நினைவுறுத்துங்கள்

தீரத்தீர தரும் அட்சய பாத்திரமல்ல நான்
காலத்தின் மதிப்பீட்டில்
சலிப்பு மிகுதியில் 
தூக்கியெறியப்படும்
பழைய பாத்திரம்.

எனது சுகத்தின் முதுகில்
மஞ்சம் அமைத்திருக்கும்
காணமுடியாத கனவுகள்.

தொட்டவருண்டு பலர்
துலக்கியவர் எவரு மிலர்.

ஒவ்வொரு முடிவுக்குப் பிறகும்
(அவர்)கண்களைப் பார்க்க நேரிடுவேன்
எவரேனும் வாழ்க்கை என்ற சொல்லை
முணுமுணுப்பார்களோ வென

கட்டி எறியப்பட்டதால்
காலத்தின் காலில்
தவழ்ந்துகொண்டிருக்கிறேன் 
நிமிர முடியாமல்..

பெருந்தகையீர்!
எங்கேனும் எவரேனும்
விதவைக்கு மறுவாழ்வென்று
சொல்லக் கண்டால்
அவர்களுக்கு நினைவுறுத்துங்கள்

விபச்சாரிகளும் உண்டு என்று..

_______________________________

எழுதப்பட்ட காலம் - 14-07-2007

Comments

//தீஒவ்வொரு முடிவுக்குப் பிறகும்
(அவர்)கண்களைப் பார்க்க நேரிடுவேன்
எவரேனும் வாழ்க்கை என்ற சொல்லை
முணுமுணுப்பார்களோ வென//

ஒரு பாலியல் தொழிலாளியின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி இருக்கும் வார்த்தைகள் அருமை...ஆதவன்...
//எனது சுகத்தின் முதுகில்
மஞ்சம் அமைத்திருக்கும்
காணமுடியாத கனவுகள்.

தொட்டவருண்டு பலர்
துலக்கியவர் எவரு மிலர்.//

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை...
எதைப் பற்றிய கவிதை என்றே தெரியாமல்தான் படிக்கத் தொடங்கினேன் ஆதவா. முடிவு நெஞ்சை நெகிழ்த்தி விட்டது.. ஒரு பாலியல் தொழிலாளியின் உள்ளக்குமுறல்களை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.. வர வர உங்களுடைய எழுத்துக்கள் மெருகேறி வருகின்றன.. வாழ்த்துக்கள்..
ஆதவா said…
ஆஹஹஅ.... நன்றி புதியவன்... எனக்கு எப்பொழுதுமே விளிம்பு நிலை மனிதர்கள் மேல் ஆதங்கமும், வருத்தமும் உண்டு... அதை அவ்வபோது காட்டி வருவேன்..

ஏதோ, கவிதையாகவேனும் உதவி செய்வோம் என்றுதான்....

நன்றிங்க புதியவன்...
ஆதவா said…
நன்றி கார்த்திகைப் பாண்டியன்..

உங்களைப் போன்று நல்ல ஊக்கம் கொடுக்கும் நண்பர்களால்தானே என்னால் எழுதமுடிகிறது!!!!

அதற்கு உங்களுக்கு என் நன்றியும், கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்
ஆதவன்

நன்றி கார்த்திகைப் பாண்டியன்..

உங்களைப் போன்று நல்ல ஊக்கம் கொடுக்கும் நண்பர்களால்தானே என்னால் எழுதமுடிகிறது!!!!

அதற்கு உங்களுக்கு என் நன்றியும், கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்
ஆதவன்
ஹேமா said…
ஆதாவா,அருமை.உண்மையில் என்னவாயிருக்கும் என்று எதிர்பார்த்து யோசித்தபடியே வாசித்தேன்.புதிய கோணத்தில் உங்கள் பார்வை.
ஹேமா said…
//ஒவ்வொரு முடிவுக்குப் பிறகும்
(அவர்)கண்களைப் பார்க்க நேரிடுவேன்
எவரேனும் வாழ்க்கை என்ற சொல்லை
முணுமுணுப்பார்களோ வென//

மனதுக்குள் எதிர்பார்ப்போடு வெளிப்பட்ட வரிகள்.அழகு.
அழகான நடை,கருத்துள்ள கவிதை.
ஆதவா said…
மிக்க நன்றி சகோதரி...

மிக்க நன்றி அன்புமணி அவர்களே!
Mathu said…
வித்தியாசமான சிந்தனை. அருமையான வரிகள் :)Nice!
பாதிப்படிக்கும் போதே கலாட்டாவை ஊகிக்க முடிந்தது. இருந்தாலும் ரசிக்க வைத்த நடை.

காதலர் தின வாழ்த்துக்கள்.
ஆதவா said…
Mathu கூறியது...
வித்தியாசமான சிந்தனை. அருமையான வரிகள் :)Nice!

நன்றி மது.....
ஆதவா said…
மாதவராஜ் கூறியது...
பாதிப்படிக்கும் போதே கலாட்டாவை ஊகிக்க முடிந்தது. இருந்தாலும் ரசிக்க வைத்த நடை.
காதலர் தின வாழ்த்துக்கள்.


நீங்கள் பின்னூட்டத்தை மாற்றிக் கொடுத்திவிட்டீர்கள் என்று நினைக்கிறெனெ..

என்றாலும் மிக்க நன்றி மாதவராஜ் அவர்களே
உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
"தீரத்தீர தரும் அட்சய பாத்திரமல்ல நான்....
துலக்கியவர் எவரு மிலர்.....
கட்டி எறியப்பட்டதால்
காலத்தின் காலில்
தவழ்ந்துகொண்டிருக்கிறேன் ...."

அவர்களின் மன ஆதங்கங்களை நெகிழ்வூட்டும் விதத்தில் வார்த்தைகளால் கடைந்தெடுத்திருக்கிறீர்கள்.
தொட்டவருண்டு பலர்
துலக்கியவர் எவரு மிலர்.//


ஆதவா கவிதை சொல்லாமற் சுடுகிறது.. ஒரு அபலைப் பெண்ணின் மனதின் வலிகளை வார்த்தைகளுக்குள் அடக்கியிருக்கிறீர்கள். நல்ல கவிதை....ஊடு பொருள் வாயிலாக கவிதை எதையோ உறுத்துகிறது??
Dhavappudhalvan said…
வாவ்! என்ன வார்த்தைகளில் சொல்வது. ஏக்கம் பற்றிக் கொள்கிறது, நான் எழுதும் எழுத்துக்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுமென்று. அபலைகளாய் மாட்டிக் கொண்டு த்ததளிக்கும் சிலரின் ஏக்கங்களை அற்புதமாய் வடித்திருக்கிறீர்கள்.

தவப்புதல்வன்