நிசப்தம்

நீண்டு விரவியிருக்கும்
நிசப்தத்தினை
என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை

நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது

இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.

பிரபஞ்ச நுனியில் கால்புதைத்து
வெறுமை கோள்களில் நிசப்தம் தேட
சூன்யம் என்னும் சப்தம்
தெறித்து நிசப்தம் கலைந்தது

எங்கு தேடினும்
அதன் முடிச்சைப் பெற முடியவில்லை

பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்

Comments

புதுமையான கவிதை.
//
நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது//

//இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.//

நன்றாக உள்ளது.
நானும் நிசப்தத்தை தேட ஆரம்பித்து விட்டேன்.
இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.//

நிலையில்லாத உலகில் எதனைத் தான் நிலையானதாய் நம்புவதோ??? எங்கு தேடினும் எதனையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாதாம். கவிதை ஏக்கத்தின் வெளிப்பாடும் தவிப்பின் தாபமும் கொண்டு துலங்குகிறது. தொடர்க....
எங்கு தேடினும்
அதன் முடிச்சைப் பெற முடியவில்லை

பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்//

கவனிக்க ஆட்களில்லையென்றால் தான் எதுவும் எம்மைத் தேடி எம்மிடத்திற்கே வருமாம்..இப்போது நிசப்தமின்றி நீண்டு ஓலமிடும் மக்கள் வாழ்விற்கு எப்போது நிசப்தம் வருமோ நண்பா?
//நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது//

அதீதமான அழகான கற்பனை...
//வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்//

அருமையான சொல்லாட்சி...
//பிரபஞ்ச நுனியில் கால்புதைத்து
வெறுமை கோள்களில் நிசப்தம் தேட
சூன்யம் என்னும் சப்தம்
தெறித்து நிசப்தம் கலைந்தது//

ரொம்ப நல்ல இருக்கு இந்த வரிகள்...
உங்களுடைய கவிதைகள் எல்லாமே புதுமையாக உள்ளன நண்பா..

//பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்//

இது மனித மனதின் இயல்பு.. நாம் எல்லாருமே அங்கீகாரத்திற்காக ஏங்குகிறோம்.. அருமையான கவிதை..
உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் அர்த்தமும், செறிவும் கொண்டதாய் பரிணமிக்கிறது. இன்னும் கொஞ்சம் வார்த்தைச் சிக்கனம் வேண்டுமோ?
ஹேமா said…
//தமிழ் சொற்கள் பல எனக்கு பரிச்சயம் என்றாலும் (ஆமாம் ஆமாம்.... தமிழந்தானே!!!! (உண்மையில் எனக்கு ஐந்து வயது வரை தமிழ் தெரியாது.... தாய் மொழி தெலுகு) ) நீங்கள் சொன்னவை எல்லாம் ரொம்பவே புதியனவாக இருக்கின்றன... //

ஆதவா,கவிதை இன்னும் வாசிக்கவில்லை.புதியவன் பக்கத்தில் உங்களை அறிந்து ஓடி வந்தேன் வாழ்த்துச் சொல்ல.தமிழ் படித்து கவிதை வேறு வெளுத்துக் கட்டுறீங்களே.அபாரம்.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.இன்னொரு மொழி படித்துத் தேறுவது என்பது எவ்வளவு கஸ்டம்!
ஹேமா said…
ஆதவா,உங்கள் பெயர் கூட அருமை.சொல்ல என்று பல நாட்களாக நினைத்திருந்தேன்.

கவிதை....சொல்ல வார்த்தைகள் அகப்படவில்லை.வர வர சிந்தனைகள் விரிந்துப் பறக்கிறது.
நிசப்தம் தேடும் ஆதவன்.எங்குமே இல்லை என்கிற ஆதங்கதோடு.
நிசப்தமே நிசப்தம் தொலைத்து.
ஹேமா said…
//நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது//

ஒவ்வொரு பந்திகளுமே அசத்தல். மிகவும் பிடித்தது.அழகான கற்பனை.
kuma36 said…
என்ன ஒரு ஆழமான் கற்பனை !! எவ்வளவு அழகான சொற்ப்பிரயோகங்கள்!!
நிசப்தம் கலையும் அல்லது கலைக்கப்படும் தருணங்கள் பல. தங்கள் நிசப்தம் அருமை.

பாராட்டுக்கள்.

- சாந்தி -
//இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.//

அழகான கவிதை அற்புதமான வரிகள்
வாழ்த்துகள்.
நல்ல கவிதை!
10.30 மணிக்கு வலைச்சரம் வரவும்
தேவா.//
உங்கள் பின்னூட்டமே எனக்கு மின்னூட்டம்.
சூப்பர்...
நம்மளுக்கு கவிதை எல்லாம் எழுத வராதுங்க...
ஆனா எழுதுறவங்களை ரொம்பப் பிடிக்கும்...
அந்த வகையில உங்களுக்கு ஒரு 'ஓ'ப் போடுறேன்...
:-)
அமுதா said…
மிக அருமை. மிக அழகான சொல்லாக்கம். வாழ்த்துக்கள்