முடிவதில்லை, அவர்களைப் போன்று எண்ணவும் முடிவதில்லை, ஏனெனில் நாம் குழந்தை எனும் உலகத்தை கால சுழற்சியில் தொலைத்துவிட்டு வருகிறோம்..
அன்பின்
ஆதவா..

Comments
//குழந்தைகள் ஏன் தன் கனவைப் பற்றி பேசுவதில்லை? விடை தெரியாத கேள்விகள் இவை//
அது உண்மையில்லை என்பதால் இருக்குமோ.
மாறி விட்டால்
மனங்களுக்கு எது
வேதனையும்
வருத்தமும் என்பதை
விழி முன்னே
வந்து உரைக்கிறது
உங்களின் பதிவு
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
6 வயது பூர்த்தியாகும் போது ஒரு குழந்தையின் 90 சதவிகித மூளை வளர்ச்சியடைந்து விடுகிறது.எனவே இந்த கால இடைவெளியில், நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் அவர்களின் Subconscious Mind-ல் ( சரியான தமிழ்ப்பதம் கிடைக்கவில்லை ) சேமிக்கப்பட்டுவிடுகிறது.இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் தான் பிற்காலத்தில்
அவர்களின் மனோநிலையை பிரதிபலிக்கின்றன.
குழந்தை தானே..அவனுக்கும் ஒன்றும் தெரியாது என்று தவறாக நினைத்து கொண்டு, குழந்தைகளின் கண்முன்னே பல காரியங்களைச் செய்யும் பெற்றோர்கள் இந்த உண்மையை அறிய வேண்டும்.
பயனுள்ள ஒரு பதிவை அழகான எழுத்து நடையில் தந்தமை பாராட்டுகளுக்குரியது தேவா !!!!!!!!!
உளவியல் தந்தை சிக்மண்ட் பிராய்டு குழந்தைகளுக்கு பாலுணர்வு உண்டு என்று ஒரு தியரி எழுதியிருக்கிறார்.படித்ததுண்டா ?
மிக முக்கியமான பதிவு. குழந்தைகள் குறித்த பிரக்ஞையற்ற மனவெளியில் அவசர உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய புத்தகப்பைகளுக்குள் அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.
குழந்தைகளிடமிருந்து நாம் இழந்த வாழ்க்கையைப் பெற முடியும்.
உங்கள் எழுத்துக்கள் வர வர பக்குவம் பெறுகின்றன.
வாழ்த்துக்கள்.
யதார்த்தம்...!
யதார்த்தம்...!
யதார்த்தம்...!
திறனாய்வு...தித்திப்பு நிறைந்தது....
அவை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே??
இந்த வரிகளை இவ்விடத்தில் நினைவிற் கொள்வது சாலச் சிறந்தது...
மாமா பையனுடன் ஆதவா ரொம்ப நெருக்கமோ? எழுத்துக்களில் தெரிகிறது.. அருமை ஆதவா.. நல்ல சிந்தனை..எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசை உண்டு.. மனிதன் வளராமல் குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று.... நடக்குமா? உம்ம்..
நிச்சயமா பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்
இப்பொதுல்ல குழந்தைகள் விவரமான கேள்விகளை தொடுக்கிறது பதில் சொல்வதற்கு நாம்தான் முழிக்கிறோம்
நல்ல பதிவு ஆதவா
அப்படித்தானே.அருமை...அருமை.
அப்போதிருந்துதான்
பொய்யான மனிதன்,
அழகில்லாத மனிதன்,
கள்ளமான மனிதன்,
சுயநலமான மனிதன்,
அருவருப்பான மனிதன்
உருவாகத் தொடங்குகிறான்
ஆதவா,அந்தச் சமயங்கள் வேதனையான சமயங்கள்.
நினைத்தாலும் இனிக் கிடைக்காத தருணங்கள்.
"அப்புசாமியை காலால் மிதிச்சுப் போட்டீங்கள்.உடனே தொட்டுக் கும்பிடுங்கோ"ஒரு மாதிரிப் பாத்த நிலா ம்ம்ம்...இல்ல அம்மா,
உங்களுக்குத் தெரியேல்ல அது புத்தகம்.அப்புசாமி அங்க cupboard க்குள்ள இருக்கிறார்.இதுக்குப் பிறகு என்ன சொல்ல முடியும்."சரி புத்தகத்தை எடுத்து மேல வையுங்கோ".
அவர்களின் மனோநிலையை பிரதிபலிக்கின்றன.
குழந்தை தானே..அவனுக்கும் ஒன்றும் தெரியாது என்று தவறாக நினைத்து கொண்டு, குழந்தைகளின் கண்முன்னே பல காரியங்களைச் செய்யும் பெற்றோர்கள் இந்த உண்மையை அறிய வேண்டும்.
*********
முற்றிலும் உண்மை
பயனுள்ள ஒரு பதிவை அழகான எழுத்து நடையில் தந்தமை பாராட்டுகளுக்குரியது ஆதவா !!!!!!!!!
நாம் தொலைத்த / நமக்கு மறுக்கப்பட்ட கனவுகளை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி
மிகவும் நல்ல, பயனான கட்டுரை.
இந்த வரி என எடுத்துச் சொல்லவியலாமல் எல்லா வரிகளுமே அருமையாக உள்ளன. தொடருங்கள்..!
அவர்கள் விளையாடும் போதும் சரி, சாப்பிடும் பொது சரி....முகத்தில வேற எண்ட் ஒரு அர்த்தமும் கண்டு பிடிக்கவே முடியாது...
குழந்தைகள் என்றைக்குமே புரியாத புதிர்...
தெளிவான நீரோடை போல இருக்கு உங்க பதிவு....வாழ்த்துக்க்கள்
ஆதவா..
வாழ்த்துக்கள்...
இது ரொம்ப ஓவரா இல்லை???