2120 ல் ஒரு செடி

இயற்கை நீர் பொழியுமென
அண்ணாந்து பார்த்து
செயற்கை பிம்பத்தை
புணர்ந்து துடிக்கிறேன்

ரசாயன தோய்தலில்
நிறமாறிய என் சந்ததிகள்
என்னெதிரே கூடு கட்டி
செழிக்கிறார்கள்.

ஏதோ சில காரணங்களால்
என்னை இவர்கள்
விட்டு வைத்திருக்கக் கூடும்

இயந்திரங்களின்
கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு
நிலவைத் தேடி
மாடிக்குச் செல்லும் சிலர்
என் மீது நீரைத்
தெளித்து விட்டுச் செல்வார்கள்.

இவ் வாக்கிரமிப்புகளுக்கு நடுவே
எங்கோ ஒரு மூலையில்
துடித்துக் கொண்டிருக்கும்
மனிதத்தை எண்ணியே
உமிழ்கிறேன் பிராணத்தை

Comments

//2120 ல் ஒரு செடி//

தலைப்பே வித்தியாசமாக இருக்கு...
//இயந்திரங்களின்
கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு
நிலவைத் தேடி
மாடிக்குச் செல்லும் சிலர்
என் மீது நீரைத்
தெளித்து விட்டுச் செல்வார்கள்.//

அழகிய கற்பனை...
ஆதவா said…
மிக்க நன்றி புதியவன்....

(இப்போதான் கவிதையை போட்டேன் அதுக்குள்ளாக விமர்சனமா???? நெஞ்சம் நெகிழ்கிறது புதியவன்... உங்கள் ஊக்கத்திற்கு என் நன்றி... )
ஹேமா said…
ஆதவா,எதிர்கால ஆதங்கம்.எந்தக்காலத்திலும் எங்கோ ஒரு மூலையில் மனிதம் ஒன்றாவது வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
ஹேமா said…
ஒரு ஞாபகம் ஆதவா.புதியவன் ஒரு கவிதையில் (மீண்டும் மீண்டும் காதலோடு...)சொல்லியிருந்தார்...ஆதிசக்தி முழுமையாக உலகத்தை அழித்து மீண்டும் புதிதாகப் படைப்பாள் என்றும்,அங்கு மனிதம் நிறைந்து வாழும் என்றும்.
Wall-E படம் பார்த்தது போல் உள்ளது.
ஆதவா said…
நன்றி சகோதரி ஹேமா... புதியவன் கவிதையை நானும் படித்திருக்கிரேன்.. தக்க சமயத்தில் ஞாபகப் படுத்தியிருக்கிறீர்கள்...
ஆதவா said…
மிக்க நன்றி நட்புடன் ஜமால்... பெயரிலேயே நட்பை வைத்திருக்கிறீர்களே!!

உங்களின் முதல் வருகைக்கும் எனது அன்பு வணக்கங்கள்
ஆதவா!

ஏக்கமும் கவலையும் தோய்ந்த கவிதை.

2120ல் உள்ள செடி இந்தக் கவிதையை ஞாபகத்தில் வைத்திருக்கட்டும்
ஆதவா said…
மிக்க நன்றி மாதவராஜ்.... என்க்கு எப்பொழுதுமே எதிர்காலலம் குறித்த கேள்விகள் உண்டு.. அது இக்கவிதையில் விலக்கல்ல...
இயந்திரங்களின்
கட்டுப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு
நிலவைத் தேடி
மாடிக்குச் செல்லும் சிலர்
என் மீது நீரைத்
தெளித்து விட்டுச் செல்வார்கள்.//

நிலா ரசணை இந்தக் காலத்திலும் உள்ளதென்பதைச் சொல்லும் போது மகிழ்ச்சியாகத் தானிருக்கிறது. நாங்கள் இங்கு மெல்பேணில் நிலாவைக் காண்பதே அரிது. ஏதோ ஒன்றைக் கவிதையில் பொடி வைத்துக் காட்டியுள்ளீர்கள்.

ஏன் தெளித்தார்கள் என்பது???
கவிதை நடையும் தலைப்பும் அருமை. தொடர்ந்தும் படைக்க வாழ்த்துக்கள்.
அபாரமான நடை ஆதவா.. ஆதங்கத்தை நன்றாக சொல்லி உள்ளீர்கள்.. கடைசி வரிகள் மிக அழகாக உள்ளன.. இந்த நிலை வராது என நம்புவோம்..
ஆதவா said…
@@கமல்

ஏன் தெளித்தார்கள் என்பது???


நிலவைக் காணச் செல்லுபவர்கள் தானே தெளிக்கிறார்கள்... அவர்களுக்கு இயற்கை மேல் அன்பு./.. அதனால்தான் நீரைத் தெளிக்ககறார்கள்.... ஏனெனில்.. நீர் தெளிக்க அச்செடி மட்டுமே உண்டு....
ஆதவா said…
மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்... உங்கள் எழுத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கின்றன..
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா.
இயற்கையை நேசிக்கும் நம்மைப்போன்ற கவிப்பிரியர்கள் இருக்கும் போது இயற்கையும் இருக்கும். தங்கள் கவிதை ஆழமான வாசிப்புக்கு உகந்தது.
ஆதவா said…
மிக்க நன்றி தேவன் சார்... எனக்கு நல்ல பல வலைகள் பரிச்சயமானது...

மிக்க நன்றி அன்புமணி அவர்களே!!!!
இயற்கையை நான் நன்கு நேசிக்கிறேன்.. உங்கள் கூற்று சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.
NewsPaanai.com said…
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

Popular Posts