முதற்கனவு

என்றேனும் முதற்கனவைப் பற்றி
யோசித்திருக்கிறேனா என்றால்
இல்லை

இரவு உறங்கியதும்
உறக்கம் விழித்தவுடன்
விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்
பிறகெப்படி நினைவுற?
அதிலும் முதற்கனவு?

பிறை ஓய்ந்த தினமொன்றில்
மூளியான வானம் பார்க்கையில்
தவழ்ந்து வந்து வீழாதோ
கவிதை போல் முதற்கனவு?

நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
கனவுப் பட்டியலை எடுக்க நேர்ந்ததில்
கனவின் தொடக்கம்
எதுவென்றறிய முடியவில்லை

சப்தமான நிசப்தத்தில் தியானிக்கையில்
ஒருவேளை முதற் கனவு கிடைக்குமா என்றால்
புலன்கள் ஒருங்கிணைந்தது போல
கனவுகள் கூடவில்லை

விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?

மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.

பிறிதொருநாள்தான் தெரிந்தது
இதுவரையிலும் முதற்கனவை
காணவே இல்லை என்பது.

Comments

//பிறை ஓய்ந்த தினமொன்றில்
மூளியான வானம் பார்க்கையில்
தவழ்ந்து வந்து வீழாதோ
கவிதை போல் முதற்கனவு?//

வார்த்தைகள் அழகு...
//சப்தமான நிசப்தத்தில் தியானிக்கையில்//

அழகான முரண்...
//மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.//

அருமையான கனவுக் கவிதை...
மிகவும் ரசித்தேன் கவிதையை
தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்
ஆதவா said…
மிக்க நன்றி புதியவன் அங்கம் அங்கமாய் சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள்... எனக்கு பெரும் உவகை....

அன்புடன்
ஆதவன்
அமுதா said…
நன்றாக உள்ளது
கனவுகள் கனத்த கவிதையாகித் தெரிகின்றன...தொடருங்கள் நண்பரே!
அருமையான கவிதை.. வார்த்தைகள் அழகாய் பொருந்துகின்றன....
ஹேமா said…
ஆதவா மிக்க நன்றி.
சந்தோஷமும் கூட.

ஆதவா சிலசமயங்களில் சிலசம்பவங்கள் கூட முதற்கனவுபோல ஒரு சின்ன அசைவாய் தெளிவில்லாமல் மூளையில் சிக்கிக் கிடக்கும்.
ஹேமா said…
This comment has been removed by the author.
ஹேமா said…
//மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.//

ஆழமான சிந்தனை.ஒரு கனவைத் திரையாக்கிப் பார்ப்பது.நடக்காது என்றில்லை.காலப்போக்கில் நடந்தாலும் ஆச்சரியமில்லை.
அப்போ ஆதவனின் முதற்கனவும் திரைக்குள் வரும்.

கவிதை வரிகள் தெறித்த அத்தனையும் அழகு.
ஆதவா said…
அன்பு
கவின்
கமல்,
கார்த்திகைப் பாண்டியன்..


நண்பர்களே.... மனம் மிகவும் மகிழ்கிறது... உங்கள் பின்னூட்டங்களைக் கண்டு....

நன்றிப்பெருக்குடன்
ஆதவன்
ஆதவா said…
சகோதரி ஹேமா ,

ஆழமான சிந்தனை.ஒரு கனவைத் திரையாக்கிப் பார்ப்பது.நடக்காது என்றில்லை.காலப்போக்கில் நடந்தாலும் ஆச்சரியமில்லை.
அப்போ ஆதவனின் முதற்கனவும் திரைக்குள் வரும்.


நீங்கள் சொல்வது உண்மைதான்.. அப்படி ஒரு காலம் வரும் என்ற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் உண்டு... மிக்க நன்றி சகோதரி...
//விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?//

வார்த்தைகள் வந்து விழும் அழகே அழகு. மிகவும் நன்றாக இருக்கிறது, ஆதவா!